Relax Please: FB page daily Posts |
- குட்நைட் செல்லம்ஸ் <3
- (y) (y) Relaxplzz
- ஆண் கார்டினல் மீன் தன் துனை இடும் அனைத்து முட்டைகளையும் வாயில் வைத்திருக்கும் கா...
- படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள் >># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்...
- "தகவல் துணுக்குகள்" * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரி...
- :P Relaxplzz
- குடியரசு தினவிழாவையொட்டி நாட்டின் எல்லையில் கடும் குளிரில் ராணுவ வீரர்கள் தேசிய...
- ஞாபகம் இருக்கா? நண்பர்களே!!!!.. இந்த ஆட்டத்தில் உங்களுக்கு பிடித்த ஆட்டம் எது???
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- அருமையான முப்பரிமாண ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? * உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உன...
- முயற்சி வெற்றி தரும் ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.....
- :P :P Relaxplzz
- காய்கறியில் அருமையான படைப்பு..
- தீவிரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது...
- :) Relaxplzz
- ** கலர் கோழிக்குஞ்சு ** என்றும் இல்லாததாய் தெருமுனையில் ஒரு கீச்சு சத்தம்! கூட...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- காப்பியில் இது போன்று முறுக்கு போட்டு சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- காரு வண்டி நிக்கும் கார வீட்டுக்குள்ள யாருமில்ல ? ஏறு உழுத ஏழைக்கெல்லாம் குடிக்...
- நாம் இயற்கையை சீரழித்தால் , இயற்கை நம் நுரையீரலை சீரழிக்கும்! எச்சரிக்கை!
- தினம் ஏதோ ஒன்று ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது உன்னை....! ஒற்றைத் தும்மல்...
- :) Relaxplzz
Posted: 26 Jan 2015 09:30 AM PST |
Posted: 26 Jan 2015 09:24 AM PST |
Posted: 26 Jan 2015 09:17 AM PST ஆண் கார்டினல் மீன் தன் துனை இடும் அனைத்து முட்டைகளையும் வாயில் வைத்திருக்கும் காட்சி.. ![]() "அபூர்வமான தகவல்கள்" |
Posted: 26 Jan 2015 09:11 AM PST படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள் >># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை.. >>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்.. ##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்.. >>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர். ##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை. >># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள். >>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம். >>#அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை. Relaxplzz |
Posted: 26 Jan 2015 09:02 AM PST "தகவல் துணுக்குகள்" * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும். * மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்! * ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும். * திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும். * கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு! * ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை! * 126936598-நம்மில் பலர் இந்த வாக்கியத்தின் முதலில் உள்ள எண்களை முழுமையாகப் படிக்காமல் மற்ற வார்த்தைகளையே படிப்போம்! Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 26 Jan 2015 08:57 AM PST |
Posted: 26 Jan 2015 08:55 AM PST |
Posted: 26 Jan 2015 08:49 AM PST |
Posted: 26 Jan 2015 08:40 AM PST |
Posted: 26 Jan 2015 08:30 AM PST |
Posted: 26 Jan 2015 08:20 AM PST |
Posted: 26 Jan 2015 08:20 AM PST |
Posted: 26 Jan 2015 08:10 AM PST நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? * உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். * வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!) * உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். * நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன். * நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான். * பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய். * போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. * கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. * உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை. * உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். *கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்). * இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன். நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே? Relaxplzz |
Posted: 26 Jan 2015 08:00 AM PST முயற்சி வெற்றி தரும் ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஓர் நிபந்தனை விதிக்கிறது.. "நான் உன் பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார்க்ககூடாது." அப்படி பார்த்தால் கற்சிலையாகி விடுவாய் என்கிறது.. முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதலாமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறியதால் கற்சிலையாகி விடுகிறான். அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டத்தட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்சிலையாகி விடுகிறான்.. மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின்வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கைபற்றுகிறான்.. பின்னால் வரும் தேவதை தான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது... :) :) Relaxplzz ![]() |
Posted: 26 Jan 2015 07:59 AM PST |
Posted: 26 Jan 2015 07:50 AM PST |
Posted: 26 Jan 2015 07:40 AM PST |
Posted: 26 Jan 2015 07:30 AM PST |
Posted: 26 Jan 2015 07:25 AM PST ** கலர் கோழிக்குஞ்சு ** என்றும் இல்லாததாய் தெருமுனையில் ஒரு கீச்சு சத்தம்! கூடையை திறந்து கூவத்தொடங்கினார்! சிகரெட் அட்டையில் சில எண்கள் எழுதி ரூபாய்க்கு ஒன்று என்று ஏலம் விட்டார்! கூட்டம் கூடியதால் எண்களும் கூடியது! காத்துகிடந்ததில் தலையை நீட்டின கலர் கோழிக்குஞ்சுகள்! பச்சைக்கு பதில் ஊதா வேண்டும்! சிவப்புக்கு பதில் மஞ்சள் வேண்டும்! ஏழு அட்டை ஜெயித்தவன் எல்லா கலரிலும் ஒன்று கேட்டான்!! கையில் வாங்கியவுடன் நண்பனிடம் கேட்டேன் தண்ணிரில் குளிப்பாட்டினால் கலர் போகுமா என்று!! நண்பன் சொன்னான் இது பொறக்கும்போதே கலரா பிறக்கும் என்று! கையில் ஏந்தி வீதியில் சென்றேன் சிறுவர்கள் சுற்றி வளைத்தனர்! ஊரே என்னை மட்டும் பார்ப்பதாய் உணர்ந்தேன்! சட்டென வந்த மழையால் சட்டையில் மறைத்து ஓடினேன்... மழையில் வண்ணம் கரைந்தாலும் மறக்காமல் சொல்லுவேன் இது மஞ்சள் கலர் கோழிக்குஞ்சு என்று!! ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 26 Jan 2015 07:16 AM PST |
Posted: 26 Jan 2015 07:07 AM PST |
Posted: 26 Jan 2015 06:43 AM PST |
Posted: 26 Jan 2015 06:27 AM PST சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை. மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார். எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார். இஞ்சி ஒத்தடம்: ============= இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். 1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும். 2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும். 3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும். 4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும். 5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும். 6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும். 7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும். 8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும். 9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும். பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும். உணவு முறை ============ சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும். சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ்: ======================= உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும். புரதங்கள் (ப்ரோடீன்): ================= புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும். நீர்: == நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க. சேர்த்து கொள்ள வேண்டியவை ஒமம்: ===== ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும். புளி: ==== புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஞ்சள்: ======= மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது. காய்கறிகள்: ========== பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர். பழங்கள்: ======= ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ் தவிர்க்க வேண்டியவை ********************************* காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள் இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ... http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ அருமை நண்பர்களே !... இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .. ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 26 Jan 2015 06:13 AM PST |
Posted: 26 Jan 2015 06:00 AM PST |
Posted: 26 Jan 2015 05:30 AM PST காரு வண்டி நிக்கும் கார வீட்டுக்குள்ள யாருமில்ல ? ஏறு உழுத ஏழைக்கெல்லாம் குடிக்க கூழுமில்ல... வெரலால ஓட்டு போட்டோமையா... வெவரமில்லா கூட்டமையா... வெலவாசி கூடிடுச்சான்னு ஒங்கள என்னைக்கு கேட்டுருக்கோம்? வெங்காயம் வாங்கத்தான் பேங்குல லோனு போட்டுருக்கோம். ஊழல்வாதிக்கெல்லா ஊருக்கு ஊர் பங்களா இருக்கு... ஒழச்சு ஒழச்சு ஓடா போனவன் ஒதுங்கத்தான் ஓட்டு வீடு ஒண்ணுருக்கா? ஒட்டுத்துணி தானிருக்கா? இந்தியா நாளைக்கு வல்லரசுன்னு சொல்றீக.. இன்னும் நாங்க நடைபாதையில தானய்யா படுத்திருக்கோம். - தமிழ்தாசன் ![]() |
Posted: 26 Jan 2015 05:15 AM PST |
Posted: 26 Jan 2015 05:00 AM PST தினம் ஏதோ ஒன்று ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது உன்னை....! ஒற்றைத் தும்மல் ஏதோ ஒரு புகைப்படம் இல்லையென்றால் ஏதோ ஒரு திரைப்படம், எங்கோ இசைக்கின்ற ஒரு பாடல்... எங்கேயோ ஓர் பெயர்ப்பலகை இல்லை உன் பெயர்சொல்லி அழைக்கின்ற யாரோ ஒருவர்.... உன் முகப் புத்தகம் , அதில் , நீ அனுப்பிய தகவல்கள் ....! நீ தந்த நேசம் உன்னால் அடிக்கடி நனைந்த என் கைக்குட்டை ... என்னோடு நீ போட்ட சண்டைகள் ... பின் என்னைச் சமாதானப்படுத்திய உன் கெஞ்சல்கள் ...! உன் பெயர் சுமக்கும் என் தொலைபேசி, அதில் உறங்குகின்ற உன் குறும்தகவல்கள் ....! நான் மிதித்த உன் வீட்டு முற்றம் .... இன்னும் எத்தனையோ எத்தனையோ இவையெல்லாவற்றிற்கும் மேலாய்.. என்னோடு வாழ்கின்ற நீ இவையனைத்தும் ஞாபகப்படுத்துகின்றன தினமும் உன்னை... ♥ Relaxplzz |
Posted: 26 Jan 2015 04:45 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment