Relax Please: FB page daily Posts |
- கற்பழிப்புக்கு தண்டனை :- 1.UAE -ஏழு நாள்களில்தூக்கு தண்டனை 2.ஈரான் -கல்லால் அட...
- தகவல் துணுக்குகள் • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. • பிறந்த குழந்தை என...
- :) Relaxplzz
- குமரி மாவட்டம், குளச்சல் அருகே 60 அடி உயர கிறிஸ்துமஸ் குடில்..... குளச்சல் - பா...
- வாத்தியார்: உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா? . .. . . . . . . ....
- உண்மைதான :P :P
- அருமை, புகை பிடிக்கும் அறையின் கூரையில் உள்ள ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் செய்யவ...
- (y) Relaxplzz
- அழகு
- :) Relaxplzz
- ஓர் இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கர வ...
- குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீ...
- உங்கள் பள்ளி அனுபத்தை நினைவுகளை திரும்பி பார்க்க இந்த Game- யை விளையாடி பாருங்கள...
- புருஷேண்டா....! (y)
- பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்...! இன்றோ அல்லது நேற்றோ பிற...
- அல்வா ருசி பிடித்தவர்கள் லைக் செய்யவும்.. (y)
- (y) Relaxplzz
- அனிமேஷன் துறையில் பணிபுரியும் நம் ரிலாக்ஸ் ப்ளீஸ் வாசக நண்பர் திரு.ராமச்சந்திரன்...
- :) Relaxplzz
- என்னத்த சொல்ல..? ''அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை.....
- சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்.(சினிமா) Super Star Rajanikanth (Cinema). 1. 1975-ம் ஆண...
- சென்னை பல்கலைக்கழகத்தில் 1948ஆம் வருடம் எடுத்த புகைப்படம்.. படிக்கும்போது மாணவர்...
- ;-) Relaxplzz
- என் டா இந்த கொலைவெறி... :P :P
- அனைத்தும் கலந்ததே வாழ்க்கை.. வாழ்தல் இனிது (y)
- மலையின் மீதுள்ள அழகிய வீடு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு. எனது அன்பான சகோ...
- மழை வித்யாசம் பார்க்காமல் பொழிகின்றது... ஆனால் அது பெய்யும்போது பணக்காரர்களுக்க...
Posted: 11 Dec 2014 09:10 AM PST கற்பழிப்புக்கு தண்டனை :- 1.UAE -ஏழு நாள்களில்தூக்கு தண்டனை 2.ஈரான் -கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை.. 3.ஆப்கானிஸ்தான் -நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்.. 4.சீனா -மருத்தவ சோதனையில்நிரூபண மாகி விட்டால் உடன் மரணம் 5.மலேசியா -மரணதண்டனை 6.மங்கோலியா -கற்பழிக்கப்பட்டபெண்ணின் வீட்டார்களால் தண்டனை 7.ஈராக் -கல்லால் அடித்து கொலை 8.தாலிபான் -உடலை வெட்டி எடுத்து மரணம் 9.போலந்து -கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும் 10.இந்தியா -அவசர அவசரமா கைது பண்ணுவாங்க விசாரணை என்கிற பெயரில் கொஞ்ச நாளைக்கு அவனை அரசு வாகனத்தில் ஊர் சுற்றி காட்டுவார்கள்...அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்.. காலபோக்கில் மக்களும் மறந்து போய் அடுத்து நடந்த கற்பழிப்பு செய்திக்காக வருந்தி கொண்டு இருப்பார்கள் மைனர் குஞ்சுகள் மறுபடியும் தன் ஆட்டத்தைத்துவங்குவார்கள்..... மக்களே இந்த தவறு செய்த எவனாவது சிக்குனா... சட்டத்தின் முன் பிடித்து கொடுக்கும் முன் கம்பத்தில் கட்டி வச்சி கதற கதற கொடுக்குற அடி...அப்புறம் அவன் அவசரத்துக்கு கூட வெளிய .......................................... பயப்படனும்... - ஆவேச தமிழன் @ Relaxplzz |
Posted: 11 Dec 2014 08:59 AM PST தகவல் துணுக்குகள் • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும். • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை. • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. • கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். • ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ். • யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர். • கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி. • இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர். • உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு. • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ. • பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. • ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா. • சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன். • தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'. • புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப். *கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.. Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 11 Dec 2014 08:55 AM PST |
Posted: 11 Dec 2014 08:50 AM PST குமரி மாவட்டம், குளச்சல் அருகே 60 அடி உயர கிறிஸ்துமஸ் குடில்..... குளச்சல் - பாலப்பள்ளத்தில் ரூ.40 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் புற் குடிலுக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் குடிலுக்கான மாதிரி, மெக்சிகோவில் உள்ள டோரா டீக்கா ஹெலீவ் பேலஸ் வடிவில் சுமார் 60 அடி நீளம் 50 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் உள் கட்டமைப்பில் அன்பு என்னும் தலைப்பில் பல காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றியும் காட்சிகள் இதில் இடம்பெற உள்ளது. இந்த குடில் கண்காட்சி வருகிற 23-ந் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இந்த பணிகளை பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். Relaxplzz ![]() |
Posted: 11 Dec 2014 08:45 AM PST வாத்தியார்: உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா? . .. . . . . . . . . . . . . ராமு : சார் நான் ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட பாத்து இருக்கேன், இந்த ஜாலியன் வாலாபாக்கு பாத்ததே இல்லைங்களே சார்…. :O :O Relaxplzz |
உண்மைதான :P :P Posted: 11 Dec 2014 08:40 AM PST |
Posted: 11 Dec 2014 08:35 AM PST |
Posted: 11 Dec 2014 08:30 AM PST |
Posted: 11 Dec 2014 08:25 AM PST |
Posted: 11 Dec 2014 08:20 AM PST |
Posted: 11 Dec 2014 08:10 AM PST ஓர் இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் அவனை முந்திச் செல்கிறாள். இளைஞன் : "ஏய் எருமை" பெண் : "நீதான்டா நாய், குரங்கு, பன்னி".. என்று திரும்பி அவனைப் பார்த்து திட்டிக் கொண்டே செல்கிறாள் . திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. :P :P #சரி சரி.. சண்டைக்கெல்லாம் வரப்பிடாது ;-) Relaxplzz |
Posted: 11 Dec 2014 08:00 AM PST குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.. கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!'' அவளுடன் வேலை பார்க்கும் தோழி கேட்டாள். கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன் வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!'' யதார்த்தமாய் சொன்னாள் அந்த பெண். என்னடி சொல்ற? தோழி புரியாமல் கேட்டாள். "இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம், அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்.. என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்"!. தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் அந்த பெண்ணின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் அவள் தோழி.!!! #பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே இருக்கும்... Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 11 Dec 2014 07:55 AM PST உங்கள் பள்ளி அனுபத்தை நினைவுகளை திரும்பி பார்க்க இந்த Game- யை விளையாடி பாருங்கள்.. Google Play store-யில் உள்ள இந்த app-யை (Game) உங்கள் மொபைலில் install செய்து விளையாடி பாருங்கள்.. பள்ளி அனுபவத்தை பெறுவீர்கள் நண்பர்களே... https://play.google.com/store/apps/details?id=com.elifantasy.schoolcricket School Cricket - Android Apps on Google Play play.google.com Among the many games from our childhood that electronic media is reinventing, School Cricket (Hand Cricket) is probably one of the most addictive and interesting. How ... |
புருஷேண்டா....! (y) Posted: 11 Dec 2014 07:50 AM PST |
Posted: 11 Dec 2014 07:45 AM PST பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்...! இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. அறிவியல் பூர்வமாக இது தவறாக தெரிந்தாலும், உணர்வுப்பூர்வமாக சரியாகத்தான் இருக்கும் :) :) Relaxplzz |
Posted: 11 Dec 2014 07:38 AM PST |
Posted: 11 Dec 2014 07:30 AM PST |
Posted: 11 Dec 2014 07:25 AM PST அனிமேஷன் துறையில் பணிபுரியும் நம் ரிலாக்ஸ் ப்ளீஸ் வாசக நண்பர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் தன் சொந்த உழைப்பில் 3D அனிமேஷன் படம் ஒன்றின் trailer தயாரித்துள்ளார்.. படத்தின் பெயர் "பிரஜாபதி" நண்பர் பார்த்து உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் தெரிவியுங்கள்... https://www.youtube.com/watch?v=rg_A_Q7amhs Relaxplzz ![]() |
Posted: 11 Dec 2014 07:23 AM PST |
Posted: 11 Dec 2014 07:10 AM PST என்னத்த சொல்ல..? ''அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...'' ''முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க மூஞ்சியில் குத்தி விடல்...'' ''கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கி யல்பு...'' ''யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு.'' ''விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்..'' ''ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்'' ''மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே வாயினால் சுட்ட வடை'' ''மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது அரியவாம் கடலைபோ டுதல்'' ''பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே லேடியால் கெட்ட மனம்'' ''கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன்திருமணத்தன்று தாகசாந்தி செய்யமறுக்கும் நண்பனுக்கு'' ''போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக..'' (நன்றி-Mani Kandan Photographer) Relaxplzz |
Posted: 11 Dec 2014 07:00 AM PST சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்.(சினிமா) Super Star Rajanikanth (Cinema). 1. 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் சினிமா பயணத்தில் அவர் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். வெறும் ஆறே ஆறு காட்சிகளில் மட்டும் நடித்த அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே…" என்பது தான். அந்தக் காட்சியில் ஒரு வீட்டின் கேட்டை திறந்துகொண்டு வருவதுதான் அவர் தோன்றிய முதல் காட்சி. இன்று, அவரது வீட்டு கேட் திறப்பதற்காக அதிகாலையிலேயே கேட்டுக்கு முன்னால் ஏராளமான ரசிகர்கள்! 2.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு 'சூப்பர் ஸ்டார்'பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல் தடவையாக டைட்டில் கார்டில்தான் போடப்பட்ட படம், 'நான் போட்ட சவால்'. 3. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?". படம் 16 வயதினிலே. 4.மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, கொடூர வில்லனாக நடித்த படம், கமல் ஹூரோவாக நடித்த 'ஆடுபுலி ஆட்டம்'. வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார். அதன்பின், "ரஜினி ஸ்டைல்" என்ற கூற்று, பாப்புலரானது. 5.ரஜினியின் முதல் தோல்விப் படம், 'வணக்கத்துக்குரிய காதலியே'.ராஜேந்திரகுமார் அதே பெயரில் எழுதிய நாவல் படமாக தயாரிக்கப்பட்டு, தோல்வியடைந்தது. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். பிராமண பாஷை பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள். 6. ஸ்ரீபிரியாதான், இன்றைய தேதிவரை ரஜினியுடன் அதிக படங்களில் ஹீரோயின் ஆக நடித்தவர்.அப்படியிருந்தும், 'நீயா' படத்தில் ரஜினியை நடிக்க கேட்டபோது, நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுதத்த.து. 7.ரஜினி, சிவாஜியுடன் நடித்த முதல் படம் 'ஜஸ்டிஸ் கோபிநாத்'. அவருடன் நடித்த கடைசிப் படம் 'படையப்பா'. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'பில்லா'. மூன்று வேடங்களில் நடித்த படம் 'மூன்று முகம்'. 8.கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை."நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு" என்பது அவர் கருத்து. 9.நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை.'ஆறு புஷ்பங்கள்' படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க, ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார். 10.ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்ற படம், பைரவி. அதில் பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாட்டுகூட பாடுவார். பாம்பு சீன் புகழ் பெற்ற பட்ம், அண்ணாமலை. அதன்பின், ரஜினி படத்தில் என்ன இருக்கிறதோ, இல்லையோ, பாம்பு இருக்கும் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள்! 11.தமிழ் படத்தில் மீசை வைத்தால்தான் ஹீரோ என்று எழுதப்படாத விதி இருந்த நாட்களில்,ரஜினி, பாலச்சந்தரின் வற்புறுத்தலுக்காக மீசையில்லாமல் நடித்த முதல் படம் 'தில்லு முல்லு'.அவர் நடித்த முதல் முழு நீள காமெடி படமும் அதுதான். ரஜினி தயாரித்த முதல் படம் 'மாவீரன்' . திரைக்கதை வசனம் எழுதிய படம் 'வள்ளி'. பாடல் பாடிய படம் 'மன்னன்'. 12.ரஜினியின் 50-வது படம், தமிழ் படமல்ல. 'டைகர்' என்ற தெலுங்கு படம். 100-வது படம் 'ஸ்ரீராகவேந்திரர்'.ஆரம்பத்தில், ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். 13.குறுகிய காலத்தில் நடித்த படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'. 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் 'மாங்குடி மைனர்'.மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த 'தர்மயுத்தம்' படத்திலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார். 14.இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் 'ஆறிலிலிருந்து அறுபது வரை'. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கவில்லை. முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். மத்திய அரசு வழங்கிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன். 15.ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. 'நானே ராஜா நீயே மந்திரி'என்ற டைட்டில் 'தம்பிக்கு எந்த ஊரு' என்று மாறியது. ('நானே ராஜா நானே மந்திரி' என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று வெளியானது) 'நான் காந்தி அல்ல' படத்தின் டைட்டிலில் காந்தியின் பெயர் வருவதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, 'நான் மகான் அல்ல' என மாறியது. 'காலம் மாறிப்போச்சு' என்ற டைட்டில் 'தர்மதுரை' ஆனது. 16.ரஜினியோடு பிரதான கேரக்டரில் பெண்கள் மோதி வெளியான படங்கள், மூன்று முடிச்சு, மாப்பிள்ளை, மன்னன், படையப்பா. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எந்திரன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அன்புள்ள ரஜினிகாந்த். 17.முதல் சினிமாஸ்கோப் படம் பொல்லாதவன். முதல் 70 எம்எம் படம் மாவீரன்.முதல் 3டி படம் சிவாஜி . முதல் அனிமேஷன் படம் கோச்சடையான் (இன்னமும் வெளியாகவில்லை). 18.முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் முத்து. ஜப்பானில்ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். நேரடியாக நடித்த இந்திப் படங்களின் எண்ணிக்கை 16. 19.தமிழ் சினிமா புள்ளிகளைப் பற்றி அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்குபெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித்தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்". அதுதான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு SHARE பண்ணவும். Relaxplzz ![]() |
Posted: 11 Dec 2014 06:50 AM PST |
Posted: 11 Dec 2014 06:47 AM PST |
Posted: 11 Dec 2014 06:42 AM PST |
Posted: 11 Dec 2014 06:30 AM PST |
Posted: 11 Dec 2014 06:22 AM PST |
Posted: 11 Dec 2014 06:17 AM PST |
Posted: 11 Dec 2014 06:06 AM PST திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு. எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன். என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள். ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். Relaxplzz ![]() "இவர்கள் சொன்னவை" |
Posted: 11 Dec 2014 05:53 AM PST மழை வித்யாசம் பார்க்காமல் பொழிகின்றது... ஆனால் அது பெய்யும்போது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகவும் ஏழைகளுக்கு போராட்டமாகவும் மாறிவிடுகின்றது !!! ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment