Wednesday, 10 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


அறிந்துகொள்வோம்...! * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2...

Posted: 10 Dec 2014 04:45 AM PST

அறிந்துகொள்வோம்...!

* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.

* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

* நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

* இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.

* நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்

* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.

* உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

மனிதநேயம் கேள்விப்பட்டிருப்போம். மிருகங்களும் கூட நேயத்துடன் நடந்துகொள்கிறது. சா...

Posted: 10 Dec 2014 01:41 AM PST

மனிதநேயம் கேள்விப்பட்டிருப்போம். மிருகங்களும் கூட நேயத்துடன் நடந்துகொள்கிறது. சாதி, மத வெறியர்கள் இதை பார்த்தேனும் திருந்தவேண்டும்.


மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!! உலகில் பிரபல...

Posted: 10 Dec 2014 01:32 AM PST

மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!!

உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்திரிகை கடந்த டிசம்பர் -5 தேதி தகவல் வெளியிட்டது.

இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியானது.

ஆனால் டிசம்பர் -9 டைம்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் ஃபேக் ஐடிக்களை வைத்து மோடி ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு பதிந்துள்ளதாகவும் ஒவ்வொரு போலி வாக்காளர்களும் 7500 கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டதால் மோடியை டைம்ஸ் பர்சன் பட்டியலில் இருந்து நீக்கியது டைம்ஸ்.

ஆனால் இந்த செய்தியை எந்த மீடயாவும் குறுஞ் செய்தியாக கூட வெளியிட வில்லை...

நகைசுவை:- தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி.... பேரன்: ஏன் தாத்தா......

Posted: 10 Dec 2014 01:28 AM PST

நகைசுவை:-
தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி....

பேரன்: ஏன் தாத்தா...?

தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க...

பேரன் : சரி....

தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்...

பேரன் : அப்படியா...

தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...?

பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்...

தாத்தா : ????

விளம்பரங்கள் தயாரிக்கும் முறை!!! 1. நல்லா மழ மழ ன்னு சவரம் பண்ண ஒருத்தரை கூட்டி...

Posted: 10 Dec 2014 01:18 AM PST

விளம்பரங்கள் தயாரிக்கும் முறை!!!

1. நல்லா மழ மழ ன்னு சவரம் பண்ண ஒருத்தரை கூட்டிட்டு வந்து முகத்துல ஃபோம் அப்பளை பண்ணி கையில அந்த கம்பெனி ரேசரை குடுத்து டான்ஸ் அடிட்டே ஷேவ் பண்ண சொல்லி ரேசர் விளம்பரம் எடுப்பாங்க

2. புதுசா கட்டுன வீட்டு டாய்லலட்ல டாய்லெட் கிளினர் அப்ளை பண்ணி டாய்லெட் கிளினர் விளம்பரம் எடுப்பாங்க , அத கையால தடவி காமிப்பாங்க

3. புது பாத்திரத்துல ஒரு சோட்டு அர சொட்டு பாத்திரம் கழவர ஜெல் அப்ளை பண்ணி இது 1 மாசம் வரும் 2 மாசம் வரும் னு புருடா விடுவாங்க

4.ஏற்கனவே ஒல்லியா இருக்கர பொண்ணை தேடி புடிச்சி தர தர ஃனு இழுத்துட்டு வந்து இந்த மாத்திரை/பவுடரை வயிறு முட்ட தின்னதால தான் நான் ஒல்லி ஆனேன் னு ஈவு இரக்கம் இல்லாம கொளுத்தி விடுவாங்க

5.சந்தன கலர் சட்டை பக்கத்துல வெள்ளை சட்டை வச்சி பளிச்சிடும் வெண்மைக்கு இந்த சோப் வாங்குங்க னு அவுத்து விடுவாங்க.

அடிக்கடி இந்த விஜய் டிவியை கழுவி ஊத்துறதுக்கு என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க.....

Posted: 09 Dec 2014 09:38 PM PST

அடிக்கடி இந்த விஜய் டிவியை கழுவி ஊத்துறதுக்கு என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க... அவனுக பண்றது அப்படி இருக்கு....
சில வாரங்களுக்கு முன்....நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்னும் ஒரு அறிவு பூர்வமான நிகழ்ச்சியில்... நிகழ்ச்சி தொகுப்பாளர் பங்கெடுக்க வந்த பெண்ணிடம்... கேட்டார் ஒரு கேள்வி....ஆஹா ஆஹா ..
கன்னியாகுமரியில் சூரியன் மறையும் திசை எது...? என்பது கேள்வி.. அதற்கு அந்த பெண்ணின் பதில்... "கன்னியாகுமரியில் வெஸ்ட்டில் தான் மறையும் .." ஓகே இது தவறில்லை.. அடுத்து தான் இருக்கிறது...தொடர்ந்து அந்த பெண்மணி... "வெஸ்ட்க்கு ... தமிழ்ல என்னவோ சொல்லுவாங்களே...ஹ்ம்ம் ...ஹ்ம்ம் ... ஐயோ அது என்னனு தெரியலையே... சரி.வெஸ்ட் தான்.. பதில் விடுங்க" என்கிறார் சர்வ அலட்சியமாய்...
இவர் ஒன்றும் இங்கிலாந்து குடிமகள் இல்லை... இதே சென்னையில் வசிக்கும் பந்தா கேஸ் தான்... மேற்கு என்ற வார்த்தை கூட தெரியாமல் இருக்கிறோமே என்று வெட்கப்பட வேண்டாமா... அல்லது தெரிந்து கொண்டே சும்மா உதாருக்காக ... இப்படி நடிக்கிறாளா... இந்த நிகழ்ச்சியை நடத்தும் சிகாமணிகள் அவருக்கு அதை மேற்கு என்று உணர்த்தி அவரை தமிழில் சொல்ல வைத்து பதிவு செய்ய கூடாதா.. இது ஒன்றும் நேரலை நிகழ்ச்சி இல்லையே.... ஒரு வேளை நிகழ்ச்சி நடத்தும் ஈரோடு மகேஷ்க்கும் தமிழ் வார்த்தைகள் தெரியாதோ என்னவோ..!
இந்த வெண்ணைகள்... தமிழை வாழ வைக்க வேண்டி "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்கள்... எதற்கடா இந்த வெட்டி பந்தா.....விஜய் டிவி என்றாலே மிகவும் மெத்த படித்த மேதாவிகள் கூட்டம் நடத்தும் நாகரீக சேனல் என்று காட்டிக்கொள்ளவா ?
நீங்கள் நடத்தும் நிகழ்சிகள் எல்லாம் இந்த பாமர சாதாரண தமிழ் மக்களை நம்பித்தான் என்பதை மறந்து விடாதீர்கள் மேதைகளே....

நன்றி-
நல்ல நண்பன்

0 comments:

Post a Comment