Saturday, 28 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


உலகின் 6 உண்மைகள் : முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொ...

Posted: 28 Feb 2015 09:10 AM PST

உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள்
அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல்
உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும்
இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க ..
ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க
முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத
எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !

ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

:D :D

Relaxplzz

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனி...

Posted: 28 Feb 2015 09:00 AM PST

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப்பறைசாற்றும் கோவிலின் பெருமை!

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது !

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும்சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றிமறந்து விடுகின்றோம்.

Relaxplzz


குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின்...

Posted: 28 Feb 2015 08:10 AM PST

குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின் வீட்டுக்கும் வருகை புரிந்தார்.

அந்த தனவந்தர் குருநானக்கின் பரமபக்தர். சகல மரியாதையுடன் குருநானக்கை உபசரித்த அவர் மறுநாள் குருநானக் அங்கிருந்து புறப்படும்போது தனவந்தர்,' ஐயா, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்! உங்களுக்காக என் சொத்து முழுவதையும் தரத் தயாராக இருக்கிறேன்' என்றார்.

குருானக் அவரிடம் பணம்பொருள் எதுவும் கேளாமல் புன்னகைத்தார், பின்னர் தனவந்தரிடம், தைப்பதற்கு உதவாத காதுப்பகுதி உடைந்த ஊசி ஒன்றை தனவந்தரிடம் கொடுத்து,' இந்த காதில்லாத ஊசியை பத்திரமாக வைத்திரு...! மறுஉலகில் நாம் எப்போது சந்திக்கிறோமோ அப்போது இந்த காதில்லாத ஊசியை என்னிடம் கொடு!அது போதும்!'என்றார்.

தனவந்தர்,' மறுஉலகிற்கு எதையும் எடுத்துச் செல்லமுடியாதல்லவா...? அப்புறம் எப்படி நான் இந்த ஊசியை தங்களிடம் கொடுக்க முடியும்?' என்றார்

குருநானக்,' புரிந்ததா...! உலகில்உள்ள எதையுமே இறப்புக்குப்பின் மறுஉலகுக்கு கொண்டுசெல்லமுடியாது! ஆகவே, இறப்புக்குப்பின் நம்முடன் வரும் புண்ணியத்தைச் சேர்.. பாவத்தை தவிர்...!'என்றார்

இதையேதான் நம்மஊரு பட்டினத்தார் எளிமையா சொன்னாரு

#காதருந்தஊசியும்வாராதுகாண்கடைவழிக்கே என்று!

Relaxplzz

:) Relaxplzz

Posted: 28 Feb 2015 07:30 AM PST

நாமும் செய்யலாமே...

Posted: 28 Feb 2015 07:20 AM PST

நாமும் செய்யலாமே...


உன்னத தலைவர் இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்...

Posted: 28 Feb 2015 07:10 AM PST

உன்னத தலைவர்

இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி
இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது
அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை
கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்
என்றார்கள்.

அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான
தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள்.
அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால்
அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி
செய்யவில்லை.

மதியம் வேளை தொழுகைக்காக
பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்த
போது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர்
தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க
பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி
தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என
அனுமதி கேட்கிறார்.

மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி
கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"
என்று சொன்னார்கள்

அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின்
சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த
யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த
தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.

>K.பாக்யராஜ்

Relaxplzz

"சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன் எடுக்கச் சொல்றாங்க".?.. "என்னோட ட்ரீட...

Posted: 28 Feb 2015 06:50 AM PST

"சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன்
எடுக்கச் சொல்றாங்க".?..

"என்னோட ட்ரீட்மென்ட் எல்லாமே பிரமாண்டமாதான்
இருக்கும்"...!


ஒரு நாள் காலையில Husband அவசரமா Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife கேக்குற...

Posted: 28 Feb 2015 06:10 AM PST

ஒரு நாள் காலையில Husband அவசரமா
Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife
கேக்குறா..

" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு
ஞாபகம் இருக்கா..?!! "

( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...
" இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!!
எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )

" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!!
Evening 5 மணிக்கு ரெடியா இரு..,
வெளியே Dinner-க்கு போலாம்.. "

Husband Office கிளம்பி போயாச்சு..

11.AM : Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே
வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "

அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்..

1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box
வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..

3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box
வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா
ஒரு அழகான Diamond Necklace..

இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா..

Husband எப்ப வருவார்னு ரொம்ப
ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..

5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..

அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா..

" என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம்
பிடிச்சிருக்கா..? "

" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "

" காலையில என்னமோ.. நான்
மறந்துட்டேன்னு சொன்னியே..
எப்படி நம்ம Surprise..?!! "

" சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி
கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம்
நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம்
அசத்த போறீங்களோ..!!! "

" ??!!!!! " :O :O

Relaxplzz

பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவனுக்கு கூட மூன்று சொற்கள், எழுதத்தெரியும், #அம்மா

Posted: 28 Feb 2015 05:50 AM PST

பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவனுக்கு கூட மூன்று சொற்கள்,
எழுதத்தெரியும், #அம்மா


அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந...

Posted: 28 Feb 2015 05:25 AM PST

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.

இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.

அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.

உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.

டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.

அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.

டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.

அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.

டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.

அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்.

Relaxplzz


குசும்பு... 4

:) Relaxplzz

Posted: 28 Feb 2015 05:08 AM PST

பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ் 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போ...

Posted: 28 Feb 2015 04:10 AM PST

பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]

10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

Relaxplzz

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில...

Posted: 28 Feb 2015 03:10 AM PST

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
அதெப்படி?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மழையே பெய்யவில்லையே!

:P :P

:) Relaxplzz

Posted: 28 Feb 2015 02:43 AM PST

சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..! ...........................

Posted: 28 Feb 2015 02:10 AM PST

சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..!
....................................................................

பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது.

புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது :-
.............................................

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும் :-
.....................................

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும் :-
........................................

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள் :-
.......................................

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

Relaxplzz

;-) Relaxplzz

Posted: 28 Feb 2015 01:51 AM PST

தமிழுக்கு "மட்டும்" தலை வணங்கிய - சுந்தர பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன்...

Posted: 28 Feb 2015 01:20 AM PST

தமிழுக்கு "மட்டும்" தலை வணங்கிய - சுந்தர பாண்டியன்

மாறவர்மன் சுந்தரபாண்டியன், பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவனான இவன் மாபெரும் வீரனாகவும், சிறந்த மன்னனாகவும் திகழ்ந்தான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும். "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்று வரலாறு இவனைப் புகழ்ந்துரைக்கிறது. சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெரும் புகழுக்குச் சொந்தக்காரனான இந்த சுந்தரபாண்டியன், சோழ நாட்டையே நிர்மூலம் செய்துவிடுமளவிற்கு ஆவேசம் கொண்டவனாக இருந்தான். சோழ பூமியே இவன் வரவுகண்டு நடுநடுங்கியது. தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான்.

இது மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்கீர்த்தியில் காணப்படுவது. அப்பப்பா... பயங்கரமான அழிவு வேலை! தஞ்சையும் உறையூரும் செந்தழலுக்கு இரையாக்கப்பட்டுள்ளது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சோழ அரண்மனைகள் பலவும் இடிபட்டுள்ளது. அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்பட்டுள்ளது. சோழ தேசத்தையே தரைமட்டமாக்கிய பின், கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான் (இது எதிரியின் இடத்தை மிகவும் அவமதித்து, அழிக்கிற ஒரு செயல்).

முன்னூறு ஆண்டுகளாக வாழ்ந்த அடிமை வாழ்க்கை அப்படியொரு வெறித்தனத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது! ஆனால், கண்மூடித்தனமான ஆவேசத்துடன் சோழ நாட்டில் அதாகதம் செய்து கொண்டிருந்த சுந்தரபாண்டியன், ஓரிடத்தில் நின்று தலை வணங்கினான் என்றால், அது எத்தனை ஆச்சரியம். அந்த இடம் ஒரு மண்டபம். அங்கேதான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் தமிழ்ப்புலவருக்கு, காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி புகழ்ந்து 'பட்டினப்பாலை' என்னும் நூலை இயற்றியமைக்காகப் பதினாறு நூறாயிரம் (பதினாறு லட்சம்) பொற்காசுகளை ஒரு பதினாறு கால் சிறப்பு மண்டபத்தில் வைத்து, மண்டபத்தோடு சேர்த்துக் கொடுத்துள்ளான் "கரிகாற் பெருவளத்தான்" (கரிகால சோழன்). இந்தப் பட்டப் பெயரே கூட அம்மன்னனுக்கு அப்புலவர் வழங்கியது தான் !! இச்செய்தியை அறிந்த சுந்தரபாண்டியன், அந்தப் பதினாறு கால் மண்டபத்தை யாரும் இடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான்

அதாவது சோழநாட்டில் பறித்து வீழ்த்தப்படாத தூண் ஒன்றுகூட இல்லை. ஆனால் பட்டினப்பாலை இயற்றிய உருத்திரங்கண்ணனார் அவர்களுக்கு அன்று தமிழுக்காக வழங்கப்பட்ட மண்டபத்தின் பதினாறு கால் தூண்கள் மட்டுமே நின்றின என்று திருவெள்ளறைக் கல்வெட்டு கூறுகின்றது.

பழிவாங்கத் துடித்து நடத்திய போரில் கூட தமிழ்ப் புலவரின் மண்டபத்தை இடிக்காமல் இருந்த பாண்டியனின் பைந்தமிழ்ப் பற்றை எண்ணினால், நம் நெஞ்சம் பூரிக்கிறதல்லவா? இத்தனைக்கும் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

உருத்திரங்கண்ணனார் புகழ்ந்து பாடியதோ ஒரு சோழ மன்னனை. காவிரிக்குக் கல்லணை கட்டி, சோழ பூமியை வளங்கொழிக்கச் செய்த கரிகாலன், தன்னைப் புகழ்ந்த ஒரு புலவரைக் கௌரவித்த மண்டபம்தான் அது. இருப்பினும் அது தமிழைப் போற்றிய இடம் என்பதாலேயே, தலைசிறந்த இடமாக, தலைவணங்க வேண்டிய இடமாக எண்ணியிருக்கிறான் சுந்தரபாண்டியன். ஏப்பேற்பட்ட உயரிய பண்பைப் கொண்ட மன்னர்கள் நம் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் !!

- சசி தரன்

via தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு


"வரலாற்றுப் பதிவுகள்"

கேரட் - யில் செய்யப்பட்ட அழகிய மீன்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 Feb 2015 01:07 AM PST

கேரட் - யில் செய்யப்பட்ட அழகிய மீன்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


திறமைகள்..

அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்? . . . . . . . . . . . ....

Posted: 28 Feb 2015 12:44 AM PST

அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா...

:D :D

:) Relaxplzz

Posted: 28 Feb 2015 12:32 AM PST

ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில்...

Posted: 28 Feb 2015 12:13 AM PST

ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர்.

உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்று எச்சரித்தாள்.

ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார். நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தை உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது .தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கதறினாள்.

அவரும் இறங்கி சென்று விபத்துக்குள்ளான காரை பார்த்தார்.முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர் பின் சீட்டை பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அடிப்பட்டு மயக்கத்தில் கிடந்தது.
உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு தன் காரை நோக்கி ஓடினார் ,குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து விட்டு தன்னிடம் உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார்.

எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார்.காரில் இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து கிடந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்றும்படி உதவிகேட்ட அதே பெண் தான் அவள்.

அன்னை என்பவள் தான் இருந்தாலும் இறந்தாலும் குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்பவள். அன்னையைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது.
*****************************************************************************
உங்கள் கண் சிறிதளவு கலங்கினாலும் ஷேர் செய்து விடுங்கள்.

Relaxplzz

22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம்...

Posted: 27 Feb 2015 11:50 PM PST

22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 2

Posted: 27 Feb 2015 11:25 PM PST

கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். “பெருந்தகையீர், என் மகன...

Posted: 27 Feb 2015 11:10 PM PST

கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.

"பெருந்தகையீர், என் மகனுக்குத் தாங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்?" என்று கேட்டார் செல்வந்தர்.

"500 வெள்ளிக்காசுகள் தாந்துவிடுங்கள்" என்றார் பிளாட்டோ.

"என்ன... 500 வெள்ளிக் காசுகளா...?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார் செல்வந்தர்.

"ஆமாம்" என்றார் பிளாட்டோ.

"இது மிக மிக அதிகம். அதை விடக் குறைந்த பணத்தில் நான் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடுவேன்" என்றார் செல்வந்தர்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த பிளாட்டோ, "நீங்கள் சொல்வது சரிதான். இதைவிடக் குறைந்த பணத்திற்கு நீங்கள் ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பிறகு பாருங்கள், உங்கள் வீட்டில் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் இருப்பார்கள்" என்றார் பிளாட்டோ.

அதைக் கேட்ட செல்வந்தர் உறைந்து போனார்.

Relaxplzz

'"சாத்தியமா நம்புடீ ...... என்னை விட நீ தான் ரொம்ப அழகு '" :)

Posted: 27 Feb 2015 10:40 PM PST

'"சாத்தியமா நம்புடீ ...... என்னை விட நீ தான் ரொம்ப அழகு '" :)


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 10:39 PM PST

Posted: 27 Feb 2015 10:22 PM PST

பிச்சை எடுக்காமல்,கோணிப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை தா...

Posted: 27 Feb 2015 09:50 PM PST

பிச்சை எடுக்காமல்,கோணிப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை தான் #பூச்சாண்டி என்று சொல்லி குழந்தைகளுக்கு சோறூட்டுகிறோம்...

- இளையராஜா


பேசும் படம்.. புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Feb 2015 09:42 PM PST

பேசும் படம்..

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Feb 2015 09:35 PM PST

0 comments:

Post a Comment