நம்மவர்கள் தமிழ்மொழிப் பேசி தமிழர்களாய் வாழ்ந்ததால் தரைமட்டமான
பூமி ஈழம் !!!!
இனப்பற்றைக் கவனிக்காமல் பணப்பற்றைக் கவனித்தோம் ;
இனமிழந்து குணமிழந்து இன்று கூனிக்குறுகி நிராயுதபாணிகளாய் நிற்கிறோம் !!!
ஒருவன் இறந்தால் அவனினமே அழும் ;
ஒரினமே அழிந்தது ஒருவரும் அழவில்லை .!!
வலை அறுத்தபோது பொறுத்தது போல
முலை அறுத்தபோதும் பொறுத்தே நின்றோம் !!!
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறிய குரல்கள் நம் காதுகளில் விழவில்லை
குளிருக்காகவோ கொசுக்கடிக்காகவோ அல்ல குண்டுகளுக்குப் பயந்தே தூக்கம் துறந்தது நம்மினம் !!!
இனம் வாழ்ந்த ஈழம் இழவு வீடான போது நம் மனம் மட்டை பந்து ஸ்கோர் கேட்டு நின்றது !!
யுத்தக்காட்சி அங்கே அரங்கேறும் போது முத்தக்காட்சியை முண்டியடித்து பார்த்துக் கொண்டிருந்தோம் திரையரங்குகளில் நம்மேல் தீட்டுப் படாமலிருக்க !!!
மண்புழுக்களாக நம்மவர்கள் மரணத்தை எதிர்கொண்டபோது மானாட மயிலாட பார்த்து மயங்கிக் கிடந்தோம் !!!
தமிழுணர்வை வாயில் காண்பித்தவர்கள் தமிழர்களுக்கே வாய்க்கரிசிப்
போட்டார்கள் !!
நம் தொப்புள் கொடிக்கு கொள்ளி வைத்த நெருப்பில் சிகரெட் பற்றவைத்து புகைத்தவர்கள் நாம் !!!
கன்னிவெடி கொண்டா கயவர்கள் அழித்தார்கள் !
கண்ணீர் தீர்ந்து போய் கற்பழிக்கும் போதும் கதரமுடியாத நம் கன்னிக் தமிழச்சிகளை !!
யார் விட்ட சாபக் கருமாந்திரமோ?...
நம் தாய்மார்களும் சகோதரிகளும் அறையில் வைத்தும் சிறையில் வைத்தும் சிதைக்க படுகையில் சலனமின்றி சகஜமாக ஜாக்கிங் சென்றோம் !!!
யார் யாரின் தாகமெல்லாமோ நம்மின ரத்தத்தை உறிஞ்சி
போக்கப்பட்டது !!
ஈரக்குலையும் வற்றிக் காய்ந்த வரலாறுதான் ஈழ வரலாறு ;
இறுதிவரை குருதியாறு ஓடியதை குவளயம் வேடிக்கைப்பார்த்தது !!
எரிக்கப்பட்ட யாழ்ப்பல்கலைக் கழகத்தின் நெருப்பனைய நெடு நாட்கள் ஆகும் !!
இருதயம் உடைந்து தூளான பிறகு எரிகின்ற நெருப்புக்கு
உயிர் தான் விறகு !!!
இன்றைய நிலையில் அழுகையைத் தவிர ஆயுதம் எதுவுமில்லை அங்கே !!!
வாழத்தகுதியற்ற இனமா தமிழினம் ?...
நீராலும் அழிந்தோம் ;
போராலும் அழிந்தோம் ;
பாராளும் தலைவர்களின் தாராள அனுமதியால் தமிழர்க்கு வெகுமதி தரணியில் சாவுதான் !!
கருவறுத்த கயவர்களை சிவப்புக் கம்பளத்தில் வரவேற்று சிம்மாசனத்தில் அமரவைக்கிறது சின்னபுத்திக் கொண்ட தேசம் !!!
உலகத் தமிழர்களே !!...
லட்சக் கணக்கான ஈழத்தமிழரின் ரத்தத்திற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் !...
நீங்களும் ,நானும் !!!
இவண்
- கமல்

0 comments:
Post a Comment