Facebook Tamil pesum Sangam: FB page posts |
- படித்ததில் பிடித்தது.... இருபதுகளில்… எழு! உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்ல...
- அவசரம் அவசரம் Share செய்யுங்கள்.. சற்று முன் சென்னை கேகே நகர் அருகே ஏற்பட்ட சால...
- இனபடுகொலை என்பதை ஏற்கமுடியாது -பா.ச.க வானதி சீனிவாசன்! உன் கும்பலுக்கு அடுத்தவன...
Posted: 13 Feb 2015 08:15 AM PST படித்ததில் பிடித்தது.... இருபதுகளில்… எழு! உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு! ஜன்னல்களைத் திறந்து வை! படி! எதையும் படி! வாத்சாயனம் கூடக் காமமல்ல, கல்விதான்.. படி! பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பிருஷ்டங்களுக்குப் பின்னால் எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா.. உன் சட்டைப் பொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டால், எந்திர அறிவு கொள்! ஏவாத ஏவுகணையினும் அடிக்கப்பட்ட ஆணியே பலம். மனித முகங்களை மனசுக்குள் பதிவு செய்! சப்தங்கள் படி! சூழ்ச்சிகள் அறி! பூமியில் நின்று வானத்தைப் பார்! வானத்தில் நின்று பூமியைப் பார்! உன் திசையைத் தெரிவு செய்! நுரைக்க நுரைக்க காதலி! காதலைச் சுகி! காதலில் அழு! இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம் புரி! பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான்.. மிச்சமெல்லாம் உனக்கு! வாழ்க்கையென்பது உழைப்பும் துய்ப்புமென்று உணர்! உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து! இன்னும்… இன்னும்… சூரியக் கதிர்கள் விழமுடியாத ஆழத்தில்… ** முப்பதுகளில்… சுறுசுறுப்பில் தேனீயாயிரு! நிதானத்தில் ஞானியாயிரு! உறங்குதல் சுருக்கு! உழை! நித்தம் கலவி கொள்! உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒளித்து வைத்திருப்பான்.. கைப்பற்று! ஆயுதம் தயாரி.. பயன்படுத்தாதே. எதிரிகளைப் பேசவிடு! சிறுநீர் கழிக்கையில் சிரி! வேர்களை, இடிபிளக்காத ஆழத்துக்கு அனுப்பு.. கிளைகளை, சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்தில் பரப்பு.. நிலை கொள். ** நாற்பதுகளில்… இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்.. செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி.. எதிரிகளை ஒழி! ஆயுதங்களை மண்டையோடுகளில் தீட்டு! ஒருவனைப் புதைக்க இன்னொருவனைக் குழிவெட்டச் சொல்! அதில் இருவரையும் புதை! இருகையால் ஈட்டு.. ஒரு கையாலேனும் கொடு.. பகல் தூக்கம் போடு. கவனம்! இன்னொரு காதல் வரும்! புன்னகைவரை போ.. புடவை தொடாதே. இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு! இனிமேல் இலட்சியத்துக்கு நீதான் இலக்கு.. ** ஐம்பதுகளில்… வாழ்க்கை, வழுக்கை இரண்டையும் ரசி.. கொழுப்பைக் குறை.. முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்! கணக்குப்பார்! நீ மனிதனா என்று வாழ்க்கையைக் கேள்.. இலட்சியத்தைத் தொடு வெற்றியில் மகிழாதே! விழா எடுக்காதே! ** அறுபதுகளில்… இதுவரை வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது.. இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்.. விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு.. மனிதர்கள் போதும். முயல் வளர்த்துப் பார்! நாயோடு தூங்கு! கிளியோடு பேசு! மனைவிக்குப் பேன் பார்! பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.. ** எழுபதுக்கு மேல்… இந்தியாவில் இது உபரி.. சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ… ஜன கண மண… கவிஞர் : வைரமுத்து |
Posted: 12 Feb 2015 08:29 PM PST அவசரம் அவசரம் Share செய்யுங்கள்.. சற்று முன் சென்னை கேகே நகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில்.. தலையின் பின்புறம் அடிபட்டதில் சுயநினைவை இழந்து கோமாவில் உள்ளார்.. அவரை என் நண்பர் சென்னை Gh மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. அவரின் ஓட்டுநர் உரிமம் மட்டுமே கிடைத்துள்ளது.... Dl.noTN55 19890000998 Name:G.RAJAPANDIAN S/O K. GANESH ADDRESS: PERUMARUTHUR PO, PHDUKKOTTAI DT.. புதுக்கோட்டையை சுற்றி யாரேனும் இருப்பின் தயவு செய்து நண்பர்கள் அந்த புகைப்படத்துடன் சேர்த்து பதிவிடுங்கள், பகிருங்கள்.. அடிப்பட்டவரை பற்றிய தகவல் அவரது உறவினர்கள் அறிய வேண்டுமானால்,கீழே தரப்பட்டுள்ள நண்பரின் நம்பருக்கு அழைத்து விவரம் அறிந்து கொள்ளுங்கள்.. Suresh 9940611144 #Kamarajm |
Posted: 12 Feb 2015 07:36 PM PST இனபடுகொலை என்பதை ஏற்கமுடியாது -பா.ச.க வானதி சீனிவாசன்! உன் கும்பலுக்கு அடுத்தவன் இரத்தத்தில் குளிப்பதுனா ஆனந்தம், அதுவும் தமிழர்களின் குறுதியில் குளிப்பதுனா பேரானந்தம், நீங்க செய்யவேண்டியதை அவன் செஞ்சிட்டான், அதனால் அவன் உங்களுக்கு ராமனின் வாரிசாகிப் போனான், நாங்க உங்களுக்கு அசுரர்களாகிப் போனோம், ம்ம் உங்களைச் சொல்லி தவறில்லை, இதையெல்லாம் கேட்டுட்டும் 2016ல் தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம்னு சொல்லும் , தறுதலை தமிழர்களையும், உன்னையெல்லாம் தமிழகத்தில் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கும் எங்களையும் சொல்லனும், ##தமிழகத்தில் ஒரு இனபடுகொலை நடக்கனும் அப்பதான் நாங்க திருந்துவோம்## Via Mathiyarasan |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment