Relax Please: FB page daily Posts |
- அம்மா இன்னைக்கும் அதே சாம்பார்/புளிக்குழம்பு தானே வேண்டாம்மா..!" "பரவாயில்லை.....
- நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவர...
- பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி திடப்ப...
- :) Relaxplzz
- ஏம்பா தம்பி! படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு, எங்கையாவது வேலைக்கு சேர்ந்துட்டி...
- அடபாவிகளா...... :D :D
- அருமையான வீடு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- நீரழிவு நோய் உடையவர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஒரு இயற்கை மருந்து.. // படித்து பகிர...
- :) Relaxplzz
- மரம் வளர்ப்போம்
- வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation...
- நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில்...
- கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை...
- ;-) Relaxplzz
- ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை... ** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை...
- உண்மை தான ;-)
- ஆளுக்கொரு செடி நட்டால் சத்தியமாய் இந்த நிலைமை வராது..சிந்திப்பீர்....!!!!
- (y)
- :P :P 3 லட்சம் எப்ப தருவீங்க...
- மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு க...
- காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்து...
- உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....! *********************...
- வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர்கள்... ;-)
- ஒரு சின்ன குழந்தை வரைந்த மாட்டுப் பொங்கல் கோலம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.....
- :) Relaxplzz
- அடப்பாவீங்களா இப்படி ஒரு கேக்கா :O :O
- :) Relaxplzz
- பழமொழிகள்...... 1) பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. 2) ப...
- ABCD-யில் ஒரு காதல் கவிதை... A னது டைரிகளில் B ரிந்து போன உன் நினைவுகள் C தறிய...
Posted: 16 Jan 2015 09:20 AM PST அம்மா இன்னைக்கும் அதே சாம்பார்/புளிக்குழம்பு தானே வேண்டாம்மா..!" "பரவாயில்லை.. என் ராஜால்ல.. அம்மா உனக்கு உருட்டி தருவேனாம்.. நீ ஒவ்வொரு உருண்டையா சாப்பிடுவியாம்..!" என்று சொல்லிவிட்டு குழம்ப நல்லா சுண்டவெச்சு, சாதத்துல போட்டு, ஒவ்வொரு உருண்டையா உருட்டி, கையில் வெச்சு, அப்படியே வாய்க்குள்ள தள்ளி, அதுலயும் கடைசி உருண்டையில் மிஞ்சிய சாதத்துளிகளை பாத்திரத்தோட விளிம்புல ஒண்ணாசேர்த்து அதை அப்படியே லாவகமா வழிச்சு வாயில ஊட்டிவிடும் போது உள்ள சுகம் இருக்கே.. அது அப்படியொரு அழகான கவிதை..! சாப்பாடோட அன்பையும் சரிவிகிதமா கலந்து கொடுக்க அம்மாவை விட வேற யாரும் இருக்க முடியாது. - காளிமுத்து @ Relaxplzz ![]() |
Posted: 16 Jan 2015 09:10 AM PST நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/ 07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி http://www.hcmadras.tn.nic.in/ 08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி http://www.indianrailways.gov.in/indianrailwa…/indexhome.jsp 09. இந்திய தூதரம் – இணையதள முகவரி http://www.indianembassy.org/ 10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி http://www.tnreginet.net/ 11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி http://www.mca.gov.in/ 12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி http://www.chennaicorporation.gov.in/ 13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி http://tnvelaivaaippu.gov.in/EmploymentExc…/…/loginFrame.jsp 14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி http://www.indiapost.gov.in/nsdefault.htm 15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி http://www.incredibleindia.org/index.html 16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி http://www.tamilnadutourism.org/ 17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி http://www.tneb.in/ 18.ஆதார் கார்டு இணைய தள முகவரி https://eaadhaar.uidai.gov.in/eaadhaar/ 19.கியாஸ்(L.P.G.) இணைய தள முகவரி http://petroleum.nic.in/my_LPG_gas_NIC_2/index.html Relaxplzz |
Posted: 16 Jan 2015 09:00 AM PST பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி திடப்பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக்குகள் அடுத்தகட்டத்திற்கு தாவி தற்போது சூடான திரவப்பொருள்களை வாங்கி வரவும் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் உணவுப்பொருள்கள் வேதிவினை யாகி கேன்சர் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நம் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாகி ஊடுருவி கிடக்கிறது. சிறிய கேரி பேக் முதல் சமையல் பாத்திரம், மருத்துவம், சுகாதாரம், மின்துறை என்று அனைத்திலும் இதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது. இருப்பினும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி மூலம் தொடர்ந்து அவற்றை பல்வேறு ரூபங்களாக மாற்றி மாற்றி அதன் வீரியத்தன்மை வெகுவாய் குறைக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ் டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்கு களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை உள்ளிட்ட அனைத்து கட்டத்திலும் இதற்கு தடை உண்டு. இருப்பினும் அரசு, அதிகாரிகளின் கடும் நடவடிக்கை இன்மையால் தொடர் ந்து இவை சந்தையில் வலம் வந்தபடி உள்ளன. எளிமையான பயன்பாடு, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் பொதுமக்களின் பார்வை யை இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஈர்க்க துவங்கின. இதனால் துணிப்பை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இரு ந்து விலக துவங்கியது. கையை வீசி கொண்டு செல்லலாம். பொருட்களை வாங்கி வந்தபின் பிளாஸ்டிக் பையை தூக்கிப் போட்டு விடலாம் என்ற மனோநிலையில் நுகர்வோர் மத்தியில் புதிய கொள்முதல் கலாச்சாரத்தை ஏற்படுத்த துவங்கியது. எனினும் இதன்பின்னால் உள்ள அபாயங்களை பலரும் உணரவில்லை. இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பிளா ஸ்டிக்குகள் அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்தே கிடந்து மழைநீரை உட்புகாமல் செய்வதுடன், மண்ணின் உதிரித்தன்மையை பாதித்து காற்று ஊடுருவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் மண்புழு உள்ளிட்டவைகளும் அழிய துவங்கின. சிதறி கிடக்கும் இந்த பிளாஸ்டிக்கழிவுகளை அழித் தாலும் அது சுற்றுச்சூழலுக்கு கேட்டையே விளைவிக்கிறது. எரிக்கும் போது, அதில் இருந்து வெளிவரும் டையாக்சின் காற்றுமண்டலத்தில் கலந்து விடுகிறது. இதை சுவாசிப்பவர்களுக்கு தும்மல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்றில் கலந் திருக்கும் டையாக்சினின் மீது மழை பொழியும் போது அவை அமில மழையாக தரையை தொட்டு பாதிப்பை தொடர்கிறது. பொதுவாக மண்ணில் பல் வேறு விதைகள் சிதறி கிடக்கும். மழை நேரங்களில் இவை தழைத்தெழும். மழை காலங்களில் சிறு தாவரங்களான நாயுருவி, துளசி, குப்பை மேனி, தும்பை, திருநீற்றுப்பச்சை என்று பல்வேறு மூலிகைச்செடிகள் கண்ணுக்கெட்டியதூரம் வரை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தின. ஆனால் பிளாஸ்டிக் எரிப்பினால் மண்ணின் மேல் உள்ள மண்புழு மட்டுமல்லாது இதுபோன்ற விதைகளும் கருகுவதால் முன்பு போல மழைக்கு பிந்தைய சிறுதாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இவ்வாறு புதைத்தாலும், எரித்தாலும் தன்சுபாவத்தை மாற்றி கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்குகள் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. திடப்பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த இந்த பிளாஸ்டிக்குகள் தற்போது திரவ பொ ருட்களையும் ஆட்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் உணவகங்களில் குழம்பு, ரசம் என்று பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் தற்போது இதை விட அதிகமாக டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கட்டட வேலைகள், தினக்கூலிகள் என்று டீயை மொத்தமாக வாங்கி பகிர்ந்து குடிக்கும் அத்தனை இடங்களிலும் இந்த முறை பரவலாகிவிட்டது. டீயை பார்சல் கட்டி தருவதற்காகவே பல்வேறு முன்னேற்பாடுகள் கடைகளில் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள பாலிபுரோப்பின் அதிகசூட்டினால் உருகி உணவுப்பொருளுடன் கலக்கும். கேன்சர், கிட்னி பாதிப்பு, வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் கையை வீசிக்கொண்டு சென்று பொருளை வாங்கி பழகிவிட்ட தற்போதைய நடைமுறை பாதிப்பையும் துரிதப்படுத்தி வருகிறது. தூக்குவாளி போன்ற பாத்திர விற்பனையும் குறைந்துவிட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த வில்லனை அரசு, அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்வதன் மூலமே இதனை தடுக்க முடியும். Relaxplzz ![]() |
Posted: 16 Jan 2015 08:55 AM PST |
Posted: 16 Jan 2015 08:50 AM PST ஏம்பா தம்பி! படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு, எங்கையாவது வேலைக்கு சேர்ந்துட்டியா...எப்பவும் போனும் கையுமா இருக்க. அதுவா பெரியவரே,என் போன்ல முகநூல்,வாட்ஸப் வசதி இருக்கு,அதனால தான் முழு நேரமும் அதில் இருக்கேன். சாதாரண ஏழ்மை குடும்பத்துல பிறந்த நான், முகநூலில் 3 க்ரூப் அட்மினா இருக்கேன், எனக்கு கீழ 250000 பேர் இருக்காங்க. அது இல்லாம 2 பேஜ்ஜுக்கு ஓனர்.வாட்ஸப்புல 2 க்ரூப்புக்கு ஓனரா இருக்கேன். அடேங்கப்பா! எப்படியும் மாசம் ஒரு லட்சம் தேறும் போல இருக்கே...பரவாயில்லைப்பா! நல்லா இருப்பா.உங்க அப்பா தான் கூலி வேலை செஞ்சுக்கிட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாரு, நீயாவது ஓனர் ஆயிட்டியே! ரொம்ப சந்தோஷம்பா . #ஙேஙேஙேஙே.... :O :O - Prakash @ Relaxplzz |
அடபாவிகளா...... :D :D Posted: 16 Jan 2015 08:45 AM PST |
Posted: 16 Jan 2015 08:40 AM PST |
Posted: 16 Jan 2015 08:38 AM PST நீரழிவு நோய் உடையவர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஒரு இயற்கை மருந்து.. // படித்து பகிரவும் // ![]() Natural Medicine - 2 Finally Good News For Diabetes. like emoticon A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day. She used the enclosed homemade medicine for a fortnight and now she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets. The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs. I request you all please circulate the email below to as many people as you can and let them take maximum benefit from it. AS RECEIVED : DR. TONY ALMEIDA ( Bombay Kidney Speciallity expert ) Made the extensive experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes. Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes. Ingredients : 1 - Wheat 100 gm 2 - Gum (of tree) (Gondh) 100 gm 3 - Barley 100 gm 4 - Black Cumin Seeds (Kalunji) 100 gm Method of Preparation : Put all the above ingredients in 5 cups of water. Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself. When it has become cold, filter out the seeds and preserve water in a glass jug or bottle. How to use it ? Take one small cup of this water every day early morning when your stomach is empty. Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you will wonder to see that you have become normal and can eat normal food without problem. This content is for informational purpose only, first you must consult your doctor for treatment if you have diabetes. MUST SHARE PLEASE @[297395707031915:274:Relaxplzz] |
Posted: 16 Jan 2015 08:35 AM PST |
மரம் வளர்ப்போம் Posted: 16 Jan 2015 08:31 AM PST |
Posted: 16 Jan 2015 08:21 AM PST வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி? HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள் : வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும். மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள். Apply செய்ய வேண்டிய இடம்: பழைய தலைமச் செயலகம், பொது வழி நேரம்: காலை 10 மணிக்கு மேல் தேவையான Documents:- 1. அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்) 2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல் (offer letter) 3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல் 4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்) வழிமுறைகள்:- அவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம் தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் ₹500 க்கான டிடியை எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்துவிடவும். இன்ஷா அல்லாஹ் 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் பெற்று கொள்ளலாம். உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தரவேண்டும் எம் ஈ ஏ (Ministry of External Affairs) தேவையான சான்றிதழ்கள்: 1.சான்றிதழ், அதன் நகல் (தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது) 2.பாஸ்போர்ட் நகல் குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர். எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள். M.E.A அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். Ministry of External Affairs of the Government of India Joint Secretary (Consular), MEA CPV Division, Patiala House Annexe Tilak Marg, New Delhi. Tel.: +91 11 2338 8015 Fax.: +91 11 2338 8385 Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in ————– Ministry of External Affairs Branch Secretariat 2 Ballygunge Park Road Kolkata – 700019 Tel: 033-22879701 / 22802686 Fax: 033-22879703 ————– Ministry of External Affairs Branch Secretariat 7th Foor EVK Sampath Maligai 68 College Road Chennai – 600006 Tel: 044-28272200 / 28251323 Fax:044-28251034 ————— Ministry of External Affairs Branch Secretariat B Block Room #311-312 Hyderabad – 500022 Tel: 040-23456051 Fax:040-23451244 உங்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் மேலே உள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு விபரம் அறிந்து கொள்ளுங்கள். Relaxplzz ![]() அரசாங்க தகவல்கள் |
Posted: 16 Jan 2015 08:12 AM PST நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.... பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள். சொன்னால் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்" இளைஞன் உரக்ககச் சொன்னான். என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...! நீதி : ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும். Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 16 Jan 2015 08:00 AM PST கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தார் . வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர் ; அவரைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றார் . அதற்கு அவர் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றார் . எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார் . அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டார். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டார். கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் அவரைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றார். அதற்கு கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றார். தான் சொல்வதுதான் நடக்கும் என்றார் பக்கத்து வீட்டுக்காரர் . நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் கணவன் அவரது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர். அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான். ''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த கணவன். "கணவன் மனைவி உறவு உன்னதமானது" Relaxplzz ![]() |
Posted: 16 Jan 2015 07:57 AM PST |
Posted: 16 Jan 2015 07:53 AM PST ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை... ** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை... ** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை... ** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை... :O என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?….. - யோகேஷ் யோகி |
உண்மை தான ;-) Posted: 16 Jan 2015 07:45 AM PST |
Posted: 16 Jan 2015 07:38 AM PST |
Posted: 16 Jan 2015 07:30 AM PST |
Posted: 16 Jan 2015 07:20 AM PST |
Posted: 16 Jan 2015 07:10 AM PST மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள். 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள். 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம். 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல். 4. விரும்பியதைப் பெற இயலாமை. 5. ஒருவரையொருவர் நம்பாமை. 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை. 7. உலலாசப் பயணம் போக இயாலாமை. 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை. 9. விருந்தினர் குறைவு. 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல். 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை. 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு. 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல். 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு. Relaxplzz |
Posted: 16 Jan 2015 07:00 AM PST காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார். " அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார். அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார். ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி? இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார். அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை. (y) (Y) Relaxplzz ![]() |
Posted: 16 Jan 2015 06:50 AM PST உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....! ************************************************************************* நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, * PASSPORT * DRIVING LICENCE, * PAN CARD, * VOTER ID, * RATION CARD, * BANK PASSBOOK, * ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். அதற்குரிய தொகையை உரியவர்களிடம் பெற்று கொள்ளும்... உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அ SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம். Relaxplzz ![]() |
Posted: 16 Jan 2015 06:45 AM PST |
Posted: 16 Jan 2015 06:40 AM PST |
Posted: 16 Jan 2015 06:33 AM PST |
Posted: 16 Jan 2015 06:27 AM PST |
Posted: 16 Jan 2015 06:16 AM PST |
Posted: 16 Jan 2015 06:10 AM PST பழமொழிகள்...... 1) பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. 2) பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. 3) பகைவர் உறவு புகை எழு நெருப்பு. 4) பக்கச் சொல் பதினாயிரம். 5) பசியுள்ளவன் ருசி அறியான். 6) பசி வந்திடில் பத்தும் பறந்துபோம் 7) பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. 8) பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? 9) பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? 10) படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். 11) படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். 12) படையிருந்தால் அரணில்லை. 13) படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். 14) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 15) பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். 16) பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். 17) பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். 18) பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். 19) பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? 20) பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும். 21) பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர். 22) பணம் உண்டானால் மணம் உண்டு. 23) பணம் பந்தியிலே குலம் குப்பையிலே. 24) பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும் 25) பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். Relaxplzz |
Posted: 16 Jan 2015 05:59 AM PST ABCD-யில் ஒரு காதல் கவிதை... A னது டைரிகளில் B ரிந்து போன உன் நினைவுகள் C தறிய கணணாடியில் D னமும் உன் பிம்பங்கள் E தயங்கள் பிரிந்தாலும் F ப்பொழுதும் உன் ஆசைகள் G வனுக்குள் உறைந்து போன H சரிக்கை கருவிகளாய் I ந்து மணி ஆனவுடன் J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள் K ட்காமல் நீ வாங்கித் தந்த L ல்லா வற்றிலும் M னதிற்குள்ளும் புன்னகை வரசசெய்து N றும்மே உன்னை நினைத்து O ரு நாளும் இல்லாத திருநாளாய் P ன் வீட்டு ஜன்னலிலிருந்து நீ Q டுததுனப்பிய காதல் கவிதைகல் R வமுடன் நான் அதை பார்த்து S ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ T ருத்தி விடு இது நடக்காதென்றாய் U கம் அனைத்தும் உனக்குள் V ழுந்து போன இலைச் சருகுகளாய் W edding கடையில் நீ வாங்கித் தந்த கார்டுக்கு X சாம்பிளாக இருப்போம் என்றாய் Y ந்து போகாமல் இன்னும்நம் காதல் Z oom ஆகிக் கொண்டு கனாக் காண்கிறதே Photo Aa Photography Relaxplzz ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 16 Jan 2015 05:57 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment