Relax Please: FB page daily Posts |
- காரணமே இல்லாமல் மொபைலில் பணம் கட் ஆகிறதா,,,? மொபைல் நிறுவனங்கள் உங்களிடம் தவறாக...
- டீ, காபி குடிக்கும் நபரா நீங்கள்.... அப்ப இதை படிங்க..... என் நண்பர் ஒருவர், தி...
- :) Relaxplzz
- தெரிந்ததால் சொல்கிறேன்.... பொதுவாக கோவில் வாசல்களில் மாலைகளை கோர்த்து விற்கும்...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- நீ ஒரு சச்சின் ஆகாட்டிலும் கிச்சினுக்காவது போவாய்.... :P :P
- ;-) Relaxplzz
- ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம். "..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."...
- மூடப்படாத ஒரே கதவு காவல்துறை என்றால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரே த...
- கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள் வழிச்சால...
- குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:- பெற்றோரின் வளர்ப்பை குழந...
- :) Relaxplzz
- ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்...
- தமிழுக்கு எத்தனை பெயர்கள்? 1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 2) அருந்தமி...
- :) Relaxplzz
- உண்மையில் இதுதான் வாழ்க்கை..! தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்...
- நாம் உண்ணும் உணவில் உள்ள ஆறு சுவைகளும் ஆற்றலும்..
- நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம் ----------------------------------------------...
- அழகிய ஓவியம்!
- :) Relaxplzz
- என்னமா அதிர்ச்சிய குடுக்குறானுங்க... 1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு...
- ஒரு பூக்கடையின் வாசம்.. கோவில் தாண்டி போகிற அமைதி... சில்லறையை கொட்டினால் வருகி...
- " தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்கள...
- :) Relaxplzz
- வித்யாசமான குடிசை வீடு (குருவித்துறை)
- கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! சில இளம் பெண்கள...
- :) Relaxplzz
- மக்களுக்காகவே வாழ்கிறேன்?! - அரசியல்வாதி : -------------------------------------...
- உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் ! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ...
Posted: 06 Dec 2014 09:10 AM PST காரணமே இல்லாமல் மொபைலில் பணம் கட் ஆகிறதா,,,? மொபைல் நிறுவனங்கள் உங்களிடம் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்பப் பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன்வைத்திருக்கும் அனைவருக்கும்இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service– களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருக்கும். இந்த பிரச்சி னையில் இருந்து எளிதாகதப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப் படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர் Dialer Tune/Caller Tune, Wallpaper,SMS(Joke, Devotional மற்றும் பல)மற்றும் .பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் #நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள்எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள்24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.. நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். Relaxplzz |
Posted: 06 Dec 2014 09:00 AM PST டீ, காபி குடிக்கும் நபரா நீங்கள்.... அப்ப இதை படிங்க..... என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடித்து கூறினார் மருத்துவர். அவரின் வயிற்றுவலிக்கு காரணம் அவர் வயிற்றில் இருந்த மெழுகு தானாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, மருத்துவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்"கப்'களில், டீ ,காபி குடிப்பது வழக்கம். அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் மருத்துவர்.. தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். இவை மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக்கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில்,மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ,காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர்களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்கவேண்டி வரும்...' என்று கூறினார் மருத்துவர். அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும். Relaxplzz ![]() |
Posted: 06 Dec 2014 08:55 AM PST |
Posted: 06 Dec 2014 08:45 AM PST தெரிந்ததால் சொல்கிறேன்.... பொதுவாக கோவில் வாசல்களில் மாலைகளை கோர்த்து விற்கும் நரிக்குறவர்களைக் கண்டால் முகம் சுழித்து விலகிச் செல்வோம். ஆனால், சபரிமலைக்கு செல்பவர்கள் அணியும் மாலைகள் அனைத்தும் நரிக்குறவ மக்களின் உழைப்பால் உருவாக்கப்படுபவையே என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சென்னையில் உள்ள பல பெரிய கடைக்காரர்கள் மொத்தமாக இந்த வருடத்திற்கு இவ்வளவு மாலை வேண்டும் என்று முதலிலேயே ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். வருடம் முழுவதும் தயாரிக்கும் மாலைகளை ஒரே மாதத்தில் காசாக்கி விடுகிறார்கள். குறிப்பாக சொல்வதென்றால், நரிக்குறவ மக்களிடம் 50 ரூபாய்க்கு கிடைக்கும் மாலை, நாம் கடையில் சென்று 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். நேரடியாக அவர்களிடம் வாங்குவதற்கு நமக்கு கூச்சம். தயக்கம். # இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்குறா??? என்று கேட்பவர்களுக்கு... - Jayant Prabhakar ![]() |
Posted: 06 Dec 2014 08:38 AM PST |
Posted: 06 Dec 2014 08:30 AM PST |
Posted: 06 Dec 2014 08:23 AM PST |
Posted: 06 Dec 2014 08:20 AM PST |
Posted: 06 Dec 2014 08:15 AM PST ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம். "..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு." . அவன் அவனோட அப்பா கிட்டே போய், "..அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான்.?".. அப்படின்னு கேட்டான். . அதுக்கு அவர் சொல்றாரு, "..நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க"..! அப்படின்னு பதில் சொல்றார். . இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை. அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான். . அதுக்கு அவங்க சொல்றாங்க,".. நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க"..! அப்படின்னு. . இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான். . அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார். . அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான். . அப்பா உடனே சொல்றாரு, "..ரெண்டுமே கரெக்ட் தான்டா..!! நான் எங்க வம்சாவளியை சொன்னேன்...! உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா"..! அப்படின்னு. . பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான். . அப்பாவை கேட்டான், "..என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..!!" :P :P Relaxplzz |
Posted: 06 Dec 2014 08:07 AM PST மூடப்படாத ஒரே கதவு காவல்துறை என்றால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரே தொழிலாளிகள் விவசாயிகள் தான்.. ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 06 Dec 2014 08:03 AM PST கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள் வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள் வாய்த்த இடம் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்தால் நல்ல விளைவுகள் வரும். - கண்ணதாசன் ![]() எழுத்தாளர் வரிகள் சில |
Posted: 06 Dec 2014 07:52 AM PST குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:- பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள். இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து, உங்கள் குழந்தைகளை பின்பற்ற வைத்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்து கொடுங்கள். நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்து விடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள். நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணி நேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்பவோ, உடலில் தண்ணீரை ஊற்றவோ வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக்கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகி விடும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக சாப்பாட்டை சிந்தாமல் சாப்பிடுவது, அருகில் அமர்ந்திருப்பவர்கள் முகம் சுழிக்காதவாறு சாப்பிடுவது, அருவறுக்கத்தக்க வகையில் சாப்பிடுவதை தவிர்ப்பது போன்றவை அடங்கும். குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்தவேண்டும். குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்கிவிட்டு புறப்படும் போது அவருக்கு "தேங்க்ஸ்" என்று கூறுவதன் மூலம் நம் குழந்தைகள் அவர்களின் மனதில் நிலைத்து நின்று விடுவார்கள். இது பொற்றோருக்கு பெருமை தானே. பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள். அத்துடன் பெற்றோர் தான் சிறு வயதில் இருந்த அனுபவித்த கஷ்ட, நஷ்டங்கள், வளர்ந்து வந்த விதம் ஆகியவற்றை கூறும்போது, அது நம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இதன் மூலம் குழந்தைகள் தன் தந்தையின் ஆரோக்கிய வழியை தேர்ந்தெடுக்க உதவும். தற்போதுள்ள குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறு வயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை சுத்தமாக டி.வி. பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும். பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள். சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம். குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள். எல்லாமே பெற்றோரின் கையில் தான் உள்ளது. தொட்டில் பழக்கம் கடைசி வரை நம் ஒழுக்கத்தை காக்கும். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற குறளுக்கு சான்றாய் விளங்குமாறு நாமும் நம் குழந்தைகளை வளர்ப்போம்.. Relaxplzz ![]() "சுட்டீஸ் பக்கம்" |
Posted: 06 Dec 2014 07:30 AM PST |
Posted: 06 Dec 2014 07:15 AM PST ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் 'அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்' அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் 'அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்'. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான். 'நீ யார்… ' பயந்த அவன் கேட்டான். 'நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்' குரல் சொன்னது. எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… 'இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…' Relaxplzz |
Posted: 06 Dec 2014 07:13 AM PST தமிழுக்கு எத்தனை பெயர்கள்? 1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ் 7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு) 8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது 9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது) 10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது. 11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்) 12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்) 14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ் 15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ் 16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ் 17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ் 18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ் 19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது 20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்) 21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ் 22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ் 23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது 24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ் 25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ் 26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது 27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ் 28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ் 29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை) 30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ் 31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது 32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது 33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது 34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது 35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா) 36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ் 37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்) 38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்.. Relaxplzz ![]() "தமிழ் - தமிழர் பெருமை" - 1 |
Posted: 06 Dec 2014 06:30 AM PST |
Posted: 06 Dec 2014 06:15 AM PST உண்மையில் இதுதான் வாழ்க்கை..! தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது. அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது. பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னை கவனி..!" என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று கத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார். "இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார். Relaxplzz |
Posted: 06 Dec 2014 06:08 AM PST |
Posted: 06 Dec 2014 05:55 AM PST நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம் ------------------------------------------------------------- 'நமச்சிவாய' என்ற சொல்லுக்கு உரிய விளக்கம் ஐந்தொழில் வல்லான் நிலை நடராசர் சிலை - ஆடல்வல்லான் சிலை - கூத்தர்பெருமான்சிலை - பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும். பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை. இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது. 1.வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது 2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது. 3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது. 4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது. குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன. அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவுபெறும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது. 5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் "தூக்கிய திருவடி" அல்லது "குஞ்சிதபாதம்" எனப்படும். வலக்கால் 'அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற 'ஆடியபாதம்' எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் 'அடக்கிய பாதம்' ஒடுக்கிய பாதம்' அவனால் விளைந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது 'அழித்த பாதம்' எனப்படும். 6. இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலை 'ஐந்தொழில் வல்லான் சிலை' அல்லது 'ஐந்தொழில் வல்லான் நிலை' என்று சிறப்பிக்கப்படுகிறது. நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம் இதே நடராசர் சிலையினை 'நமச்சிவாய' என்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள். ந – ஆக்கல் – வலது மேல் கை ம – காத்தல் – வலது கீழ்க் கை சி – அழித்தல் – மேல் இடக்கை வா – மறைத்தல் – கீழ் இடக்கை ய - அருளுதல் – தூக்கிய இடக்கால் ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால் இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள். ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன. Relaxplzz ![]() "சில அதிசயங்கள் - தகவல்கள்" - 1 |
அழகிய ஓவியம்! Posted: 06 Dec 2014 05:45 AM PST |
Posted: 06 Dec 2014 05:30 AM PST |
Posted: 06 Dec 2014 05:18 AM PST என்னமா அதிர்ச்சிய குடுக்குறானுங்க... 1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா நண்பர் 2: ????? :O :O ----------------------------- 2) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள். பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும் கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்? பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது கடவுள் : ????? :O :O ------------------------------- 3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி அப்பா : ????? :O :O ----------------------------- 4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம். கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க? மேனேஜர் : ????? :O :O ---------------------------------- 5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..? மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட் பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல, மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ... பிரின்சிபல் : ????? :O :O ----------------------------- 6) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல. காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா? காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ... காதலி : ???? :O :O :P :P Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 06 Dec 2014 04:58 AM PST ஒரு பூக்கடையின் வாசம்.. கோவில் தாண்டி போகிற அமைதி... சில்லறையை கொட்டினால் வருகிற சத்தம்.... வானவில்லை பார்த்தால் வருகிற சந்தோசம்..... குறிப்பிட்ட நேரம் கடந்தும் நமக்காக நிற்கிற ரயில் வண்டி..... மெதுவாக நம் கன்னத்தை தொடுகிற காற்று..... எப்போதாவது எட்டி பார்க்கிற கண்ணீர்.... அவ்வபோது வந்து போகிற கரண்ட்.... எல்லாமே அவள் தான்..... என்னோடு இப்போது அவள் இல்லையென்றாலும் இந்த கவிதை கூட அவளுக்காகத்தான்..... - George Geo. Relaxplzz ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 06 Dec 2014 04:43 AM PST " தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்கள் குப்பையில் கிடக்கிறதே.. கவனிப்பீர்களா ? - Kalimuthu ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 1 |
Posted: 06 Dec 2014 02:30 AM PST |
Posted: 06 Dec 2014 02:12 AM PST |
Posted: 06 Dec 2014 02:03 AM PST கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! சில இளம் பெண்களிடம் கேட்டோம். . ! குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . ! வருங்கால கணவர்கள் எப்படி இருக்க வேண்டும்...! ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி: 1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . ! 2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . ! 3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . ! (நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . ! 4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . ! 5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும். . ! 6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . ! 7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா'வையும் ஜாலியா ரசிக்கணும். . ! 8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . ! 9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு'னு சொல்லணும்.! 10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . ! 11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . ! 12.முக்கியமான பாயின்ட். . !மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . ! சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி: 1.''மாப்பிள்ளை ஃபேர் மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. . ! ஆனா பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். . ! அன்பு காட்டுறதுல பணக்காரங்களா இருந்தா போதும். . ! 2.அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. .!அவர் ஒரு 'யமஹா ஆர் 120' வண்டி வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். .! இதுவரைக்கும் யார் கூடவும் நான் பைக்ல போனதில்ல. . ! பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும். . ! 3.குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்.. ! குவார்டர்லி, ஹாஃப் இயர்லி, சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம் பண்ணணும். . ! 4.ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது, டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா இருக்கணும். . ! 5.அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். . ! ஆனா, புடவை கட்டச் சொல்லி என்னை கம்பல் பண்ணக்கூடாது. . ! 6.அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம். . ! ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. . ! 7.மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல. . ! லீலாவதி, எம்.காம் சென்னைப் பல்கலைக்கழகம்: 1.''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல. . ! ஆனா மொத்தமா பெரிய கூட்டுக்குடும்பம் வேண்டவே வேண்டாம். . ! 2.மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். .! 3.மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். . ! 4.மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு சந்தோஷப்படுத்துவேன். . ! 5.கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். . ! 6.மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. . ! 7.கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு.. ! அதை எல்லாம் ரசிக்கணும். . ! 8.வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். . ! 9.கொஞ்சம் அதிகமா பேசுவேன். . !அதனால அவர் அமைதியானவரா இருக்கணும். . ! 10.சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி'கேட்கணும். . ! கொஞ்சமாவது மனசட்சின்கிறது இருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு!!! Relaxplzz ![]() |
Posted: 06 Dec 2014 01:30 AM PST |
Posted: 06 Dec 2014 01:15 AM PST மக்களுக்காகவே வாழ்கிறேன்?! - அரசியல்வாதி : ------------------------------------------------------------ மக்களின் கேள்வி இதோ…..! 1) உங்களுக்கு எப்பவாவது கொசு கடித்திருக்கிறதா…? 2) டவுன் பஸ்ஸில் எப்பவாவது போயிருக்கீங்களா….? 3) அரசாங்க மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட் எடுத்ததுண்டா…? 4) கடன் வாங்கி விவசாயம் செய்ததுண்டா…? 5) காலையில பால் வாங்கி காபி போட்டதுண்டா…? 6) ரேஷன் அரிசி வாங்கி சோறு பொங்கியதுண்டா…? 7) விலையில்லா பிளாஸ்டிக் ஃபேனில்காற்று வாங்கியதுண்டா…? 8) அரசாங்க அலுவலகங்களில் சான்றிதழ் வாங்க அழைந்ததுண்டா…? 9) குடியின் தீமை பற்றி எப்பவாவது நினைத்ததுண்டா…? 10) கடும் வெயிலில் காட்டிற்கு சென்றதுண்டா…? மக்களின் கஷ்டம் தெரியாமல் எப்படி மக்களுக்காக வாழமுடியும்…?? Relaxplzz |
Posted: 06 Dec 2014 01:00 AM PST உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் ! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று. உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை..!! Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment