Relax Please: FB page daily Posts |
- நவீன வாழ்க்கையில் தாங்க முடியாத வலிகள் :- . . . . . 1.இரவு முழுவதும் Mobile Char...
- ஒரு தாய் எப்பவுமே தன் மகனோட அன்பை இழக்க விரும்புவதில்லை. ஒரு மனைவி தன் கணவரின் உ...
- ஆசையே துன்பத்திற்க்கு காரணம் புழுவிற்கு மீண் ஆசைபட்டது மீனுக்கு மனிதன் ஆசைபட்டா...
- இது ஒரு ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்! நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலான...
- புது மனைவி கையில் கலக்கிக் கொடுத்த பானம் இன்னதென்று யூகிக்க இயலாவிடினும் ஏதோ ஓர...
- :D :D Relaxplzz
- என்னோட பொங்கல் கிப்ட் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- உலகின் மிக செங்குத்தான மேம்பாலம்
- (y) (y) Relaxplzz
- ஒரு நேனோ கார் . ஹைவேல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி செய்ய ஒரு பென்ஸ் கார்...
- குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனைகள் --------------------------------------...
- (y) Relaxplzz
- நான் கண்ட கிராமத்தை என் வம்சம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் (y)
- காலம் மாறிப்போச்சு
- :) Relaxplzz
- :P Relaxplzz
- போட்டுத் தாக்கு–ஒரு ஜாலி ரிப்போர்ட் “முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேன...
- கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதில...
- “கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா… ?” “இருக்கு, இல்லைங்...
- நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இதை நினைவிருந்தால் லைக் பண்ணுங்க... (y)
- :P உண்மைதான்
- ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து.... - உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா. - உல...
- பீட்ரூட் ஜூஸ் ------------------- * பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கல...
- "அழகு தமிழ்நாடு" இரவின் வெளிச்சத்தில் குமரிமுனையின் எழில்...
- " டாக்டர், என் கணவர் நீங்க சொன்ன மாதிரி, தினமும் வாக்கிங் போய் உடம்ப துரும்பாய்...
- நளினமான பெண் ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
Posted: 18 Jan 2015 02:10 AM PST நவீன வாழ்க்கையில் தாங்க முடியாத வலிகள் :- . . . . . 1.இரவு முழுவதும் Mobile Charge போட்டு காலைல எழுந்து பார்த்த Charger Switch போடாம இருக்கும்போது வரும் வலி.... . 2. Downloading 99 % ல வந்து Downloading failed ! ன்னு வரும் போது.... . 3. பொண்ணுங்க கூட Chat பண்ணும் மட்டும் Net கட் ஆகுரப்போ... . 4. ஆர்வமா Browse பண்ணும்போது Net Pack முடிஞ்சு Main Balance ல இருந்து காசஉருவுறப்போ... . 5. status போட்டு 30 mins ago ஆயும் ஒரு like கூட போடாம ( இப்ப நீங்க பண்ற மாதிரி ) அழ வைக்கிறப்போ.... Relaxplzz |
Posted: 18 Jan 2015 02:00 AM PST ஒரு தாய் எப்பவுமே தன் மகனோட அன்பை இழக்க விரும்புவதில்லை. ஒரு மனைவி தன் கணவரின் உரிமையை பங்கு போட நினைப்பதே இல்லை. ஒரு பெண் குழந்தை தன் தாயை விட அதிக அன்பை தந்தையிடம் தான் எதிர் பார்க்கிறாள். ஒரு காதலி கூட தன் காதலன் இன்னொரு பெண்ணின் பெயரை உச்சரிக்க கூட சம்மதிக்க மாட்டாள்... ஆக எல்லா பெண்களுமே சுயநலவாதிகளே,,, ஆண்களிடம் அன்பை எதிர் பார்ப்பதில்... #பாவம்_ஆண்கள் ! ஆனால் இவை அனைத்தையும் மீறி இந்த அன்பில் திளைக்கும் ஆண் கொடுத்துவைத்தவன் தான் என்றுமே.. Relaxplzz ![]() |
Posted: 18 Jan 2015 01:50 AM PST |
Posted: 18 Jan 2015 01:40 AM PST |
Posted: 18 Jan 2015 01:30 AM PST |
Posted: 18 Jan 2015 01:20 AM PST |
Posted: 18 Jan 2015 01:10 AM PST சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்! நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை. அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும். உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும். இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழம். சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும். மக்னீசியம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கிறது. குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறில்லை. பொட்டாசியம் குறைவான அளவு பொட்டாசியம் இருந்தால், சர்க்கரை நோய்க்கான கதவு வேகமாக திறக்கப்படும். முறையான வழிமுறையில் பொட்டாசியத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்திருப்பது தான் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. பொதுவாகவே பொட்டாசியமானது செல்லுலர் செயல்பாடுகளை கவனிக்க உதவும், ஆனால் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். இரும்பு மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்றாகும். இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மிதமான அளவிற்கு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தவும். இரும்புச்சத்து இருந்தால் இதயத்திற்கு பலனளிக்கும் வகையில் இரத்தத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது தெரியுமா? சர்க்கரை நோய் சிகிச்சையில் சீத்தாப்பழத்தின் பங்கைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா? Relaxplzz |
Posted: 18 Jan 2015 01:00 AM PST புது மனைவி கையில் கலக்கிக் கொடுத்த பானம் இன்னதென்று யூகிக்க இயலாவிடினும் ஏதோ ஓர் அனுமானத்தில் புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி "தேநீர் மிகப் பிரமாதம்," என்றேன்;. "அது புரூ காபிப்பா," என்றாள் அவள், இது கூடத் தெரியவில்லையே என்ற ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி! உப்பும், மிளகாய்த் தூளும் வஞ்சனையின்றி வாரி வழங்கி அம்மணி சமைத்த சாப்பாட்டை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நான் தவிக்க, "சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை வாயைத் தொறந்து, ரெண்டு வார்த்தை பாராட்டினா முத்தா விழுந்துடும்? பாராட்டவும் ஒரு மனசு வேணும், அது ஒங்கக்கிட்ட இல்லை," என்றாள் முகத்தை ஒன்றரை முழம் தூக்கி வைத்துக் கொண்டு! வேறொரு நாள்... "சமையலில் கை தேர்ந்து விட்டாய்; இன்று உன் சமையல் அருமை" என்றேன்; "சமைத்தது உங்க ளம்மா; தெரிந்து கொண்டே, வேண்டுமென்று என்னைக் வெறுப்பேற்றுகிறீர்"என்றாள், கடுகு வெடிக்கும் முகத்துடன்! மனைவியின் பிறந்த நாளை அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி பத்துக் கடை ஏறி இறங்கி ஆசையாய் வாங்கிப் பரிசளித்த பச்சை வண்ணப் புடவையைத் தூக்கி ஓரத்தில் வைத்தாள், "ஒங்களுக்குத் தேர்வு செய்யவே தெரியலை," என்ற விமர்சனத்துடன்! 'இங்கிலீஷ் கலர்'(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு! சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் வாங்கி வந்தால், "பாழாய்ப்போன இப்படத்துக்கு வந்ததுக்குக் கடற்கரைக்காவது போயிருக்கலாம்; படுமட்டம் ஒங்க ரசனை,"என்றாள் படம் பார்த்து முடித்த பிறகு! இவளைத் திருப்திப்படுத்த முடியாது என்றவுண்மை எனக்கு உறைத்த போது, வெட்ட வெளியில் நின்ற வண்ணம் "என்னைப் பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போடி!" என்று வாய் விட்டுக் கத்தினேன், அவள் பக்கத்தில் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டு! (தமிழ் மன்றத்தில் எழுதியது) - கலையரசி @ Relaxplzz ![]() |
Posted: 18 Jan 2015 12:50 AM PST |
Posted: 18 Jan 2015 12:40 AM PST |
Posted: 18 Jan 2015 12:30 AM PST |
Posted: 18 Jan 2015 12:20 AM PST |
Posted: 18 Jan 2015 12:16 AM PST |
Posted: 18 Jan 2015 12:11 AM PST ஒரு நேனோ கார் . ஹைவேல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி செய்ய ஒரு பென்ஸ் கார் ஓனர் முன்வராரு " நான் உங்க நேனோவ அடுத்த ஊர் வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் . எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுன்னு தோணினா நீங்க உங்க ஹெட்லைட்ட பிளாஷ் பண்ணுங்க. " டோயிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும்போது அந்த பென்ஸ் கார ஒரு ஆடி கார் செம்ம வேகத்துல ஓவர்டேக் செய்யிது. பென்ஸ்காரர் காண்டாயிடுராரு, " பென்ஸ் கார ஆடிக் கார் ஓவர்டேக் பண்ணுறதா? " ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி ... 150 கிலோமீட்டர் ஸ்பீடு ... நேநோக்காரர் லைட்டப் போட்டுப் போட்டு அணைக்கிறாரு. பென்ஸ்காரர் கண்டுக்கவே இல்ல.... இதப் பாத்த ஒரு போலீச்க்காரர் தன்னோட வாக்கிடாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்டக் கூப்பிட்டு சொல்றாரு "ஒரு பென்ஸ் காரும் ஒரு ஆடிக் காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு. முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு நேனோ கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே வெறட்டுது... இந்திய டெக்னாலஜிய அடிச்சுக்க முடியுமா?" :P :P Relaxplzz |
Posted: 18 Jan 2015 12:00 AM PST குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க யோசனைகள் --------------------------------------------------------------------------------- 1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். 2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா"னு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு. 3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்). www.puradsifm.com 4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள். 5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடிய வரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்). 6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும். 7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள். 8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பல வகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம். காரணம் குழந்தை செல்வங்கள் எங்கள் அடுத்த சந்ததியின் எச்சங்கள் என்பதை மறந்து விடக்கூடாது அல்லவா..!! Relaxplzz ![]() "சுட்டீஸ் பக்கம்" |
Posted: 17 Jan 2015 11:56 PM PST |
Posted: 17 Jan 2015 11:45 PM PST |
Posted: 17 Jan 2015 11:40 PM PST |
Posted: 17 Jan 2015 11:30 PM PST |
Posted: 17 Jan 2015 11:20 PM PST |
Posted: 17 Jan 2015 11:10 PM PST போட்டுத் தாக்கு–ஒரு ஜாலி ரிப்போர்ட் "முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேனே" என்று காதலித்து பின் மணமுடித்த அல்லது "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று அம்மா/அப்பா பார்த்த பெண்ணை மணந்துகொண்ட திருமணமான ஆண்களின், அன்றைய (திருமணத்திற்கு முன்) இன்றைய (திருமணத்திற்குப் பின்) சுவாரசியமான உரையாடல்களை ரிவைண்ட் செய்யலாமா? தி.மு. (தொலைபேசியில்) — இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே. தி.பி. — என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எனக்கு ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு. தி.மு. (பீச்சில்) – இந்த அலை எவ்வளவு அழகா இருக்கு. உன் கூட நிறைய நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கலாம் போல இருக்கு. தி.பி. — போலாமா ? ரொம்ப நேரமாச்சு. தி.மு. (ஹோட்டலில்) – நீ ஐஸ்கிரீம் சாப்பிடற அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தினமும் இங்கேயே மீட் பண்ணலாமா? தி.பி. — ஹோட்டல் எதுக்கு, ரொம்ப நேரம் வெய்ட் பண்ணனும். வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது பண்ணிடேன். தி.மு. (பஸ் ஸ்டாப்பில்)– ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக வெய்ட் பண்றீங்க போல இருக்கு. நான் வேணா டிராப் பண்ணட்டுமா? தி.பி. — நீ பஸ்ல போய்டறியா? எனக்கு ஆஃபிஸுக்கு சீக்கிரம் போகணும். தி.மு. – ஆஃபிஸில இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. அதான் பர்மிஷன் போட்டு உன்னைப் பார்க்க வந்தேன். தி.பி. – ஆஃபிஸில இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும். தி.மு. – நீ பேசறத கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு. தி.பி. – ஏன் தொணதொணன்னு பேசிண்டே இருக்கே? தி.மு. – இந்த லெமன் எல்லோ கலர் டிரஸ்ஸில தேவதை மாதிரி இருக்கீங்க. தி.பி. – ஏதாவது ஒரு டிரஸ் போட்டுண்டு சீக்கிரம் கிளம்பேன், எவ்ளோ நேரம். தி.மு. – உன் கையால பண்ணா சாதாரண சாப்பாடு கூட விருந்து மாதிரி இருக்கு. தி.பி. – சே, மனுஷன் சாப்பிடுவானா இந்த சாப்பாட்டை. தி.மு. – இன்னிக்கு ஹாலிடே தான, எங்கயாவது வெளில போலாமா? தி.பி. – நாளைக்கு கண்டிப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்தாணும். அதனால வீட்டில பண்ணலாமேன்னு இருக்கேன். தி.மு. – ஒண்ணே ஒண்ணு தரட்டுமா ? தி.பி. – ஒண்ணு குடுத்தேன்னா கன்னம் வீங்கிடும், ஜாக்கிரதை. 'எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க' ஏன் சார்? Relaxplzz |
Posted: 17 Jan 2015 11:00 PM PST கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும் அம்சங்கள், ஆனால் இவை அனைத்தையும் கடந்து கவுண்டமணி என்பவர் மற்ற சராசரி நகைச்சுவை நடிகர்களைப் போல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளாதவர். அவர் சில காட்சிகளில் யாரும் சொல்லத் துணியாத சமூக, அரசியல் அவலங்களை வெகு இயல்பாக சொல்லிவிட்டுச் செல்பவர். ஆனால், அவரை வெறும் நக்கல் மன்னன் என்ற அளவில் மட்டும் மக்கள் அவரை உருவகம் செய்துவிட்டனர். அப்படி நாம் கவனிக்கத் தவறிய கவுண்டமணியின் படங்களில் ஒன்றுதான் "ஒன்னா இருக்க கத்துக்கனும்". இந்தப் படத்தில் அவர் ஊர் வெட்டியான் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இதை சாதாரணமாக எந்த நகைச்சுவை நடிகரும் ஏற்றி நடிக்காத ஒரு பாத்திரம். வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பதாக ஞாபகம், ஆனால் அதில் வடிவேலுவின் வசனங்கள் எல்லாம் மேம்போக்கானவை மட்டுமே. சட்டை கசங்காமல், கண்ணாடி கழட்டாமல் நகைச்சுவை பண்ணித் திரிந்த விவேக்கும், அதையே பின்பற்றி நடக்கும் சந்தானமும் இந்த விஷயத்தில் கவுண்டரிடம் பிச்சை வாங்க வேண்டும். மேலும், அந்தப் பாடம் வெளிவந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. 1992, அந்த ஆண்டில்தான் கவுண்டமணியின் நடிப்பில் திருமதி பழனிச்சாமி, சூரியன், சிங்காரவேலன், மன்னன் போன்ற படங்கள் வெளிவந்திருந்தன. அந்தப் படங்கள் அனைத்துமே நகைச்சுவையில் வெற்றிக்கொடி கட்டிய படங்கள். அதுவும் அந்தப் படங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து கலக்கியிருப்பார் கவுண்டர். அப்படிப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த ஒரு நடிகர், இப்படி ஒரு சிறிய படத்தில் அதுவும் வெட்டியான் பாத்திரத்தில் நடிப்பது என்பது அரிதான ஒன்று. அந்தப் படம் கிராமங்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், உயர்சாதி ஆட்களால் வஞ்சிக்கப்படும் சேரிவாழ் மக்களின் எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். அதில், தன் மகனுக்கு கல்வி வழங்கத் துடிக்கும் தகப்பனாக, தான் வஞ்சிக்கப்படுகிறோம் என்று அறிந்ததும் ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் கிளர்ச்சியாளனாக சிறப்பாக நடித்திருப்பார் கவுண்டர். இதைப் படிக்கும் பொழுது சிலருக்கு சிரிப்பு வரலாம், ஆனால் உண்மையில் ஒரு சமூக பொறுப்புள்ள ஒரு கலைஞனை வெறும் காமெடி நடிகனாக மட்டுமே சித்தரிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இப்பொழுது இருக்கும் அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது. - Manoj Ramasamy. Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 10:50 PM PST "கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா… ?" "இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடை யாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்த னா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா…?" ##பெருந்தலைவர் காமராசர் ![]() |
Posted: 17 Jan 2015 10:40 PM PST |
:P உண்மைதான் Posted: 17 Jan 2015 10:20 PM PST |
Posted: 17 Jan 2015 10:10 PM PST ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து.... - உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா. - உலகின் மிகவும் ஏளனப்படுத்தப்பட்ட கணவன் தன் சகோதரன். - உலகின் மிக அழகான மனிதன் தன் மகன். - உலக அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் தனது சகோதரியின் கணவர். - உலகின் மிக நன்றியுள்ள மனிதன் தன் மருமகன். - மேலும் உலகின் இதயமற்ற, மொத்தமும் முட்டாள்தனமான மனிதன் அவளுடைய கணவன்.. :) Relaxplzz |
Posted: 17 Jan 2015 10:00 PM PST பீட்ரூட் ஜூஸ் ------------------- * பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். * கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். * பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். * தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும். * புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். * பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். * புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 09:50 PM PST |
Posted: 17 Jan 2015 09:45 PM PST " டாக்டர், என் கணவர் நீங்க சொன்ன மாதிரி, தினமும் வாக்கிங் போய் உடம்ப துரும்பாய் இளைச்சுட்டார்...!!, திரும்ப சதை போட என்ன வழி டாக்டர்..?? * * * * "அப்படியே ரிவர்ஸ்ல நடக்கச் சொல்லுங்க...!!" :O :O |
Posted: 17 Jan 2015 09:40 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment