ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அழகிய ஈழம்! வட்டுக்கோட்டை!
- விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிற்றூர் கீழ்வாலை. இங்குள்ள பாறைகளில்,...
- அழகு தமிழ்நாடு! திருப்பரங்குன்றம்!
- Ancient Tamil Civilization: Copper swords found Eight double-edged copper sw...
- வாய்க்காலில் குளியல்...
Posted: 13 Feb 2015 07:59 AM PST |
Posted: 13 Feb 2015 06:43 AM PST விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிற்றூர் கீழ்வாலை. இங்குள்ள பாறைகளில், மலைக்குகைகளில், சிறுகுன்றுகளில் ஆதி மனிதர்களின் வரலாற்றைச் சொல்லும் பாறை ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன, இந்த ஓவியங்கள் ஏறக்குறைய மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்களால் வரையப்பட்டவை. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் காலவெள்ளத்தில் அழிந்த சுவடுகளை ஆங்காங்கே காண முடிகின்றது. இங்குள்ள ஒரு ஓவியத்தில் குதிரையின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது. குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மனிதன் ஆண் என்பதை அவனின் பரந்த தோள்களை வைத்து ஊகிக்கமுடின்றது. கயிற்றினை பிடித்துக் கொண்டு போவது பெண் என்பதை குறுகிய இடுப்பை வைத்தும், சிறிய தோள்களை வைத்தும் ஊகிக்க முடின்றது. இங்கு மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சமீபத்திய காலத்தில் இந்த பாறைகள் ஜல்லிக்காக வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. @சசிதரன் ![]() |
Posted: 13 Feb 2015 05:38 AM PST |
Ancient Tamil Civilization: Copper swords found Eight double-edged copper sw... Posted: 13 Feb 2015 02:44 AM PST Ancient Tamil Civilization: Copper swords found Eight double-edged copper swords belonging to 400 B.C. were unearthed in the Appukkal hillock near Anaicut in Vellore taluk recently. Appukkal has already been the site of excavation by the Archaeological Department of the Madras University in 1977 and 1979. According to Mr. M. Gandhi, Curator of the Government Museum, Vellore, the study of the swords revealed evidence of the prevalence of chalcolithic culture in Tamil Nadu. The swords varied in length 24 and 33 inches. These swords known as `treasure trove' swords were handed over to the Government Museum, Vellore on the orders of Mr. R. Sivakumar, Collector of Vellore district. http://www.thehindu.com/2000/09/09/stories/0409223p.htm "The excavations at Appukkallu further confirm the migration of iron producing Black and red ware people into NorthArcot region around c. 500 BC. The village Appakkallu lies 1 km froth Anaicut n Vellore taluk. The University of Madras excavated the habitation site in the years 1977 and 80 (Raman: IAR: 1976-77: 47). The trenches laid on six locations yielded three cultural periods and in this the period 1 yielded megalithic culture with lingering Neolithic elements in the lowest stratum. Though the Black and red ware pottery made its beginning in layer 15 (APKLI), the succeeding, two layers (14,13) formed the peak of its cultural activity at Appakkalu. This was revealed by the profuse occurrence of very fine variety of thin Black and red ware with lustrous polish and all black ware along with a large quantity of iron slag in these layers. " The charcoal collected from a pit sealed by layer 12 in APKL-1, which overlies layer 13,14. and 15 with a cultural deposit of 0.97 metres, has given a C" determinationm of 300 BC (B.S. 2300±140). The layer 15 yielded along with Black and red ware pottery a few grounds stones of indeterminate shapes devoid of Neolithic pottery (IAR: 1976-77: 47). The lingering of pre-megalithic elements at the beginning of period I is further established at other sites like viz., Mallappadi, Kallerimalai and Malaiyamputtu in North Arcot district. The occurrence of iron slag in large quantities in layer 14 of APKL I indicate that the Black and red ware people at Appakkallu smelted iron and produced artefacts in large numbers locally at a time which is coeval to Paiyampalli c. 500 BC. http://matheritage.nmlindia.org/23/1/92-103.PDF http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201987-88%20A%20Review.pdf அப்புக்கல்லு செப்பு வாள்கள் அப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன. புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும். இங்கு 1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையினால், முனைவர் கே.வி. இராமன் தலைமையில் முனைவர் சா. குருமூர்த்தி மற்றும் ஏ. சுவாமி ஆகியோர் இணைந்த ஒரு குழுவால் குன்றின் உச்சியில் உள்ள பாறைத்துண்டங்களில் (debris) அகழிகளைத் தோண்டி தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகள் அரை மணிக்கல் மணிகள் போன்ற தொல்பொருள்களையும், ஒரு சில புதியகற்கால கோடாரித் துண்டுகளையும் ஈட்டித் தந்தன. இத்தளத்தின் மட்கலத்தொழில் புதியகற்கால நாகரிகத்திற்கே தனிக்கூறாய் உரிய மட்கலங்களான மங்கிய சிவப்புநிற மட்கலங்களையும் சாம்பல்நிற மட்கலங்களையும் அதிகளவில் கொண்டிருந்தது. இந்த அகழாய்வுகள் சிறு அளவான மட்கலங்களையும், தொல்பொருள்களையுமே ஈட்டித் தந்தன; இது வேலூர் மாவட்டத்தில் புதிய கற்காலக் குடியேற்றங்கள் நிலைப்பட்டிருந்ததை சுட்டுகின்றது. அப்புக்கல்லு தமிழ்நாட்டின் இரண்டாவது புதியகற்காலத் தளம் ஆகும், பிறிதொரு தளம் நீண்ட காலத்திற்கு முன்னீடு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் (ASI) அகழாய்வு நடத்தப்பட்ட பய்யம்பள்ளி ஆகும். மட்கலங்களின் வடிவங்கள், வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தளம் சற்றொப்ப கி.மு 2,000 காலத்தது என நாள்குறிக்கலாம். பொதுவாக, தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் கி.மு. 4,000 க்கு முன்பில் இருந்தே நாள் குறிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இந்த தளத்திற்கு கிட்டும் கரிமம் 14 (C 14) காலக் கணக்கீடு கி.மு.380 க்கு வருகின்றது என்பதால் இது புதியகற்கால நாகரிக்த்தைத் தொடர்ந்து வரும் இரும்புக் காலத்தைச் சார்ந்ததாகலாம். ![]() |
Posted: 13 Feb 2015 01:53 AM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment