Wednesday, 31 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 31 Dec 2014 09:21 AM PST

அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்த...

Posted: 31 Dec 2014 09:10 AM PST

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன்
உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின்
கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள்
உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும்
நிலமை வரக் கூடாது..?

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள்
பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம்
அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள்
நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக)
பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக
அழகாக
பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின்
மரணத்திற்கு முன்பே.!

அவருக்கு மரியாதை செய்வோம்.!
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில்
குறை வைத்து விட வேண்டாம்.

Relaxplzz

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவு... (y) (y) உதவுங்கள் சகோதர...

Posted: 31 Dec 2014 09:00 AM PST

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவு... (y) (y)

உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!!
அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!!

►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது..

►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.
• முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்...
• அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும்.
• நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது.
• குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும்.
• பயிர்களும் மரங்களும் கருகி போகும்..

►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாப்பது வருட குத்தகைக்கு கேட்கும்.

►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள்.

►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.

►நாப்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.

►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்

►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள்.

►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்..

►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல..

►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்..

(பிகு) போபால் நிகழ்வை சிந்தித்து பாருங்கள் தோழர்களே..
இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..

Relaxplzz


:) Relaxplzz

Posted: 31 Dec 2014 08:55 AM PST

உண்மைதானுங்கோ ;-) ;-) பத்து வருடமாக கோமா வில் இருந்து இன்று ஒருவன் எழுந்து டிவ...

Posted: 31 Dec 2014 08:50 AM PST

உண்மைதானுங்கோ ;-) ;-)

பத்து வருடமாக கோமா வில் இருந்து இன்று ஒருவன் எழுந்து டிவி பார்த்தால், மூன்று விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வான் ..

>> நாட்டுல அம்புட்டு பேருக்கும் முடி வளர ஒரே காரணம் Ervamatin

>> எல்லாரும் சேர்ந்து , திண்டிவனத்தை அப்படியே அலேக்காக தூக்கி சென்னை க்கு மிக அருகே வைத்துவிட்டனர்

>> கடந்த சில ஆண்டுகளில் , ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் ஒப்பற்ற கண்டுபிடிப்பு - TableMate

- ரா. ராஜகோபாலன்

Relaxplzz

விறகடுப்பில் விறகோடு சேர்ந்து அவள் நுரையீரலும் வெந்து கொண்டிருப்பதைப் பொருட்படுத...

Posted: 31 Dec 2014 08:42 AM PST

விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
ஊதுகிறாள் அம்மா.. ♥

- Jayam Sahara


அழகு

Posted: 31 Dec 2014 08:35 AM PST

அழகு


:) Relaxplzz

Posted: 31 Dec 2014 08:30 AM PST

2014ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் பேரால் கவரப்பட்ட புகைப்படம்...

Posted: 31 Dec 2014 08:20 AM PST

2014ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் பேரால் கவரப்பட்ட புகைப்படம்...


குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது. குதிரை- நான் பாய்ந்து ஓடின...

Posted: 31 Dec 2014 08:09 AM PST

குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது.

குதிரை- நான் பாய்ந்து ஓடினால் பூமியே அதிரும், தெரியுமில்லை.

கழுதை- நான் எட்டி உதைச்சால் எட்டு பல்லாவது கொட்டும். தெரியுமில்லை.

குதிரை- ரொம்ப அழகாக இருக்கும் பெண்களை அரபு குதிரைனு சொல்வாங்க தெரியுமில்லை

கழுதை- நிறைய மனிதர்கள் உருப்படாத கழுதைனு பேர் வாங்கின்டு இருக்காங்க, தெரியுமில்லை

குதிரை- சரி, இந்த மனிதர்கள் மாதிரி உருப்படாத பெருமை பேச்சு வேண்டாம். வா, உருப்படற வேலையை பார்ப்போம்.

மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் தான் இன்று பல மனிதர்கள், இருக்கிறார்கள். வெற்றி பேச்சு பேசாமல் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார்கள்.

:) :)

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ.. (y) (y) உயிரை காப்பவன் கடவுள் என்றால் இ...

Posted: 31 Dec 2014 08:00 AM PST

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ.. (y) (y)

உயிரை காப்பவன் கடவுள் என்றால் இவன் யார்?
Real Hero of Marina - மெரினாவில் ஒரு ரியல் ஹீரோ

''கடல்குதிர'' -கூப்பிடும்போதே வெங்கடேஷ் முகத்தில் டன் கணக்கில் புன்னகை. சென்னை மெரினா கடற்கரையின் செல்லக் குழந்தை இவர். காவல்துறை அதிகாரிகளுக்கே வெங்கடேஷ் மீது அலாதி அன்பு. இருக்காதா பின்னே..? கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்! ....

கடல்ல மாட்டினவங்கள தூக்கிட்டு வந்தா காசு தருவாங்கண்ணா. ஆனா, நான் வாங்கவே மாட்டேன். ஒரு தடவை வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும். நம்பளால முடிஞ்சத செய்வோம். நம்மள கடவுள் பாத்துக்குவான்'' - கறுப்பு வெங்கடேஷின் வெள்ளை மனசு வசீகரிக்கிறது . நாம் வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பயன்உள்ளதாக வாழ வேண்டும் (y) (y)

Relaxplzz


ஒவ்வொரு தந்தையும் தனது பெண்பிள்ளைகளிடம் நேரடியாக காட்டும் பாசம் போல் ஆண் பிள்ளைக...

Posted: 31 Dec 2014 07:50 AM PST

ஒவ்வொரு தந்தையும்
தனது பெண்பிள்ளைகளிடம் நேரடியாக
காட்டும் பாசம் போல் ஆண்
பிள்ளைகளிடம் காட்டுவதில்லை...

ஆனாலும் ஆண், பெண்
இரு பிள்ளைகளிடமும் சம அளவு பாசம்
வைத்திருப்பவர் அப்பா...!!

Relaxplzz


இந்தியாவுக்கு சுதந்திரம் எதனால கிடைச்சதுனு நீங்க நினைக்கிறீங்க? 1.காந்தி. 2....

Posted: 31 Dec 2014 07:45 AM PST

இந்தியாவுக்கு சுதந்திரம் எதனால கிடைச்சதுனு நீங்க நினைக்கிறீங்க?

1.காந்தி.

2.நேதாஜி.

3.இனி சுரண்ட எதுரவுமில்லைனு கொடுத்துட்டாங்க.

Relaxplzz

நம்மூர் பீச்-களில் நண்பர்களுடன் நியூ இயர் கொண்டாட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க......

Posted: 31 Dec 2014 07:40 AM PST

நம்மூர் பீச்-களில் நண்பர்களுடன் நியூ இயர் கொண்டாட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 31 Dec 2014 07:30 AM PST

அழகு

Posted: 31 Dec 2014 07:27 AM PST

அழகு


;-) Relaxplzz

Posted: 31 Dec 2014 07:20 AM PST

சிங்கம்-ல...!!! ---------------------------- ரெண்டு பேர் காட்டு வழியா நடந்து போய...

Posted: 31 Dec 2014 07:10 AM PST

சிங்கம்-ல...!!!
----------------------------
ரெண்டு பேர் காட்டு வழியா
நடந்து போயிட்டு இருக்காங்க...,

அப்போ 500 மீட்டர் தூரத்தில
ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க.,
சிங்கம் இவங்களை பார்க்க..,
ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..? Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் ஓடறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும் உக்கார்ந்து
ஷூ லேசை சரி பண்றான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி.., சிங்கத்தை விட
வேகமா ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா ஓடுனா
போதுமே..!!! "

:P :P

புரிந்தவங்க லைக் பண்ணுங்க.. (y)

Relaxplzz

இந்த 2014-ம் ஆண்டின் மனம்தொட்ட பதிவு இது (y) (y) எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல்...

Posted: 31 Dec 2014 07:00 AM PST

இந்த 2014-ம் ஆண்டின் மனம்தொட்ட பதிவு இது (y) (y)

எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...
ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே....
(குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....

ஹோட்டல் நடத்துபவர்:அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது....

நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல

ஹோட்டல் நடத்துபவர்: குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...

- Vijay Sivanandam

Relaxplzz


அழகான கோலம். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 31 Dec 2014 06:56 AM PST

அழகான கோலம்.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


முயற்சியை செலவுசெய் வெற்றி உனது சேமிப்பாகும் ! தோல்வியை மருந்தாக்கு வெற்றி உ...

Posted: 31 Dec 2014 06:50 AM PST

முயற்சியை செலவுசெய்
வெற்றி உனது சேமிப்பாகும் !

தோல்வியை மருந்தாக்கு
வெற்றி உனக்கு விருந்தாகும் !


Athisa Aisa Athea Awaya Atoa Asaya Ayoua Ahappya Anewa Ayeara Aina Aadvancea Ain...

Posted: 31 Dec 2014 06:45 AM PST

Athisa
Aisa
Athea
Awaya
Atoa
Asaya
Ayoua
Ahappya
Anewa
Ayeara
Aina
Aadvancea
Aina
Amya
Astylea........
குழப்பமா இருக்கா......!
எனக்கு தெரியும்...!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.ஒண்ணுமேயில்லை..மேல இருக்கற வார்த்தைகளில் முதல் எழுத்தையும் ..கடைசி எழுத்தையும் எடுத்துட்டு படிங்க....
புரிஞ்சுதா ...!

2014 முடியறதுக்குள்ள தெளிஞ்சிடுங்க :) :)

Relaxplzz

உபயோகமான தகவல் :)

Posted: 31 Dec 2014 06:40 AM PST

உபயோகமான தகவல் :)


:) Relaxplzz

Posted: 31 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 31 Dec 2014 06:21 AM PST

#இலந்தைப்பழத்தின் நன்மை இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்ப...

Posted: 31 Dec 2014 06:16 AM PST

#இலந்தைப்பழத்தின் நன்மை

இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும்.

எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.

உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.

கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.

Relaxplzz


"பழங்கள்"

சோக்காத்தான்ப்பா சொல்றாங்க.. :) 1.டவர் இல்லாத செல்லும் பவர் இல்லாத சொல்லும்" -...

Posted: 31 Dec 2014 06:10 AM PST

சோக்காத்தான்ப்பா சொல்றாங்க.. :)

1.டவர் இல்லாத செல்லும்
பவர் இல்லாத சொல்லும்" - பயன் தராது

2. வக்கீலுக்கு படிச்சுட்டு டாக்டர் ஆக முடியாது.
வாழ்க்கையில தோத்துட்டு டாப்பர் ஆக முடியாது.

3, சத்து போன உடலும்
சொத்து போன கிழடும் - சொந்தமா செயல்பட முடியாது.

4, பஞ்சர் ஆயிட்ட டயருக்குள்ளும்
ஜிஞ்சர் சாப்பிட்ட குடலுக்குள்ளும்- காத்து தங்காது.

5, உப்பை குறை உடலுக்கு நல்லது.
, தப்பை குறை உள்ளத்துக்கு நல்லது.

6. வழுக்கையான தேங்காயில குடுமி இருக்கும்
வழுக்கையான தலையில குடுமி இருக்குமா?

7. ஆட்டோல போனாலும் ALTOல போனாலும்
இறங்க வேண்டிய இடத்துல இறங்கித்தான் ஆகணும்.

8. GUARD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை விட்டு போகும்
GOD பச்சை கொடி கட்டினா TRAIN அவரை நோக்கி போகும்.

9. தண்டவாளம் தனித்தனியா செல்லும்
வண்டவாளம் கதைகதையாச் சொல்லும்.

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

ஓடி, ஓடி உதவணும் (y) (y) நமது மனதை நாம் வசப்படுத்தினால் காலம் நமது வசப்படும். அ...

Posted: 31 Dec 2014 06:00 AM PST

ஓடி, ஓடி உதவணும் (y) (y)

நமது மனதை நாம் வசப்படுத்தினால் காலம் நமது வசப்படும். அதற்க்கு உதாரணமாய் வாழ்ந்தவர் தான் டெர்ரி ஃபாக்ஸ். கனடா நாட்டில் 1958 இல் பிறந்தார். மிக பெரிய சர்வ தேச வாலிபால் ப்ளேயர் ஆகவேண்டும் என்பது அவர் லட்சியம். ஆரம்பத்தில் அவர் உருவம் சற்று குட்டையாக இருந்ததால் ஸ்கூல் வாலிபால் டீம்மில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மிக கடுமையான பயிற்சியும், முயற்சியும் செய்து 5.10 உயரம் வளர்ந்தார்.

சிலநாட்கள் கழித்து கால்வலியால் இவர் மிகவும் அவதிப்பட்டார். முதலில் கடுமையான பயிற்சியினால் ஏற்படும் வலி என்று அலட்சியமாக இருந்தார். ஆனால் எந்த கை வைத்தியமும் அவர் வலியை தீர்க்கவில்லை. அதுவும் வலது காலில் மட்டுமே வலிக்க வேறு வழியின்றி அவர் மருத்துவரிடம் பரிசோதித்தார். அவருக்கு காலில் Cancer கட்டி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முழங்கால் வரை. வெட்டி எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் சொல்ல கால் வெட்டப்பட்டது.

வெட்டப்பட்டது கால் தானே ஒழிய அவர் தன்னம்பிக்கையல்ல. செயற்க்கை காலை பொருத்தி கொண்டு முதலில் நடக்க பழகினார், பின்னர் ஓட பழகினார். ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர்.

மாலை வேலைகளில் 1, 2 கிலோ மீட்டர் நடக்க சொல்லி மருத்துவர்கள் சொன்னால். அதற்க்கு பதிலாக நாங்கள் ஸைகல்ளில் போலாமா என்று இரண்டு காலும் உள்ள பலர் கேட்கும் பொழுது. செயற்க்கை காலோடு ஒரு நாளைக்கு 26 மைல்.இரண்டு லட்சியங்களுக்காக ஃபாக்ஸ் அவ்வாறு ஓடினார். ஒன்று செயற்க்கை காலை பொருத்தி கொண்டு நாமே இப்படி ஓடுகிறோம் என்றால் இரண்டு கால்கள், இரண்டு கைகள் என அனைத்தும் இருந்தும். முக்கியமாக மனிதர்களுக்கு இருக்க வேண்டிய ஒரு கை. அதாவது தன்னம்பிக்கை. அது இல்லாமல் துவண்டு கிடப்பவர்கள். செயற்க்கை காலோடு ஓடும் என்னை பார்த்தால் அவர்களின் மனத்தில் தன்னம்பிக்கை வரும். இரண்டாவது. அவ்வாறு ஓடி. தன்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி திரட்டுவது.

குறைந்த பக்சம் ஒவ்வொரு கனடா நாட்டு பிரஜையும் ஒரு டாலர் நன்கொடை கொடுத்தனர். அதை தவிர பல தொண்டு நிறுவனங்கள் இவருக்கு உதவின. இவரது இந்த ஓட்டத்திற்கு மாரத்தான் ஆஃப் ஹோப் என்னும் பெயரை வெய்த்தார். இவ்வாறு ஒரு நாளைக்கு 26 கிலோ மைல் என தொடர்ந்து நாலு மாதங்கள் 3120 கிலோ மீட்டர் ஓடினார். அவ்வாறு ஓடி. இவர் 200 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டினார். தனக்காக அல்ல. தனது நாட்டு மக்களுக்காக. ஆண்டுகள் 23 ஆயிரங்கள் ஆனாலும் தனது பெயர் கனடா நாட்டு சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் படி ஒரு சாதனையை செய்து. 23வது வயதிலேயே இவர் இறந்து விட்டார்.

இவர் அந்த நாட்டு மக்கள் மனத்தில் மட்டும் அல்ல. அந்த நாட்டு போஸ்ட் ஸ்டாம்ப் முதல் ரூபாய் நாணயம் வரை அனைத்திலும் வாழ்கிறார். இவரை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஸெப்டெம்பர் 13 அன்றும் பலர் பத்து கிலோ மீட்டர் வரை ஓடி. மாற்று திறனாளிகளுக்காகவும். புற்று நோய், எய்ட்ஸ் முதலான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும் நிதி திரட்டுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Terry_Fox

Relaxplzz


"சாதனையாளர்கள்"

வணக்கம் நண்பர்களே...!! கடந்து போகும் 2014ம் ஆண்டின் கடைசிக் மாலை இது....!!! ஒரு...

Posted: 31 Dec 2014 05:53 AM PST

வணக்கம் நண்பர்களே...!!

கடந்து போகும் 2014ம் ஆண்டின் கடைசிக் மாலை இது....!!!
ஒரு பெரிய கும்பிடு கடந்து போகும் இந்த 2014ம் ஆண்டிற்கு.......

நல்லதை நினைவில் கொண்டு, கெட்டதை மறப்போம்...
கிடைக்கப் பெற்ற அத்தனைக்கும் நன்றி சொல்வோம்.....!!
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்,அதையும் நினைவில் கொண்டு நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகையும் காப்போம் முடிந்தவரை ....!!

புத்தாண்டை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்போம்...!!

- Pon Mani


Posted: 31 Dec 2014 05:43 AM PST


0 comments:

Post a Comment