Sunday, 8 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல் . அதிகாரம்: #ஆள்வினைய...

Posted: 08 Feb 2015 06:11 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல் . அதிகாரம்: #ஆள்வினையுடைமை

#உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

#Translation:
Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.

#Explanation:
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

#TRADUIT DU #TAMOUL
Penser toujours à l'excellence de l'entreprise et ne jamais cesser de s'efforcer; l'effort donne la gloire du succès.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #அரசியல் . அதிகாரம்: #இடுக்கண...

Posted: 08 Feb 2015 06:02 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #அரசியல் . அதிகாரம்: #இடுக்கணழியாமை.

#உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

#Translation:
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.

#Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

#TRADUIT DU #TAMOUL
Celui qui jouit, mais sans les désirer, des plaisirs qui lui échoient. Supporte la douleur quand elle vient, mais n'en souffre pas.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


பேரன்புமிக்க அஜித் குமார் ரசிகர்களுக்கு, உங்கள் கொண்டாட்டங்களிளுக்கு மத்தியில்...

Posted: 08 Feb 2015 08:55 AM PST

பேரன்புமிக்க அஜித் குமார் ரசிகர்களுக்கு,

உங்கள் கொண்டாட்டங்களிளுக்கு மத்தியில் உங்களை இடையூறு செய்தமைக்கு பெரிதும் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் விருப்பமான நாயகரின் படத்தை முதல் நாள் பார்த்து கொண்டாடுங்கள், 60 அடி கட்டவுட்டுக்கு பால் ஊற்றி கை கால்களை உடைத்துக்கு கொள்ளுங்கள், உங்கள் அம்மா, அப்பாக்கள் (அல்லது நீங்களோ) ரத்தம் சிந்தி சேர்த்த பணத்தில் பட்டாசு கொளுத்துங்கள், உயிர் நாடி போக கத்துங்கள்.. எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. நடிகர்களை கடவுளாய் வழிப்படும் சாபம் தமிழர்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பட்ட பெரும் தவம், அதனால் அதை பற்றி பேச என்னிடம் ஏதும் இல்லை.

ஆனால் உங்கள் கொண்டாட்டத்தினால் காசி திரையரங்கத்துக்கு அருகில் உண்டான போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆம்புலன்சில் இருந்த உயிரின் கடைசி மூச்சை நீங்கள் அறியாமல் போனதை நான் உங்களிடம் சொல்ல தான் வேண்டும். ஏதோ ஒரு அவசரத்தில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் படபடப்பை நீங்கள் அறியாமல் போனதை சொல்ல தான் வேண்டும். 5 நிமிடம் வேலைக்கு தாமதமாய் போனால் அன்றைய கூலி கிடைக்காது அப்படி கிடைக்காமல் போனால் கட்ட வேண்டிய கடனையோ, கொடுக்க வேண்டிய வீட்டு வாடகையில் விழும் துண்டையையோ எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று வெதும்பிய மணங்களை உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் நண்பர்களே. அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி கொண்டாடும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் யாருக்காக?

---இது சினிமாக்காரர்களை கடவுளாய் கொண்டாடும் எல்லா ரசிக (ரஜினி, கமல், விஜய், விஷால், சிவ கார்த்திகேயன், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன்) பெருமக்களுக்கும் பொருந்தும்---

//குறிப்பு: இதை படித்துவிட்டு தல யாரு தெரியுமா என்று காமெடி வசனங்களை பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்களிடம் நான் சொல்ல விரும்புவது "உங்க தல திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் தான்"//

- இளவேனில்


காதலர் தினத்தில் ஜோடியாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் - இந்து மு...

Posted: 08 Feb 2015 08:12 AM PST

காதலர் தினத்தில் ஜோடியாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் - இந்து முன்னணி

# பேசாம அன்னிக்கு எதாவது அழகான பொண்ணு பக்கத்துல போய் நின்னுடலாம்னு இருக்கேன்..

ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா! ஓசூர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு...

Posted: 08 Feb 2015 04:24 AM PST

ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா!

ஓசூர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 879 மீட்டர் (2883 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஒசூர் பழங்காலத்தில் செவிடபாடி என்று 11-ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டுகளால் அறியப்படுகிறது பிறகு செவிடபாடி என்ற பெயர் செவிடவாடி என்றும் 13-ம் நூற்றாண்டில் ஒய்சால மன்னன் வீர ராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டில் சூடவாடி என குறிப்பிடப்படுகிறது. கி.பி.1674-ம் ஆண்டைச் சேர்ந்த மைசூர் மன்னர்கள் கால கல்வெட்டில் ஹொசாவூரு என்ற பெயர் குறிக்கப் படுகிறது ஹொசவூரு-ஹொசூரு-ஹொசூர்-ஒசூர் என்று மாற்றம் அடைந்துள்ளது.ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும்.

ரோஜாவை பற்றி எழுத வேண்டும் என்றால் பத்து பதிவுகளை எழுதலாம், சுருக்கமாக மட்டும் இங்கே காணலாம்! ரோஜா என்பது கிரேக்க தேசத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன வார்த்தை ரோசா விலிருந்து வருவது. முளரிப்பூ (Rose) ,முளரி பேரினத்தின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்).

ஓசூர், ரோஜா பற்றி பார்த்தாகிவிட்டது..... முக்கிய கேள்வி என்பது காதலர் தினத்திற்கும், ரோஜாவிர்க்கும் என்ன சம்மந்தம், ஏன் கனகாம்பரம் கொடுத்தால் ஆகாதா என்பது. காதலர் தினம் உருவானது குறித்து ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன, அதில் எல்லோரும் நம்பும் ஒன்று என்பது...... கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. பழங்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகள் என்று சொல்லப்படுகிற ஆபிரோடைட் மற்றும் வீனஸ் இன் அடையாளம் என்று கருதினார்கள். ரோம் நகரத்தில் ரகசிய அல்லது அந்தரங்கமான விஷயங்களின் விவாதம் நடக்கும் அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்படும்.

ரோஜாவின் வகையை பல வகைகளில் சொல்ல வேண்டும்!! ரோஜாவை கூர்ந்து பார்த்தால் நிறைய வித்யாசம் தெரியும், உலகில் நூறு வகையான ரோஜா வகைகளும், ஒவ்வொரு வகையிலும் அதிகமான கூறுகளும் இருக்கின்றன, உங்களுக்கு புரிவதற்காக சில ரோஜா வகைகள்...... லேடி பேங்க்ஸ் ரோஸ், கலிபோர்னியா ரோஜா, டாக் ரோஜா, பாஸ்ச்சர் ரோஜா, சீனா ரோஜா, க்ளௌகூஸ் டாக் ரோஜா, ஸ்விட் ப்ரையர் அல்லது எக்லண்டைன் ரோஜா, ஆஸ்ட்ரியன் எல்லோ அல்லது ஆஸ்ட்ரியன் ப்ரையர், காலிக் ரோஜா, பிரெஞ்சு ரோஜா, ஆர்.எக்ஸ் ஒடோரட்டா ஜைஜாண்டி ', சிவப்பு இலை ரோஜா, செரோகி ரோஜா,கேமேலியா ரோஜா,மார்டான் ரோஜா, சின்னமன் ரோஜா, பாஜா ரோஜா, மஸ்க் ரோஜா, மல்டிப்ளோரா ரோஜா, ஸ்காட்ச் ரோஜா, எக்லண்டைன், ஸ்விட் ப்ரையர், ருகோசா ரோஜா, ஜப்பானிய ரோஜா, வர்ஜினியா ரோஜா என்று.... இன்னும் நிறைய இருக்கிறது.

நன்றி : சுரேஷ் குமார்


0 comments:

Post a Comment