Sunday, 25 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 25 Jan 2015 09:30 AM PST

அழகிய வீடு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க (y)

Posted: 25 Jan 2015 09:20 AM PST

அழகிய வீடு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க (y)


நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில்...

Posted: 25 Jan 2015 09:10 AM PST

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.

அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்.
"நான் இங்கே அமரலாமா?"
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....
பின் உறக்கக் கேட்டாள்

"இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவனுக்கு அவமானமாகி விட்டது.

அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னால் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்"

இளைஞன் உரக்ககச் சொன்னான்.
என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்"
இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்
"நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!

#நீதி
ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.

Relaxplzz

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177...

Posted: 25 Jan 2015 09:00 AM PST

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது !

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக் காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 25 Jan 2015 08:55 AM PST

ஒரு வயதானவர் முடி திருத்தகம் போனாரு. அவர் தலைல இருந்த 8 முடிய பார்த்து கோவத்தோட...

Posted: 25 Jan 2015 08:50 AM PST

ஒரு வயதானவர் முடி திருத்தகம்
போனாரு.

அவர் தலைல இருந்த 8 முடிய
பார்த்து கோவத்தோட
"முடிய எண்ணனுமா?
வெட்டனுமா?"ன்னுகேட்டார்
முடி திருத்துபவர்.

அதுக்கு அந்த கஸ்டமர்
சொன்னாரு ..............................
.
.
.
.
.
.
.
.
கலர் அடிக்கனும்

:P :P

இறந்து வாழும் நல்லுள்ளம் (y) வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்பட்டியை சேர...

Posted: 25 Jan 2015 08:43 AM PST

இறந்து வாழும் நல்லுள்ளம் (y)

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். அவரது மனைவி சுஜாதா (வயது37).கடந்த 22–ந் தேதி கணவன்–மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பச்சகுப்பம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கணவன்– மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் சுஜாதா தலையில் படுகாயம் அடைந்தார். இளங்கோவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக சுஜாதாவை ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சுஜாதா சேர்க்கப்பட்டார்.இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜாதாவுக்கு நேற்று காலை மூளைச்சாவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுஜாதாவின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

அதன்படி சுஜாதாவின் இதய வால்வு சென்னை எம்.எம்.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கும், கண்கள் சி.எம்.சி. மருத்துவ மனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.சுஜாதாவுக்கு ஹரிஹரன் என்ற மகனும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர்

- கோ. ரகுகுமார்


இதில எது நீங்கள் முதல் முதலாக வாங்கிய கைபேசி என்று ஞாபகம் இருக்கிறதா...?

Posted: 25 Jan 2015 08:40 AM PST

இதில எது நீங்கள் முதல் முதலாக வாங்கிய கைபேசி என்று ஞாபகம் இருக்கிறதா...?


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க (y)

Posted: 25 Jan 2015 08:35 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க (y)


மைக்ரோவேவ் இப்போது நம் வீடுகளில் சகஜமாகிவிட்டது அது உபயோகிப்பதால் வரும் தீமைகள்...

Posted: 25 Jan 2015 08:29 AM PST

மைக்ரோவேவ் இப்போது நம் வீடுகளில் சகஜமாகிவிட்டது அது உபயோகிப்பதால் வரும் தீமைகள் பல.. // படித்து பகிருங்கள் //


Awareness.. 1
**** Side Effects Of Microwave **** There are certain dangers associated to the usage of microwaved food. The reheated food from microwave can be a cause of very dangerous health hazards like hormonal disruption, brain damage, malnutrition, increased body fat and weakened immune system. Some of the very dangerous side effects associated to the use of microwaved food are as under: 1. Continually eating food processed from a microwave oven causes long term — permanent — brain damage by "shorting out" electrical impulses in the brain, de-polarizing or de-magnetizing the brain tissue. 2. The human body cannot metabolize the unknown byproducts created in microwaved food. 3. Male and female hormone production is shut down and/or altered by continually eating microwaved foods. 4. The effects of microwaved food by-products are permanent within the human body. 5. Minerals, vitamins, and nutrients of all microwaved food is reduced or altered so that the human body gets little or no benefit, or the human body absorbs altered compounds that cannot be broken down. 6. The minerals in vegetables are altered into cancerous free radicals when cooked in microwave ovens. 7. Microwaved foods cause stomach and intestinal cancer tumors. This may explain the rapidly increased rate of colon cancer in America. 8. The prolonged eating of microwaved foods causes cancerous cells to increase in human blood. 9. Continual ingestion of microwaved food causes immune system deficiencies through lymph gland and blood serum alterations. 10. Eating microwaved food causes loss of memory, concentration, emotional instability, and a decrease of intelligence. 11.The microwaved cereal and milk converts amino acid into carcinogens. 12.The meat when heated in a microwave loses its nucleo-proteins. 13.The body resistance against the viral and bacterial infections gets lowered because of microwaved food. 14.The food gets tasteless and it loses its nutritious vitality when reheated in the microwave oven. Must Share please @[297395707031915:274:Relaxplzz]

:) Relaxplzz

Posted: 25 Jan 2015 08:25 AM PST

;-) Relaxplzz

Posted: 25 Jan 2015 08:19 AM PST

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல பேஸ்புக்ல இருக்கிற பொண்ணுகள பார்த்து கேக்கிறேன்...

Posted: 25 Jan 2015 08:10 AM PST

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல
பேஸ்புக்ல இருக்கிற பொண்ணுகள
பார்த்து கேக்கிறேன் ...

FB யூஸ் பண்றியா இல்ல அராசகம் நடத்துறியா ...

என்ன பன்னான் என்
கட்சிக்காரன் ..

என்னமா பன்னான் ..

ஏதோ ஹாய்ன்னு ஒரு மெசேஜ்
அனுப்பி இருக்கான்
ஹாய்ன்னு அனுப்புனா ஹாய்ன்னு அனுப்பிட்டு போக
வேண்டியது தானே
அதானையா உலக
வழக்கம் ...

அத விட்டுப்புட்டு பேஸ்புக்ல ரிப்போர்ட்
பண்ணிட்டு அதே இடத்துல # BLOCK
பண்ணிருக்கிங்க ...

அட பிளாக் பண்ணிருந்தா கூட
பரவால்லையா
அவன் பிரெண்ட் லிஸ்ட்ல
உள்ளவங்ககிட்ட எல்லாம்
அவன பிளாக்
பண்ணி பழகிக்கிங்க வேற
சொல்லி இருக்க ..........

இது பழகி பார்க்க ப்ரோபைல இல்ல
பள்ளிகூடமா ...

ஏதோ அந்த பையனுக்கு இன்னொரு அக்கௌன்ட்
இருந்ததால எஸ்கேப் ஆகிஇருக்கான்யா .....

அவனுக்கு ஏதாவது ஒன்னுகடக்க
ஒண்ணு ஆகி இருந்தா ???
அவன் பேஜ்
யாரு பார்த்துகிறது அவன் பிரெண்ட்ஸ் கிட்ட
யாரு மொக்க போடுறது... ...

இதே மாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம்
நடந்துச்சு அந்த
பொண்ணு ஹாய்ன்னு ரிப்ளே பண்ணிட்டு பிளாக்
பண்ணுச்சு ...

அந்த நாகரிகம் கூட
தெரியலையா உனக்கு ...

வேணாம் எங்களுக்கும் பிளாக் பண்ண
தெரியும்
ஆனா காட்ட மாட்டோம் காட்டவும்
தெரியாது எங்களுக்கு ....

- கப்பல் வியாபாரி

Relaxplzz

;-) Relaxplzz

Posted: 25 Jan 2015 08:05 AM PST

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:- 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கிய...

Posted: 25 Jan 2015 08:00 AM PST

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

Relaxplzz


நம் குழந்தைகள் எட்ட நின்று விளையாடிக் கொண்டிருக்கும் அழகை அவர்களுக்கே தெரியாமல...

Posted: 25 Jan 2015 07:50 AM PST

நம் குழந்தைகள் எட்ட நின்று விளையாடிக்
கொண்டிருக்கும் அழகை அவர்களுக்கே
தெரியாமல் ரசிப்பதும் #அழகே. ♥

- Kavitha Lakshmi


ஓபாமா : என்ன மேன் நம்ம பிளேன் பக்கமா ஒரு ஜீப் பறந்து பறந்து வந்து எனக்கு பாதுகாப...

Posted: 25 Jan 2015 07:45 AM PST

ஓபாமா : என்ன மேன் நம்ம பிளேன் பக்கமா ஒரு ஜீப்
பறந்து பறந்து வந்து எனக்கு பாதுகாப்பு தருது 'கிரேட்' ..

பைலட் : இல்ல சார் அது விசால் பட சூட்டிங்கு !!

:P :P

- Guru Prabhakaran

வடுமாங்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 25 Jan 2015 07:40 AM PST

வடுமாங்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


கத்தாளையின் நலன்கள் // படித்து பகிரவும் //

Posted: 25 Jan 2015 07:39 AM PST

கத்தாளையின் நலன்கள் // படித்து பகிரவும் //


Timeline Photos
The aloe vera miracle: A natural medicine for cancer, cholesterol, diabetes, inflammation, IBS, and other health conditions...Must Share • Halts the growth of cancer tumors. • Lowers high cholesterol. • Repairs "sludge blood" and reverses "sticky blood". • Boosts the oxygenation of your blood. • Eases inflammation and soothes arthritis pain. • Protects the body from oxidative stress. • Prevents kidney stones and protects the body from oxalates in coffee and tea. • Alkalizes the body, helping to balance overly acidic dietary habits. • Cures ulcers, IBS, Crohn's disease and other digestive disorders. • Reduces high blood pressure natural, by treating the cause, not just the symptoms. • Nourishes the body with minerals, vitamins, enzymes and glyconutrients. • Accelerates healing from physical burns and radiation burns. • Replaces dozens of first aid products, makes bandages and antibacterial sprays obsolete. • Halts colon cancer, heals the intestines and lubricates the digestive tract. • Ends constipation. • Stabilizes blood sugar and reduces triglycerides in diabetics. • Prevents and treats candida infections. • Protects the kidneys from disease. • Functions as nature's own "sports drink" for electrolyte balance, making common sports drinks obsolete. • Boosts cardiovascular performance and physical endurance. • Speeds recovery from injury or physical exertion. • Hydrates the skin, accelerates skin repair. Share it with others @[297395707031915:274:Relaxplzz]

:) Relaxplzz

Posted: 25 Jan 2015 07:30 AM PST

உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் இவை அனைத்தும் தந்த இறைவா... உறவு என்ற ஒன்றை பிர...

Posted: 25 Jan 2015 07:25 AM PST

உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் இவை அனைத்தும் தந்த இறைவா... உறவு என்ற ஒன்றை பிரித்து எங்களை அனாதை ஆக்கிவிட்டாயே..


"மனம் தொட்ட வரிகள்" - 1

மார்க் Like this ஆம் ப்பா.. இன்னும் உங்க ஆளுங்க இந்த photoshop வேலைய விட மாட்டேங...

Posted: 25 Jan 2015 07:20 AM PST

மார்க் Like this ஆம் ப்பா.. இன்னும் உங்க ஆளுங்க இந்த photoshop வேலைய விட மாட்டேங்குறாங்களே அண்ணாச்சி... :P :P


:P Relaxplzz

Posted: 25 Jan 2015 07:14 AM PST

பஞ்சு மிட்டாய் ...................... திருவிழாக்களில் எங்காவது ஒருவர் பெரிய அண்...

Posted: 25 Jan 2015 07:09 AM PST

பஞ்சு மிட்டாய் ......................

திருவிழாக்களில் எங்காவது ஒருவர் பெரிய அண்டாவை வைத்து சர்க்கரையை போட்டு தீ மூட்டுவார். பின்னர் குச்சியால் சுற்றி, சுற்றி பஞ்சு மிட்டாயை எடுத்து கொடுப்பார். இதனை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். குழந்தைகளும் ஆர்வத்துடன் பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிடுவார்கள்.


"நினைவுகள்"

:) Relaxplzz

Posted: 25 Jan 2015 07:02 AM PST

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ... க...

Posted: 25 Jan 2015 06:52 AM PST

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக
மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...

கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில்
கணவன் மிச்சமில்லாமல்
உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு
பாத்திரங்களை ஒதுக்கி விட்டு
வரும் மனைவியிடம் ....
"நீ சாப்பிடவில்லையா ?"
என்று கணவன் கேட்க ....
"எனக்கு பசியாக இருந்தது. அதனால்
நீங்கள் வருவதற்கு முன்னாலேயே
உண்டு முடித்து விட்டேன்" என்று சொல்லும்
மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?

சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு
வெளியே கிளம்பும் கணவனிடம்
"இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ?" என்று கேட்டவளுக்கு ...
"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்"
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து
நல்ல ஹோட்டலில்
ருசியான உணவு வாங்கி வந்து ...
"இந்தா சாப்பிடு..." என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....

அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை

♥ ♥

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

இந்த ஸ்டைல் எப்படி இருக்கு..?

Posted: 25 Jan 2015 06:47 AM PST

இந்த ஸ்டைல் எப்படி இருக்கு..?


:) Relaxplzz

Posted: 25 Jan 2015 06:41 AM PST

தமிழனின் சிறப்பு அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. ச...

Posted: 25 Jan 2015 06:00 AM PST

தமிழனின் சிறப்பு

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


ஆதிகாலத்திலிருந்தே மாட்டுக்கும் அழகு பார்க்கும் மக்கள் உள்ள ஒரே நாடு நம்ம தமிழ்ந...

Posted: 25 Jan 2015 05:50 AM PST

ஆதிகாலத்திலிருந்தே மாட்டுக்கும் அழகு பார்க்கும் மக்கள் உள்ள ஒரே நாடு நம்ம தமிழ்நாடுதான்...


0 comments:

Post a Comment