Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...
- இயற்கையோடு இயைந்த இல்லம் '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...
- சொக்கலேட் எனும்போதே, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்க வேண்டுமென்று நினைப...
- சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்: * சிக்ஸ் அடுச்சா அவுட்டு * 1பிட்ச் கேட்ச் இருக்க...
- "சரியா படிக்கலைன்னு எங்க அப்பா என்னை அடிச்சாரு.." "அப்புறம்..? நீ அழலயா.." "இல...
- ஏன் இப்ப அதிகமா முகநூல் வருவதில்லை பணிச்சுமையா? (விரக்தியுடன்)இல்லிங்க பக்கத்த...
- உபதேசம்...!!! ராஜ்நாத் சிங்கின் இளைய மகன் படித்து கொண்டிருப்பது லண்டனில்...!!!...
- தட் கரடியே காறித் துப்பிய மொமன்ட்.... #வைகோ
- எங்கே சென்று கொண்டு இருக்கிறது இந்திய நாகரித்தின் நிலை... அருப்புக்கோட்டை: வகுப...
- ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை...
- "தினமும் நான்தான் சமைக்கணும்னு என் மனைவி சொல்லுவா...என் கை பக்குவம் அப்படி..."...
Posted: 29 Nov 2014 10:41 AM PST 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #சகோதரி 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தோழி 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது #காதலி உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது #மனைவி |
Posted: 29 Nov 2014 10:22 AM PST இயற்கையோடு இயைந்த இல்லம் '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' மழை நேரத்தில் ஓலைக் குடிசை வீடு போல தளத்திலிருந்து ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் இடங்களில் நானும் எனது குடும்பத்தாரும் தட்டு, முட்டுச் சாமான்களை வைத்துச் சமாளிப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ வீட்டின் உள்துறை அமைச்சரான என் மனைவியிடமிருந்து, "மாடியில செடி வளர்க்காதீங்க… வளர்க்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே..? வீடே நாசமாய்ப் போச்சு..!" என்ற அர்ச்சனை கிடைக்கும். மேலும் வாசிக்க: http://tamil.thehindu.com/society/real-estate/இயற்கையோடு-இயைந்த-இல்லம்/article6644499.ece ![]() |
Posted: 29 Nov 2014 09:57 AM PST சொக்கலேட் எனும்போதே, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்கள் குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் அதை வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துவீர்கள். ஆனால், சொக்கலேட்டின் பின்னாலுள்ள துன்பம் நிறைந்த கதை உங்களுத் தெரியுமா? நீங்கள் சுவைத்து சுவைத்து உண்ணும் சொக்கலேட்டை உற்பத்தி செய்ய கொகோ காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கொகோ தோட்டங்களில் கல்வி மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆபிரிக்கக் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்பட்டு, அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவது உங்களுக்குத் தெரியுமா? ![]() |
Posted: 29 Nov 2014 07:13 AM PST சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்: * சிக்ஸ் அடுச்சா அவுட்டு * 1பிட்ச் கேட்ச் இருக்கு * தொடர்ந்து 3பால் விட்டா அவுட்டு * டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங் * நாங்க மட்டும் மெதுவா போட்டோம் நீயும் போடு * ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது * பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu * முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடுச்சவந்தான் போயி பந்த எடுக்கனும் * பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும் * பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது, அந்த உரிமை கீப்பருக்கு மட்டுமே * இருட்டியதும் Fast Bowl போட முடியாது * முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl * Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக அனுப்பப் படுவார். |
Posted: 29 Nov 2014 03:22 AM PST "சரியா படிக்கலைன்னு எங்க அப்பா என்னை அடிச்சாரு.." "அப்புறம்..? நீ அழலயா.." "இல்லே..சரியா சமைக்கலைன்னு எங்க அம்மா எங்க அப்பாவை அடிச்சாங்க..." |
Posted: 29 Nov 2014 01:22 AM PST ஏன் இப்ப அதிகமா முகநூல் வருவதில்லை பணிச்சுமையா? (விரக்தியுடன்)இல்லிங்க பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு... அது வந்து சரி விடுங்க அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்க.. ஏன் பாஸ் எதும் லவ் ப்ராப்ளமா பெரிய பிரச்சனையா? அட போங்க! அந்த வீட்டு பொண்ணு ஸ்டடி சம்பந்தமா ஃபாரீன்ல இருக்க அவங்க அண்ணன்கிட்ட பேசறதுக்காக அவங்க வீட்டுல இருந்த wi-Fi கனெக்ஷன் ப்ரீயா எனக்கும் கிடைச்சது இப்பதான் அவங்க இல்லியே அதான் முகநூல் அதிகம் வருவதில்லை. |
Posted: 29 Nov 2014 01:10 AM PST |
Posted: 29 Nov 2014 12:38 AM PST |
Posted: 28 Nov 2014 10:45 PM PST எங்கே சென்று கொண்டு இருக்கிறது இந்திய நாகரித்தின் நிலை... அருப்புக்கோட்டை: வகுப்பறையில் 8ம் வகுப்பு மாணவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 32 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். விருதுநகர் மாவட்ட எல்லையான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த கோபாலின் மகன் பாஸ்கர் (13) 8ம் வகுப்பில் படித்தார். இதே ஊரைச் சேர்ந்த மாரீஸ்வரன்(19) கடந்த ஆண்டு இதே பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால், படிப்பை நிறுத்தி விட்டு, தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று காலை 8 மணிக்கு சீருடை அணிந்து மற்ற மாணவர்களுடன் பள்ளிக்கு சென்ற மாரீஸ்வரன், வகுப்பறையில் இருந்த பாஸ்கரை கத்தியால் சரமாரியாக குத்தினார். அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத் தில் கிடந்த பாஸ்கரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த பந்தல்குடி போலீசார், அயன்கரிசல்குளத்தை சேர்ந்த 3 மாணவர்களை விசாரித்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு செப். 3ல் பாஸ்கர் உள்ளிட்ட 4 மாணவர்களை மாரீஸ்வரன் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு மாரீஸ்வரன் வற்புறுத்தியுள்ளார். அவர்கள் மறுக்கவே, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துள்ளார். இதனால், மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். பின்னர், மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பியுள்ளார். மயங ¢கிக் கிடந்த மாணவர்கள் குறித்து விடுதி ஊழியர்கள் திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விடுதிக்கு வந்து, மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனிடையே, பெற்றோர்கள் மாணவர்களை காணவில்லை என மாசார்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். மாணவர்களின் விபரம் குறித்து திருச்செந்தூர் போலீசார், மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்க, அங்கு சென்ற போலீசார் மாணவர்களை அழைத்து வந்துள்ளனர். தலைமறைவான மாரீஸ்வரனை கைது செய்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஸ்கரை தகாத உறவுக்கு அழைத்து மாரீஸ்வரன் அடிக்கடி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து, மாரீஸ்வரன், பாஸ்கரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அருப்புக்கோட்டை தூத்துக்குடி சாலை மற்றும் தூத்துக்குடி பைபாஸ் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர். கொலை நடந்த பள்ளியில் விருதுநகர் கலெக்டர் ஹரிஹரன், எஸ்பி மகேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி துரை, விருதுநகர் டிஆர்ஓ முனுசாமி, முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமார், அருப்புக்கோட்டை ஆர்டிஓ சுபா நந்தினி ஆகியோர் விசாரணை செய்தனர். தாயையும், மகனையும் இழந்தார்: பாஸ்கரனின் தந்தை கோபால் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் கோபாலின் தாயார் இறக்கவே, சொந்த ஊருக்கு வந்துள்ளார். இப்பொழுது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளதால், தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறார். குற்றவாளியை பிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர் கதறியழுதவாறே தெரிவித்தார். ![]() |
Posted: 28 Nov 2014 10:09 PM PST ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் ....... ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது . அதற்க்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..அவர ுக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள் . இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..அடக்க முடியவில்லை . அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று,என்னை மன்னிக்கவும் ...உங்களை disturb செய்வதற்கு ...ஆனால் இந்த மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்கையில் பார்த்தது இல்லை ..எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள்.,...இது யாருடைய இறுதி ஊர்வலம் ...... முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது.... என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ?? என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது ... இரண்டாவது சவப்பெட்டி ?? என்னுடைய மாமியாருடையது !! அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ... ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார் "இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா " அதற்க்கு அவர் சொன்ன பதில் ....... . பின்னால் வரும் வரிசையில் போய் நில்லுங்கள் !!!!!!!!! |
Posted: 28 Nov 2014 10:04 PM PST "தினமும் நான்தான் சமைக்கணும்னு என் மனைவி சொல்லுவா...என் கை பக்குவம் அப்படி..." "நீங்க சமைக்க மாட்டேன்னு சொன்னா?.." "நல்லா மிதி மிதின்னு மிதிப்பா...அவ கால் பக்குவம் அப்படி.." |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment