Tuesday, 23 December 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சொட்டச் சொட்ட வேர்வை நனைந்தபடி பணத்தைக் குடுத்துவிட்டு கேட்பார் அப்பா இவ்வளவு...

Posted: 23 Dec 2014 05:30 AM PST

சொட்டச் சொட்ட
வேர்வை நனைந்தபடி
பணத்தைக் குடுத்துவிட்டு
கேட்பார் அப்பா
இவ்வளவு பணம்
போதுமாப்பா
புகையிலைபாசம்
பணத்தில் வீசும்
எவ்வளவு காசு குடுத்தாரு
அதானே கூடப்பத்துரூபாய்
புள்ளைக்கி குடுக்கமாட்டாரே
முந்தானைபாசம்
முடிச்சவிழும் அம்மா
விவசாயக் குடும்ப
விலாசங்கள்மறந்துவிட்டு
அவசிய நகராக்கிரமிப்பில்
அத்தியாவசியங்களை
தேடும் காலமிது
தினக்கூலிகளானபின்
தினவென்ன கேட்குதென
எகத்தாளமிடுகிறது
பசிச் சூப்பர்வைசர்

நன்றி : விஜயகுமார் சுமதி

பா விவேக்


விவசாயிகள் தினம் : டிசம்பர் 23,1902ல் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இந்தியாவின் ம...

Posted: 23 Dec 2014 12:50 AM PST

விவசாயிகள் தினம் :

டிசம்பர் 23,1902ல் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.சரண்சிங் அவர்களின் பிறந்தநாள் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரைஇந்தியாவின்பிரதமராகப் பணி ஆற்றினார்.

குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.

Amausi விமான நிலையம் ( லக்னோ , உத்தர பிரதேசம்) சவுதாரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படுகிறது.
சரண்சிங், விடுதலை போராட்ட வீரர், விவசாயிகளின் தலைவர்.

இன்று விவசாயி என்றால் பிழைக்க தெரியாதவன் என்பதாக இளைஞர்கள் மத்தியில் எண்ணமிருக்கிறது.

உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும்டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day – Farmers Day, December 23 ) கொண்டாப்படுகிறது...
..

@ Indupriya MP
...


0 comments:

Post a Comment