Sunday, 21 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பெரியார் & Co மட்டும் அவர்கள் வேலையை பார்த்துட்டு சும்மா இருந்திருந்தா, நான் இந்...

Posted: 21 Dec 2014 09:20 PM PST

பெரியார் & Co மட்டும் அவர்கள்
வேலையை பார்த்துட்டு சும்மா இருந்திருந்தா,
நான் இந்நேரம் ஊர்ல
ஆடு மேய்ச்சிட்டு விவசாயம்
பண்ணிட்டு வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்திருப்பேன்.

@paidkiller

Posted: 21 Dec 2014 05:51 PM PST


மருத்துவமனையில் மாமியாரை கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம் "இவங்க உங்க அம்மாவா" எ...

Posted: 21 Dec 2014 08:40 AM PST

மருத்துவமனையில்
மாமியாரை கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம்
"இவங்க உங்க அம்மாவா"
என்ற
கேள்வியே அவளுக்கு பெருமை சேர்க்கிறது!

@காளிமுத்து

தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின...

Posted: 21 Dec 2014 01:50 AM PST

தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை அரசே நலிவுறச் செய்திருக்கிறது. முன்னமே காவிரி நீர் மறுக்கப்பட்டமையாலும், ஓ.என்.ஜி.சி பெட்ரோலியம் & எரிவாயு எடுத்ததன் விளைவாக நிலத்தடி நீர் வறண்டு போனமையாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து, வேதிப்பொருள் கலந்து, குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிட்டது.

இந்நிலையில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்' என்ற நிறுவனத்திற்கு 2010-ல் அனுமதியளித்தது. 2011-இல் அன்றைய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு, அப்பெருமுதலாளிய நிறுவனத்திற்கு நடைமுறப்படுத்த முன்வந்தது. இன்றைய தமிழக அரசு மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்தாலும் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி-இன் பெயரில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

#StopMethaneExplorationInKaveriDelta


ஸ்கூல் இருக்கிற நாள்ல தூங்க நினைக்குற குழந்தைகள அவங்க பெற்றோர்கள் எழுப்புவிட்டுற...

Posted: 21 Dec 2014 12:45 AM PST

ஸ்கூல் இருக்கிற நாள்ல
தூங்க நினைக்குற
குழந்தைகள அவங்க
பெற்றோர்கள்
எழுப்புவிட்டுறாங்க,
அதானால லீவு நாள்ல
தூங்க நினைக்கும்
பெற்றோர்கள அவங்க
குழந்தைங்க
எழுப்பிவிட்டுறாங்க!!

@குரு பிரபாகரன்

0 comments:

Post a Comment