Relax Please: FB page daily Posts |
- கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான். 🐕நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக வேண்...
- மங்கிப்போன இனவுணர்வு மக்கிப்போன மொழியுணர்வு செத்துப்போன தன்மானம் சிதைந்துப்போன ப...
- கொள்ளைக்காரர்கள் BANK ய கொள்ளையடிச்சிட்டு Clerk கிட்ட வந்து..... கொள்ளைக்காரன்...
- நல்லவேளை போன வருஷமே திரிஷா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜெக்ட் பண்ணினேன்.. . இல்லன...
- :) Relaxplzz
- "நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத...
- சிலநேரங்கள்ல ஆடு மேய்ச்சலுக்குக்கிளம்பிப்போறநேரத்துல அதோடகுட்டிங்க என்னாசெய்யும்...
- சைரா கான் - தயாநிதி மாறன் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றை எண்ணிப் பார...
- மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? எப்போதும் சிரித்த முகம். மாமியாரை தாயாக...
- கேப்ரியல் ரோஸாட்டி என்ற புகழ்பெற்ற ஓவியரை சந்திக்க முடியவர் ஒருவர் தான் வரைந்த ஓ...
- இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் நாடாளு மன்றத்தில் கேட்ட கேள்வி . இந்தியா...
- (y) Relaxplzz
- ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். " இதோ பாருங்க.........
- எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்....
- ஒருவரின் உண்மையான காதலை புறக்கணிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற...
- இந்த குட்டி தேவதையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- உலகின் மிக உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும்...
- :) Relaxplzz
- இணையத்துல ரசிச்ச ஒண்ணக் கேளுங்க ! ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் பு...
- அப்பா! 2000. அப்போது நான் I.T.I.முடித்துவிட்டு காரைக்காலிலிருந்த சுப்பீரியர் ரீ...
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் சிங்கப்பூர் ! தமிழ் எழுத்துக்களால் உருவான சிங்கப்பூர...
- உயிர் தந்த தாய்க்கு ஒரு சொட்டு கண்ணீர் விட தயங்குபவன், கண்ணீர் தந்த காதலிக்காக...
- ஐ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த விக்ரம்....
- :) Relaxplzz
- முற்றிலும் உண்மை
- அறிந்துகொள்வோம் ==================== * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூ...
- கற்பனை அருவி கொட்டும் அழகிய ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- எட்டு வடிவ நடை பயிற்சி..! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை ச...
Posted: 23 Jan 2015 09:20 AM PST கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான். 🐕நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக வேண்டியதுதானே? கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா, முதலாளி அவன் பொண்ணு எப்ப படிப்புல மார்க் குறைவா வாங்கினாலும் "இந்த கழுதைக்குதான் உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறா ன் அதான் கொஞ்சம் வெயிட் ண்றேன். =நம்பிக்கை தான் வாழ்க்கை :D :D |
Posted: 23 Jan 2015 09:10 AM PST மங்கிப்போன இனவுணர்வு மக்கிப்போன மொழியுணர்வு செத்துப்போன தன்மானம் சிதைந்துப்போன பகுத்தறிவு... இவை தற்கால தமிழனனின் அவமான சின்னங்கள்... அர்த்தமற்ற சாதி பற்று.... அழிவை தரும் மது பித்து சிந்தனையற்ற அரசியல் சார்பு மழுங்கடிக்கும் சினிமா மோகம்... இவை தற்கால தமிழனனின் அழிவு மார்க்கங்கள்..... இனிய தமிழா மார்க்கத்தை மாற்று.... அவமான சின்னங்கள் நல் அடையாள சின்னங்களாக மாறிவிடும்... - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு ![]() |
Posted: 23 Jan 2015 09:00 AM PST கொள்ளைக்காரர்கள் BANK ய கொள்ளையடிச்சிட்டு Clerk கிட்ட வந்து..... கொள்ளைக்காரன் : "நாங்க கொள்ளையடிச்சத நீ பார்த்தயா"?. Clerk : "ஆமா பார்த்தன்". உடனே கொள்ளைக்காரன் அந்த Clerk ய சுட்டிட்டு... மற்ற Clerk கிட்ட வந்து....'' நீ பார்த்தயா னு" கேட்டான்.. உடனே அந்த Clerk சொன்னான்.. "நான் பார்க்கல ஆனா என் WIFE உங்கள பார்த்துட்டா'' !!.... :P :P |
Posted: 23 Jan 2015 08:50 AM PST |
Posted: 23 Jan 2015 08:45 AM PST |
Posted: 23 Jan 2015 08:34 AM PST "நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" தன் நெருக்கடி நிலையிலும் இப்படி வீர முழக்கமிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐசிஎஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார். சுதந்திர இந்தியாவுக்காக அன்றே பல படைகளை நிறுவியவர். பல நாடுகளை அன்றே தன் கைகளில் அடக்கி வைத்திருந்தவர் .. இன்றும் இவர் போல் மாவீரர் இல்லை... தமிழனின் வீரத்தை கண்டு அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவேண்டும் என்று ஆசை கொண்டவர் . Relaxplzz ![]() |
Posted: 23 Jan 2015 08:27 AM PST |
Posted: 23 Jan 2015 08:15 AM PST சிலநேரங்கள்ல ஆடு மேய்ச்சலுக்குக்கிளம்பிப்போறநேரத்துல அதோடகுட்டிங்க என்னாசெய்யும்னா, அந்த ஆட்டை குறுக்கப்போயிமறிச்சி பால்குடிக்கப்பார்க்கும். ஆனா ஆடு அதையெல்லாங்கண்டுக்கிடாம அதுபாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கும். ஏன்னா, சிலநேரங்கள்ல பாலேயிருக்காது. அந்தக்குட்டிங்க பாவமா அந்ந ஆடு போறவரைக்கும் பார்த்துக்கிட்டேநிக்குங்க. வெளியிலேருந்துபார்க்குற நமக்குக்கூட அந்த ஆட்டுமேலகோவமும் அந்தக்குட்டிங்கமேல இரக்கமும் வரும். ஆனா, மேய்ஞ்சிட்டுவந்ததுமே அந்த ஆடு என்னாசெய்யுந்தெரியுமா..? பே..பே..னு கத்திக்கிட்டே அந்தக்குட்டிங்களைத்தேடும். அந்தக்குட்டிங்களும் கத்திக்கிட்டே ஓடியாந்து மொச்மொச்னு பால்குடிக்கும். அப்போ அந்தக்குட்டிங்களுக்கு அதுங்களோட அம்மா பால்கொடுக்காமபோனதெல்லாம் நெனப்பிருக்காது. ஆட்டோட பால்மடிதான் நெனப்பிருக்கும். அதுபோலத்தான் சிலநேரங்கள்ல மனிதர்களும். ஏதோவொருகோவத்துல உங்களை உதாசீனப்படுத்தினாலும் அந்தக்கோவந்தெளிஞ்சிவர்றப்போ நீங்க ஒரேயடியா மூஞ்சைத்திருப்பிக்கிட்டுநிக்காதீங்க. ஏன்னா, ஆட்டுக்கு பால்வெளியேறவழியில்லாம மடிகட்டிக்கிட்டா மடி செமையாவலிக்கும். அதுபோல மனுஷனுக்கு அன்பைக்கொட்டுறதுக்குவழியில்லைனா . . . . . . . . . . . . மனசுவெடிச்சிடும். - ஃபீனிக்ஸ் பாலா Relaxplzz |
Posted: 23 Jan 2015 05:31 AM PST சைரா கான் - தயாநிதி மாறன் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றை எண்ணிப் பார்க்கிறேன். தனது 29 வது வயதில், நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக சைரா கான் என்கிற பெண்மணி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பங்களாதேசை பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். சிறுபான்மை மக்களின் பிரதியாகப் பார்க்கப் பட்டவர். அவர் ராசி பலனில் (horoscope) நம்பிக்கை உள்ளவர் போலும். தனது அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்பில் இருந்து ராசி பலன் கேட்க போன் செய்திருக்கிறார். இதனால் அவர் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது. இதன்காரணமாகவே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்து அவரது அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆகி விட்டது. அடுத்த தேர்தலில் கூட போட்டியிட இங்குள்ள அரசியல் சூழல் அனுமதிக்கவில்லை!! அவர் பதவி வகித்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 133 மணி நேரம் (700 அழைப்புகள்) பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் பணத்தில் இருந்து செலுத்த முடியாது. அவரே தன் சொந்தச் செலவில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது!! இன்று ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன்... நம் நாட்டின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி 320 தொலைபேசி இணைப்புகளைப் பெற்று , சாலையைத் தோண்டி தடம் பதித்து அலுவலகத்தில் கொண்டு போயி இணைத்து, அதிலிருந்து லட்சக் கணக்கான இணைப்புகளை செய்திருக்கிறார். இங்கே 320 இணைப்புகள் என்பது 320 தொலைபேசிகள் அல்ல. 320 கண்ணாடி இழை தடங்கள். தலைமுடி பருமனுள்ள ஒரு கண்ணாடி இழை வழியாக ஒரே சமயத்தில் இரண்டாயிரம் இருவழி உரையாடலை பரிமாறிக் கொள்ள இயலும். அப்படியானால் கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். ஆயினும் இதில் நானூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என ஆதாரங்கள் சமர்பிக்கப் பட்டுள்ளன. இத்தனைக்கும் இக்காரியத்தைச் செய்த அமைச்சர் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டும் சன் குழுமத்தின் அதிபதி. இந்த திருட்டுப் பயலுகளுக்கு அதரவாக பேசுகிற ஒருவன், அமைச்சருக்கு இலவச தொலைபேசி அரசு வழங்குகிறது. அதில் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என சட்டத்தில் இடம் உள்ளது என்கிறான். இது எதிர்கட்சிகளின் அரசியல் காழ்ப்பு என்கிறான். மக்கள் வரிப்பணத்தை, அளவற்ற முறையில் தன் சொந்த அலுவலுக்காக பயன்படுதவதை வக்காலத்து வாங்குவதற்கு இவனுக்கு ஒரு வக்கீல் பட்டம் வேறு!! ஒரு அமைச்சர் ஒரு இணைப்பில் எத்தனை அழைப்புகள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அது அரசு வழங்கும் சலுகை. ஆனால் முன்னூறு இணைப்புகள் வைத்துகொண்டு கோடிக்கனான இலவச அழைப்புகளை செய்வது திருட்டுத்தனம். 400 கோடி அரசு இழப்பு என்பது வரி செலுத்தும் மக்களிடம் திருடிய பணம்! 400 கோடி என்பது தோராயமான கணக்கீடு, இன்னும் ஆழமாக விசாரித்தால் அரசு இழப்பு இதைவிட அதிகம் இருக்கக் கூடும் என்கிறார் பிஎஸ்என்எல் அதிகாரி. 130 மணி நேரம் தொலைபேசி பயன்படுத்தியதால், தன் சொந்த முயற்சியில் சிறுகச் செதுக்கிய தன் அரசியல் வாழ்வை இழந்த சைரா கான் எங்கே ... 320 இணைப்புகளில் 400 கோடி இழப்பை ஏற்படுத்திய கோடீசுவரன் மாறன் எங்கே! அரசியல் களத்தில் தொடர்ந்து இயங்க முடிகிறதென்றால், அதை ஆதரித்து வியாக்யான விளக்கங்களை கொடுப்பவர்கள், அதைக் கேட்கிற மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அங்கம் வகிக்கும் நாடு எத்தகைய நாடாக இருக்கும்? அந்நாட்டின் வருங்கால சந்ததிகளின் நிலை என்னவாக இருக்கும்? காரிஉமிழ வேண்டும் போல் இல்லையா? உங்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியாது. இவைகளையெல்லாம் பார்க்கையில், இத்தகைய சமூகத்தில் இருந்து நெடுந்தூரம் விலகிச் செல்லவே என் மனம் நாடுகிறது!! - இல கோபால்சாமி @ Relaxplzz ![]() |
Posted: 22 Jan 2015 11:15 PM PST மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? எப்போதும் சிரித்த முகம். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். காலையில் முன் எழுந்திருத்தல். பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல். நேரம் பாராது உபசரித்தல். கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. அதிகாரம் பண்ணக் கூடாது. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். கணவனை சந்தேகப்படக் கூடாது. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். அளவுக்கு மீறிய ஆசை கூடாது. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும். தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும். Relaxplzz |
Posted: 22 Jan 2015 10:15 PM PST கேப்ரியல் ரோஸாட்டி என்ற புகழ்பெற்ற ஓவியரை சந்திக்க முடியவர் ஒருவர் தான் வரைந்த ஓவியங்களுடன் வந்திருந்தார். முதியவரை வரவேற்று வந்த விசயத்தை கேட்டார் ரோஷாட்டி. அந்த முதியவர் தாங்களை நேரில் காண ஆவல்கொண்டிருந்ததாகவும் , அதோடு தான் வரைந்த ஓவியங்களை உங்களிடம் காட்ட விரும்புகிறேன் என்றும் கூறி அவரது ஓவியங்களைக் காண்பித்தார். வாங்கி பார்த்த கேப்ரியாட்டிக்கு அவ்வளவா திருப்தி இல்லாத ஓவியங்கள் அவை. முழுமனதோடு பாராட்டாமல் பரவாயில்லை என்றார். முகம் சுறுங்கிப்போன அந்த முதியவர் மேலும் சில ஓவியக்களை காட்டினார் . வாங்கி பார்த்த கேப்ரியாட்டிக்கு மகிழ்ச்சி. அருமையான ஓவியங்கள் என்றார். இது உங்க பேரன் வரைந்ததா? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் இதுவும் நான் வரைந்தது தான் நாற்பது வருடங்களுக்கு முன்பு. அன்று இப்படி ஒருவர் பாராட்டியிருந்தால் இன்று நானும் உங்க அளவுக்கு பேரும் புகழும் பெற்று இருப்பேன் என்றாராம் அந்த முதியவர். ஒரு சின்ன பாராட்டு மிகப்பெரிய சாதனைக்கும் உந்து சக்தி ஆகும். ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்! என்ற கவிஞர் வாலியின் கூற்று ஆகப்பெரிய உண்மை தானே ? - மன்னை முத்துக்குமார் Relaxplzz |
Posted: 22 Jan 2015 10:00 PM PST இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் நாடாளு மன்றத்தில் கேட்ட கேள்வி . இந்தியாவின் தேசிய மொழி எது ? கேள்விக்கு பதில் இந்தி என்று வந்தது அறிஞர் அண்ணா : ஏன் ? இந்தியை வைத்தார்கள் ? இந்திதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்றார்கள் . அறிஞர் அண்ணா ;இந்தியாவின் தேசிய பறவை எது ? மயில் என்று பதில் வந்தது ? அறிஞர் அண்ணா : மயில் இனம் இந்தியாவில் குறைவு , இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம் அந்த காகத்தை தேச பறவையாக வைக்க வேண்டியதானே யாரும் வாய் திறக்க வில்லை எது வேண்டும் வேண்டாம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தி தெரிந்தால் நாடு முன்னேறும் என்றால் , ஏன் பிகார், ஒரிசா ,,இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .இந்தி பேச தெரிந்த இவர்கள் வாழ்க்கை தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை ? யாரும் வாய் திறக்க வில்லை கடைசி தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது சவாலாக சொல்கிறேன் தமிழன் என்று மார் தட்டி சொல்கிறேன் ! (y) (y) Relaxplzz ![]() |
Posted: 22 Jan 2015 08:30 PM PST |
Posted: 22 Jan 2015 08:10 PM PST ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். " இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. " " என்ன சொல்றே? நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா? அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா. எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது. கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன். அப்பா... என்னம்மா... யார் இந்த பையன் இவர்தாம்பா அவர் அவர் ...ன்னா அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன். அப்படியா வாப்பா..உட்கார். உட்கார்ந்தான். உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன். இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ? கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார். சரி... உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் செலவுக்கு என்ன செய்வே ? அதையும் கடவுள் கவனிச்சுக்குவார். சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான். அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... இந்தப் பையன் எப்படி? அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்...!!! :D :D Relaxplzz |
Posted: 22 Jan 2015 08:00 PM PST எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்... நேதாஜி' என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!' என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜனவரி 23, 1897 இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள "பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்" தொடங்கினார். பின்னர், 1913ல் "கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்" தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு "கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்" சேர்ந்த அவர், "சி.எஃப் ஓட்டன்" என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், "ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்" சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்', சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, 'ரெஜினால்ட் டையர்' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது. திருமண வாழ்க்கை பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார். சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு 'தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது' எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. "கொல்கத்தா தொண்டர் படையின்" தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் "சுயாட்சிக் கட்சியை" தொடங்கியது மட்டுமல்லாமல், "சுயராஜ்ஜியா" என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, 'தவறு' என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், "நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், 'நேதாஜி' (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே "பட்டாபி சீதாராமையாவை" நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார். 'பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்' என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 'இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்' என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார். சுதந்திர இந்திய ராணுவம் 1941 ஆம் ஆண்டு "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் "வான் ரிப்பன் டிராபின்" உதவியுடன் சிங்கப்பூரில் "ராஷ் பிகாரி போஸ்" தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே "இந்திய தேசிய ராணுவப்படையை" கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு "இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை" "ஜெய் ஹிந்த்" என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது. போஸ் மரணம் குறித்த சர்ச்சை ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது. "எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்" என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார். Relaxplzz ![]() |
Posted: 22 Jan 2015 07:50 PM PST |
Posted: 22 Jan 2015 07:40 PM PST |
Posted: 22 Jan 2015 07:30 PM PST |
Posted: 22 Jan 2015 07:30 PM PST |
Posted: 22 Jan 2015 07:23 PM PST |
Posted: 22 Jan 2015 07:15 PM PST இணையத்துல ரசிச்ச ஒண்ணக் கேளுங்க ! ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி ''உனக்கு 10 வாய்ப்புகள். அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்''னு அருளினார். பாபா ரஜினி போல், முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர், 'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும். அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடிச்சிட்டார் . வரத்தின் மீது நம்பிக்கை வந்தது. 7 வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறைக்குச் சென்றார். மகிழ்ச்சி அடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டாரு. அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதாலே முதல் வரமா எனக்கு மரணம் வரக் கூடாது ன்னு கேட்ட போதே, கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார். நேரா கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர், ''10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய். 8 வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன்'' னு கத்தினாரு. கடவுள் பொறுமையா,, நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா ஏழு ரூபாய்க்கு தான பேச விடுற...? அது மாதிரிதான் இதுவும் 3 வரம் சர்வீஸ் சார்ஜ். யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள். னாரு . தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர். Relaxplzz |
Posted: 22 Jan 2015 06:57 PM PST அப்பா! 2000. அப்போது நான் I.T.I.முடித்துவிட்டு காரைக்காலிலிருந்த சுப்பீரியர் ரீவைண்டிங் கடையில் வேலைக்குச்சேர்ந்திருந்தேன். சம்பளம் நாளொன்றுக்கு பத்துரூபாய். I.T.I.இல் டபுள் ஸ்பீடு லேத்மோட்டார்களையெல்லாம் நான் ரீவைண்ட்செய்ததுண்டு. ஆனால் அதற்கெல்லாம் அந்தக்கடையில் வேலையில்லை. சுகுனா மோட்டாருக்கு பெயிண்ட்டடிக்கவேண்டும். இல்லையேல் கடைக்காரரின் நண்பர்களெவரேனும் வந்தால் டீவாங்கிவரவேண்டும். படிப்பிற்கும் அனுபவத்திற்குமுள்ள பாரதூரத்தை அளவெடுத்துப்பார்த்தது அங்கேதான். அப்பா ஒரேயொருமுறை அந்தக்கடைக்குவந்தார்கள். நான் அப்போது எதோவொருமோட்டாருக்கு 'ரெட்-ஆக்ஸைட்'அடித்துக்கொண்டிருந்தேன். கடைக்காரர் வெளியேபோயிருந்தார். "என்னடா.. காயில்சுத்துறவேலைனு சொன்னே!" "இல்லப்பா.. மோட்டார்வேலைனா எல்லாமேதானப்பா." அப்பாவிற்கு ஏமாற்றமாயிருந்திருக்கவேண்டும். எனக்கு நினைவுதெரிந்தநாளிலிருந்து நான் ஆசிரியராகவேண்டுமென்பதே என் விருப்பமாயிருந்தது. அப்பாவிற்கு அப்படியல்ல. நான் சீக்கிரமாக ஏதாவதொருவேலைக்குப்போகவேண்டுமென்பதுதான் அவர்களதுவிருப்பம். ஏனெனில் அப்பாவின் நிலையப்படி. சிறுவயதிலிருந்தே சைக்கிள்மிதித்தேவாழ்க்கையையோட்டியதால் கழுத்தெலும்புகள் தேய்ந்துபோய் அடிக்கடி மயக்கம்வந்துவிடும். வயதுக்குவந்த இரண்டுமகள்கள். கடைக்குட்டியாக நானொரு நோஞ்சான்பிள்ளை. அப்பாவின் எதிர்பார்ப்பெல்லாம் என்னுடையவளர்ச்சியாகத்தானிருந்தது. உறவுகளின் புறக்கணிப்பு அப்பாவின் எதிர்பார்ப்புகளுக்கு நங்கூரமிட்டிருக்கவேண்டும். கடைக்காரர் வந்துவிட்டிருந்தார். "அண்ணே.. இவங்கதான் எங்க அப்பா." "வாங்க. பையன் நல்லாவேலைசெய்யிறான்." அப்பாவிற்கு சின்னசந்தோஷம். போகும்போது கடைக்காரரிடம் சொல்லிச்சென்றார்கள். "பய நல்லா வைண்டிங்பண்ணுவான் சார்" அப்பா பார்த்தபோது நான் அடித்துக்கொண்டிருந்த 'ரெட்-ஆக்ஸைட்' அப்பாவின் மனதை அரித்திருக்கவேண்டும். அன்றிரவு கேட்டார்கள். சொந்தமா ஒயரிங்வேலைக்குப்போகணும்னா எவ்வளவுடா செலவாகும்?" "அப்பா.. அதுக்கு நிறைய டூல்ஸ்வாங்கணும்ப்பா. பொறுமையா வாங்கிப்போம்ப்பா." I.T.I.தேர்வுமுடிவு வந்தது. 93.42விழுக்காட்டுடன் முதல்மதிப்பெண்பெற்றுள்ளதாக என் நண்பன் ஜோஸப் அப்பாவிடம் தெரிவித்திருந்தான். நான் வழக்கம்போல கடைவேலையைமுடித்துவிட்டு ஒன்பதரைக்கு பஸ்ஸேறி பத்தேகாலுக்கு வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா சிரித்துக்கொண்டே வாசலைத்திறந்தார்கள். மதிப்பெண்களைச்சொன்னபோதுதான் அன்றுதான் ரிஸல்ட் என்று நினைவுக்குவந்தது. எனக்கும் சின்னசந்தோஷந்தான். ஏனெனில் பத்தாம்வகுப்புத்தேர்வில் அப்பாவின் எதிர்பார்ப்பை ஏமாற்றியிருந்தவெனக்கு அது ஆறுதலைக்கொடுத்திருந்தது. புதுவைமாநிலத்திலேயே முதற்பயிற்சிமாணவனாகத்தேறியிருந்ததால், அடுத்ததாக அனைத்திந்தியயூனியன்பிரதேஸளவிலான பொதுத்தேர்வுக்காக புதுவைமாநிலத்தின் சார்பாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். நன்றாய் நினைவிருக்கிறது. அது நவம்பர்மாதத்தின் மழைநாளின் மாலைப்பொழுது. ரீவைண்டிங்கடையில் பதினைந்துநாள்விடுப்புசொல்லிவிட்டு தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். அடுத்த இரண்டுநாட்களில் டெல்லிக்குப்பயணமாகவேண்டும். போக்குவரத்து மற்றும் சாப்பாட்டுசெலவுகளை அரசாங்கமேயேற்றுக்கொண்டதால் பெரிதாகசெலவேதுமில்லை. இருந்தாலும் கைசெலவுக்குக்கூட பணமில்லாமலிருந்தேன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. மாலை ஆறோ ஆறரையோ.. "உங்கப்பா மயக்கம்போட்டுவிழுந்துகெடக்காங்க தண்ணீடேங்க்கிட்ட.." நன்றாய் நினைவிருக்கிறது. அந்திமழை. அப்பாவை அவரது நண்பர்களிரண்டுபேரும் தூக்கியதுபாதி இழுத்ததுபாதியாக வீட்டிற்குகொண்டுவந்துகொண்டிருந்தனர். நான் அதற்குள் அக்ராஹரத்தின் பாதியைக்கடந்திருந்தேன். அப்பாவின் கால்கள் தார்ரோட்டில் இழுபட்டுக்கொண்டிருந்தன. நான் கால்களைத்தூக்கிப்பிடித்துக்கொண்டேன். வீடுவந்தது. ஒருமணிநேரத்திற்குப்பிறகு அப்பாவை ஆட்டோவிலேற்றிக்கொண்டு தேனூர்மருத்துவமனைக்குச்சென்றோம். அந்தவொருமணிநேரத்தில் இருநூறுரூபாயைமட்டுமே புரட்டமுடிந்தது. ஆட்டோவிற்கு நாற்பதுரூபாய்போக மீதிப்பணத்தை வைத்துக்கொண்டிருந்தேன். அப்பாவிற்கு நினைவுவந்தது. புரடியெலும்பின் தேய்மானாத்தால்தான் இப்படி அடிக்கடிமயக்கம்வருகிறதென்று மருத்துவர் கூறினார். "நான் டெல்லிக்குப்போகலப்பா.." அப்பாவால் சரியாக பேசமுடியவில்லை. கையாலேயே சைகை. அப்படிச்சொல்லக்கூடாது . அடுத்தநாள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குவந்தோம். அன்றுமாலையே டெல்லிபயணம். கையில் எண்பதுரூபாய் மிச்சமிருந்தது. நண்பன் தியாகுவின் வீட்டில் நூறுரூபாய்கொடுத்தார்கள். எடுத்துக்கொண்டு கிளம்பினேன். காரைக்காலிலிருந்து நாகூருக்குச்சென்று அங்கிருந்து ட்ரெயின்மூலமாக சென்னைக்கும் பின்னர் அங்கிருந்து டெல்லிக்கும் பயணமென திட்டமிட்டிருந்தனர். எங்கள் கிராமத்தின் பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். தூரத்தில் அப்பா நடந்துவருவதுமாதிரிதோன்றியது. அப்பாவேதான். அப்பாவின் கையில் நூற்றைம்பது ரூபாய். "டெல்லியில குளிர் அதிகமாயிருக்குமாம்டா.. காரைக்கால்ல ஒரு தண்ணீசுடவைக்குற ஹீட்டர்வாங்கிக்க." ஏதுப்பா காசு என்று கேட்கவில்லை. அதைக்கேட்டு அப்பாவை சங்கடப்படுத்தவும்விரும்பவில்லை. யாரிடமோ கடன்வாங்கியிருக்கக்கூடும். பேருந்துவந்துகொண்டிருந்தது. "போய்ட்டுவரேன்பா..." காரைக்கால்வருவதற்குள் மழை வலுக்கத்தொடங்கியது. காற்றும் மழையுமாகவிருந்ததால் நாகூர்-சென்னை ட்ரெயின் போகவில்லை. அன்றிரவு காரைக்காலிலேயே ஆசிரியரொருவரின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாட்காலை பேருந்துமூலமாக சென்னைக்குச்செல்வதாக ஏற்பாடாயிற்று. காரைக்காலிலிருந்து என்னுடஞ்சேர்த்து ஐந்துமாணவர்கள் ஐந்தாசிரியர்கள். புதுவையிலிருந்து மூன்றுமாணவர்களும் மூன்றாசிரியர்களும். ஹீட்டர்வாங்கிவைத்துக்கொண்டேன். நூற்றியெண்பதுரூபாய்வந்தது. கையில் மீதமிருக்கும் நூற்றைம்பதுரூபாயுடன் டெல்லிபயணம். விடியற்காலையில் PT&TDC (இப்போது PRTC) பேருந்து நண்டலாற்றைத்தாண்டும்போது தொண்டைக்குழிக்குள் ஏதோவொரு பந்து. முதன்முறையாக வீட்டைப்பிரிந்து நெடுந்தூரப்பயணம். அப்போதுதான் ஆசிரியரொருவர் கேட்டார். "என்னடா... ஷூபோட்டுட்டுவரலையா?" அப்போதுதான் எல்லோரதுகால்களையுங்கவனித்தேன். "அதெல்லாம் பார்த்துக்கலாம் சார்". ஒருவழியாக சென்னைவந்து அன்றிரவு 10:30க்கு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ். முதன்முறையாக ட்ரெயினில் காலடியெடுத்துவைக்கிறேன். மூன்றிரவுகள் இருபகல்களுக்குப்பிறகு டெல்லி...! ரயில்வேஸ்டேஷனிலிருந்து ஒருமணிநேரப்பயணம். புஸா. நாங்கள் தேர்வெழுதவேண்டியமையம். அங்கேயே விடுதி. விடுதியில் விருதுநகரைச்சேர்ந்தவர்தான் சமையற்காரர். மற்றபடி எல்லாமே ஹிந்தி. பான்பராக்வாசம்.. குளிர்.. இன்னும் குளிர்.. உதட்டில் தேங்காயெண்ணெய். அவ்வளவுதான். வந்திறங்கியவுடன் எங்கள்வீட்டிற்கு எதிர்வீட்டிலுள்ளவீட்டிற்கு ஃபோன்செய்தேன். தேர்வெழுதினோம். என்னுடையபிரிவிற்குமட்டும் பதினேழுபேர். அவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம்வரவில்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் அத்துப்படியென்றுபொருளில்லை. ப்ராக்டிக்கல் எக்ஸாமின்போது Vivaகேள்விகள். IGNOUவின் பெண் ப்ரொஃபஸர்தான் External Examinar. எனக்குமட்டும் ஆங்கிலத்திற்கேள்விகேட்டார். அது ஆங்கிலமென்று புரியவில்லை. அவர் கிடுகிடுவென்றுகேட்டதால் அது ஹிந்தியென்று நினைத்துக்கொண்டேன். "madam.. I don't know hindi. Please ask your questions in English." என்று திக்கித்திக்கிச்சொன்னேன். அவர் பலமாய்ச்சிரித்தார். சிரித்தார்..சிரித்தார்.. அதன்பிறகு கொஞ்சம் பொறுமையாகக்கேட்க நானும் விரிவாகபதிற்கூறினேன். தேர்வுகள் முடிந்தபின்னர் எல்லோரும் டெல்லியை சுற்றிப்பார்ப்பாகத்திட்டம். தாஜ்மஹால் வரையிலும் போவதாகத்திட்டம். என்னிடம் அந்தளவிற்குபணமில்லையென்பதால் வரவில்லையென்று மறுத்துவிட்டேன். அப்புறம் எனக்காகவந்திருந்த என் ஆசிரியர் கிருஷ்ணன்சார்தான் எனக்கானசெலவையுமேற்றுக்கொண்டார்கள். அங்கேசென்றுவிட்டு விடுதிக்குவந்திறங்கியபோது இரவு பத்தரையிருக்கும். அன்று ரிஸல்ட்வருகிறநாளென்பதால் ஒரேயோர் ஆசிரியர்மட்டும் ரிஸல்ட்டுகளை வாங்கிவைப்பதற்காகவேண்டி அங்கேயேயிருந்தவிட்டார். பேருந்திலிருந்து இறங்கியவுடன் எல்லோரும் அவரை சூழ்ந்துகொள்ள அவர் வெற்றிபெற்றமாணவர்களின்பெயர்களை அறிவித்தார். எட்டுபேரில் மூன்றுபேர்மட்டும் தத்தமது பிரிவில் முதல்மதிப்பெண்ணெடுத்திருந்தோம். அதிகபட்சமாக நான் 642/650 எடுத்திருந்தேன். என்வாழ்வில் மறக்கமுடியாதநாட்களில் அந்தநாளுமுண்டு. உடனடியாக தொலைபேசிமையத்திற்குவந்து ஊருக்கு ஃபோன்செய்தேன். முதல்ரிங்கில் யாருமேயெடுக்கவில்லை. நண்பர்களெல்லோரும் பேசிமுடித்தபின் திரும்பவும் முயன்றேன். நல்லவேளையாக ஃபோனையெடுத்தார்கள். விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாகச்சொல்ல அவர்கள் அம்மாவை அழைத்துவிட்டிருந்தார்கள். சேதியைச்சொன்னவுடன் தெருவே சந்தோஷமாகியிருக்கும்போல. அப்பாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிவிடும்படி சொல்லிவிட்டு விடுதிக்குவந்தபோது தூக்கமேவரவில்லை. அப்பாவைப்பார்க்கவேண்டுமென்றுதோன்றியது. அடுத்தநாள் பர்சேஸைமுடித்துவிட்டு அப்படியே ரயில்வேஸ்டேஷனுக்குப்போவதாகப்பேசிக்கொண்டார்கள். கையில் தொண்ணூறுரூபாயிருந்தது. அதில் அப்பாவிற்காக எழுபதுரூபாய்க்கு ஸ்வெட்டரொன்று வாங்கிக்கொண்டேன். அவ்வளவுதான் என் பர்சேஸ். இரண்டுநாட்களுக்குப்பிறகு காரைக்கால்வந்திறங்கியபோது மாலைநேரவெயில் மங்கிக்கொண்டிருந்தது. ஊருக்குச்சென்று பேருந்திலிருந்திறங்கியபோது அப்பா சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். வீட்டிற்கு பூவும் நூறுமிக்ஸரும் வாங்கிக்கொண்டு அப்பாவுடன் பெருமையாகநடந்துவந்தேன். மீதிக்காசு மூன்றுரூபாய் பேண்ட்பாக்கெட்டில் சிரித்துக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் எல்லாக்கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ப்ரொஃபஸர் ஆங்கிலத்திற்பேசியதை ஹிந்தி என்று தவறுதலாய்ப்புரிந்துகொண்டதையுஞ்சொன்னேன். எல்லோரும் விழுந்துவிழுந்துசிரித்தோம். அடுத்த இரண்டுநாட்களில் அப்பாவின் நண்பரொருவரிடமிருந்து அப்பா எடுத்துவந்திருந்தார்கள். "ரெஃபிடெக்ஸ் ஈஸி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம்". அதுதான் அப்பா...! ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும் இன்னும் ஆவணப்படுத்தப்படாமலேயேயுள்ளது தாயன்பிற்குநிகரான தந்தையர்தம் பாசம். - ஃபீனிக்ஸ் பாலா ![]() "அனுபவம்ஸ்" |
Posted: 22 Jan 2015 06:50 PM PST தமிழுக்கு பெருமை சேர்க்கும் சிங்கப்பூர் ! தமிழ் எழுத்துக்களால் உருவான சிங்கப்பூர் நவீனத்துவ கலைச் சிற்பம் ! சிங்கப்பூரில் சீனம், ஆங்கிலம், மலாய் உட்பட தமிழும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆட்சி மொழிகளின் எழுத்துருவில் சிங்கையில் ஒரு நவீன சிற்பம் ஒன்றை வடிவமைத்து உள்ளனர். இந்த கலைச் சிற்பத்தில் தமிழ் எழுத்துக்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது. தமிழை வாழ வைத்து தமிழுக்கு பெருமை சேர்க்கும் சிங்கை அரசுக்கு நம் பாராட்டுகள் (y) (y) Relaxplzz ![]() |
Posted: 22 Jan 2015 06:45 PM PST உயிர் தந்த தாய்க்கு ஒரு சொட்டு கண்ணீர் விட தயங்குபவன், கண்ணீர் தந்த காதலிக்காக உயிரைவிடத் துடிக்கிறான். * * * காரணம்? * * * * * * * * * * * "கொழுப்பு" |
Posted: 22 Jan 2015 06:40 PM PST |
Posted: 22 Jan 2015 06:30 PM PST |
Posted: 22 Jan 2015 06:20 PM PST |
Posted: 22 Jan 2015 06:10 PM PST அறிந்துகொள்வோம் ==================== * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது. * இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம். * நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும். * பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர். * இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும். * நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் * காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான். * உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். * ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. * மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது. Relaxplzz |
Posted: 22 Jan 2015 06:00 PM PST |
Posted: 22 Jan 2015 05:45 PM PST எட்டு வடிவ நடை பயிற்சி..! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை.. "எட்டு வடிவ நடைப்பயிற்சி". தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது. காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். (இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று). இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம். பயன்கள்: இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது. இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். இதை எம் நண்பர் பரிசோதித்து பார்த்து கூறினார். நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்... Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment