Relax Please: FB page daily Posts |
- கணவன் தேவை கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக்...
- வை பை கண்காணிப்பு மென்பொருள் (உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்து...
- ஒரு வடநாட்டுக்காரர் பத்திரிக்கையில் அவருடைய தாத்தா இறந்த தகவலை போடுவதற்காக பத்தி...
- சாதிக்க உயரம் ஒரு தடையல்ல. வாழ்த்துக்கள் தோழி.
- உங்களுக்கு மிக பிடித்த கே.பியின் படங்கள் எது ? ஒரு படம் மட்டும் கமெண்ட் பண்ணுங்க..
- தோல்வியையும் வெற்றியையும் பொருட்படுத்தாதவர்.. உயர்வு தாழ்வு பார்க்காமல் அனைவரையு...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்...
- நான் வயிற்றில் இருக்கையில் ஆண்மகன் என்று அம்மா கனவு கண்டாளாம் பிரசவத்தின் பிற்ப...
- (y) Relaxplzz
- *மகளை கொஞ்சும் போது, தானும் ஒரு குழந்தையாக மாறுவது #தந்தையின் பாசம். *மகளுக்கு...
- வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா? வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடி...
- அப்பாக்களை பிள்ளைகளுக்கு பிடித்த நாயகனாகவே நடைபோட வைக்க தெரிந்த அம்மாக்கள் போற்ற...
- (y) Relaxplzz
- மனதை வருடியவை !! Ø உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கைய...
- விவசாயிக்கு பணம்தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் அவன் அரிசியையும் கோதுமைய...
- வயல்வெளிகள் புடைசூழ என் வீட்டை அமைத்திருந்தேன் அன்று ! அடுக்கு மாடி குடியிருப்ப...
- :) Relaxplzz
- ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன? !!!!!!!!! டாப் 5 1. ஒர...
- எம்.ஜி.ஆர். காலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம். செல்லும் வழியில் ஒரு பாட்டியம்...
- :) Relaxplzz
- வரலாற்றுப் பிழை! அன்று மட்டும் சோழர்கள் படையெடுப்பு தெற்கு நோக்கி இல்லாமல் வடக்...
- அவித்த வேர்க்கடலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- உலகம் இப்படித்தான்
- முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வ...
- உயிர் உடைத்த புகைப்படம்... புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத...
- வெற்றியை நோக்கிப் பற! பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவு...
- இந்த காமெடியை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted: 23 Dec 2014 09:10 AM PST கணவன் தேவை கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம். ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள். அங்கு,''இங்குள்ளவர் கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு, ''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு சென்றாள். அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது. இங்கும் உள்ளே செல்லாது அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள். அங்கு,'' வணக்கம்,இங்கு யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது. :P :P Relaxplzz |
Posted: 23 Dec 2014 09:00 AM PST வை பை கண்காணிப்பு மென்பொருள் (உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள்...?) இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில் உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள். இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும் டவுண்லோடு செய்ய.. http://www.nirsoft.net/utils/wnetwatcher.zip Relaxplzz ![]() |
Posted: 23 Dec 2014 08:50 AM PST ஒரு வடநாட்டுக்காரர் பத்திரிக்கையில் அவருடைய தாத்தா இறந்த தகவலை போடுவதற்காக பத்திரிகை அலுவலகத்திற்கு போன் செய்தார் .... அலுவலர் : Rs.50/ வார்த்தைக்கு .. வடநாட்டுக்காரர் : தாத்தா மரணமடைந்தார் .. அலுவலர் : மன்னிக்கவும் சார் , குறைந்தது 5 வார்த்தைகள் இருக்க வேண்டும் ..... . . . . . . . . . . . . . . வடநாட்டுக்காரர் :"தாத்தா மரணமடைந்தார்..WHEELCHAIR விலைக்கு தரப்படும்" :P :P Relaxplzz |
Posted: 23 Dec 2014 08:44 AM PST |
Posted: 23 Dec 2014 08:41 AM PST உங்களுக்கு மிக பிடித்த கே.பியின் படங்கள் எது ? ஒரு படம் மட்டும் கமெண்ட் பண்ணுங்க.. |
Posted: 23 Dec 2014 08:41 AM PST |
Posted: 23 Dec 2014 08:32 AM PST |
Posted: 23 Dec 2014 08:25 AM PST |
Posted: 23 Dec 2014 08:10 AM PST ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.. "நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.".எனகிறது.. முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான். அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.. மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.. பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். _ அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது. (y) (y) Relaxplzz |
Posted: 23 Dec 2014 08:00 AM PST நான் வயிற்றில் இருக்கையில் ஆண்மகன் என்று அம்மா கனவு கண்டாளாம் பிரசவத்தின் பிற்பாடு அப்பாவின் வருமானத்தில் இருந்து பத்து விகிதம் வரதட்சணைக்காய் வங்கிக்குப் பறந்தது என் பூப்பெய்தல் காலத்தில் சேமிப்பில் இருந்த சில பகுதி தீட்டுக்குச் செலவானது பட்டப்படிப்பே என் கனவான போதிலும் பள்ளிக்கூடம் கூட பாதியிலே தலைமறைவாக்கப் பட்டது. கொஞ்ச நாளாய் என் படுக்கை விரிப்பில் சிதறிக்கிடந்தன. வெளிநாட்டு மாப்பிளைகளின் "கோட்" அணிந்த புகைப்படங்கள். அவர்களை தெரிவு செய்வதற்குள் பலர் தேர்வு எழுதிப்போனார்கள். "மணமகன்" தேவைக்கு பத்திரிகைகளில் விளம்பரம் எழுதியும் ஊனமுற்றவனேனும் உதவ முன்வரவில்லை… காதலிக்க பின்னால் வந்தவனும் செவ்வாய் தோசத்தால் திரும்பிப் போனான். கல்யாணமே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் - காரணம் சிலவேளை…. எனக்கும் பெண்குழந்தை பிறந்து விட்டால்…. - நெடுந்தீவு முகிலன் @relaxplz ![]() |
Posted: 23 Dec 2014 07:30 AM PST |
Posted: 23 Dec 2014 07:10 AM PST *மகளை கொஞ்சும் போது, தானும் ஒரு குழந்தையாக மாறுவது #தந்தையின் பாசம். *மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது #அன்னையின் பாசம். *பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்து வது #பாட்டியின் பாசம். *பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது #தாத்தாவின் பாசம். *தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது #அண்ணனின் பாசம். *அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது #தங்கையின் பாசம். *தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது #அக்காவின் பாசம். #பாசம் நிறைந்த குடும்பம்... 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.... Relaxplzz |
Posted: 23 Dec 2014 07:00 AM PST வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா? வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம். மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. Relaxplzz ![]() |
Posted: 23 Dec 2014 06:50 AM PST |
Posted: 23 Dec 2014 06:30 AM PST |
Posted: 23 Dec 2014 06:10 AM PST மனதை வருடியவை !! Ø உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை. Ø உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். Ø உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். Ø நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே. Ø பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை. ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது. Ø தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது. Ø சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும். Ø நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும். Ø அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்த வேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். Ø வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். Ø நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும். Ø திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள் தான் தடுமாறுகிறார்கள். Ø நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை யறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார். Ø எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள். Ø நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம். Ø வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம். Ø கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு. Ø இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணு மதங்களையே பார்ப்பதாக எண்ணுவர். Ø உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலை நாட்ட முடியாது. Ø அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை. Ø காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம். Ø பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. Ø உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. Ø சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். Ø வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும். Ø கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரி களைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா! Ø ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம். Ø மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான். Ø தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு. Ø தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். Ø நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு. Ø எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை. Ø தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி. Ø உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள். Ø அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்! Ø குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை. Ø தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது! Ø நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள். Ø எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். Ø காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். Ø தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர். Ø எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். Ø உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். Ø நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே. * எம் அப்துல் காதர் Relaxplzz |
Posted: 23 Dec 2014 06:00 AM PST விவசாயிக்கு பணம்தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் அவன் அரிசியையும் கோதுமையையும் விளைவிப்தற்க்கு பதில் கஞ்சாவை தான் விளைவிப்பான். உண்மையில் அவர்கள் இந்த மண்ணை மக்களை தன் விவசாய தொழிலை நேசிக்கிறார்கள். ஆனால் நாமோ அவர்களை என்றும் மதித்தது கூட இல்லை அவர்களுக்கு உரிய விளைபொருள் பணத்தை கூட இன்றுவரை சரியாக கொடுத்ததுஇல்லை . ஆனால் தனை மதிக்காத இந்த மக்களை பசியாற உணவு கொடுத்து காக்கும் இறைவனாக உள்ளவர்கள் விவசாயிகள்...'' பல ஆண்டுகளுக்கு முன்பு வினோபாபாவே சொன்ன வரிகள் இன்றும் அப்படியே பொருந்தும்... Relaxplzz ![]() |
Posted: 23 Dec 2014 05:50 AM PST |
Posted: 23 Dec 2014 05:31 AM PST |
Posted: 23 Dec 2014 05:28 AM PST ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன? !!!!!!!!! டாப் 5 1. ஒரு வார பயணமென்றாலும் கூட ஒரே ஜீன்ஸ் போதும். 2. ஒரே மாதிரியான ஹேர் கட் பல வருடங்கள் மெயின்ட்டன் செய்வது. 3. 10 சொந்தக்காரங்களுக்கு 10 நிமிஷத்தில் ஷாப்பிங் பண்னும் திறன் (மாமியார் வீட்டு சைடுனா 5 நிமிஷம் கூட போதும்). 4. தன் நண்பர்களின் வட்டாரத்தில் தன்னை அழைக்காமல் போனால் கூட நண்பர்களாக தொடருவார்கள், அதே சமயம் அழைத்த பங்கஷனுக்கு போனால் அதே கலர் அல்லது அதே மாதிரி சட்டை போட்டிருந்தால் "ஜெர்க்" ஆகாமல் அந்த மனுஷனையும் நண்பர்கள் ஆக்கிகொள்வார்கள். 5. எந்த வித ஒரு தொலைபேசி காலும் அரை நிமிடத்தில் டக்குனு முடிச்சிடுவாங்க ( இதில் சிலர் சில அழைப்புகளிட்கு மட்டும் விதி விலக்கு) Relaxplzz |
Posted: 23 Dec 2014 05:11 AM PST எம்.ஜி.ஆர். காலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம். செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.... தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். அந்த அம்மாளிடம் சென்று, "புட்டு என்ன விலை?' என்று விசாரித்தார் எம்.ஜி.ஆர். பாட்டி விலையைச் சொன்னதும், ""சரி, நாளைக்கு வரும்போது வாங்குகிறேன்'' என்று கூறி நகர்ந்தார் எம்.ஜி.ஆர். ""ஏன் தம்பி, இன்னிக்கே வாங்கேன்'' என்றாள் பாட்டியம்மா. ""எனக்கு மட்டுமில்ல...அம்மா, அண்ணன் எல்லாருக்கும் சேர்த்து வாங்கணும். அந்த அளவு காசு கொண்டு வரலே'' என்றார் எம்.ஜி.ஆர். ""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்தாள் பாட்டி. ""உனக்கு ரொம்ப நம்பிக்கை பாட்டி. நாளைக்கு நான் வரலேன்னு வச்சுக்க...ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்றார் எம்.ஜி.ஆர். ""காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்றாள் பாட்டியம்மா... இது மக்கள் திலகம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். அந்தம்மா சில நாட்கள் கழித்து இடம் மாறிச் சென்றுவிட்டார்.... பல வருடங்கள் கழித்து அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்து வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்தார்......! உன்னத மனிதன் Relaxplzz ![]() "வரலாற்றுப் பதிவுகள்" |
Posted: 23 Dec 2014 05:02 AM PST |
Posted: 23 Dec 2014 04:50 AM PST |
Posted: 23 Dec 2014 04:40 AM PST |
Posted: 23 Dec 2014 04:30 AM PST |
Posted: 23 Dec 2014 04:20 AM PST |
Posted: 23 Dec 2014 04:10 AM PST முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான். அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது.. ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான். அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன். அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது. ""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார். அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை. மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன. ""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன. அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன். நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர். Relaxplzz |
Posted: 23 Dec 2014 04:00 AM PST உயிர் உடைத்த புகைப்படம்... புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும். பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார். அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது. தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு. கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு 'க்ளிக்' செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விற்று விட்டார். இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர். அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை. 1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது. விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர். 'குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம். புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry. இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார். ( நன்றி சமரசம் இதழ்) Relaxplzz ![]() |
Posted: 23 Dec 2014 03:50 AM PST வெற்றியை நோக்கிப் பற! பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல். ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு... (y) (y) Relaxplzz ![]() |
Posted: 23 Dec 2014 03:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment