எங்க ஊரில் உள்ள சின்ன
ஹோட்டல் ஒன்றில்...
ஒரு சின்ன குழந்தை(கையில்
தூக்கு வாளியுடன்): அண்ணா...!
அம்மா பத்து இட்லி வாங்கி வர
சொன்னாங்க...!கா
சு நாளைக்கு தராங்களாம்...
ஹோட்டல் நடத்துபவர்:
ஏற்கனவே கணக்கு நிறைய
பாக்கி இருக்கு....
அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக
்கு வாளியை தா சாம்பார்
ஊத்தி தாரேன்....
(இட்லி பார்சலையும்,சாம்பார்
நிறைத்த தூக்குவாளியையும்
அந்த குழந்தையிடம் தருகிறார்).
குழந்தை:சரி...அம்மாட்ட
சொல்றேன்...போயிட்டு வரேன்
அண்ணே....
(குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய்
சாப்பிடுவது வழக்கம் ஆதலால்
நான் கேட்டே விட்டேன்...
நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன்
மறுபடியும் குடுக்குறீங்க....
ஹோட்டல் நடத்துபவர்:அட
சாப்பாடுதானே சார்....நான் முதல்
போட்டுத்தான்
கடை நடத்துறேன்.இருந்தாலும்
இது மாதிரி குழந்தைகள்
வந்து கேட்கும்போது மறுக்க
மனசு வரல சார்...அதெல்லாம்
குடுத்துடுவாங்க...என்ன
கொஞ்சம் லேட் ஆகும்....எல்லார
ுக்கும் பணம்
சுலபமாவா சம்பாதிக்க
முடியுது....
நான்:
வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல
ஹோட்டல் நடத்துபவர்:
குழந்தை கேட்டிருக்கும்.. அதான்
சார் அனுப்பி இருக்காங்க.. நான்
குடுத்துடுவேன் அப்டிங்கற
அவங்க நமபிக்கையை நான்
பொய்யாக்க விரும்பல சார்.... நான்
உழைச்சி சம்பாதிக்கிற
காசு ...வந்துடும்
சார்....ஆனா இப்போதைக்கு அந்த
குடும்பம் சாப்டுதுல அதுதான்
சார் முக்கியம்
கடவுள் இல்லைன்னு யார் சார்
சொன்னது...
- Vijay Sivanandam

0 comments:
Post a Comment