Wednesday, 14 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சித்திரை மட்டுமே தமிழ் புத்தாண்டு: அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும்...

Posted: 14 Jan 2015 07:08 AM PST

சித்திரை மட்டுமே தமிழ் புத்தாண்டு:

அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சைத்ரா/சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இலக்கிய ஆதாரங்கள்:

புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று கூறுகிறார் ஞானப்பிரகாசர்.

அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று கூறுகிறது .

நக்கீரர் "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று கூறுகிறார். இதில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் ராசமாணிக்கனார் கூறுகிறார்.

சித்திரை அல்லது மேஷம் என்பது தான் தமிழில் முதல் மாதம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் சைத்ரா/சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் சித்திரைக்கும் மற்ற மாநில சைத்ராவிற்கும் 10 அல்லது 15 நாள் வேறுபாடு தான். அதற்கு காரணம் "சர்வதேச ஆண்டு முறையை இந்தியர்கள் ஏற்ற போது பல மாநிலங்கள் ஒரே தினத்தில் ஏற்கவில்லை. ஒரு மாநிலம் ஏற்று அண்டை மாநிலம் ஏற்க பல வருடங்கள் ஆயிற்று". சர்வதேச முறைக்காக பாரம்பரிய காலண்டரில் சில நாள் மாற்றப்பட்டது.

அந்த இடைவெளியால் தமிழ் புத்தாண்டுக்கு சில நாள் முன்பு பல மாநிலமும், தமிழனுடன் அதே நாளில் "கேரளா,ஒரிசா, நேபாள்,மொரிசியஸ், பாலி இந்து மக்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்".

புத்தாண்டுக்கு ஒரு நாள் அல்லது சில நாள் கழித்து அல்லது அதே நாளில் குஜராத், அஸ்ஸாமில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.

அதன் விவரம் இதோ சித்திரை/சைத்ரா முதல் நாள் தமிழ் புத்தாண்டு, கேரளா விஷு, ஒரிசா விஷ்வா சங்கராந்தி, பஞ்சாப் வைசாகி, நேபாள் மைதிலி, இந்தோனேசியா பாலி இந்துக்கள் நியோபி,இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டுக்கு சில நாளுக்கு முன்பு தெலுகு உகாதி, கன்னட பேவு பெல்லா, ராஜஸ்தான் தாப்னா, சிந்தி சேட்டி சந்த், மணிப்புரி சஜிபு செய்ரோபா, மராட்டி குதிபத்வா, கொங்கணி நவ்வே வர்சாச்சே, ஹிமாச்சல் பிஷு இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.

இரண்டு , மூன்று நாளுக்கு முன்பு அனைத்து ஹிந்தி மாநிலங்களும் 'சைத்ர பிரதிபடா' என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

குஜராத், தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் முன்பு கொண்டாடுகின்றனர். அசாமி 'ரொங்காலி பிஹு' என்று ஒரு நாள் முன்பு தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் பின்பு புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இந்த இந்திய புத்தாண்டுகள் அனைத்துமே March 28 லிருந்து April17 க்குள் முடிந்து விடும். தமிழ் என்பது சமய நம்பிக்கை சார்ந்தது வெளிப்படையாக சொன்னால் புத்தாண்டும், பொங்கல் எல்லாம் ஒரு சமயத்தினர் மட்டும் கொண்டாடுகின்றனர். இசுலாமியர் ஹிஜிராவையும் கிறித்தவர் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அவர்களின் நம்பிக்கை வேறு அது போல நாத்திகர்கள் புத்தாண்டில் மூக்கை நுழைக்க வேண்டாம். தமிழ் புத்தாண்டை மாற்ற அரசியல்வாதிக்கு உரிமையில்லை...

பொங்கல், மாட்டு பொங்கல், கன்னி பொங்கல் என நம் பாரம்பரியத்துடன் கொண்டாடுவோம். !!

-வி. ராஜமருதவேல்
(copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)


நன்றி : அஷ்ரீன் பா விவேக்

Posted: 14 Jan 2015 04:16 AM PST

நன்றி : அஷ்ரீன்

பா விவேக்


விவசாயி வீட்டுல இழவு ஹாப்பி பொங்கல்... ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்…...

Posted: 14 Jan 2015 01:30 AM PST

விவசாயி வீட்டுல இழவு ஹாப்பி பொங்கல்...
ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்…
வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்…
ஆறு,சாக்கடையா போச்சு ஹாப்பி பொங்கல்…
கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி பொங்கல்…
இளனிக்கு கேட்ட காச குடுத்ததில்ல ஹாப்பி பொங்கல்…
பஸ்ஸுல மூட்டைகள ஏத்தவிடல ஹாப்பி பொங்கல்…
காட்டுப் பசிக்கும் KFCதான். ஹாப்பி பொங்கல்…

#ஹாப்பி_பொங்கல்...

நன்றி : தளபதி தினேஷ்

விவேக்


இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ... பொங்கல்போல் நம்வாழ்வும் பொங்கட்டும்...

Posted: 13 Jan 2015 08:36 PM PST

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

பொங்கல்போல் நம்வாழ்வும் பொங்கட்டும் - இனியாவது
எங்ககுல உழவன்கை ஓங்கட்டும்
தானேபுயல் தாண்டவங்கள் குறையட்டும் - நாங்கள்
தலைநிமிர தானியங்கள் குனியட்டும்

எறும்புக்கும் கோலம்போட்டு உணவுதந்தோம் - பலர்
இளைப்பாற தண்ணீர்கேட்டா மோருதந்தோம்
பொழப்புத்தேடி வந்தோருக்கு பூமிதந்தோம் - பல
பொழப்பற்ற மனிதனுக்கும் பூமிதந்தோம்

வந்தோரை வாழவைக்கும் எங்கள்பூமி - குடி
தண்ணீருக்கு கையேந்துது பாருசாமி
இந்தநிலை மாறிவிட உதவுசாமி - இவ்வாண்டு
இதுயெங்க கோரிக்கை கேளுசாமி

நன்றி : கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

பா விவேக்


0 comments:

Post a Comment