Relax Please: FB page daily Posts |
- சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து உங்கள் சட்டைக் காலரில் உள்ள...
- பெங்களூருவில் ஆன் லைனில் அபராதம் செலுத்திய இஞ்சினியர்! பெங்களூரு: பெங்களூருவில்...
- கவனமாக பேசுங்கள்... * மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது ந...
- அவரவர் வாழ்க்கையில் அவரவர் வேகமாக கடக்கிறார்கள், கடக்கையில் மற்றவர்களின் வறுமை...
- இயற்க்கை எங்கே தென்னை ஓலை விசிறி எங்கே ? பனையோலை விசிறி எங்கே ? பல்லாங்குழி எங்க...
- ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வ...
- தெரிந்து கொள்வோம்: 1. போன்'னை இடது காதில் வைத்து பேசுங்கள்! 2. மருந்து மற்றும்...
- கிராமத்து அனுபவங்கள்:- 1) Dining டேபிள் இருந்தாலும் தரைல உக்காந்து குடும்பமா சா...
- தந்தையின் பாசம் வளரும் வரை... தாயின் பாசம் திருமணம் வரை... நண்பர்கள், சகோதரர்க...
- புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு... நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளி...
- தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்... அவசர கால முதலுதவி முறைகள்...! வேலை செய்யு...
- :) Relaxplzz
- தமிழகத்தின் முதன்மைகள்....... முதல் குடியரசுத் தலைவர் : டாக்டர். எஸ் ராதாகிருஷ்...
- :) Relaxplzz
- "மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்...
- :) @relapxlz
- :) Relaxplzz
- ஒரு சிஷ்யன் தன்னோட குரு நாதர் கிட்ட பாடங்களெல்லாம்..கத்துக்கொண்டு வெளியேர்ரான்.....
- தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்...! தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்த...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- பாசம்: ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு...
- போனஜென்மத்தில் புண்ணியஞ்செய்தபுடவைக்கே கடவுளைத்தொட்டுப்பார்க்கின்ற தூளியாகும்...
- :) Relaxplzz
- உண்மையான அன்பிற்கு அடிபணியாதார் இவ்வுலகில் எவரும் இல்லை..
- :) Relaxplzz
- ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர்...
- 7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை...! ஒரே வாரத்தில் உடல் எதைய...
- :) Relaxplzz
- :P :P Relaxplzz
Posted: 22 Dec 2014 09:10 AM PST சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.. இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். 4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது. 5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது. 6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது. 7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. 8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. 9. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!' இந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான். நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான். கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது. அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது. Relaxplzz |
Posted: 22 Dec 2014 08:50 AM PST பெங்களூருவில் ஆன் லைனில் அபராதம் செலுத்திய இஞ்சினியர்! பெங்களூரு: பெங்களூருவில் ட்ரினிட்டி சர்கிள் அருகே கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஒருவர் அபராதத்தை ஆன் லைனில் செலுத்தினார். போக்குவரத்து விதியை மீறிய ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். போலீசார் அபராதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால், அவர் தன்னிடம் இருந்த மடிகணினியை சாலையின் ஓரத்தில் உள்ள நடைப்பாதையில் அமர்ந்து இணையதள பணப்பரிமாற்றம் மூலம் அபராதத்தை செலுத்தினார். இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. Relaxplzz ![]() |
Posted: 22 Dec 2014 08:31 AM PST கவனமாக பேசுங்கள்... * மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது நம்மளை பலவீனமானவராக காட்டும். * மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேச வேண்டும். அது நம்மளை நேர்மையானவராகக் காட்டும். * மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேச வேண்டாம். * நாம் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேச வேண்டும். * நேராக அமர்ந்து அல்லது நின்று பேச வேண்டும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் நம்மை சோம்பேறி என நினைக்கக்கூடும். * பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். அது நம்மை நம்பிக்கையற்றவராகக் காட்டும். * நகத்தையோ, பென்சில் அல்லது பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்க வேண்டும். அது ஒருவரை பயந்தவராக காட்டும். * நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நாம் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும். * குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேச வேண்டும். * ஒருவரது பேச்சை விளக்குவதற்கு, கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் அவர் சொல்வதை மேலும் விவரிக்கும் Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 22 Dec 2014 08:26 AM PST |
Posted: 22 Dec 2014 08:08 AM PST இயற்க்கை எங்கே தென்னை ஓலை விசிறி எங்கே ? பனையோலை விசிறி எங்கே ? பல்லாங்குழி எங்கே ? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ? தெல்லு விளையாட்டு எங்கே ? கோபி பிஸ் விளையாட்டு எங்கே ? சாக்கு பந்தயம் எங்கே ? கில்லி எங்கே ? கும்மி எங்கே ? கோலாட்டம் எங்கே ? திருடன் போலீஸ் எங்கே ? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ? மரப்பாச்சி கல்யாணம் எங்கே ? ஊனாங்கொடி ரெயில் எங்கே ? கம்பர்கட் மிட்டாய் எங்கே ? குச்சி மிட்டாய் எங்கே ? குருவி ரொட்டி எங்கே ? இஞ்சி மரப்பா எங்கே ? கோலி குண்டு எங்கே ? கோலி சோடா எங்கே ? பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ? கரிப்பழம் எங்கே ? கள்ளிப்பழம் எங்கே ? இளுவான் எங்கே ? எலந்தை பழம் எங்கே ? சீம்பால் எங்கே ? ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே? பனம் பழம் எங்கே ? சூரிப்பழம் எங்கே ? இளுவான் எங்கே ? பழைய சோறு எங்கே ? நுங்கு வண்டி எங்கே ? பூவரசன் பீப்பி எங்கே ? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே ? நடைபழக்கிய நடை வண்டி எங்கே ? அரைஞான் கயிறு எங்கே? அன்பு எங்கே ? பண்பு எங்கே ? பாசம் எங்கே ? நேசம் எங்கே ? மரியாதை எங்கே ? மருதாணி எங்கே ? சாஸ்திரம் எங்கே ? சம்பரதாயம் எங்கே ? விரதங்கள் எங்கே ? மாட்டு வண்டி எங்கே ? கூட்டு வண்டி எங்கே ? ஆழ உழுத எருதுகள் எங்கே ? செக்கிழுத்த காளைகள் எங்கே ? எருமைமாடு எங்கே ? பொதி சுமந்த கழுதைகள் எங்கே ? பொன் வண்டு எங்கே ? சிட்டுக்குருவி எங்கே ? குயில் பாட்டுபாடும் குயில் எங்க? குரங்கு பெடல் எங்கே ? அரிக்கேன் விளக்கு எங்கே? விவசாயம் எங்கே ? விளை நிலம் எங்கே ? ஏர்கலப்பை எங்கே ? மண் வெட்டி எங்கே ? மண்புழு எங்கே ? வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ? பனை ஓலை குடிசை எங்கே ? தூக்கனாகுருவி கூடு எங்கே ? குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே ? அந்த குளங்களும் எங்கே ? தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே ? ஆட்டுக்கல் எங்கே ? அம்மிக்கல் எங்கே ? மோர் சிலுப்பி எங்கே ? கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ? நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே ? வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே ? தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டும் எங்கே ? பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ? தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் எங்கே ? மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ? மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே? இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே ? தாவணி அணிந்த இளசுகள் எங்கே ? சுத்தமான நீரும் எங்கே ? மாசு இல்லாத காற்று எங்கே ? நஞ்சில்லாத காய்கறி எங்கே ? பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே ? எல்லாமையும் விட முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே ? இதற்க்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் இருக்கும் நிம்மதியை இழந்து பணம் எனும் காகித்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம். அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது Relaxplzz ![]() "நினைவுகள்" |
Posted: 22 Dec 2014 06:15 AM PST ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான். கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான். திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!!!!!!! Relaxplzz |
Posted: 22 Dec 2014 05:00 AM PST தெரிந்து கொள்வோம்: 1. போன்'னை இடது காதில் வைத்து பேசுங்கள்! 2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது !3. மாலை 5 மணிக்கு மேல், புல் கட்டு கட்டக்கூடாது(வயிறு முட்ட) 4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்) 5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை. 6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது.(குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்) 7. உங்கள் செல் போனில் பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது போன்'னை எடுக்காக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்! Relaxplzz ![]() |
Posted: 22 Dec 2014 04:00 AM PST கிராமத்து அனுபவங்கள்:- 1) Dining டேபிள் இருந்தாலும் தரைல உக்காந்து குடும்பமா சாப்புடுரத்துக்கு நிகர் ஆகுமா? 2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வேப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா? 3) தம்மா துண்டு showerla குளிக்குரதுக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்குரதுக்கும் எவ்வளவு வித்யாசம். 4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்யாசம் இருக்கு. இன்னும் ஏராளம்.... கிராமங்கள் இன்னும் மாறவில்லை... தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள். என்றும் மாறாத கிராமத்தில் இருந்து கிஷன். ![]() |
Posted: 22 Dec 2014 03:00 AM PST தந்தையின் பாசம் வளரும் வரை... தாயின் பாசம் திருமணம் வரை... நண்பர்கள், சகோதரர்களின் பாசம் அவர்களுக்கென்று தனியான வாழ்க்கை வரும் வரை... பிள்ளைகளின் பாசம் அவர்கள் உலகை அறியும் வரை...! ஆனால் கணவன் மனைவியின் பாசமோ... ''நீங்க இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன் நான் கண் மூடிட வேண்டும்'' என கூறும் மனைவியின் பாசமும், ''நான் இறந்த அடுத்த நொடி நீயும் என்னுடன் வந்துவிடு'' என கூறும் கணவனின் பாசமும் வேறு எந்த பாசத்திற்கும் ஈடாகாது.. ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ @rela ![]() |
Posted: 22 Dec 2014 02:00 AM PST புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு... நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம். 1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர். ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட்ட முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் இதே சிந்தனையுடன் இருந்தார்.இதை யாரிடமாவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினார்.பிறகு தன் மகனுடன் இதைப்பற்றி சொல்ல நினைத்தார்.அவருடைய மகன் வாஷிங்டன் ஒரு இளம் வயது இஞ்சினியர். தந்தையும் மகனும் இணைந்து எப்படி இந்த பாலத்தை கட்டுவது என்று ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள் .என்னவெல்லாம் இடர்கள் வரும் எப்படி எல்லாம் அதை எதிர்த்து செயல் படுத்த வேண்டும் அன்று ஆலோசித்தார்கள். இரண்டு பேரும் சேர்ந்து பாலம் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள்.சில மாதங்கள் வேலை நன்றாக நடந்தது,பிறகு ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து நடந்தது.அந்த விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்து விட்டார்,வாஷிங்டன்னுக்கு தலையில் அடிப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்கவும் ,பேசவும் முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா இஞ்சினியர்களும் நாங்கள் அப்பவே சொன்னோம் இது தேவை இல்லாத வேலை பாலம் கட்டுவது முடியாத காரியம் என்று ஏளனமாக பேச ஆரம்பித்தனர். இந்த பாலம் கட்டுவதை தெரிந்தவர் இரண்டு பேர் மட்டுமே.ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் கை கால் அசைவு இல்லாமல் இருக்கிறார்.வாஷிங்டன் மருத்துவமனையில் படுத்திருந்தாலும் அவர் மனம் முழுக்க அந்த பாலத்தை கட்டுவதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தது. ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது மெல்லிய காற்று வீசியது ஜன்னல் திரை விலகியதும் அவரால் வானத்தையும் மரங்களையும் பார்க்க முடிந்தது.இயற்கை என்னவோ நம்மிடம் சொல்ல நினைக்கிறது என்று யோசித்தார் பிறகு மெல்லமாக ஒரு விரலை மட்டும் அசைத்து பார்த்தார் விரல் அசைந்தது. விரல் அசைவு மூலம் தன் மனைவியிடம் தன் ஆசையை கூறினார்,மீண்டும் இஞ்சினியர்களை வரவழைத்து வேலையை ஆரம்பிக்க சொன்னார்.விரல் அசைவு உரையாடல் மூலமே தன் மனைவியின் உள்ளங்கையில் தடவி அவளுக்கு புரிய வைப்பார்.மனைவி இஞ்சினியர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டு இருப்பார்.விரல் அசைவு மூலமாகவே 11 ஆண்டுகள் தன் மனைவி உள்ளங்கையில் தடவி இந்த பாலத்தை கட்டி முடித்தார். இன்று கம்பீரமாக நிற்கும் புரூக்ளின் பிரிட்ஜ் கணவன் மற்றும் மனைவி இருவரின் உள்ளங்கை உரையாடல் மூலமே கட்டப்பட்டது. வாஷிங்டன் உடல் ஊணப்பட்டு இருந்தாலும் அவர் உள்ளம் ஊணம் ஆகாததால் அவரால் சாதிக்க முடிந்தது. "முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை" via Ilayaraja Dentist ![]() |
Posted: 22 Dec 2014 01:00 AM PST தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்... அவசர கால முதலுதவி முறைகள்...! வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன். தலைவலி : கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம். வயிற்றுப் பிரச்னைகள் : தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும். கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும். Relaxplzz ![]() |
Posted: 22 Dec 2014 12:30 AM PST |
Posted: 22 Dec 2014 12:00 AM PST தமிழகத்தின் முதன்மைகள்....... முதல் குடியரசுத் தலைவர் : டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன் முதல் பெண் நீதிபதி : பத்மினி ஜேசுதுரை முதல் பெண் மருத்துவர் : டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி முதல் பெண் ஆளுனர் : பாத்திமா பீவி முதல் பெண் முதலமைச்சர் : ஜானகி ராமச்சந்திரன் முதல் பெண் தலைமை செயலர் : லட்சுமி பிராணேஷ் முதல் பெண் கமாண்டோ : காளியம்மாள் முதல் நாளிதழ் : மதராஸ் மெயில் (1873) முதல் தமிழ் நாளிதழ் : சுதேசமித்திரன் (1829) முதல் வானொலி நிலையம் : சென்னை (1930) முதல் இருப்புப்பாதை : ராயபுரம் - வாலாஜா-(1856) முதல் வணிக வங்கி : மதராஸ் வங்கி (1831) முதல் மாநகராட்சி : சென்னை (29-9-1688) காங்கிரஸ் கட்சியில் தலைவராகப்பதவி வகித்த முதல் தமிழர் : விஜயராகவாச்சாரியார் சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸில்தலைவராக இருந்த முதல் தமிழர் : காமராஜர். தமிழகத்தின் முதல் முதலமைச்சர் : அ.சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாநகரத்தின் முதல் மேயர் : சர். ராஜா முத்தையா செட்டியார் சென்னை மாநகரத்தின் முதல்துணை மேயர் : எம்.பக்தவத்சலம் சென்னை மாநகரத்தின் முதல் பெண் மேயர் : அகல்யா சந்தானம் சென்னை மாநகரத்தின் முதல் தலைவர் : சர். பி.டி. தியாகராஜர் உலக சாம்பியனான முதல் தமிழகச் செஸ் வீராங்கனை : ஆர்த்தி ராமசாமி நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் : சர். சி. வி ராமன் தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் : வசந்தகுமாரி ***** தமிழகம் முதலிடம் அரிசி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம். கரும்பு உற்பத்தியில் உலகிலேயே முதலிடம். இந்தியாவில் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கையில் முதலிடம். அணு மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் மகளிருக்கான உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை இந்தியாவில் அமைத்த முதல் மாநிலம் கணினிக் கல்வியைப் பள்ளிகளில், கல்லூரிகளில் கொண்டுவந்ததில் இந்தியாவிலேயே முதலிடம். மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் ***** தமிழகத்தின் சிறப்புகள் உலகத்தின் 2வது நீளமான கடற்கரை : மெரீனா (13 கி.மி) தமிழகத்தின் நுழைவாயில் : தூத்துக்குடி தமிழகத்தின் மான்செஸ்டர் : கோயம்பத்தூர் மிக உயரமான கொடிமரம் : செயின்ட் ஜார்ஜ் கோட்டை(உயரம் 150 அடி) மிகப்பழமையான அணை : கல்லணை மிகப்பெரிய அணை : மேட்டூர் அணை அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் : கன்னியாகுமரி (88.11%) அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சென்னை குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சிவகங்கை மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் : கோவை குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் : பெரம்பலூர் மிக உயரமான கோபுரம் : திருவில்லிபுத்தூர் மிகப்பெரிய தேர் : திருவாரூர் தேர் தமிழ்நாட்டின் ஹாலந்து : திண்டுக்கல் (மலர் உற்பத்தி) கோயில் நகரம் : மதுரை பெயர் மாற்றம்: சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று 18-7-1967 சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி மாற்றப்பட்டது Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 11:30 PM PST |
Posted: 21 Dec 2014 11:00 PM PST "மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...! - கலைசெல்வி ![]() |
Posted: 21 Dec 2014 10:30 PM PST |
Posted: 21 Dec 2014 10:30 PM PST |
Posted: 21 Dec 2014 10:10 PM PST ஒரு சிஷ்யன் தன்னோட குரு நாதர் கிட்ட பாடங்களெல்லாம்..கத்துக்கொண்டு வெளியேர்ரான்.. குருநாதர் அவனை அழைத்து.. அடே சிஷ்யா நீ என்னிடமிருந்து விடை பெரும் காலம்.இது. உனக்கொரு மந்திரத்தை சொல்லித்தருகிறேன்.. இதை நீ தெரிந்து கொண்டால் வாழ்வில் நீ என்றுமே தும்பம் மின்ரி இருப்பாய். சிஷ்யன் சரி சொல்லுங்கள் குருநாதரே **ஓம் சிவாயநம**இதை உச்சரிக்கும் போதெல்லாம் உன் மனதில் துன்பம் நீங்கி சந்தோஷமாக இருப்பாய்.ஒரு கண்டிஷன் இம் மந்திரத்தை யாரிடமும் கூறிவிடாதே கூறினால் அது உனக்கு சாபமாகிப் போகும்..சரி குருவே-ன்டு போன சிஷ்யன்.போன அன்னைக்கே ஊரைஅழைத்து ஒரு குன்றின் மேல் நின்று அம்மந்திரத்தையும் அதன் மகிமையையும்.ஊருக்கே சொல்லிவிட்டான்..விஷயம் தெரிந்த குருநாதர் அவனை அழைத்து . நான் தா சொன்னேன் அல்லவா அம் மந்திரத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்..சொன்னால் அதுவே உனக்கு சாபமாகிப் போகுமென்று அப்டியிருந்தும் ஏன் சொன்னே.இல்லை குருவே அம் மந்திரம் எனக்குமட்டும் தெரிந்தால் நான் 1ருவனே சந்தோஷமாக இருந்திருப்பேன்.ஆனால் அது கோடிக்கணக்கனாவர்களுக்கு தெரிந்தால் உலகமே மகிழ்ந்திருக்கும் எனக்கு தெரிந்து உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தான் கூறினேன். |
Posted: 21 Dec 2014 10:00 PM PST தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்...! தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேனில் அடங்கியுள்ள பொருட்கள்: 1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம். 2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம். 3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம். 4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம். மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது. தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்: 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். 3. தேனும் வெங்காயச்சாறும்கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும். 4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம். 5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும். 6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும். 7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும். 8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும். 9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது. 10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது. நன்றி :- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 09:30 PM PST |
Posted: 21 Dec 2014 09:30 PM PST |
Posted: 21 Dec 2014 09:00 PM PST பாசம்: ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள். அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார். ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார். மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள். அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .'டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் 'என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.'உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்' என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள். நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க... Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 08:50 PM PST |
Posted: 21 Dec 2014 08:30 PM PST |
Posted: 21 Dec 2014 07:50 PM PST |
Posted: 21 Dec 2014 07:30 PM PST |
Posted: 21 Dec 2014 07:15 PM PST ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் "எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி விட்டார். வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து "நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள். எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்" என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் "கப்சிப்" ஆகிவிட்டனர். மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உண்மையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர். அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும். எளிமையோடு இருங்கள் எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது. மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் "நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்" என்றார். வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் "நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்" என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார். Relaxplzz |
Posted: 21 Dec 2014 07:04 PM PST 7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை...! ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்) நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது) நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை. நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம். நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது. தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி! மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும். Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 1 |
Posted: 21 Dec 2014 06:30 PM PST |
Posted: 21 Dec 2014 06:20 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment