Relax Please: FB page daily Posts |
- ஒரு புது தகவல்: ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவுகள் உங்களுக்காக!! அந்த ப...
- அம்மா வர்ரதுக்குள்ள இத படிச்சு முடிச்சுடணும்
- :) Relaxplzz
- திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..! 1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக...
- ”செய்யும் தொழிலே தெய்வம்” ஒரு ஊருல ஒரு வயதான வீடு கட்டும் மேஷ்திரி இருந்தார்.அ...
- பெற்றோர்களே! உங்கள்குழந்தைகளை தட்டிக்கொடுங்கள்! பத்துவயதுவரை துயிலும்போதும் இர...
- (y) Relaxplzz
- #Whymenaregreat கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்கள் போல் யா...
- திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed (...
- சென்னை வானூர்தி நிலையத்தில் வழங்கப்படும் புகார் படிவம் கூட தமிழில் இல்லை. இந்திய...
- :) Relaxplzz
- நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள் 1. திருப்பதியில் 200 ஆண்...
- இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் ! என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்...
- "இந்தாங்க டெய்லர்.... அளவு பிளவுஸ்... இந்த பிளவுஸ் மாதிரியே கரெக்டாத் தச்சுடுங்க...
- :) Relaxplzz
- இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒர...
- எளிய முதல்வர் -------------------- மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு வகிக்கும்...
- :P :P
- :) Relaxplzz
- கடவுளுக்கு கடிதம்...! கடவுள் அவர்களுக்கு,,.... ஒரு ஏழையின் , மடல்... நீங்கள...
- 15 வயதில் வேலைக்கு சேர்ந்தேன், நடசத்திர உணவகத்தில் அடுப்படியில் வேலை, நிமிடம் இட...
- 2020ல் புத்தகத்தின் மதிப்பு!!!
- :) Relaxplzz
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு...
- நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்....??? நம்மை பெற்றவர்களை அம்மா...
- காய்கறி சைக்கிள்
- :) Relaxplzz
- அப்பாவின் வலிகள்! ! ! ! அப்பாவின் வலி அப்பா ஆகும்போதே புரியும்... ஒரு அப்பா கு...
- தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம் !!! அன்னாசி பழத்தில் விட்டமின்...
- தாயுமானவள்... மகள்! <3
Posted: 05 Feb 2015 09:00 AM PST ஒரு புது தகவல்: ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவுகள் உங்களுக்காக!! அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. அதுபற்றிய விபரங்களை இன்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம். ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 47 பைசா பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 96 பைசா இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 46 பைசா ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்ம் செலவு = 1 ரூபாய் 81 பைசா நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 79 பைசா 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 3 ரூபாய் 58 பைசா ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 4 ரூபாய் 6 பைசா இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்... 100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம். எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது. இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக் கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள். ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும். அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றி விடுவார்கள். ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India. கூடுதல் தகவல் என்னவெனில்... ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லை யென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும். நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன.. Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 08:45 AM PST |
Posted: 05 Feb 2015 08:30 AM PST |
Posted: 05 Feb 2015 08:15 AM PST திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..! 1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது 2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது 3) கோபப்படகூடாது 4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது. 5) சண்டை போட்டா மாமானர் மாமியாரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும் திட்டக்கூடாது. 6) சீரியல் பார்க்கற அப்ப t.v சேனலை மாத்தக்கூடாது. 7) பொய் சொல்ல கூடாது 8) சண்டை சச்சரவுகளுக்கு போகக்கூடாது 9) தன்னை வீட்டில் விட்டுவிட்டு பிரண்ட்ஸ் கூட டூர் மற்றும் பங்கஷனுக்கு போக கூடாது. 10) எப்பவும் அடுத்தவங்கள வச்சி பேச கூடாது. இதை எல்லாம் சரி பண்ணுங்க வாழ்க்கை இனிக்கும்... Relaxplzz |
Posted: 05 Feb 2015 08:00 AM PST "செய்யும் தொழிலே தெய்வம்" ஒரு ஊருல ஒரு வயதான வீடு கட்டும் மேஷ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு ,என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார். ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஷ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு வீடு கட்ட ஆரம்பித்தார். கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு வீட்டை கட்டி முடித்து சாவியை கொண்டு போய் காண்ட்ராக்டரிடம் கொடுத்தார்.காண்ட்ராக்டர் சாவியை வாங்கி கொண்டு இத்தனை ஆண்டுகளாக எனக்காக உழைத்த உனக்கு இந்த வீட்டை பரிசாக தருகிறேன் என்று சொல்லிவிட்டு சாவியை அவரிடமே திருப்பி கொடுத்தார். அடடா நமக்காக தான் இந்த வீடுன்னு தெரிஞ்சி இருந்தா அழகாக கட்டி இருக்கலாமே என்று மேஷ்திரி வருத்தப்பட்டார். ______________________________________________________________________ நீதி: 'செய்யும் தொழிலே தெய்வம்'.எந்த ஒரு வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.ஏனோதானோ என்று செய்தால் இப்படி தான் நடக்கும். Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 07:45 AM PST |
Posted: 05 Feb 2015 07:30 AM PST |
Posted: 05 Feb 2015 07:15 AM PST #Whymenaregreat கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம் பீட்டரு விடவே மாட்டோம்.. நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்.. பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது.. அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்... ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்... சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி.... பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா இருந்தாலும்,'ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி'ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது... வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே.. குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று #கக்கூஸ் கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம். வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்.. எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது.. வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்... தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்.. தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்... தெரியாத பெண்கள் கேட்டால் கூட உடனே உதவி செய்வோம்!! 35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம். எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்... தங்கை திருமணத்துக்காக தன் திருமண வயதிலும் திருமண செய்து கொள்ளாமல் உழைக்கும் ஒவ்வொரு அண்ணனும் இன்னொரு அப்பா தான். Relaxplzz |
Posted: 05 Feb 2015 07:00 AM PST திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் . அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ...... அனுபவம் பேசுகிறது !!! ![]() |
Posted: 05 Feb 2015 06:45 AM PST |
Posted: 05 Feb 2015 06:30 AM PST |
Posted: 05 Feb 2015 06:15 AM PST நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள் 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும். 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள். 1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான். 2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம். 3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள். 4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம். 5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம். 6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள். 7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார். Relaxplzz |
Posted: 05 Feb 2015 06:00 AM PST இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் ! என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள். இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை. ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது. 1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை. 2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள். 3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம். 4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம். 5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது. 6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம். 7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை. 8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!! 9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும். 10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது. கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa+batter (நன்றி-உணவு உலகம்) நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள். இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும். தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஆகவே, இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள் Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 05:45 AM PST "இந்தாங்க டெய்லர்.... அளவு பிளவுஸ்... இந்த பிளவுஸ் மாதிரியே கரெக்டாத் தச்சுடுங்க..எதையும் மாத்திடாதீங்க. ஆனா, கொஞ்சம் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன்ஸ் மட்டும் இருக்கு.. குறிச்சுக்கோங்க.. இதை விடக் கை நீளம் ஒரு கால் இன்ச் கூட்டி வைங்க.. ரொம்ப ஷார்ட்டா இருக்கு.. உடம்பு ஒரு அரை இன்ச் டைட் பண்ணுங்க.ரொம்ப லூஸா இருக்கு. பின்னாடி கழுத்து ரொம்ப இறக்க வேண்டாம்.இதை விட ஒரு கால் இன்ச் மேலே வைங்க. இடுப்பு இறக்கம் இன்னும் கொஞ்சம் வேணும். ஷோல்டர் பக்கம் இறங்கி வருது. அதையும் சரி பண்ணுங்க . அப்புறம்.. திரும்பவும் சொல்றேன் டெய்லர்... இந்த அளவு பிளவுஸ் மாதிரியே அப்படியே தைக்கணும் ...எதையும் மாத்திடாதீங்க.. சரியா...??? டெய்லர் : "ஙே......." :O # நாம பொண்ணுங்க இருக்கோமே.. - Shanmuga Vadivu. |
Posted: 05 Feb 2015 05:30 AM PST |
Posted: 05 Feb 2015 05:15 AM PST இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒரு அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் போது வராத தேசப்பற்று.....! ......ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது வராத தேசப்பற்று....! ........ஒரு அப்பாவி அநியாக்காரர்களால் பாதிக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........வறுமைக்கூட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடி மகனுக்கு அரசின் திட்டங்கள் போய் சேராத போது வராத தேசப்பற்று....! ........ஒரு இந்தியன் வெளிநாட்டில் அநியாயமாக கொல்லப்படும் போது வராத தேசப்பற்று....! ...........ஒரு மாநில அரசாங்கமே தன் குடிமக்களை கொடூரமாக கொன்றழிக்கும் போது வராத தேசப்பற்று....! ......அட கேவலம் இங்கிலீஷ்காரன் விளையாட்டு கிரிக்கெட்டு பார்க்கும் போது மட்டும் எங்கிருந்துடா வந்து இறங்குது அந்த தேசப்பற்று....?????.. .............எல்லாமே விளையாட்டு.........தன் தேசப்பற்று, இறையாண்மை எல்லாத்தையும் கிரிக்கெட்டிற்கு அடகு வைத்து விட்டு...நிற்கிறான் சுதந்திர இந்தியாவின் சாமானிய இந்தியன்....!! நன்றி :- Sheik Mohamed Badhusha Relaxplzz |
Posted: 05 Feb 2015 05:00 AM PST எளிய முதல்வர் -------------------- மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு வகிக்கும் அவரது சொத்து மதிப்பு ரூ. 13,900. அவருக்கு கிடைக்கும் மாதச்சம்பளம் ரூ. 9,200. அலவன்ஸ் ரூ. 1,200. அவற்றை கட்சிக்கே கொடுத்துவிடுகிறார், இவரது மனைவி மத்திய சமூக நலத்துறையில் வேலை செய்தவர், அவருக்கு வரும் ஓய்வூதியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. முதல்வரின் மனைவி வெளியே செல்லும்போது அரசு காரை உபயோகிப்பதில்லை. ரிக்ஷாவில் எந்த பாதுகாவலரும் இன்றித்தான் செல்கிறார். இத்தனை எளிமையான முதல் மந்திரி யாரென்று யோசிக்கிறீர்களா? திரிபுராவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல்வரான மாணிக் சர்க்கார் தான் அவர். Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 04:45 AM PST |
Posted: 05 Feb 2015 04:30 AM PST |
Posted: 05 Feb 2015 04:15 AM PST கடவுளுக்கு கடிதம்...! கடவுள் அவர்களுக்கு,,.... ஒரு ஏழையின் , மடல்... நீங்கள் நலம்தான், ஆனால் நாங்கள் நலமில்லை... கோயில், சர்ச், மசூதி, அனைத்திலும் நீங்கள் வசதியாகவே வாழ்கிறீர்கள்..... வறுமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.... தூணிலும் துரும்பிலும் உங்களால் வசிக்க முடியும்,, ஆனாலும் உங்களுக்கு ஊரெங்கும் மாளிகை,,, வீதியில் வாழும் எங்களை,, விரட்டியபடி.... உங்களுக்கொரு பிரச்சனை என்றால் ஊரே போர்க்களம் ஆகுது,,, எங்களை திரும்பி பாக்கவும் நாதீயில்லை.... வயிற்றுக்காய் கையெந்தும் எங்களை கடந்து போய், வசதியாய் வாழும் உங்களிடம் தருகிறார்கள் பணத்தை..... இன்னும் நீண்ட கேள்விகள் உண்டு என்னிடம்,, ஆனால் எதற்கும் உங்களிடமிருந்து பதில் வராது.... எனவே இத்துடன் முடிக்கிறேன்,,, இறந்த பின் எனக்கு சொர்க்கம் வேண்டாம் வாழும் நாட்களை நரகமாய் மாற்றாதீர் அது போதும்,,, இப்படிக்கு,,, ஏழை பகிர்த்து(Share It) கொள்ளுங்கள் .. Relaxplzz |
Posted: 05 Feb 2015 04:00 AM PST 15 வயதில் வேலைக்கு சேர்ந்தேன், நடசத்திர உணவகத்தில் அடுப்படியில் வேலை, நிமிடம் இடையில்லா பாத்திரம் கழுவும் வேலை.. நேற்றுடன் 18 வயது முடிந்தது, பனி உயிர்வாம், இப்பொழுது மேசை துடைக்கும் வேலை.. நானும் மாறிவிட்டேன், சமூகமும் மாறிவிட்டது.. அன்று பரிதாபத்தில் "ச்ச.." என்றது, இன்று தகாததாய் "ச்சீ.." என்கிறது... # நாளை என்ன சொல்லுமோ இந்த சமூகம். Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 03:45 AM PST |
Posted: 05 Feb 2015 03:30 AM PST |
Posted: 05 Feb 2015 03:15 AM PST கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு? :P ### ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது 25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1 லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார் அடிக்குது ?? 30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ?? 25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்? 30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு "" ### கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும். கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா. வேறு கேள் மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச கூடாது. நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும். கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா போடணுமா , டபுளா போடணுமா ? ;-) ### பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ... பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "... சீட் காலியாகவே இருந்தது !!!! :P ### "தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக்கொடு....'' "ஏண்டா... சைக்கிள் உயரம் கூட இல்லைய நீ சைக்கிள் ஓட்டி பழகுறியா... "தாத்தா..அப்ப பஸ் ஓட்டறவரு பஸ் உயரத்துக்கா இருக்காரு...??? " (எங்ககிட்டேவா....) :P :P Relaxplzz |
Posted: 05 Feb 2015 03:00 AM PST நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்....??? நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம். அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு.....? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன.....? அ-உயிரெழுத்து. ம்-மெய்யெழுத்து . மா-உயிர் மெய்யெழுத்து. அதே போல தான் அப்பா. தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அப்பா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன. Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 02:45 AM PST |
Posted: 05 Feb 2015 02:30 AM PST |
Posted: 05 Feb 2015 02:15 AM PST அப்பாவின் வலிகள்! ! ! ! அப்பாவின் வலி அப்பா ஆகும்போதே புரியும்... ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து சைக்கிள் மிதிக்கிறார்... ஒரு அப்பா குடும்பத்துக்காகவே மீன் கூடையை சைக்கிளில் சுமக்கிறார்... ஒரு அப்பா மன உளைச்சலை வெளியே விட்டு சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்... ஒரு அப்பா பண்டிக்கைகல் முன்னிரவில் கடன் கேட்டு வீதியில் அலைகிறார்... ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள ் குடும்பத்தை அனுப்பிவிட்டு தள்ளு வண்டி காரனிடம் டவல் வாங்குகிறார்... ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து தெரு சுற்றி காலம் கடந்து பசியோடு வீடு வருகிறார்... பாவம் அப்பாக்கள். அப்பாவின் வலி அப்பா ஆகும்போதே புரியும்...!!!! # படித்ததில் பிடித்தது # Relaxplzz |
Posted: 05 Feb 2015 02:00 AM PST தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம் !!! அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். 2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். 3. ஊறவைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டுவரஉடல் எடை குறையும். 4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும். 5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும். 6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியானகொழுப்பு குறையும். 7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். Relaxplzz ![]() |
Posted: 05 Feb 2015 01:45 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment