ilovemynative: Facebook page wall posts in Tamil |
- திருமலையில் ராஜபக்ஷே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவில...
- காலைல எப்படா ஸ்கூலுக்குப் போவாங்கனும், சாயங்காலம் எப்ப வருவாங்கனும் நினைக்க வைப்...
- மனிதன் வேட்டை ஆடி உணவு உண்ட காலத்தில் விவசாயம் செய்து உணவு உண்ட தமிழ் இனம், விவச...
- #StopMethaneExplorationInKaveriDelta
- #StopMethaneExplorationInKaveriDelta இந்த பதிவில் பல்வேறு பட்டவர்களின் உணர்வின்...
- உலகிலேயே தன் சொந்த நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்கி சிறைபிடிக்கும் ஒரு நாட...
- A small village near Dharmapuri has been found to be archaeologically significan...
- இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்... சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்... மகாபாரதத...
- அறுவடை செய்யும் காலங்களில் முற்றிய கதிர்கள் எங்களிடம் இல்லாவிடில் நாங்கள் அறுப்ப...
- கர்ம வீரர் காமராஜரின் சாதனை எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனித...
- "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" @iLavam - The Brand of Nation
- இலங்கையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி 1437 இந்து கோவில்களை இடித்து இர...
- இலங்கையிலே ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தள்ளி இலட்சோப இலட்சம் இந்து தமிழ...
- இனி தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்-தங்கள்...
- தெருத் தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு - ஊரார் தெரிந்துகொள்ள படம்பிடித்தால்...
- If they started this project, surely it'll destroy the agriculture surrounding t...
- நேற்றுவரை பள்ளிப்பாடங்ளில் நெற்களஞ்சியம் என பெருமை படுத்த பட்ட காவிரி டெல்டாவை....
Posted: 09 Dec 2014 07:20 PM PST திருமலையில் ராஜபக்ஷே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தியதுடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்துள்ளனர். |
Posted: 09 Dec 2014 07:14 PM PST காலைல எப்படா ஸ்கூலுக்குப் போவாங்கனும், சாயங்காலம் எப்ப வருவாங்கனும் நினைக்க வைப்பவர்கள் #குழந்தைகள் @காளிமுத்து |
Posted: 09 Dec 2014 06:49 PM PST மனிதன் வேட்டை ஆடி உணவு உண்ட காலத்தில் விவசாயம் செய்து உணவு உண்ட தமிழ் இனம், விவசாயத்தை கடல் கடந்து பரப்பி ஆனைத்து மக்களுக்கும் உணவளித்த தமிழ் இனம் இன்று அதே விவசாயத்துக்காக போராடவேண்டிய சூழ்நிலை #StopMethaneExplorationInKaveriDelta |
#StopMethaneExplorationInKaveriDelta Posted: 09 Dec 2014 10:51 AM PST |
Posted: 09 Dec 2014 09:00 AM PST #StopMethaneExplorationInKaveriDelta இந்த பதிவில் பல்வேறு பட்டவர்களின் உணர்வின் அலைவரிசை கீழ்வருமாறு... *அன்று சுதந்திரத்திற்காக போராடிய தமிழினம் இன்று சோற்றுக்காக போராடுகிறது. *கதிரை அறுப்பவர்களின் கழுத்தை அறுக்காதீர்கள்.... *மீத்தேனை மாட்டுச் சாணம் கூட தரும்.. தானியமணிகளை விளைநிலங்கள் தான் தரும். *ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. மீத்தேன் வந்தால்.. பதம் பார்க்க ஒரு பருக்கை சோறும் இருக்காது *மக்கள் வாழ்வதற்கு வழி செய்யாவிட்டாலும் பரவாயில்லை புதைப்பதற்கு குழி வெட்டாதீர்கள்... *By end of the day , we can't eat currency. *நாங்கள் தமிழர்கள். நாங்கள் உலகுக்கு சோறு போடவே விரும்புகிறோம்.. சோற்றுக்கு பிச்சை எடுக்க அல்ல.. *வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.., அது சரி ஆனா சோறு திங்குற வாய்ப்பு போயிரும் பரவால்லியா..??? *ஒரு காலத்தில் இந்த பாலைவனத்தில் பச்சை பசேல் என்று விவசாயம் நடந்தது நம் குழந்தைகள் பாடம் படிக்க நேரும்... *சாமி போட்ட பாலம்'ன்னு அடிச்சிகிட்டு, சோறு போட்ட மண்ண மறந்துடாதீங்கடா... *இது சுதந்திரம் அல்ல... இழந்து விட்டு பின் போராடிப் பெற... *இது நம் வாழ்க்கை. மண் மலடானால் மீட்க இயலாது. *1950-களில் கோதுமைக்கு அமெரிக்காவிடம் கையேந்தியது போல் அரிசிக்கு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை வராமல் இருக்க.... *மீத்(தேன்) பெயரில் தான் தேன் இருக்கு மற்ற படி விவசாயிகளுக்கு இது ஒரு விஷ மருந்து *தேன் எடுத்தா புறங்கையை நக்குவோம் மீத்தேன் எடுத்தா வெறுங்கையைதான் நக்குவோம் .. *மீத்தேன் சாத்தியமானால் மேற்கு வங்கத்தின் நிலைமை தமிழகத்திற்கு உருவாகும்... *களத்தில் இறங்கி போராடவில்லை என்றாலும் அவர்களுக்கு கை கொடுக்க நாம் இருக்கிறோம் என்றாவது உனர்த்துவோம் *விவசாயிகளின் வாழ்க்கைக்கு கத்தியாகும் மீத்தேனை எதிர்ப்போம்; *என்னை அறிந்தால்-ஐ trend ஆக்கும் நாம் இதையும் செய்வோம்! *மீத்தேன் இல்லாம சைக்கிள் மிதிச்சாவது உயிர் வாழலாம் சோறு இல்லாம... *விவசாயிகளின் போராட்டம் அவர்களின் தொழிலுக்கானது அல்ல நம் சந்ததியின் உணவுக்கானது! *அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் புரியும் பணத்தை உண்ண முடியாது என்று *15 வருசத்துக்கு முன்னாடி நாம என்ன கேஸ்லயா சோறு பொங்குனோம்?விறகு அடுப்புலதான.. அப்படியே இருந்துடுறோம் *காவேரில தண்ணி ஓடிச்சு. அப்புறம் மண்ணு லாரி ஓடிச்சு. அடுத்து மீத்தேன் எடுத்தா, டேங்கர் லாரி ஓடும். *கடைசியா சோத்துக்கு தட்டை எடுத்துட்டு நம்ம எல்லாரும் பக்கத்து ஸ்டேட்க்கு ஓடலாம்.. //ரன்னிங் உடம்புக்கு நல்லது.. *இப்ப தண்ணியே குடுக்க மாட்டேன்னு சொல்றவன் நாளைக்கு நமக்கு சோறு குடுப்பானா...! *உடம்பில் ஓடும் ஓவ்வொரு உதிரத்தில் 90 சதவிகிதம் நீர்தான் உள்ளது.. அது என் காவிரி தாயின்றி சாத்தியமேது? *அறுவடை செய்யப் பயிர்கள் இருக்காது எங்கள் உயிர்கள் தான் இருக்கும். *மீத்தேன் திட்டத்தை நிறுத்து மீத்தேனும் வாயுதான் அதுக்கான விலை எங்க பிராண வாயுவா? |
Posted: 09 Dec 2014 07:29 AM PST உலகிலேயே தன் சொந்த நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்கி சிறைபிடிக்கும் ஒரு நாட்டின் அதிபரை அரசு மரியாதையோடு கோவிலுக்கு அழைத்து செல்லும் ஒரு மானங்கெட்ட அரசு இந்திய அரசு தான். |
A small village near Dharmapuri has been found to be archaeologically significan... Posted: 09 Dec 2014 04:36 AM PST A small village near Dharmapuri has been found to be archaeologically significant as historians have revealed that it has been inhabited since the Neolithic age, about 10,000 years ago. Historians, who have been studying inscriptions and tools found in the area, are of the opinion that Modhur, situated about fifteen kilo metres from Dharmapuri town, was highly civilised and was most probably the capital for the Athiyaman kingdom. Stone hammers, grinding stones, rubbing stones, stone balls, and a terracotta statue of the mother goddess were excavated in the village. Nearly 17 varieties of stones tools were used by the people of Modhur that dates back to a period about 10,000 years back. "The Neolithic people who lived here were highly civilised and there is evidence that the people were engaged in agriculture," said S Selvaraj, a retired regional assistant director, department of archaeology. According to Selvaraj, in the entire state of Tamil Nadu, Modhur is the only place where this many stone tools and Celts were unearthed. "In Purananuru, a sangam anthology, there is evidence of the inhabitants of Modhur, which was called Mudhur at that time. As a historian, I think it was most likely that Modhur was the capital of the Athiyaman kingdom," he adds. When asked if there were any links between the Modhur and the Indus civilisation, he said, "There were no connections between the two. Inscriptions found in the Indus valley were in hieroglyphs but in Modhur, we had found graffiti inscriptions." However, he added that like Modhur, there may be Neolithic human habitation in Mayiladumparai of Pochampalli, Mullikadu of Harur and many parts of Krishnagiri district. A Chola period inscription of the 10th century, which was found in the village, indicated that Chola kings had imposed tax for marriages. Two hero stone inscription of a Hoysala king were also found in Modhur. The village holds a lot of evidence of the historical significance of Tamilians. Dharmapuri and Krishnagiri are archaeologically rich and much can be found if proper excavations are done, he said. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece Focus on archaeological importance of Dharmapuri The Government has given approval to the State Department of Archaeology to carry out excavation at Modhur in Dharmapuri, the Special Commissioner of Archaeology, T.S. Sridhar, said. Addressing presspersons here today, he said it was proposed to carry out the excavation at Modhur at an estimated outlay of Rs. 2.5 lakhs. The Archaeological Survey of India (ASI) had also given its approval, he said. The contour survey would begin in 10 days, he pointed out. Revenue officials in association with officials of the State Department of Archaeology would start excavation after January 15. It was proposed to complete the work before March 2005, he said. Pottery Found Modhur is an important historical site, situated about 15 kms from Dharmapuri. Mr. Sridhar said that the antiquity of Modhur village went back to the Neolithic age (about 10,000 years old). It had a succession of habitations. During the exploration, the archaeological officer of Dharmapuri identified three distinct habitation mounds. In addition, different kinds of pottery with Neolithic celts (stones) were also found. Stone Inscriptions In the surface collection, the site yielded black and red ware, slipped ware and few grey pottery of the Megalithic period (about 3,000 years old). Two hero stone inscriptions of the Hoysala king were also found. More than 20 Megalithic burials were found at Tirumalvadi, near Modhur. http://www.thehindu.com/2004/12/15/stories/2004121502080300.htm http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-archaeological-importance-of-dharmapuri/article3109422.ece ..... ![]() |
Posted: 09 Dec 2014 02:57 AM PST இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்... சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்... மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்... இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்... எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம் தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக அலைந்து திரிகிறோம் - பழநிபாரதி ![]() |
Posted: 09 Dec 2014 02:46 AM PST அறுவடை செய்யும் காலங்களில் முற்றிய கதிர்கள் எங்களிடம் இல்லாவிடில் நாங்கள் அறுப்பது மீத்தேன் எடுப்பவர்களின் கழுத்தாக தான் இருக்கும்... #StopMethaneExplorationInKaveriDelta |
Posted: 09 Dec 2014 02:15 AM PST கர்ம வீரர் காமராஜரின் சாதனை எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை? காமராசரின் ஆட்சி காலம்: ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்! 1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை 6.கல்பாக்கம் அணுமின் நிலையம் 7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை 8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை 9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை 10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை 11.துப்பாக்கித் தொழிற்சாலை 12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 13.சேலம் இரும்பு உருக்காலை 14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை 16.சமய நல்லூர் அனல்மின் நிலையம் 17.சென்னை அனல்மின் நிலையம் 18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை இவை மட்டுமா? மணிமுத்தாறு ஆரணியாறு சாத்தனூர் அமராவதி கிருஷ்ணகிரி வீடூர் வைகை காவிரி டெல்டா நெய்யாறு மேட்டூர் பரம்பிக்குளம் புள்ளம்பாடி கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா? 159 நூல் நூற்பு ஆலைகள் 4 சைக்கிள் தொழிற்சாலைகள் 6 உரத் தொழிற்சாலைகள் 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள் ரப்பர் தொழிற்சாலை காகிதத் தொழிற்சாலை அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே...! காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்... இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..? இல்லை "இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..? - மாலைமலர் ![]() |
Posted: 09 Dec 2014 02:02 AM PST |
Posted: 09 Dec 2014 01:07 AM PST இலங்கையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி 1437 இந்து கோவில்களை இடித்து இருக்கின்றார் இராசபக்சே. இப்போ மோடியின் அரவணைப்போடு இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு வழிபாட்டுக்காக இரகசிய வருகை? யாரை ஏமாற்ற இந்த நாடகம்.. திருப்பதி மலையானுக்கே வெளிச்சம்.. வெளிச்சம் போடும் உண்மை எதை சொல்கிறது என்றால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதையே.. தமிழீழத்தில் கோவில்களை இடிப்பானாம் தமிழ் மக்களை கொல்வானாம் இந்தியா வந்து பாவங்களை கழுவி விமோசனம் கிடைக்க வழி காட்டுவாராம் மோடி. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற கதை தான் இருவரும் இங்கு.. இலங்கையில் இடிக்கப்பட்ட ஆலயங்களின் சில பெயர்கள் ஆதார பூர்வமான தகவல் அடிப்படையில்: 1.Viswanatha Sivan Temple in Trincomalee 2. Krishnan Temple in Trincomalee 3. Saneeswaran Temple in Trincomalee 4. Natesar Temple in Sivayogapuram, Trincomalee 5. Sri Tillaiambala Pillaiyar Temple in Anbuvalipuram, Trincomalee 6. Chithivinayakar Temple in Sinnatoduvai, Trincomalee 7. Vilankulam Pillaiyar Temple on Kandy Road, Trincomalee 8. Vyrutru Pillaiyar Temple on Kandy Road, Trincomalee 9. Pillaiyar Temple in China Bay, Trincomalee 10. Upparu Pillaiyar Temple in Trincomalee 11. Kitulootra Pallaiyar Temple in Kanniyai, Trincomalee 12. Kitulootra Murugan Temple in Trincomalee 13. Barathipuram Pillaiyar Temple in Pankulam, Trincomalee 14. Pillaiyar Temple in Pankulam, Trincomalee 15. Mudalikulam Pillaiyar Temple in Pankulam, Trincomalee 16. Ellai Kali Kovil in Pankulam, Trincomalee 17.Pillaiyar Temple in Panmadawachchi, Trincomalee 18. Papanasa Teertapillaiyar Temple in Trincomalee 19. Sri Pathini Amman Temple in Neelapalai, Kilivetti 20. Sri Kamakshi Ambal Temple in Jaffna 21. Saiva Maha Sabha in Kurunegala 22. Udupi Sri Muthuvinayakar Temple in Matale 23. Sri Muthumari Amman Temple in Matale 24. Muthuvinayakar Temple in Matale 25. Sri Chithivinayakar Temple in Matale 26. Sri Kadiresan Temple in Matale 27. Sri Poobalakrishnar Ashram in Matale 28. Sri Ganga Vinayakar Temple in Madulkelle 29. Kurinji Kumaran Temple, Peradeniya 30. Sri Muthumariamman Temple in Nawalapitya 31. Atmajothy Nilayam in Nawalapitiya 32. Athivinayakar Temple in Haldumulla, Haputale 33. Sri Sivasubramanya Temple in Bandarawela 34. Sri Kadiresan Temple in Badulla 35. Hindu Temple in Malangama, Badulla 36. Hindu Temple in Narangala, Badulla 37. Kali Temple in Rockhill, Badulla 38. Sri Poobalavinayakar Temple in Peliyagoda 39. Sri Balaselvavinayakar Temple in Maradana, Colombo 40. Sri Devi Karumari Amman Temple in Maligawatte, Colombo 42. Srimath Arunachaleswara Devasthanam in Colombo 43. Ramakrishna Mission, Colombo 44. Kandasamy Temple in Panadura 45. Sri Subramanya Temple in Matara 46. Hindu Pilgrims' Rest in Matara ஆதாரம்: http://hinduexistence.org/tag/hindu-temple-destruction-in-sri-lanka/ ![]() |
Posted: 09 Dec 2014 01:00 AM PST |
Posted: 09 Dec 2014 12:43 AM PST இனி தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்-தங்கள் நிலங்களை விற்கப் பல்வேறு சிறப்புத் தகுதிகளை அடுக்கும் போது தாராளமாகப் பூகம்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். 1000 அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு-அதன் வழியே அதி உயர் அழுத்தத்தில்,இராசயனங்கள் கலக்கப்பட்ட திரவத்தைச் செலுத்துவார்கள்.அத்திரவமும் அத்துளையின் வழியே சென்று-பாறைகள்,மண் அடுக்குகளை எல்லாம் உடைத்து,சிறு சிறு நுண் துளைகளை ஏற்படுத்திப் பல இடங்களுக்குப் பரவும்.அதன் பின் மீண்டும் உள்ளே சென்ற திரவத்தை வெளியே உறிஞ்சுவார்கள்.இப்பொழுது அத்திரவத்துடன் கலந்து-பூமியின் அடியில் பாறைகளின் இடுக்கில் மறைந்துள்ள வாயுக்களும் வெளிவரும்.அவ்வாயுக்களை மட்டும் தனியே பிரித்து-தூய்மைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள்.இதன் பெயர் தான் "Hydraulic Fracturing".இந்த முறையைத்தான் தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியில் மீத்தேன் எரிவாயுவை எடுக்க செயல்படுத்தப் போகிறார்கள். எளிதாகத் தானே இருக்கிறது,மீத்தேன் எரிபொருள் எடுத்தால் நல்லதுதானே என்ற எண்ணங்கள் வருகிறதா? பூமியின் அடியில் பல்லாயிரக்கணக்கான அடி ஆழத்தில்,அதி உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக எப்பொழுதுமே எரிமலை சீற்றங்களும்,வெடிப்புகளும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அப்பொழுது பலமடங்கு அணுகுண்டு வெடிப்புகளுக்குச் சமமான அதிர்வுகளும்,கதிரியக்கங்களும் தொடர்ந்து ஏற்படும்.இந்த அதிர்வலைகள்,பாறையிடுக்குகள்,துளைகள்,விரிசல்களின் வழியே அழுத்தம் குறைந்த பூமியின் மேற்பரப்பை நோக்கி வேகமாக முன்னேறி வரும்.மேலே வர வர வேகமும் அதிகமாகும்.பூமியின் மேற்பரப்பை அடைந்தவுடன் அப்படியே ஒரு குலுக்கு குலுக்கும்.அதன் பெயர் தான் பூகம்பம்.பூகம்பத்தின் வேகத்தை அளக்கும் அளவுகோல் தான் ரிக்டர் அளவுகோல்.பூகம்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இந்தியாவை Zone 1 முதல் Zone 5 வரை பல Seismic Zone களாகப் பிரித்துள்ளார்கள்.இதில் Zone 1 ல் பூகம்பங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லையென்று துவங்கி 2,3,4 வாய்ப்புகள் அதிகமாகி Zone 5 என்றால் எப்போது வேண்டுமானாலும் பூகம்பங்கள் வரலாம் என்றளவில் வகைப்படுத்தியுள்ளனர்.குஜராத் Zone 5 லும்,தமிழ்நாடு Zone 1 லும் உள்ளது. எதை வைத்து இந்த Zone களைப் பிரிக்கிறார்கள் தெரியுமா? பாறைகளை வைத்து.பூமியின் அதி ஆழத்தில் உள்ள எரிமலைக்களுக்கும்-பூமியின் மேற்பரப்பிற்கும் இடையேயுள்ள பாறைகளை வைத்து,எரிமலை வெடிப்புக்களைத் தாங்கும் அவற்றின் வலிமைகளை வைத்து.மேற்சொன்ன எரிமலை வெடிப்புகளின் போது வெளியாகும் வாயுக்களும் இப்பாறைகளின் அடியிலேயே தேங்கிக் கொள்ளும்.மேலே வராது. அதைப் போன்ற மிக வலிமையான பாறைகளே எல்லா இடங்களிலும், தமிழ்நாட்டின் மேற்பரப்பைத் தாங்கி நின்று,பூகம்பங்கள் வரவிடாமல் காத்து நிற்கின்றன.அப்பேற்பட்ட பாறைகளை உடைத்து-அதனடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கத்தான்-முதல் பத்தியில் விளக்கிய Hydraulic Fracturing முறை உபயோகப்படுத்தப்பட போகிறது. இப்போது சொல்லுங்கள் தமிழ்நாட்டிற்கு மீத்தேன் திட்டம் தேவையா? தேவையில்லையா?நாம் நம் குழந்தைகளுக்கு என கட்டி வைக்கும் வீடுகளில் அவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமா? வேண்டாமா? #stopmethaneexplorationinkaveridelta @G Durai Mohanaraju ![]() |
Posted: 08 Dec 2014 11:18 PM PST தெருத் தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு - ஊரார் தெரிந்துகொள்ள படம்பிடித்தால் சுயநலம் உண்டு - காவியக் கவிஞர் வாலி |
If they started this project, surely it'll destroy the agriculture surrounding t... Posted: 08 Dec 2014 10:28 PM PST If they started this project, surely it'll destroy the agriculture surrounding the area of kaveridelta within this generation.... Agriculture is more important than development.... #StopMethaneExplorationInKaveriDelta |
Posted: 08 Dec 2014 10:24 PM PST நேற்றுவரை பள்ளிப்பாடங்ளில் நெற்களஞ்சியம் என பெருமை படுத்த பட்ட காவிரி டெல்டாவை. நாளைய தலைமுறை தமிழகத்தின் பாலைவனமாய் பார்க்கும் நிலை வேண்டாம், எதிர்த்திடுவோம் மீதேன் வாயு திட்டத்தினை.…! #StopMethaneExplorationInKaveriDelta |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment