Monday, 22 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இந்த நாளில் தங்கம் வாங்கினால் .. இந்த வருடம் முழுவதும் தங்கம் பெருகும் என ஒரு ப...

Posted: 22 Dec 2014 08:11 AM PST

இந்த நாளில் தங்கம் வாங்கினால் ..
இந்த வருடம் முழுவதும் தங்கம் பெருகும்
என ஒரு புரளியை கிளப்பி .
விட்டது போல் ..

இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு அளித்தால் ..
இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு உணவுக்கு ..
பஞ்சம் வராது என ஒரு புரளியை கிளப்பி விடுங்கள் ..
அந்த நாளிலாவது ஏழைகள் வயிறார உண்ணட்டும் ...

என்ன நான் சொல்றது??

via - Aminah Niha


7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை...! ஒரே வாரத்தில் உடல் எதைய...

Posted: 22 Dec 2014 06:28 AM PST

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை...!

ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.
தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.


உதவுங்கள் நண்பர்களே.. மீனாட்சி மிசன் மருத்தூவமனையில் சிகிச்சைக்காக அனுமநிக்கப்பட...

Posted: 22 Dec 2014 12:17 AM PST

உதவுங்கள் நண்பர்களே..
மீனாட்சி மிசன்
மருத்தூவமனையில்
சிகிச்சைக்காக
அனுமநிக்கப்பட்டுள்ள
நண்பரின் தாயாருக்கு B
+வகை ரத்தம் 3யூனிட்
தேவைப்படுகிறது.
உதவிடுங்கள் நண்பர்களே..
தொடர்புக்கு
சேகர் 8870470098 ........

via-sridar

பிச்சயெடுக்கிறவங்க கூட சாதாரணமா 300லிருந்து 500வரைக்கும் சம்பாதிக்க முடியுது.......

Posted: 21 Dec 2014 07:46 PM PST

பிச்சயெடுக்கிறவங்க கூட
சாதாரணமா 300லிருந்து 500வரைக்கும்
சம்பாதிக்க முடியுது....
ஆனா இவங்கள
கவனிச்சிருக்கலாம். பஸ்
ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்,
கடைவீதி இது மாதிரி இடத்துங்கள
வாங்குவார் யாருமில்லாம பசிச்ச
வயிறோடு கைக்குட்டை,
ஊதுபத்தி, ஸ்டிக்கர்
வித்திட்டு இருப்பாங்க.
நேத்து மார்க்கெட்
விட்டு வெளியே வரும்போது ஒரு பெரியவர்,
கம்ப்யூட்டர்
சாம்பிராணி வித்துட்டு இருந்தார்.
வாங்க
சொல்லி இரண்டு மூணு தடவை சொல்லி கேட்டார்.
ஊதுபத்தி,
சாம்பிராணி கொளுத்தும்
பழக்கம் இல்லாததால
வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.
அவர் கடைசியா , '
காலையிலருந்து ஒண்ணும்
சாப்பிடல.பசிக்குது.
ஒரு பாக்கெட்டாவது வாங்கிக்கோங்க
சார்.'
சொல்லிட்டு இருக்கும்போதே அவரறியமா கண்
கலங்கிட்டார்.
20 ரூபாய் கொடுத்து ஏதாச்சும்
சாப்பிட சொன்னதுக்கு,
காசு வாங்க மறுத்திட்டார்....
# கெட்டாலும் மேன்மக்கள்....
- சுகன் என்கிற சுகுணசீலன


0 comments:

Post a Comment