Pls share.
. இது கூட டீசர் தான் டிரைலர் பின்னாடி வரும்..
நீங்க அடிக்கடி செய்திகளில் படிப்பிங்க..சாக்கடை விஷ வாயு தாக்கி 4 பேர் பலி,கிணறு வெட்டும் போது விஷ வாயு தாக்கி 5 பேர் பலி ..நிலத்தை தோண்டும் போது இயற்கையாக வெளியேறும் விஷவாயு தான் மீத்தேன் (CH4). இந்திய ஊடகங்களில் அமலா பாலை அறிந்ததவர் உள்ளனரே தவிர.அறிவியல் பெயர் அறிந்தவர் இல்லை..
அடிக்கடி சுரங்களில் வெளிப்படும் இவ்வாயு மரணத்தை ஏற்ப்படுத்துகிறது..சுவாசிப்பதாலும் . மீத்தேன்(CH4) பற்றி எரிய கூடியது தீ விபத்து ஏற்படுத்துவதாலும் பல உயிரை பறித்துள்ளது..
இதற்கு சில உதாரணம்...
•26 ஏப்ரல் 1942ல் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்ட சீனா நாட்டு பென்ஷிஹு சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து எற்பட்ட விபத்தில் 1515 சீனர்கள் 34 ஜப்பானியர்கள் உயிரிழந்தனர்.
•9 நவ 1963ல் ஜப்பான் மிக்கி நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் 458 பேர் உயிரிழந்தனர்.
•19 மார்ச் 2007 ரஷ்யாவின் கெமெரோவா ஓப்ளஸ்ட்டில் உள்ள உல்யனோவ்ஸ்கயா நிலக்கரி சுரங்கத்தில் மீதேன் கசிவால் 108 பேர் உயிரிழந்தனர்...
•1976 அமேரிக்கா மேற்கு வெர்ஜினியாவில் மீத்தேன் வாயு குழாய் வெடித்ததில் 76 பேரும் 2010ல் அதே பகுதியில் மீத்தேன் வாயு குழாய் வெடித்ததில் 36 பேர் இறந்தனர்...இதானால் மீத்தேன் திட்டத்தை கை விட்டது..
•2014 ல் சீனாவின் திபெத்தின் கியாமா சுரங்கத்தில் 78பேரும், பேபோ சுரங்கத்தில் 17 பேரும், தெளசிகவ் சுரங்கத்தில் 24 பேரும்.சுரங்கங்களில் மீத்தேன் வாயு கசிந்ததால் இறந்தவர்கள் இவர்கள்.
நிலக்கரி சுரங்கங்களில் எதேச்சையாக வெளியேறிய மீத்தேன் வாயுவால் இறந்தவர்களின் சிறிய பட்டியல் இது.இதுவே நேரடியாக மீத்தேன் எரிவாயு குழாயில் விபத்து ஏற்பட்டால்?
-V.Rajamaruthavel

0 comments:
Post a Comment