பாக்கித்தானில் நடந்த
துப்பாக்கி சூடு சம்பவத்தில்
பழியான குழந்தையின் தாயின்
குமுறலாய் எனது கவிதை ...
போட்டிக்காக
அஞ்சலிட்டு இருக்கிறேன் ...
மார்க்கம் சொன்ன வழியிது
--------------------------------------------
பாற்சோறு ஆக்கி வச்சி
பாதையெல்லாம் பார்த்திருந்தேன்
ஆட்டுக்கறி பிடிக்குமுன்னு
ஆசை ஆசையாய் ஆக்கி வச்சேன்
பொழுதெல்லாம் விளையாட
பந்து ஒன்னும் வாங்கி வச்சேன்
அத்தனையும் போதாதுன்னு
அஞ்சி நேரம் தொழுது வச்சேன்
கம்பி ஒன்னு குத்துமின்னு
குடை கூட தள்ளி வச்சேன்
முந்தானை தலைப்பாலே என்
மூத்த மகன் தலை துடச்சேன்
விளையாட்டுக்கு கூட
சண்டை ஏதும்
போடாதேன்னு அவன்கிட்ட
சத்தியமும்
வாங்கிக் கிட்டேன்
பள்ளி விட்டு வர்ர நேரம்
பாலகனை காணலையே - ஒரு
எட்டெடுத்து பார்ப்போமின்னு
எடுத்து அடி வைக்கையிலே
கொண்டு வந்து சேர்த்ததொரு சேதி -
அது
துப்பாக்கி குண்டு பட்டு என்
குழமகன் பலியான சேதி
இல்லாத கடவுளும்
இருந்தென்ன
எனக்கு லாபம் ?
பெத்த வயிறு பத்தி எரியயிலே
பித்தான காடையனுக்கு
மார்க்கமென்ன மண்ணும் என்ன ?
கொலக்காரா !..
பாடையிலே நீ போகும் நேரமதில்
சொட்டு தண்ணீர் நீ கேட்க
அப்பவும் மார் கொடுத்து பால்
கொடுப்பேன்
மார்க்கம் சொன்ன வழி அதுவே !...
பொகவந்தலாவை
கனகேஸ்வரன்
மெல்போர்ன் அவுஸ்திரேலியாவி
ல் இருந்து
கேஜி கேஜி

0 comments:
Post a Comment