Monday, 15 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பெண்களை விட ஆண்களை பலமாக படைத்ததே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க இப்படி பலாத்கார...

Posted: 15 Dec 2014 07:48 AM PST

பெண்களை விட
ஆண்களை பலமாக
படைத்ததே
பெண்களுக்கு பாதுகாப்பாக
இருக்க
இப்படி பலாத்காரம் செய்ய
இல்லை.


குழந்தை பருவத்தின் சில நினைவுகள் : பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்...

Posted: 15 Dec 2014 06:20 AM PST

குழந்தை பருவத்தின் சில
நினைவுகள் :
பக்கத்து வீட்டு சுவர்ல
உக்காந்து ரோட்ட
வேடிக்கை பார்ப்போம்.
பக்கத்து வீட்டுக்குள்ள பந்த
போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு
கெஞ்சுவோம்,
எடுத்து தரலேனா அவங்க அசந்த
நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம்.
தட்டான் பிடிச்சு அத
கல்லை தூக்க
சொல்லி கொடுமை பண்ணுவோம்.
மின்மினி பூச்சிய
பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல
அடைச்சு அதுக்கு இலைகள்
உணவா போடுவோம். இலைய
சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்..
ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள
காத்து போகாது, அதுனால
சுவாசிக்க முடியாதுன்னு நம்ம
மூளைக்கு எட்டாது.
மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம்.
ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும்
பட்டம் விட்டு விளையாடுவோம்.
கிரிகெட் விளையாட
தெரியலேனாலும்
விளையாடுவோம்,
முக்கியமா அவுட்
ஆனா ஒத்துக்கவே மாட்டோம்.
பரமபதம் விளையாடும்
போது நம்ம தோக்க
போறோம்ன்னு தெரிஞ்சா போது ஆட்டத்த
கலச்சு விட்டுருவோம்.
ருசியே இல்லாட்டியும்
ருசிச்சு சாப்பிடுவோம், நம்ம
செஞ்ச கூட்டாஞ்சோற.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ண
கட்டும்போது கண்ணு நல்லா தெரிஞ்சாலும்
இல்ல எதுமே தெரியல
ஒரே இருட்டா இருக்குன்னு கள்ளாட்டை விளையாடுவோம்.
இரவுநேரம்
கரண்டு போச்சுனா பேய்
மாதிரி சத்தம்
போட்டு எல்லாரையும்
பயமுறுத்துவோம்.
சைக்கில் ஓட்டி கீழ விழுந்தாலும்
மண்ணை அள்ளி பூசிட்டு மறுபடியும்
சைக்கிள் ஓட்டுவோம்.
நீளமான துணிய கழுத்துல
கட்டிக்கிட்டு பேட் மேன்,
சக்தி மான்னு சொல்லிக்கிட்டு குதிச்சு விளையாடுவோம்.
தூங்குறதுக்கு மட்டும் தான்
வீட்டுக்கு போவோம், மற்ற நேரம்
முழுக்க தெருவுல தான்
இருப்போம்.
நம்ம விளையாட்டுக்கள்
அனைத்துமே நம்ம ஊரோட
ஒட்டி இருந்தது. இப்ப நம்ம
விளையாட்டுக்கள்
அனைத்துமே நம்
வீட்டு கணினியிலையும், செல்
பேசிலையும் தான் இருக்கு.


பன்னீர் வாசனை தான்.... ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும்.... அது ஒரு ரோஜாவின் கண...

Posted: 15 Dec 2014 03:49 AM PST

பன்னீர் வாசனை தான்....
ஆனால், எத்தனை பேருக்குத்
தெரியும்....
அது ஒரு ரோஜாவின் கண்ணீர்
என்று...???

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உய...

Posted: 15 Dec 2014 12:14 AM PST

வீட்டில் பெரும் தொல்லையைக்
கொடுக்கும் கரப்பான்பூச்சி,
தலை இல்லாமல், 9 நாட்கள்
உயிருடன் வாழும்
தன்மை கொண்டது.
எனவே வீட்டில்
கரப்பான்பூச்சி அடித்து கொல்லும்
போது, கவனமாக அடித்துக்
கொல்லுங்கள்.


யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்.. உத்த...

Posted: 14 Dec 2014 07:15 PM PST

யாரும் உதவிக்கு வராததால்
ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்
பார்த்த திருநங்கைகள்..
உத்தரபிரதேச மாநிலம்
லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு.
இவரது மனைவி நிர்மலா.
ஆந்திராவில் வசித்து வரும்
ராஜு நிறைமாத கர்ப்பிணியான
தனது மனைவி நிர்மலாவுடன்
கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்
நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்.
ரெயில் மதியம்
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர்
அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது நிர்மலாவுக்கு பிரசவ
வலி ஏற்பட்டது. வலியால் துடித்த
மனைவியை பார்த்து ராஜு பதறினார்.
தனது மனைவிக்கு பிரசவம்
பார்க்க உதவுமாறு ரெயிலில்
வந்த பெண் பயணிகளிடம்
கெஞ்சினார். ஆனால் யாரும்
முன்வரவில்லை.
அப்போது ரெயிலில்
பிச்சை எடுத்துக்
கொண்டு இருந்த சில
திருநங்கைகள் நிர்மலாவின்
வேதனையையும், ராஜிவின்
பரிதவிப்பையும்
கண்டு திடுக்கிட்டனர். அவர்கள்
சில
பெண்களை உதவிக்கு அழைத்தனர்.
ஆனால் நமக்கெதற்கு வம்பு என
யாரும் முன்வரவில்லை.
இதனால்
திருநங்கைகளே சேர்ந்து புடவையால்
திரை அமைத்து நிர்மலாவுக்கு பிரசவம்
பார்த்தனர். சிறிது நேரத்தில்
நிர்மலா ஆண்
குழந்தை பெற்றெடுத்தார்.
ராமகுண்டம் ரெயில் நிலையத்தில்
ரெயில் நின்ற போது தாயையும்,
சேயையும் பத்திரமாக இறக்கிய
திருநங்கைகள் 108
ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும்
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதோடு தாங்கள்
பிச்சை எடுத்து சேர்த்த 500
ரூபாயை குழந்தையின் கையில்
அன்பளிப்பாக
கொடுத்து சென்றனர்.
திருநங்கைகளின் இந்த
மனிதாபிமான
செயலை டாக்டர்கள் உள்பட பலர்
வியந்து பாராட்டினர்.


0 comments:

Post a Comment