Sunday, 30 November 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வ...

Posted: 30 Nov 2014 09:29 AM PST

கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின. விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒரு மகாராஜா இருந்தாரு. அந்த நாட்டுல ரொம்ப திருட்டுப் பயம் இருந்துச்சு. ஒரு மோசமா...

Posted: 30 Nov 2014 05:00 AM PST

ஒரு மகாராஜா இருந்தாரு. அந்த நாட்டுல ரொம்ப திருட்டுப் பயம் இருந்துச்சு. ஒரு மோசமான கொள்ளைக் காரன் இருந்தான்.
அவன் எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டிடுருந்தான். உடனே ராஜா நாட்டுல ஒரு அறிவிப்பு கொடுத்தாரு.

அது என்னன்னா "யாரு அந்த கொள்ளைக்காரனை உயிரோடவோ இல்ல பிணமாகவோ பிடிக்கறாங்களோ அவங்களுக்கு நாட்டுல பாதி".........
இதுதாங்க அந்த அறிவிப்பு.

யாருமே அதுக்கு முன் வரல. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு ராஜாவுக்கு சந்தோஷமான செய்தி கிடைச்சுது. அந்த நாட்டு இளைஞன் ஒருத்தன் அந்தக் கொள்ளைக்காரனை உயிரோட பிடிச்சு அரண்மனைக்கு இழுத்திட்டு வரதா.......

நாட்டு மக்கள் எல்லாம் ரொம்ப ஆவலா அரண்மனையைச் சுத்தி நிக்கிறாங்க. அந்த இளைஞன் அந்தக் கொள்ளைக்காரனை கொண்டு வந்து நிறுத்தினோன ..........

ராஜா செம கடுப்புல இருக்காரு...........தன்னோட நாட்டுல இருந்துகிட்டு தன் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டிட்டானேனு...... அதனால ராஜா...............

"இவன் பண்ணின அட்டூழியத்துக்கு இவன் தலைய எல்லா மக்கள் முன்னிலையிலயும் சீவ உத்தரவிடுகிறேன்."

அந்த கொள்ளைக்காரன் ஹா ஹா ஹா ன்னு சிரிச்சுகிட்டே,
"என் தலையைக் கொய்ய உங்க யாராலயும் முடியாது.............."

ராஜா கடுப்பாகி தளபதிக்கு கண்ணைக் காட்ட, உடனே தளபதி தன் கீழ இருக்கிற சிப்பாய்களுக்கு உத்தரவு போட்டோன, முதல் சிப்பாய் போய் அவன் தலையை தன் வாளால ஒரே சீவு.......

வாள் ரெண்டா உடைஞ்சுருச்சு.................எல்லாம் அப்படியே ஷாக்காயிட்டாங்க...........அவன் சிரிக்கிறான்.........

இப்படியே கிட்டத்தட்ட 20 பேர் முயற்சி பண்ணியும் அவன் தலையை வெட்ட முடியல...........கடைசியா தளபதியும் போய் முயற்சி பண்ணினோன அவனுக்கும் தோல்விதான்..........

ராஜாக்கு என்ன பண்றதுனே தெரியல..........

அப்ப அந்த நாட்டு இளவரசி தன் இருக்கையில இருந்து ராஜாகிட்ட வரா..........
"தந்தையே நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்..........நான் இவன் தலையை கொய்து வருகிறேன்"

"மகளே..........இத்தனை வீரர்கள் முயற்சி செய்தும் முடியாத, தோல்வியை சந்தித்த இதனை நீ எப்படி வெற்றி கொள்வாய்?"

ஆனாலும் இளவரசி பிடிவாதம் பிடிச்சு ராஜாகிட்ட ஆசிர்வாதம் வாங்கி நேரா அவன்கிட்ட வரா..........அப்ப தளபதி கொடுத்த புது வாளையும் வேண்டாமுன்னு சொல்லிட்டு அந்தக் கொள்ளைக்காரன்கிட்டவந்து வெறும் கையால அவனை ஒரே அரை............
அவன் தலை தனியா போய் விழுது............

மக்கள் வெள்ளம் சந்தோஷக் கூச்சல் போடறாங்க..................சரி இப்ப என் கேள்வி என்னன்னா அத்தனை வீரர்கள்முயற்சி பண்ணியும் வெட்ட முடியாத அவன் தலைய எப்படி இளவரசி வெறும் கையாலயே வெட்டினா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீங்க யாரும் கேள்விப் பட்டது இல்ல...........பெண் (pen) is mightier than the Sword"

#உங்களுக்கு_தெரியுமா? ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby,...

Posted: 29 Nov 2014 10:13 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby, என்கிற 50,110 சொற்கள் உள்ள அந்த நாவலில் E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை !


#உங்களுக்கு_தெரியுமா? பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டு...

Posted: 29 Nov 2014 10:09 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர் ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.


#உங்களுக்கு_தெரியுமா? ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள...

Posted: 29 Nov 2014 10:03 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள்ளி தானாம் !?


#உங்களுக்கு_தெரியுமா? 1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந...

Posted: 29 Nov 2014 09:58 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம். ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.
( ஆதாரம்: விக்கிபீடியா)

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்...

Posted: 29 Nov 2014 09:06 PM PST

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

6. கும்பகோணம் பூரி-பாஸந்தி

7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

8. மன்னார்குடி அல்வா

9. கூத்தாநல்லூர் தம்ரூட்

10. நீடாமங்கலம் பால்திரட்டு

11. திருவையாறு அசோகா

12. கும்பகோணம் டிகிரி காபி

13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா

14. கோவில்பட்டி கடலை மிட்டாய்

15. ஆம்பூர் தம் பிரியாணி

16. நாகர்கோவில் அடை அவியல்

17. சாத்தூர் சீவல்

18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்

21. மணப்பாறை அரிசி முறுக்கு

22. கீழக்கரை ரொதல்அல்வா

23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

24. பண்ருட்டி முந்திரி சாம்பார்

25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

26. சாயல்குடி கருப்பட்டி காபி

27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா

28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

30. புதுக்கோட்டை முட்டை மாஸ்

31. தூத்துக்குடி மக்ரூன்

32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி

33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"


:P :D #Anniyan

Posted: 29 Nov 2014 09:05 PM PST

:P :D #Anniyan


பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் . ட...

Posted: 29 Nov 2014 08:39 PM PST

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .

டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்

பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்

பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது...


0 comments:

Post a Comment