Tamil History and Culture Facebook Posts |
- குற்றம் குறை சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒர...
- உலகின் முதல் ஆளில்லா விமானம் (ரைட் சகோதரர்களுக்கு முன்னால்): டிசம்பர் 17, 1903...
- எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:- (படித்ததில் பிடித்தது ) 1. மாதம் ஒரு புத்தகமாவது ப...
Posted: 20 Jan 2015 08:03 AM PST குற்றம் குறை சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான் #அன்பு இனிய இரவாகட்டும் ... @ Indupriya MP ... ![]() |
Posted: 19 Jan 2015 06:30 PM PST உலகின் முதல் ஆளில்லா விமானம் (ரைட் சகோதரர்களுக்கு முன்னால்): டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டு. அமெரிக்காவின் வட கெரொலினா மாகாணத்தின் கிட்டி சௌக் என்ற இடம். உலகமே வியக்கும் அந்த அற்புத நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. ஆம் மனிதனால் வானில் பயணிக்க முடியும் என்ற பல்லாண்டு கனவு நிறைவேறுவதற்கு ஒரு மாபெரும் சாத்தியப்படி நிகழ்த்தப்பட்டது. ஒர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரால் உலகின் முதல் பறக்கும் விமானம் பறக்கவிடப்பட்டது. ஆனால் இது தான் உலகின் முதல் விமானமா? டிசம்பர் 17, 1903 ஆம் அண்டிற்கு சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம், 1895 ஆம் வருடம் இந்தியாவில், மும்பாய் நகரத்தில் உள்ள சௌபதி கடற்கறையில்….. சிவ்கர் பாபுஜி தால்பேட் என்னும் இந்திய விஞ்ஞானியும் அவரது மனைவியும் இணைந்து சௌபதி கடற்கறையில் பரபரப்புடன் நின்றிருந்தனர். அவருடன் மிகப் பெரிய திரளான மக்கள் கூட்டம். என்ன நடக்க இருக்கிறது என்று தெரிந்து சில பேர், என்னவென்று தெரியாமல் பல பேர் அவர் அவர்களுக்கு தெரிந்ததை வைத்து யூகித்துக் கொண்டும் சில பேர். மக்கள் வெள்ளத்தின் இடையில் அப்போதிய பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் புகழ் பெற்ற ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் தென்பட்டனர். ஏதோ முக்கிய நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது ஆனால் என்னதான் நடக்க போகிறது என்ற வியப்பில் பொது மக்கள். விடை தெரியாமல் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடியே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. உலகின் முதல் ஆளில்லா விமானம் அந்த கடற்கறையில் பறக்கவிடப்பட்டது. காற்றை விட கனமான பொருள் வானத்தில் பறக்க முடியும் என்று ரைட் சகோதரர்கள் சொல்லுவதற்கு 8 ஆண்டுகள் முன்பே அதை மெய்ப்படுத்திய சாதனை. கூட்டத்தில் ஆரவாரமும் பாராட்டு கோஷங்களும் விண்ணைப் பிளக்கும் போதே, "மாருத்சகா" என்ற அந்த ஆளில்லா விமானம் மணிக்கு சுமார் 40,000 கி.மீ வேகத்தில் 1500 அடி மேலே பறந்து விண்ணை முட்டிப் பார்த்து எந்த பாதிப்புமில்லாமல் பத்திரமாக தரையிறங்கியது. மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கிடையே தால்பேட் அவர்களை அக்கணமே பாராட்டினார் மகாராஜா. ஆம் இத்தனை ஆண்டுகள் அவர் காத்திருந்ததற்கு இன்று தக்க வெகுமதி கிடைத்ததல்லவா. அடுத்த நாள், புகழ்பெற்ற கேசரி நாளிதழில் இந்த சாதனை வெளியானது. 1864 ஆம் ஆண்டு மஹாராஸ்டிராவில் பிறந்த தால்பேட் சிறுவயது முதலே வானில் பறக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொணடார். அவருக்கு அன்று தான் ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்தது. அன்று அவர் பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த சமஸ்கிருத பண்டிதரான தால்பேட் விமான சாஸ்திரம் பற்றி பழங்கால வேதங்களில் இருந்து அவர் அப்போதே நிறைய கற்றிருந்தார். அவர்து இந்த சந்திப்பு அவரது அதிர்ஷ்டத்தை இன்னும் பலமாக்கியது. சாஸ்த்திரி அவர்கள் அவரிடம் இருந்த நிறைய சூத்திரங்கள் கொண்ட பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமான சாஸ்த்திரங்கள் ஆவணங்களை கொடுத்து ஊக்கப்படுத்தினார். இவரது ஆராய்ச்சிக்கு பக்கபலமாய் இருந்து பொருளுதவி புரிந்தது மகாராஜா சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்கள். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ரிக் வேதத்தில் விமானம் குறித்து தகவல் உள்ளதா என்றால் நமக்கு நம்புவதற்கு சற்று கடினம் தான். ஆனால் தால்பேட் முழுக்க முழுக்க கற்று தன்னை தயார் படுத்தியது ரிக் வேதம் மற்றும் விமான சாஸ்த்திரம் மூலம் தான். பின் நாளில் சமஸ்கிருத பண்டிதர் திரு ஆச்சாரியா அவர்கள், விமான சாஸ்த்திரத்தில் 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக மொத்தம் 32 தொழில் நுட்பத்தில் விமானம் தயாரிக்கும் முறை இடம்பெற்றிருப்பதை விளக்கினார். ஆனால் இது அவர் இயற்றியதில் நமக்கு கிடைத்த சிறு பகுதியே, பெரும் பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன என்கிறார் ஆச்சாரியார். மீண்டும் 1895 ஆம் ஆண்டு…… கேசரி இதழில் வெளிவந்த பின் சில நாட்களில் சாஸ்த்ரி அவர்களும், தால்பேட் அவர்களும் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டனர். மகாராஜா கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த தால்பேட் சில நாட்களில் தனது மனைவி இறந்தவுடன் ஆய்வுகளை நிறுத்திக் கொண்டார். 1916 ஆம் ஆண்டு அவரும் இறந்த உடன் அவரது உறவினர்கள் அவரது முக்கிய ஆவணங்களை சில ஜெர்மானியரிடம் விற்றதாக கூறப்படுகிறது. மாருத்சகாவின் மாதிரி வில்லே பார்லெ (Vile Parle) கண்காட்சியில் வைக்கப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் தற்போது ஹிந்துஸ்தான் ஏரொனாடிக்ஸ் நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1903 ஆம் வருடம் ரைட் சகோதரர்களால் இயற்றப்பட்ட விமானம் மனிதனைச் சுமந்து சென்றது. ஆனால் இது ஒரு ஆளில்லா விமானம் என்றாலும் குறிப்பிடத்தக்க பல சிறப்பம்சங்கள் இதற்கு உண்டு. ரைட் சகோதரர்கள் இயக்கியது வெரும் 120 அடி உயரப் பறந்த விமானம் ஆனால் இது 1500 அடி உயரம் பறந்தது. இந்த விமானம் மெர்குரி வொர்டெஃக்ஸ் இயந்திரத்தால் இயக்கப்பட்டது. இந்த தொழில் நுட்ப்பத்தில் நாசாவே இன்னும் முழுமை பெறவில்லை. அதாவது பாதரசத்தை எரிபொருளாக உபயோகிப்பது. பொருளாதாரத்திலும் தொழில் நுட்பத்திலும் இன்று உலகத்தில் முதல் நிலையில் உள்ள நாசா இதே போன்ற ஒரு ஐயான் மெர்குரி வொர்டெக்ஸ் இயந்திரத்தை தயாரிக்க பாடுபட்டு வருகிறது. தற்போது உள்ள ஏவுகனைகளிலும், ஜெட் இயந்திரங்களிலும் அதிக வெப்பம் கொண்ட சூடேற்றப்பட்ட வாயு எரிபொருள் அனுப்பப்படும். ஆனால் மெர்குரி வொர்டெக்ஸ் இயந்திரத்தில் அதி வேக மின்னூட்டப்பட்ட துகள்கள் அனுப்பப்படும். இது பாதரசத்தையும், சூரிய சக்தியையும் கொண்டு இயங்கும். இதன் செயல்முறையை பரிசோதனை செய்த நாசா எலக்ட்ரான்களை சுமார் நிமிடத்திற்கு 1200 முதல் 1400 கி.மீ என்ற வேகத்தில் அந்த இயந்திரத்தில் முடுக்கி விட்டனர் ஆனால் முற்றிலும் செய்முறைக்காக நடத்தப்பட்ட இந்த முயற்சியில் வெறும் சிறிய அளவு அழுத்தமே பெறப்பட்டது. ஆனால் இதே தொழில் நுட்பத்தை தால்பேட் 108 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கிறார். நம் முன்னோர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கின்றனர். அது மட்டும் அல்ல பாதரசத்தை பயன்படுத்தும் தத்துவமே அறிவியல் பூர்வமானது. பாதரசம் ஒரு விசித்திரமான பொருள். இதை திரவமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது அதே வேலை உலோகமாகவும் கருத முடியாது. இதன் குணத்தை இந்தியர்கள் அன்றே உணர்ந்துள்ளனர். இது மட்டுமல்ல இந்தியாவில் பழங்காலத்தில் பலவகை விமானம் தயாரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் அறிவியல் தன்மையை ஆய்வு செய்தால் பல உண்மைகள் புலப்படும். சமஸ்கிருத மொழியில் இருக்கும் அந்த முக்கிய பழங்கால ஆவ்ணங்களில், தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் இது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பு :- பரத்வாஜ முனிவர் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முனிவர். இவரது குறிப்புகள் இராமாயணத்தில் இடம்பெற்றிருக்கும். நன்றி : விதைகள் அறக்கட்டளை பா விவேக் ![]() |
Posted: 19 Jan 2015 05:47 PM PST எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:- (படித்ததில் பிடித்தது ) 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். 13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள். 14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள். 15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள். 16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும். 17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள். 18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள். 19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள். 20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள். 21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள். 22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள். 23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள். 24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான். 25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள். நன்றி : பூனேஷ் ஃபாதிமா பா விவேக் |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment