நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு க... Posted: 31 Jan 2015 08:27 AM PST நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!... -25 நினைவுகள்.. முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!  |
இவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா? Posted: 31 Jan 2015 08:11 AM PST இவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?  |
படித்ததில் பிடித்தது # 'வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே... Posted: 31 Jan 2015 12:06 AM PST படித்ததில் பிடித்தது # 'வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே தப்பு. அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம், 'வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்' என்பதே சரி. # அந்த வெண்ண என்னடா நம்மள கண்டுபிடிக்கிறது? |
வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்காதது ஏன... Posted: 29 Jan 2015 09:47 PM PST வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்காதது ஏன்? பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு. |
நன்றி: ஆனந்த விகடம். Posted: 29 Jan 2015 08:06 PM PST நன்றி: ஆனந்த விகடம்.  |
ஒரு நிமிடந்தான்...! Posted: 27 Jan 2015 06:41 PM PST ஒரு நிமிடந்தான்...!  |
பேராசிரியர் அருணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள... Posted: 27 Jan 2015 06:23 PM PST பேராசிரியர் அருணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் பேராசிரியர் அருணன், தனது காலந்தோறும் பிராமணியம் நூலுக்காக (2400 பக்கம்) வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். நாமக்கல்லில் நடைபெற்ற விருது வழங்கு விழாவில் கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 1 லட்சம் பரிசை பேரா.அருணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொகையை அதே மேடையில் 'தீக்கதிர்' தினசரி பத்திரிக்கையின் வளர்ச்சி நிதிக்கு அளித்து விட்டார். அருணன் மிகச் சிறந்த கட்டுரையாளர், நாவலாசிரியர், பேச்சாளர். இவரின் தமிழர் தத்துவ மரபு நூலும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நூலாக இருக்கிறது. தற்பொழுது இவரின் புதிய அடையாளம் தொலைக்காட்சிகளின் செய்தி விமர்சகர் ஆகும். வாழ்த்துகள் பேராசியர் அருணன். via இராதெமுத்து  |
கூலி தொழிலாளியும் விவசாயியும் கடனை திருப்பி தரவில்லையென்றால் மத்திய அரசு சும்மா... Posted: 27 Jan 2015 06:10 PM PST கூலி தொழிலாளியும் விவசாயியும் கடனை திருப்பி தரவில்லையென்றால் மத்திய அரசு சும்மா விடுமா?  |
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... -... Posted: 27 Jan 2015 05:19 PM PST நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... - வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!! #படித்ததில்_ரசித்தது |
0 comments:
Post a Comment