Relax Please: FB page daily Posts |
- :P :P Relaxplzz
- வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை எந்த விதமான வேகத்தடைய...
- :) Relaxplzz
- ''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன செய்வது என்றே தெரியவில்லை,''என்ற...
- ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எங்க பக்கத்து வீட்டுல பயங்கர சண்டை .நமக்கு தான்...
- கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார் அதில் துணிச்சல் தென்படும், அதை நீ புரிந்துக்கொ...
- பஸ் ஸ்டாண்ட் டாய்லெட் கதவுல இப்பிடி கிறுக்கி வச்சிருகாய்ங்க பாவிபசங்க "காதலிக்க...
- மறவாதீர்.. நண்பர்கள் அறிய பகிருங்கள் (y)
- :) Relaxplzz
- எஸ்.எம்.எஸ். கலாட்டா.... ( சிரிக்க மட்டும் ) 1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த...
- அழகு தமிழ்நாடு! மணிமுத்தாறு அணை!
- :) Relaxplzz
- சிலை :- இயக்குனர் பாலச்சந்தர் அஸ்தியை கரைத்த கையோடு அவருக்கு மயிலாப்பூரில் சிலை...
- இந்த மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களை வெள்ளித்திரையில் காணவிரும்புவோர் லைக் பண்ணுங்...
- பாலிதீன் பை மட்டுமல்ல ஜாதியும் அழிய பல லட்சம் ஆண்டுகள் ஆகும் !!! :(
- :( Relaxplzz
- ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு.. நீங்கள் பயணம் செய்ய முடியாத ரயில் டிக்கெட்ட...
- ;-) Relaxplzz
- சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்...
- வேட்டி தினம் & தாவணி தினம் (13/01/2015 , 14/01/2015) கடந்த வருடம் திரு.சகாயம் அ...
- #இருபதுகளில்... எழு! உன் கால்களுக்கு சுயமாய்நிற்கச்சொல்லிக்கொடு! படி! எதையும்...
- சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...
- (y) Relaxplzz
- மாதவிலக்கு தூரம் வெளில தீட்டு... இப்படி பெண்ணை ஒதுக்கிய சங்கதியை உடலெங்கும் ப...
- :P:P Relaxplzz
- அப்பா... பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட திருப்பூர் தகப்பன். முதிய வயதில் சாலை யோ...
- :P Relaxplzz
- கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer) # ப்ளீஸ் படிங்க.. படிக்க முட...
- முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை !!! அரை டீஸ்பூன் எலுமிச்...
- குற்றாலீசுவரனை யாருக்காவது ஞாபகம் இருக்கா? இப்போ அவர் என்ன செஞ்சிட்டு இருக்காரு...
Posted: 05 Jan 2015 09:10 AM PST |
Posted: 05 Jan 2015 09:00 AM PST வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்… Relaxplzz ![]() |
Posted: 05 Jan 2015 08:55 AM PST |
Posted: 05 Jan 2015 08:53 AM PST ''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன செய்வது என்றே தெரியவில்லை,''என்று நண்பரிடம் அங்கலாய்த்தார் ஒருவர். நண்பர் சொன்னார், ''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. என் மனைவியும் அடிக்கடி தனக்குத்தானே பேசிக் கொள்வாள். அவளுக்கே அது தெரிவதில்லை. என்ன, அவள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வாள்.'' :P :P |
Posted: 05 Jan 2015 08:50 AM PST ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எங்க பக்கத்து வீட்டுல பயங்கர சண்டை .நமக்கு தான் என்ன சண்டைன்னு தெரிஞ்சுக்கலைன்னா தூக்கம் வராதே சரின்னு அங்க போய் என்ன சண்டைனு கேட்டா , வீட்டு பக்கத்துல இருக்குற ஒரு பொண்ணு அதே தெருவுல நாலு வீடு தள்ளி இருக்கற ஒரு ஆள போரபோதும் வரபோதும் கிர்ர்ர் தூ,,, ன்னு துப்பி கண்டபடியா திட்டிட்டு இருந்திருக்கு அவருக்கும் அந்த பொம்பள ஏன் திட்டுது எதுக்கு திட்டுதுன்னு தெரியவே இல்ல சரி இத இப்படியே விடக்கூடாதுன்னு வீட்ல போய் சொல்லி அந்த பொம்பளைகிட்ட குடும்பமே வந்து சண்டை போட்டிட்டு இருந்திருக்கு . சரி என்னதான் நடக்குதுன்னு நானும் நின்னு பாத்திட்டு இருந்தேன். அப்ப அந்த பொம்பள எல்லார்கிட்டயும் வந்து,,,,, "நான் திட்டினதையே எல்லாரும் சொல்லறிங்களே அந்த ஆள் என்ன செஞ்சான்ன்னு யாராவது கேட்டிங்களா? அண்ணா!! அவன் என்ன செஞ்சான் தெரியுமான்னா நீங்க ஆம்பளையா போயிட்டிங்க இல்லைன்னா சொல்லிடுவேன் ச்சே ,,, அக்கா அந்த ஆள் என்ன செஞ்சான் தெரியுமா ச்சே சொல்லவே வாய் கூசுது ,,, " அப்டின்னு அங்க நிக்கிறவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு இருந்துச்சு,,,, எனக்கோ மண்டகாயுது அப்டி என்னதான்யா அந்த ஆள் செஞ்சான் ??? சொல்லித் தொலைங்கய்யான்னு மூளை குழம்புற மாறி யோசிச்சுட்டு இருந்தேன். அப்போ அந்த பொண்ணு அந்த பொண்ணோட வீட்டுக்கார பாட்டிகிட்ட என்னமோ பேசுச்சு , பேசின பின்னாடி அந்த பாட்டி வந்து நீங்க பேசினதும் தப்பு, அந்த பொண்ணு பேசினதும் தப்பு இனிமே அப்படி நடக்காம நான் பாத்துக்கறேன் நீங்களும் அப்டி பன்னாதிங்கன்னு சொல்லி ஒருமணி நேரமா நடந்திட்டு இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வச்சிது . எனக்கா அன்னைக்கு தூக்கமே வரல அப்படி என்ன செஞ்சிருப்பான்??? அந்தாளு !! சரி இனியும் தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சிடும் அந்த பாட்டிகிட்டயே கேட்டிடுவோம்னு மறுநாள் அந்த பாட்டிகிட்ட போய் கேட்டேன் ,,,, " பாட்டி அப்படி என்னதான் அந்தாள் செஞ்சான் ? உங்ககிட்ட அந்த பொண்ணு சொல்லுச்சேன்னு கேட்டேன் அதுக்கு அந்த பாட்டி " அத ஏன் கேக்குற அந்த கழுத என்கிட்டயும் அதையே தான்பா சொல்லிட்டு இருந்தா,,, எதுக்கு சண்டைய வளக்கனும்னு நான்தான் அப்படி சொல்லி தீத்து வச்சேன்னு சொல்லுச்சு. அடப்பாவிகளா !!!ஊருக்குள்ள இப்படித்தான் பல சண்டை நடக்குதா ??? ரெண்டுநாள் தூங்கவிடாம செஞ்சிடிங்கலேய்யா - டப்பா தலையன் @ Relaxplzz |
Posted: 05 Jan 2015 08:45 AM PST கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார் அதில் துணிச்சல் தென்படும், அதை நீ புரிந்துக்கொண்டால் , துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும். -சுவாமி விவேகானந்தர் ![]() "இவர்கள் சொன்னவை" |
Posted: 05 Jan 2015 08:40 AM PST பஸ் ஸ்டாண்ட் டாய்லெட் கதவுல இப்பிடி கிறுக்கி வச்சிருகாய்ங்க பாவிபசங்க "காதலிக்காக காத்திருக்கும் நொடியை விட கொடுமையானது கழிவறைக்காக காத்திருக்கும் நொடி.". அடேய் யார்ரா நீங்கல்லாம் ... :D - களவாணி பய @ Relaxplzz |
Posted: 05 Jan 2015 08:35 AM PST |
Posted: 05 Jan 2015 08:27 AM PST |
Posted: 05 Jan 2015 08:19 AM PST எஸ்.எம்.எஸ். கலாட்டா.... ( சிரிக்க மட்டும் ) 1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க? ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்... ஆசிரியர் – 1: ????? 2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... ஆசிரியர்: ????? 3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!! நண்பர் 1 : ?????? 4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்! கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!! மனைவி : ????? 5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்! பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா? பாட்டி : :::?????? 6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க? வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!! டாக்டர் : ?????? 7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்... மலர்ந்தது காதல்... குவிந்தது "அரியர்ஸ்" ---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம் 8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்? Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள... Boy 1: ????? 9) காதலி : டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு.... காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்.... காதலி : ????? 10) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்... பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்... கேர்ள்:??????? 11) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்... கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு.... பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா... கேர்ள்: ?!?.... 12) ஹார்ட் அட்டாக்'னா என்ன? பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு... அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்....... 13) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்.. ----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.... 14) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்? நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு! நண்பர் – 1: ????? 15) அம்மா: ஏன் செல்லம் அழற? குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல! அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு! குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா? அம்மா: ?!? Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 05 Jan 2015 08:15 AM PST |
Posted: 05 Jan 2015 08:10 AM PST |
Posted: 05 Jan 2015 08:00 AM PST சிலை :- இயக்குனர் பாலச்சந்தர் அஸ்தியை கரைத்த கையோடு அவருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வைத்திருக்கிறார்கள். பாலச்சந்தர் நல்ல சினிமா எடுத்தார். ரசித்தோம். கைதட்டினோம் விசில் அடித்தோம். குறிப்பாக அவருக்கு காசு கொடுத்தோம். அவர் வயது முதிர்ச்சியில் மறைந்தார். ஆழந்த இரங்கலை தெரிவித்தோம். அவரை வாழ்த்தி புகழாரம் சூட்டினோம். அத்துடன் முடித்துக் கொண்டோம். அதுவே போதும் கூட. இன்று கோரிக்கை வைத்து சிலை வைப்பீர்கள். அதன் மீது எவனாவது குடிகாரன் செருப்பை வீசுவான். என் சமுதாயத்து ஆள்மீது செருப்பை வீசியவனை கைது செய் என்று ஆயிரம் போஸ்டர் அவசரமாக அச்சடிக்கப்படும். அதில் வீரவணக்கம் செலுத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை நினைவேந்தல் என்பீர்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு குருபூஜையாக மாறும். அதில் கலவரம் வரும். போதுமய்யா உங்க சிலை கலாச்சாரம். இன்று பாலச்சந்தர் என்பது பாரதிராஜா வரை நீளும். எங்களுக்கு பாலச்சந்தரை நினைவு படுத்த அவரது படைப்புகள் போதும். உங்களுக்கு சிலை வேண்டுமானால் உங்கள் வீடுகளில் முன் நிறுவிக் கொள்ளுங்கள். இப்படிதான் மெரினாவில் சிவாஜி சிலை வாகனங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று இருபது அடி தள்ளிவைக்க நீதிமன்றம் வரை பஞ்சாயத்து போனது. ஆமாம் சிவாஜியும் தான் என்ன செய்து விட்டார்? எதற்கு அவருக்கும் சிலை? அவரது பேரனை வரை வளர்த்து விடுகிறோம் அதுவே போதும். - வெங்கடேசன் பாலகிருஷ்ணன் Relaxplzz |
Posted: 05 Jan 2015 07:50 AM PST |
Posted: 05 Jan 2015 07:40 AM PST |
Posted: 05 Jan 2015 07:32 AM PST |
Posted: 05 Jan 2015 07:32 AM PST ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு.. நீங்கள் பயணம் செய்ய முடியாத ரயில் டிக்கெட்டை, தகுந்த ஆவணங்களுடன் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றலாம்.. புதிய திட்டம்.. படித்து பகிரவும் ![]() Timeline Photos A confirmed railway ticket can be transferred in your blood relations. If a person is holding a confirmed ticket and is unable to travel, then the ticket can be transferred to his/her family members including father, mother, brother, sister, son, daughter, husband or wife. For transfer of ticket, an application must be submitted at least 24 hours in advance of the scheduled departure of the train to chief reservation supervisor with ID proof. Government officials can transfer to other govt official, students can transfer ticket to other students. Share this. It may help someone. @[297395707031915:274:Relaxplzz] |
Posted: 05 Jan 2015 07:25 AM PST |
Posted: 05 Jan 2015 07:13 AM PST சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்டர் : யாரு நீயா..! அது எப்படி மாப்பு கொஞ்ச கூட வெக்க படமா பேசிட்ட, படிப்பு என்ன அவ்வளோ Cheap-a போயிடுச்சா..? ஏய் படிப்பு இப்பலாம் வேற Range-ல போய்டு இருக்கு மாப்பு, LKG, UKG-னு கேள்வி பட்டு இருக்கி-யா... அதுக்கு முன்னாடி ஒரு ஒன்றை வருஷம் குழந்தைங்க "சறுக்கு விளையாட்டு, தூறு விளையாட்டுலாம்" விளையாடனும்... அதுக்கு அப்புறம் ஒரு ஆயா வரும், மடியல உக்கார வச்சி சோறு ஊட்டும், "உன் நெஞ்சுல இருக்க முடி Rangeக்கு" நீ ஆயா மடியல உக்கார முடியுமா, ஆயா வேணா உன் மடில உக்காரலாம்.. அடேங்கப்பா "LKG, UKG, +2, BABL" நினைத்தாலே தல சுத்து-து அத நீ படிக்கறன்-ற யப்பா... #கவுண்டர்_டயலாக்ஸ் @ Relaxplzz ![]() கவுண்டர் டயலாக்ஸ் |
Posted: 05 Jan 2015 07:02 AM PST வேட்டி தினம் & தாவணி தினம் (13/01/2015 , 14/01/2015) கடந்த வருடம் திரு.சகாயம் அவர்கள் குறிப்பிட்டுள்ள வேட்டி தினம் சனவரி இரண்டாம் வாரம் முழுவதும் கொண்டாட பட்டது. பெரியோர் மட்டுமல்லாது இளைஞர்களிடம் பெரிய வரவேற்பு ஏற்றுள்ளது. இது மிகப்பெரிய வெற்றியாகும்.இந்த வருடம் அவர் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும், அவர் வழிநின்று நாம் நடத்துவோம் .. கலாச்சாரத்தை உயர்த்துவோம்.... வேட்டி தினம் & தாவணி தினத்தில் முழுமையான வெற்றி பெற :::: * வேட்டி மற்றும் தாவணி அணிவது இந்த வெற்றியை நிர்ணயிக்கிறது, அதை நிர்ணயிப்பது நாம் அணியும் வேட்டி மற்றும் தாவணி நெசவாளர் கையால் நெய்த வேட்டியாக இருக்க வேண்டும், அனைத்து ஆலைகளில் தயாரிக்கும் வேட்டி மற்றும் தாவணிகளிலும் உழைப்பு இருக்கிறது ஆனால் அங்கே உழைப்பு சுரண்டப்படுகிறது, எனவே நீங்கள் அணியும் வேட்டி மற்றும் தாவணி ஒரு நெசவாளரின் வீட்டில் ஒளி ஏற்றவேண்டும். * நீங்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுக்க வேண்டும். * உங்கள் தோழன் அல்லது தோழி முதல் முறையாக வேட்டி மற்றும் தாவணி கட்டினால் அவர்களை கிண்டலடிக்காமல் ஊக்குவிக்கவும், இன்னொருவர் உங்களால் வேட்டி மற்றும் தாவணி கட்ட முன்வந்தால் அதுவே முழு வெற்றியாகும்... வேட்டி கட்டினால் தான் தமிழன் கலாச்சாரம் என்பதில்லை, தமிழன் கலாச்சாரம் எதையும் இழந்துவிடவில்லை என்பதை உலகிற்கு காண்பிப்போம்... ஒத்துழைக்க தயாராகும் அணைத்து தோழர்களுக்கும் தலை வணங்குகிறேன்... - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு Relaxplzz ![]() |
Posted: 05 Jan 2015 06:45 AM PST #இருபதுகளில்... எழு! உன் கால்களுக்கு சுயமாய்நிற்கச்சொல்லிக்கொடு! படி! எதையும் படி வாத்யாஸனம்கூட காமமல்ல! கல்விதான். படி! பிறகு புத்தகங்களையெல்லாம் உன் பிருஷ்டங்களுக்குப்பின்னால் எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா! உன் சட்டைப்பொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்! ஏவாத ஏவுகணையிலும் அடிக்கப்பட்ட ஆணியே பலம்! மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய்! சப்தங்களைப்படி! சூழ்ச்சிகளையறி! பூமியில்நின்று வானத்தைப்பார்! வானத்தில்நின்று பூமியைப்பார்! உன் திசையை தெரிவுசெய்! நுரைக்கநுரைக்க காதலி! காதலை சுகி! காதலில் அழு! இருபதுகளின் இரண்டாம்பாகத்தில் மணம்புரி! பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான்! மிச்சமெல்லாம் உனக்கு! வாழ்க்கையென்பது உழைப்பும் துய்ப்புமென்று உணர்! உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து! இன்னும்...இன்னும்... சூரியக்கதிர்கள் விழமுடியாத ஆழத்தில்! #முப்பதுகளில்..... சுறுசுறுப்பில் தேனீயாயிரு! நிதானத்தில் ஞானியாயிரு! உறங்குதல்சுருக்கு! உழை! நித்தம் கலவிகொள்! உட்காரமுடியாதவொருவன் உன் நாற்காலியை ஒளித்துவைத்திருப்பான்! கைப்பற்று! ஆயுதம்தயாரி! பயன்படுத்தாதே! எதிரிகளை பேசவிடு! சிறுநீர்கழிக்கையில் சிரி! வேர்களை இடிபிளக்காத ஆழத்துக்கனுப்பு! கிளைகளை சூரியனுக்கு நிழல்கொடுக்கும் உயரத்தில் பரப்பு! நிலைகொள்! #நாற்பதுகளில்.... இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்! செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி! எதிரிகளை ஒழி! ஆயுதங்களை மண்டையோடுகளில் தீட்டு! ஒருவனைப்புதைக்க இன்னொருவனை குழிவெட்டச்சொல்! அதில் இருவரையும் புதை! பொருள்சேர்! இருகையால் ஈட்டு! ஒருகையாலேனும் கொடு! பகல்தூக்கம்போடு! கவனம்! இன்னொருகாதல்வரும்! புன்னகைவரை போ! புடவைதொடாதே! இதுவரை லட்சியம்தானே உன் இலக்கு? இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு! #ஐம்பதுகளில்.... வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி! கொழுப்பைக்குறை! முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்! கணக்குபார்! நீ மனிதனா என்று வாழ்க்கையைக்கேள்! லட்சியத்தைத்தொடு! வெற்றியில் மகிழாதே! விழா எடுக்காதே! #அறுபதுகளில்.... இதுவரை வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது! இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்! விதிக்கப்பட்டவாழ்க்கையை விலக்கிவிடு! மனிதர்கள் போதும்! முயல்வளர்த்துப்பார்! நாயோடு தூங்கு! கிளியோடு பேசு! மனைவிக்கு பேன்பார்! பழைய டைரியெடு! இப்போதாவது உண்மையெழுது! #எழுபதுக்குமேல்.... இந்தியாவில் இது உபரி! சுடுகாடுவரை நடந்துபோக சக்தியிருக்கும்போதே செத்துப்போ! ஜன கண மன.... -வைரமுத்து. ![]() |
Posted: 05 Jan 2015 06:43 AM PST சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே சுமக்கும் ஆண்களை மறந்துவிடுகிறது.. .!!! ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 05 Jan 2015 06:30 AM PST |
Posted: 05 Jan 2015 06:24 AM PST மாதவிலக்கு தூரம் வெளில தீட்டு... இப்படி பெண்ணை ஒதுக்கிய சங்கதியை உடலெங்கும் பூசியபடி பெருமையாய் பிறக்கிறது அவள் சிசு ! - Kalimuthu. ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 05 Jan 2015 06:17 AM PST |
Posted: 05 Jan 2015 06:01 AM PST அப்பா... பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட திருப்பூர் தகப்பன். முதிய வயதில் சாலை யோரத்தில் நான்கு நாட்கள் கிடந்தார். இன்று சுத்தம் செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தைப் பகிருங்கள். வெட்கப்பட்டாவது இந்த முதியவரின் பிள்ளைகள் வந்து தகப்பனை கூட்டிப் போகட்டும். -டிவி எஸ் சோமு ![]() |
Posted: 05 Jan 2015 05:46 AM PST |
Posted: 05 Jan 2015 04:00 AM PST கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer) # ப்ளீஸ் படிங்க.. படிக்க முடியாதவங்க வீடியோவ பாருங்க.. கண்டிப்பா உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க # செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா ..தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில. . கூக்லி : ஒன்னு தெரிஞ்சிக்கோ ..இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings 1 .Forget Everything And Run 2. Face Everything And Rise Choice is yours… மொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும். செல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன? கூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா? .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்.. செல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா? கூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது.. செல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்? கூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது.. செல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்? கூக்லி : ஆமாம். செல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் ? கூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்.. செல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா? கூக்லி : கீமொதெரபீ சிகிச்சை வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்.. செல்லி: இதென்ன ?..அப்ப கீமோதெரபி யை ஏன் டாக்டர்கள் கை ஆளுகிறார்கள்..? கூக்லி : அப்படித்தான் ..புற்று நோய்க்கு) கீமொதெரபீ சிகிச்சை மட்டுமே தான் வழின்னு இந்த டாக்டர்கள் சொல்றத மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது ன்னு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ன்ற டாக்டர் சொல்றார். இந்த வீடியோவ பாரு..உனக்காக நானும் அவர் சொன்னத தமிழில் மொழி பெயர்த்து போடறேன் 1) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது. 2 ) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும் ..இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக்கலாம்.....பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம்,. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! ..நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும் ..சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ சிகரெட் நோ மது…! 3. ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் பெருக வழி வகுக்கும் கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்.. கோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..இந்த மூனு விஷ்யங்களக் கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவ்ங்களும் சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால ,நம் குடும்பத்தால முடியும்ங்ற பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்.. செல்லி : சூப்பர் பா ..இந்த 8 நிமிட வீடியோவப் பார்த்தாலே மனதில் கேன்சரைப் பற்றி எதிர் மறை எண்ணமும்,பயமும் கொஞ்சம் விலகி தெளிவாத் தான் இருக்கு.. கூக்லி: ம்ம் சரி உன் நண்பர்களிடமும் இதை பகிர்ந்துக்கோ.. மொக்கை ஜோக்குகளையும் ஸ்டேடஸ்களை ஷேர் செய்வதற்கு இடையில் முடிந்த வரை இந்த வீடியோவையும் ஷேர் செய்ய சொல்லு . . செல்லி : இதோ இப்பவே போடறேன்..நன்றி கூக்லி. - Chelli Srinivasan. Relaxplzz ![]() |
Posted: 05 Jan 2015 03:10 AM PST முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை !!! அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும். ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை. 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு. இளம் வயதிலேயே சிலருக்கு தோல் தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில். தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும். 'நேச்சுரல் ஃபேஸ் பேக்' செய்யும் விதத்தைச் சொல்லட்டுமா? எலுமிச்சை இலை – 4, பயத்தம்பருப்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – அரை டீஸ்பூன் ('ஃபேஸ் பேக்' போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் 'நேச்சுரல் ஃபேஸ் பேக்'. இதை முகத்துக்கு 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் எலுமிச்சை! 2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும். தலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்! ஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும். பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..? 4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு – ஒரு டீஸ்பூனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது. பற்களை பளிச்சிட வைக்கிறது எலுமிச்சைச் சாறு. உப்புத்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், பொடித்த கற்பூரம் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 துளி, வேப்பந்தூள் – அரை டீஸ்பூன்.. இவற்றைக் கலந்து வாரம் 2 முறை பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவ துடன் பற்களில் உள்ள காரையும் மறையும். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித் தால், வாய் துர்நாற்றமும் இருக்காது. வியாதிகள் போக்கும் எலுமிச்சை மலையேறும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும். எலுமிச்சையில் 84.6% நீர்ச் சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது. எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும். முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்னை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள 'விட்டமின் சி' சத்து உதவுகிறது. எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும். வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க் கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட.. பூரண குணம் கிடைக்கும். பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும். மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால்.. விரைவில் குணமடைவார்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள். பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும். Relaxplzz |
Posted: 05 Jan 2015 03:00 AM PST குற்றாலீசுவரனை யாருக்காவது ஞாபகம் இருக்கா? இப்போ அவர் என்ன செஞ்சிட்டு இருக்காருன்னு தெரியுமா? அமெரிக்காவுல மென்பொருள் துறையில் வேலை செய்துகொண்டு இருக்கிறார்! அமெரிக்க நீச்சல் வீரர்,மைகேல் பெலப்ஸ அவங்க நாட்ல அப்டி சும்மா விட்டுடுவாங்களா? இந்த கிரிக்கெட்டுக்கு நம்ம தர்ற அளவுக்கு அதிகமான முக்கியதுவதுல,மற்ற விளையாட்டுக்கள் சார்ந்த திறமையாளர்களை,இழந்து வருகிறோம். ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment