ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அழகு தமிழ்நாடு!
- #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை ....
- "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" பழைய...
- இந்தியாவில் பல்கிப் பெருகும் இந்தி மாநில மக்கள் தொகை. சுருங்கும் பிற தேசிய இனங்க...
- Ancient Tamil Civilization: Pottery associated with Roman times of the early...
- வங்கிகளில் தமிழ் இல்லை என்று நாம் கவலைப்பட்டிருக்கும் நிலையில் இப்போது உள்ள இந்த...
- கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள், டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் ச...
- செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடு...
- அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைப்பவன் ஜெயித்து கொண்டே இருக்கான்... அடுத்தவன் எ...
அழகு தமிழ்நாடு! Posted: 30 Dec 2014 08:43 PM PST |
Posted: 30 Dec 2014 05:51 PM PST #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை . #உரை: மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். #Translation: If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt. #Explanation: The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations. #TRADUIT DU #TAMOUL: Si (le Roi) a des ennemis cachés sous un dehors affable, ils lui feront faire toutes les fautes de nature à lui aliéner le dévouement de ses parents. Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 30 Dec 2014 06:20 AM PST |
Posted: 30 Dec 2014 04:53 AM PST இந்தியாவில் பல்கிப் பெருகும் இந்தி மாநில மக்கள் தொகை. சுருங்கும் பிற தேசிய இனங்களின் மக்கள் தொகை : அதிர்ச்சித் தகவல். அண்மையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை கூடியுள்ளது , எந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது என்ற தகவல் வெளியானது. குறிப்பாக எந்த மாநிலங்களில் குழந்தை பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தி பேசும் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது . மேலும் இந்த மாநிலங்களில் பெண்கள் கல்வி பெறுவதும் குறைவாகவே உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்தி மாநிலங்கள் வறுமை, கல்வியின்மை , சுகாதாரமற்ற நிலையில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. பீகார் , மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற இந்தி மாநிலங்கள் வேகமாக மக்கள் தொகையில் வளர்கின்றன . இது மாற்ற முடியாத நிலைக்கு வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் பின்தங்கிய உலக நாடுகளின் குழந்தை பிறப்பு விகிதத்தை ஒத்துள்ளது அதே நேரம் இந்தி அல்லாத மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இங்கு குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த மாநிலங்களில் பெண்கள் கல்வி பெறுவதும் அதிகரித்து உள்ளது. இந்த மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம், வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளை ஒத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், மேற்கு வங்காளம் போன்ற இந்தி அல்லாத மாநிலங்கள் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தை பெற்றுள்ளதை நாம் காண முடிகிறது. இந்தி படித்தால் வாழ்கையில் முன்னேறிவிடலாம் என்று பொய் பிரச்சாரம் செய்யும் இந்தி ஆதரவாளர்கள் இந்த புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? இந்தி பேசும் மாநிலங்கள் தான் மிகவும் பின்தங்கி உள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இருப்பினும் பிரச்சனை இதுவல்ல. இந்தி மாநில மக்கள் வறுமையின் காரணமாக இந்தி அல்லாத மாநிலங்களை நோக்கி நகர்வது தான் பிரச்சனை. காரணம் இந்தி மக்களுக்கு ஆதரவாக இந்தி அரசு உள்ளது . இந்தி மொழி ஆட்சி மொழியாகவும் உள்ளது . அதனால் இந்தி மக்கள் எந்த மாநிலத்திலும் அவர்களின் மொழி உரிமையோடு வாழ இயலும் . அதே மொழியுரிமையோடு இந்தி அல்லாத மக்களால் வாழ முடியாது . மேலும் இந்தி மக்களின் படையெடுப்பால், சில ஆண்டுகளில் இந்தி அல்லாத மாநிலத்திலும் இந்தி மக்களின் தொகை கூடும் அபாயம் உள்ளது . இதனால் சொந்த மாநிலத்திலும் இந்தி அல்லாத மக்கள் சிறுபான்மை இனத்தவராக மாறும் நிலை ஏற்படும். இந்த நிலையை உருவாக்கவே இந்தி அரசும் உதவி செய்தும் வருகிறது. இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தொகையை அதிகரிக்கவே இந்தி அரசு எல்லா வழிகளிலும் இந்தியை திணிக்கிறது. இந்தியை தவிர வேறு எந்த மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க மாட்டோம் என்று இந்தி அரசு சொல்லி வருவதற்கும் இது தான் காரணம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் இந்தி பேசும் மக்களே எல்லா மாநிலங்களிலும் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்பது உறுதியாகி வருகிறது . இதனால் தேசிய இனங்களின் அடையாளமும். அவர்கள் மொழியும் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதற்கான தீர்வு தான் என்ன ? முதலில் எல்லா மாநிலங்களிலும் புதிய குடிவரவு கொள்கையை உருவாக்க வேண்டும் . மாநிலங்களின் இயற்கை வளங்கள் அந்தந்த மாநில மக்களே அனுபவிக்கும் நிலையை உருவாக்கிட வேண்டும் . வெளிமாநில மக்கள் இங்கு வந்து வேலை செய்யலாம் , சம்பாதிக்கலாம் ஆனால் நிரந்தரமாக தங்க முடியாது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். மேலும் எல்லா மாநில மொழிகளும் இந்திக்கு நிகரான ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும் . இந்தித் திணிப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் . இதை எல்லாம் நாம் குறைந்த காலத்தில் செய்தால் தான் மாநிலங்கள் தங்கள் மொழி, பண்பாட்டு உரிமைகளை, இயற்கை வளங்களை பாதுகாத்திட முடியும். இல்லையெனில் இந்தியாவில் இந்தி இனம் மட்டுமே ஆட்சி அதிகாரம் செய்து வாழும் நிலை ஏற்படும். ![]() |
Ancient Tamil Civilization: Pottery associated with Roman times of the early... Posted: 30 Dec 2014 04:13 AM PST Ancient Tamil Civilization: Pottery associated with Roman times of the early historic period were found in the premises of the King's House in Jaffna fort by archaeologists of the University of Jaffna led by Prof P. Pushparatnam. The team took over digging after getting information on pottery finds when a pit was dug for toilet purposes in the King's House premises. The disturbed rubble layer at the top had a variety of pottery of various periods, including Rouletted Ware and Amphora Ware associated with Roman times. Digging further, the Jaffna University team reached a floor level and artefacts are being excavated even below that level. From the indications at the surface, the excavators expect to reach undisturbed levels of early historic habitation in the excavation. Antiquity of Jaffna city goes back to Roman times http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33611 More evidences surface on antiquity of Jaffna fort site http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36789 Jaffna/ Yaazhppaa'nam/ Yaazhppaa'nap Paddinam/ Yaazhppaa'naayan Paddinam http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26501 யாழ்ப்பாண வரலாறு http://www.ourjaffna.com/மேலதிகமானவை/யாழ்ப்பாண-வரலாறு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அயல்நாட்டு நாணயங்கள் http://kovetha.blogspot.in/2012/03/blog-post_10.html ![]() |
Posted: 30 Dec 2014 12:53 AM PST வங்கிகளில் தமிழ் இல்லை என்று நாம் கவலைப்பட்டிருக்கும் நிலையில் இப்போது உள்ள இந்தித் திணிப்பு போதாதாம். அதை மேலும் அதிகரிக்க வேண்டுமாம். இந்தி இன வெறி அரசுக்கு நாம் எப்படியான எதிர்வினை ஆற்றப் போகிறோம்? தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கு அல்லது இந்தி நாட்டை தனி நாடாக்கு !! #make_tamil_official_language_of_india ![]() |
Posted: 30 Dec 2014 12:44 AM PST கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள், டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.! @காளிமுத்து |
Posted: 30 Dec 2014 12:41 AM PST செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடுற பழக்கத்தை நாம கைவிடவேயில்ல... @காளிமுத்து |
Posted: 29 Dec 2014 11:30 PM PST அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைப்பவன் ஜெயித்து கொண்டே இருக்கான்... அடுத்தவன் என்ன பண்ணுகிறான், என்று பார்த்துக் கொண்டே இருப்பவன் தான்... அந்தோ பரிதாபம்... @இளையராஜா |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment