Tuesday, 27 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


வரிசை மாறாமல் அருமையாக கார்களை பார்க் செய்திருக்கும் விதம்

Posted: 27 Jan 2015 09:38 AM PST

வரிசை மாறாமல் அருமையாக கார்களை பார்க் செய்திருக்கும் விதம்


:) Relaxplzz

Posted: 27 Jan 2015 09:30 AM PST

செம .. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 27 Jan 2015 09:20 AM PST

செம ..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


நெதர்லாந்த் நாட்டில் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் விலங்குகள் நடமாடும்...

Posted: 27 Jan 2015 09:16 AM PST

நெதர்லாந்த் நாட்டில் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் விலங்குகள் நடமாடும் பகுதியில் அரசு அமைத்துள்ள இயற்கை தன்மை மாறாத மேம்பாலம்...
இதே நம்மூரில் அரசு வனபகுதியை ஆக்கிரமிப்பு செய்து மின்வேலி அமைத்து அதில் காட்டு விலங்குகளை பலியாக்குவார்கள்...


"அபூர்வமான தகவல்கள்"

தன்னிடம் சுண்டல் வாங்கிவிட்டு மீதி 25 பைசாவிற்கு சண்டையிட்ட இளைஞன், தன் காதலியோட...

Posted: 27 Jan 2015 09:10 AM PST

தன்னிடம் சுண்டல் வாங்கிவிட்டு மீதி 25 பைசாவிற்கு சண்டையிட்ட இளைஞன், தன் காதலியோடு ஜோடியாக வருவதை கண்ட சுண்டல் விற்கும் சிறுவன் அந்த இளைஞனை பார்த்து சொன்னான்...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
" அண்ணே.. நேத்து, உங்க கூட வந்த அக்கா இன்னும் அழகா இருந்தாங்க...!"

# ஆருகிட்ட. :P :P

ஒரு நாளைக்கு 3 1/2 லிட்டர் நீர் அருந்தினால் உடல் நலம் ஆரோக்கியமாகவும் உடல் உறுப்...

Posted: 27 Jan 2015 08:59 AM PST

ஒரு நாளைக்கு 3 1/2 லிட்டர் நீர் அருந்தினால் உடல் நலம் ஆரோக்கியமாகவும் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

இந்த அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலுக்கு சிக்கல் தான்.

குறைவாக நீர் அருந்துவதால் சிறுநீரகத்தில் கட்டிகள் உருவாகும். அது சிறுநீரகத்தின் செயல்பாடை குறைத்து பாதிப்படைய செய்யும்.

அதிகமாக நீர் அருந்துவதால் சிறுநீரகத்தின் செயல்பாடு வேகமாகவும் அதிகமாகவும் இருக்கும். நாளடைவில் சிறுநீரகம் பழுதடைந்துவிடும்.

ஒரே நேரத்தில் 1 லிட்டருக்கு மேல் நீர் அருந்த கூடாது. அதிகமான தாகமோ மூச்சு வாங்கும்போதோ நீரை வேகமாக அருந்த கூடாது. நாளில் ஒவ்வொரு 4 மணி நேரங்களுக்கு பிறகு கண்டிப்பாக நீர் அருந்த வேண்டும்.

முக்கியமான விடயம் குடிநீரை வீணாக்க கூடாது.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

:) Relaxplzz

Posted: 27 Jan 2015 08:55 AM PST

ஜவுளிக்கடையில திருடுறதுக்கு ஏன் உன் மனைவியுடன் போனாய்? - எப்பப் பார்த்தாலும் டிச...

Posted: 27 Jan 2015 08:50 AM PST

ஜவுளிக்கடையில திருடுறதுக்கு ஏன் உன்
மனைவியுடன் போனாய்?
-
எப்பப் பார்த்தாலும் டிசைன் சரியில்லைன்னு ஒரே
சண்டை போடுவா… அதான் அவளே செலக்ட்
பண்ணட்டும்னு கூட்டிட்டுப் போனேன்..!

:O :O

அமெரிக்க அதிபர் ஒபாமவுடன் பங்கேற்ற மோடி அணிந்த தங்க சரிகையிலான உடையின் மதிப்பு 1...

Posted: 27 Jan 2015 08:45 AM PST

அமெரிக்க அதிபர் ஒபாமவுடன் பங்கேற்ற மோடி அணிந்த தங்க சரிகையிலான உடையின் மதிப்பு 10 லட்சம் ருபாய்.

இங்கே அடுத்தவேளை கஞ்சிக்கு வழி இல்லாதவன் 40% பேரு.


அருமையான பென்சில் ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Jan 2015 08:40 AM PST

அருமையான பென்சில் ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


இந்தியாவின் பிரதமர் ஜெர்மனியில் தயாரிக்கப் பட்ட பி எம் டபிள்யூ காரிலும், இந்திய...

Posted: 27 Jan 2015 08:35 AM PST

இந்தியாவின் பிரதமர்
ஜெர்மனியில் தயாரிக்கப்
பட்ட பி எம்
டபிள்யூ காரிலும்,
இந்திய
ஜனாதிபதி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்
பட்ட மெர்சிடீஸ் பென்ஸ்
காரிலும்
வந்திறங்கி கொடியேற்றி
மேக் இன் இந்தியா என்கிற
வாசகம் பொருந்திய
ஊர்தியை நமக்கெல்லாம்
ஓட
விட்டு கை அசைத்தால்
பெருமையுடன் நாம்
சொல்வோம் ஜெய் ஹிந்த்
என்று...

- kishore.

:) Relaxplzz

Posted: 27 Jan 2015 08:32 AM PST

:) Relaxplzz

Posted: 27 Jan 2015 08:29 AM PST

:P :P

Posted: 27 Jan 2015 08:25 AM PST

:P :P


நில அளவை முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Posted: 27 Jan 2015 08:22 AM PST

நில அளவை முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


To Know
Area calculation and Measurement Chart . 1 hectare = 2 acre 47 cent 1 hectare = 10,000 sq.m. 1 acre = 0.405 hectare 1 acre = 4046.82 sq.m. 1 acre = 43,560 sq.ft. 1 acre = 100 cent = 4840 sq.gejam 1 cent = 435.6 sq.ft. 1 cent = 40.5 sq.m 1 ground = 222.96 sq.m. = 5.5 cent 1 ground = 2400 sq.ft. 1 kuli = 44 cent 1 kaani = 132 cent = 3 kuli 1 kaani = 1.32 acre 1 kaani = 57,499 sq.ft. 1 acre = 2.25 kuli 1 dismil = 1.5 cent 1 furlong = 660 feet = 220 kejam 1 kilometre = 5 furlong 1 link / chain = 0.66 foot = 7.92 inch 1 kejam = 3 feet 1 mile = 8 furlong 1 ares = 1076 sq.ft. = 2.47 cent 1 chain = 22 kejam 1 furlong = 10 chain 1 kejam = 0.9144 metre 1 township = 36 sq.mile 1 sq.mile = 640 acre @[297395707031915:274:Relaxplzz]

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 27 Jan 2015 08:20 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும்...

Posted: 27 Jan 2015 08:10 AM PST

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

Relaxplzz

விபரீதங்களை வேடிக்கை பார்க்கவா அரசாங்கம்? **************************************...

Posted: 27 Jan 2015 08:00 AM PST

விபரீதங்களை வேடிக்கை பார்க்கவா அரசாங்கம்?
*******************************************
இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிறிய ரகக் கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய 'குளோபல் என்.சி.ஏ.பி. ஆய்வு.

கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உட்படுத்தியபோது, 'சுசூகி-மாருதி ஆல்டோ 800', 'டாட்டா நானோ', 'ஃபோர்டு ஃபிஃகோ', 'ஹூண்டாய் ஐ-டென்', 'ஃபோக்ஸ்வேகன் போலோ' ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால், அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் இன்னும் சில உண்மைகள் நம்மை மேலும் அதிரவைக்கின்றன.

இந்தக் கார்களில் காற்றுப் பைகள் கிடையாது. நிறுத்த முடியாத அளவுக்குக் கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும்.

ஆனால், இங்கு அவை பொருத்தப்படவில்லை. அதேசமயம், இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.

இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்தக் கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், "கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%.

பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக்கோள் என்பதும் இந்தியச் சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல.

ஆனால்…..

இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Jan 2015 07:55 AM PST

கொரிய சாலைகளில் தானாகவே நீரை கொண்டு சுத்தம் செய்யபடுகிறது..... இதெல்லாம் நம்ம நா...

Posted: 27 Jan 2015 07:50 AM PST

கொரிய சாலைகளில் தானாகவே நீரை கொண்டு சுத்தம் செய்யபடுகிறது..... இதெல்லாம் நம்ம நாட்டுல எப்போ வரும்னு கேட்ககூடாது...ரொம்ப தப்பு....குடிகாரர்கள் நடக்கும்போது வழுக்கி விழுந்திரகூடாதில்ல.....


தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடிய...

Posted: 27 Jan 2015 07:45 AM PST

தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு
கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடிய சேகுவேரா படம் பொரித்த பனியனை அனிபவனும்...

60 வயதாகியும் பணிக்கு செல்லும் தந்தையை பற்றி கவலை படாமல் 37 வயதில் ஓய்வு பெறும் சச்சினுக்காக வருந்துபவனும்...

தன் வீட்டில் பழய கஞ்சி குடித்து விட்டு நடிகனின் கட்டவுட்'க்கு பாலாபிஷேகம் செய்பவனும்...

இந்த மண்ணுக்கு கிடைத்த சாபங்கள்....!

Relaxplzz

கருப்பட்டி மிட்டாய் & சீனி மிட்டாய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 27 Jan 2015 07:40 AM PST

கருப்பட்டி மிட்டாய் & சீனி மிட்டாய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


நைட்டு கரண்டு போயிருச்சு... . மெழுகுவர்த்திய எத்தன வாட்டி கொழுத்தி வெச்சாலும்.....

Posted: 27 Jan 2015 07:34 AM PST

நைட்டு கரண்டு போயிருச்சு...
.
மெழுகுவர்த்திய எத்தன
வாட்டி கொழுத்தி வெச்சாலும்..
.
மக போயி...ஹாப்பி பர்த்
டே டு யு..ன்னு ஊதிட்டு வருது.... :)

மேற்கத்திய கலாசாரம்
நம்மள இருட்டுல தள்ளும்
ங்குறது உண்மைதான்
போல..

- ரிட்டயர்டு ரவுடி

வரதட்சனை இல்லாமல் உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதும்... எல...

Posted: 27 Jan 2015 07:28 AM PST

வரதட்சனை இல்லாமல்
உங்கள் பெண்ணை
திருமணம்
செய்து கொள்கிறேன் என்று
சொன்னதும்...
எல்லோரும்
ஆச்சிரியத்தோடும்
வியப்போடும்
அதிர்ச்சியோடும்
பேசிக்கொண்டார்கள்...

"இந்த பையனுக்கு
ஏதாவது
நோய் இருக்குமோ?" என்று!


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 1

ஓபாமா : யோவ் நான் சேலை கேட்டேனா அதுவும் 1 , 2 இல்ல 100 சேலை கொடுத்துருக்க யாருயா...

Posted: 27 Jan 2015 07:21 AM PST

ஓபாமா : யோவ் நான் சேலை கேட்டேனா அதுவும் 1 , 2 இல்ல 100 சேலை கொடுத்துருக்க
யாருயா அத துவைக்கிறது

(பண்றதையும் பண்ணிட்டு நிக்கிறத பாரு )
சொல்லுயா ஏன்யா இப்டி பண்ண ???

மோடி : விதி விளையாடிருச்சு மை சன் .. :D

- Guru Prabhakaran.


:) Relaxplzz

Posted: 27 Jan 2015 07:16 AM PST

எண்ணற்ற கனவுகள்.. எண்ணில்லா ஆசைகள்.. எதிர்காலத்து ஏக்கங்கள்.. எல்லாமே அவள் முகத்...

Posted: 27 Jan 2015 07:10 AM PST

எண்ணற்ற கனவுகள்..
எண்ணில்லா ஆசைகள்..
எதிர்காலத்து ஏக்கங்கள்..
எல்லாமே அவள் முகத்தில்..

#மணமகள்... ♥

- Sheila Chowdry


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 1

எது..??

Posted: 27 Jan 2015 07:06 AM PST

:) Relaxplzz

Posted: 27 Jan 2015 07:01 AM PST

ஆன்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்யை பற்றி தெரிந்துகொள்வோம்...

Posted: 27 Jan 2015 06:49 AM PST

ஆன்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்யை பற்றி தெரிந்துகொள்வோம் !!!

நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் மருத்துவமேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த எழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்ககூடும். அவர் வேறு யாருமல்ல பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.

1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் எனும் நகரில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர் ப்ளெமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் ப்ளெமிங் விவசாயத்திலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஓர் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணி புரிந்தார். தமது 20 ஆவது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததால் லண்டனில் செயின் மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர்தான் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சிபெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளெமிங். தனது பேராசிரியரைப்போலவே தானும் மனுகுலத்துக்கு உதவும் ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆராயத்தொடங்கினார். முதல் உலகப்போரில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கேப்டனாக இருந்தபோது சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது.

அந்தக்கால கட்டத்தில் கார்பாலிக் அமிலந்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளை கொல்லும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அனுக்களையும் சில சமயம் அழித்துவிடுகிறது. முதலாம் உலகப்போரில் சுமார் 7 மில்லியன் வீரர்கள் காயம்பட்டு இறந்தனர். அதன்பிறகுதான் கார்பாலிக் அமிலம் சரியான மருந்து அல்ல என்பதை ப்ளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா? சரியான மருந்தை கண்டுபிடிக்க வேண்டாமா? உலகபோர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ட்சிக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்து வேண்டுமென்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைபற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

எனவே தனக்கு கிருமி தொற்றக்கூடும் என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுவாரம் விடுமுறைக்காக சென்றிருந்தார் ப்ளெமிங். விடுமுறைக்கு செல்லும் முன் அவர் ஓரு ஆய்வுக்கூட வட்டில் ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிம்மோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கிருமி. இரண்டு வாரம் விடுமுறை கழித்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தபோது அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது அவருக்கு புரிந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆராய்ட்சிகள் செய்தார் அதன் விளைவாக நமக்கு கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். மனுகுலத்துக்கு உயிர்காக்கும் மாமருந்தை தந்த ப்ளெமிங்கை உலகம் அப்போது பாராட்டவில்லை. இருப்பினும் பெனிசிலின் அருமை உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

அதுவரை தீர்க்கப்படாத முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீரென்று சிகிச்சை அளிக்க முடியும் என்பதை உலகம் கண்டுகொண்டது. பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டு தந்தது பெனிசிலின்தான். மனுகுலத்துக்கு பெனிசிலின் என்ற மாமருந்தை தந்த ப்ளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை அந்த மருந்துக்கு காப்புரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும் அதை அவர் செய்யவில்லை செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகியிருப்பார். இருந்தாலும் அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தந்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. உயிர் விலை மதிக்க முடியாதது என்றால் அந்த உயிரை காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது அல்லவா? அந்த விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11 ந்தேதி லண்டனில் காலமானார்.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

0 comments:

Post a Comment