Monday, 24 November 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஒரு பாம்பேகாரன்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது பேச்சோடு பேச்சாக இலங்கையை பற்றிய...

Posted: 24 Nov 2014 03:25 AM PST

ஒரு பாம்பேகாரன்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது

பேச்சோடு பேச்சாக இலங்கையை பற்றிய அவன் கருத்தை கேட்டேன்.

விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் என்றான்.
அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களை அவன் புலிகளை ஆதரித்து தீவீரவாதத்தை வளர்த்தார்கள் என்கிறான்.
தமிழ்நாட்டு மக்களை ராஜீவ் கொலையாளிகளை காத்து தீரவாதத்தை வளர்கிறீர்கள் என்கிறான்.

சற்று நான் அதிர்ச்சியுற்று நான் கேட்டேன் அப்ப இந்திராவை கொன்ற சீக்கியர்கள் யார் என்றதற்கு

அது அவர்களுடைய புனித குருத்துவாராவில் அத்து மீறி ராணுவம் நுழைந்ததற்கான பழிக்குபழி என்கிறான்.

அப்ப காந்தியை சுட்டது ... அது நாட்டு பிரிவினைக்கும் முஸ்லிம் மக்களை ஆதரித்தற்க்கும் என்கிறான்...

ராஜீவ் கொலையே பலிவாங்கள்ன்னு கோர்ட்டு சொல்லுதேன்னு சொன்னதற்கு அது சரியில்லை தீவரவாதம் தான்னு பத்திரிகையில் சொல்றாங்கன்னா...

இப்பொழுது சொல்லுங்கள் ... ஒரு சாமான்ய வடநாட்டான் நம்மை பற்றி எப்படி அறிந்து வைத்துள்ளான் என்று...

திட்டமிட்டு தமிழ்நாட்டை தரம்தாழ்த்தி வடஇந்தியாவில் பரப்புரை நடக்கிறது...

இதை மாற்றாத வரை... நம்மால் ஒரு மண்ணும் சாதிக்க முடியாது இந்தியாவில்...

0 comments:

Post a Comment