Relax Please: FB page daily Posts |
- :)
- யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப...
- இதை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே ( இது மிக மிக முக்கியமான பதிவு) தமிழர்கள் நன்றா...
- கவித.... கவித... <3 விக்கல் வரும்போதெல்லாம் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்லதெல...
- ஜிகர்தண்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P . டாக்டர், என் வலது கால் முட்டி ரொம்ப வலிக்கு...
- கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோப...
- ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்? மாணவன்: "இரும்பு" ஆ...
- முதலில் யார் சமாதானம் ஆவது?? என்ற ஈகோ இல்லாத இடத்தில், எத்தனை முறை சண்டை வந்தாலு...
- :)
- பேச்சுலர் to குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9...
- மனுஷன்டா :) (y) ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வ...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பசித்திரு... தனித்திரு... விழித்திரு... இப்படி மூன்றுமாக இருந...
- பெற்ற பிள்ளைகளிடம் தங்கப்பதக்கம் சிவாஜி கணக்காக விறைப்பாக நடந்து கொள்பவர்களை காம...
- :)
- இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-) 1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்...
- உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா? **************************************** *...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்... மனிதராக வாழத்தான் அதிக...
- ஆம்புலன்ஸ்சை பாத்தவுடனே ஒதுங்கி நிக்கிறவன் வெளிநாட்டுக்காரன்... ஆம்புலன்ஸ் பின்...
- எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காத அன்பு தான் மேலானது..!! <3
- :)
- விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்...
- நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவர...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒரு வெற்றியின் போது உலகம் நம்மை பற்றி தெரிந்து கொள்கிறது .ஒரு...
- தோல்வி தரும் வலி(மை) உணரப்படாத இதயங்களில் வெற்றி வாழ்வதில்லை.. (Y)
- :)
- படித்ததில் மிகமிக சிரித்தது: இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒர...
- படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்க...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கேள்வி கேட்கிறது ரொம்ப சிம்பிள்... பதில் சொல்றது ரொம்பக் கஷ்ட...
Posted: 02 Nov 2014 08:31 AM PST |
Posted: 02 Nov 2014 08:15 AM PST யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது. இனி யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உன் தலையினை நீயே வருடிக்கொடு உன் தோள்களை நீயே தட்டு உன் திறமைகளை நீயே பாராட்டு.. உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை. தோல்விகளை கண்டு அஞ்சாதே வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே முதலில் உன்னை வென்று பின் உலகை வெல்ல வா.... உடலில் உயிரும் உணர்வில் துணிவும் இருக்குவரை போராடு... உன் எதிரிகளின் மூக்குகளை உன் நம்பிக்கைகளால் உடை நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல உன் கால்களைக்கொண்டு....! (y) (y) Relaxplzz |
Posted: 02 Nov 2014 08:00 AM PST இதை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே ( இது மிக மிக முக்கியமான பதிவு) தமிழர்கள் நன்றாக படித்து தெரிந்து கொள்ளவும் அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள் ஏற்றுகொள்ளுங்கள் இதை உங்கள் நண்பர்களிடம் மற்றும் உங்கள் உறவினர்களிடம் கூறவும் ..... அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!) நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் "எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்" எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் 'அரேபியாவில் ஆடு மேய்த்தவன்' என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்.. "திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்" கொடுத்தேன். 'வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்' என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன். அவரும் 'என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.'என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. 'இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..' என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். 'உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.' என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு. 'எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..' என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து 'மேய்ச்சுட்டு வா..' என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார். மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து 'போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்' என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன். அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன். "எதுக்கு அடிச்சீங்க-?' என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, 'ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்' என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன். ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது. அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும். மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. 'எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே' எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன். என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் 'வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்' என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது. இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். 'என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..' என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன். ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம். டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது. நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்" எனப் பீடிகையோடு தொடர்ந்தார்.. "தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்.." என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்.... நன்றி நண்பர்களே .... Thanks to Mr. Rajeev Rajan. Relaxplzz ![]() "முகங்கள்" |
Posted: 02 Nov 2014 07:50 AM PST கவித.... கவித... ♥ விக்கல் வரும்போதெல்லாம் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்லதெல்லாம் பொய்...! அது உண்மையாக இருந்திருந்தால் என் காதலி விக்கியே செத்திருப்பாள்.. ;-) ;-) Relaxplzz |
Posted: 02 Nov 2014 07:40 AM PST |
Posted: 02 Nov 2014 07:30 AM PST |
Posted: 02 Nov 2014 07:15 AM PST நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P . டாக்டர், என் வலது கால் முட்டி ரொம்ப வலிக்குது. என்ன செய்வது என்றே தெரியல டாக்டர்: வயசாகுது இல்லையா? எலும்புகள் தேமானம் அடைவதால் வழி இருக்க தான் செய்யும். கவலைப்பட வேண்டாம். இடது காலுக்கும் அதே வயசு தானே ஆகுது? அது வலிக்க வில்லையே? எப்படி?????!!!???? டாக்டர்: :O :O :O # இப்ப பதில் சொல்லுங்க.. நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P Relaxplzz |
Posted: 02 Nov 2014 07:00 AM PST கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.தன் மேல்துண்டால் துடைத்து விட்டு, "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார், "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார், "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?" Relaxplzz ![]() |
Posted: 02 Nov 2014 06:50 AM PST ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்? மாணவன்: "இரும்பு" ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?" மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் " ஆசிரியர் :???? :O :O Relaxplzz |
Posted: 02 Nov 2014 06:40 AM PST |
Posted: 02 Nov 2014 06:30 AM PST |
Posted: 02 Nov 2014 06:15 AM PST பேச்சுலர் to குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள். 2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும். 3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள். 4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும். 5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது. 6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள். 7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள். 8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும். 9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள். 10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும். Relaxplzz |
Posted: 02 Nov 2014 06:00 AM PST மனுஷன்டா :) (y) ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது? நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், 'எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்ல'னு கேப்பாங்க. உடனே, 'என் மனசு புண்படும் கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்ல'னு திருப்பிக் கேட்டுடுவேன். இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது 'ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சு சிரிச்சுட்டார்'னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். 'இல்ல சார் சிரிச்சிடுங்க'னு விடாப்பிடியா நிப்பாங்க. 'சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?'னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனசாட்சியை ரொம்ப உறுத்தும்! - விகடன் மேடை Relaxplzz ![]() |
Posted: 02 Nov 2014 05:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பசித்திரு... தனித்திரு... விழித்திரு... இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதலெழுத்தும் ஆன "பதவி" நிச்சயம்... Relaxplzz |
Posted: 02 Nov 2014 05:37 AM PST பெற்ற பிள்ளைகளிடம் தங்கப்பதக்கம் சிவாஜி கணக்காக விறைப்பாக நடந்து கொள்பவர்களை காமெடி பீஸாக்குவதற்கென்றே பிறப்பெடுக்கின்றன பேரப்பிள்ளைகள் !!. - Kali muthu. ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2 |
Posted: 02 Nov 2014 05:30 AM PST |
Posted: 02 Nov 2014 05:15 AM PST இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-) 1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை. 2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்.. 3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு 4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க 5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்.. 6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!! 7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும் 8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும். - களவாணிபய. Relaxplzz |
Posted: 02 Nov 2014 05:00 AM PST உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா? **************************************** **படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள். **தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் **இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள். **அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள். **வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள். .**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு. **ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள். **எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள். **சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். **குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள். **ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள். **குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள். **படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள். Relaxplzz ![]() |
Posted: 02 Nov 2014 04:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்... மனிதராக வாழத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது !! - Kali muthu |
Posted: 02 Nov 2014 04:50 AM PST ஆம்புலன்ஸ்சை பாத்தவுடனே ஒதுங்கி நிக்கிறவன் வெளிநாட்டுக்காரன்... ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா சீக்கிரம் போயிடலாம்னு கண்டுபிடிச்சவன் நம்மூர்க்காரன்... - Salem S N Arul |
Posted: 02 Nov 2014 04:40 AM PST |
Posted: 02 Nov 2014 04:30 AM PST |
Posted: 02 Nov 2014 04:15 AM PST விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. அவரும் யாரையாவது பிடித்து உலுக்கிக் கேள்விகள் கேட்கிறார். அறிவுத் திருட்டு குற்றம்தான், இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் சில அடிப்படையான கேள்விகள்: - அத்துமீறி ஒருவரின் இடத்தில் நுழைவதும் அவரை அடா புடா என்று ஏசுவதும் சட்டப்படி குற்றம். அவர் குற்றமற்றவராக இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? - திருட்டு விசிடி விற்பவர் சட்டத்தை மீறுகிறார் என்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சட்டத்தை மீறுவோம் என்ற போட்டியா? - காவல் துறை என்ன செய்கிறது? ஒவ்வொருவரும் தாங்கள் சந்தேகப்பட்ட நபரின் வீட்டுக்குள் அல்லது கடைக்குள் நுழைந்து சோதனையிடத் தொடங்கலாமா? குறைந்த பட்சம் நான் பார்த்த வீடியோவில் காவல் துறையைச் சார்ந்த யாரும் இல்லை. இந்த செயல்களை அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய மதிப்பைத் தானே தாழ்த்திக் கொள்கிறது காவல் துறை. - கடையில் டிவிடி வாங்கிப் பார்ப்பவர்களை விட டோரண்டுகள் மூலம் தரவிறக்கிப் பார்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? பெரும்பாலான படங்கள் பென் டிரைவ்களில்தான் சுற்றுகின்றன. - இந்த வேகத்தை, உணர்ச்சியை சேரன், கமல் போன்றவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்குப் பின் நிற்பதிலும் காட்டலாமே? எனக்கென்னவோ அவர்கள் செய்வது தொலைநோக்குள்ள முயற்சியாகத் தெரிகிறது. ஆனால் இது போன்ற நேரங்களில் அவர்கள் திட்டமிட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதன் பின்னணியிலும் திரைத்துறையினரே இருக்கிறார்கள். ரிஸ்க்தான், சில தலைகள் உருளும்தான். ஆனால் எந்த மாற்றமுமே அப்படித்தான். - ஆங்கிலப் படங்கள், பிற மொழிப்படங்கள், பாடல்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து பிறகு ரூம் போட்டு யோசித்த மாதிரி திரைத்துறையைச் சார்ந்தவர்களே கூச்சமின்றி பேசும்போது பைரசி ஒரு குற்றம் இல்லை என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கிறார்கள். மக்களின் நேர்மையைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில் திரைத்துறையும் தன்னை அலசிக் கொள்வது அவசியம். - தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அதை அரவணைத்துத் தொழில் செய்வது புத்திசாலித்தனம். படங்கள் ஒரே நேரத்தில் டிவிடி, டிடிஎச், ஐடியூன்ஸ், ப்ளே ஸ்டோர் என்று வெளியானால் குறைந்த விலையில் அனைவரும் காண வழி கிடைக்கும். திருட்டி விசிடிகள் தேவை குறைந்து தானாக ஒழியும். இப்போதைக்கு முப்பதாண்டு பழைய சடங்கு ஒன்றை வலிந்து திணிக்கும் முயற்சிதான் இங்கே நடக்கிறது. மாற்று முயற்சிகள் தியேட்டர் லாபிகளால் முடக்கப்படுகின்றன. - ஷான். Relaxplzz |
Posted: 02 Nov 2014 04:00 AM PST நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.. பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருக்கீங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்... அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன். முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி.. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா??? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்... இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்... என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்... அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை! Relaxplzz ![]() |
Posted: 02 Nov 2014 03:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒரு வெற்றியின் போது உலகம் நம்மை பற்றி தெரிந்து கொள்கிறது .ஒரு தோல்வியின் போது நாம் உலகை பற்றி தெரிந்து கொள்லாம்:) #களவாணி பய |
Posted: 02 Nov 2014 03:40 AM PST |
Posted: 02 Nov 2014 03:30 AM PST |
Posted: 02 Nov 2014 03:15 AM PST படித்ததில் மிகமிக சிரித்தது: இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ? எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும். இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்?? எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன? எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன . பிடித்திருந்தால் பகிரவும் Relaxplzz |
Posted: 02 Nov 2014 03:00 AM PST படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் : *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது. *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும். *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். *ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. *காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். *நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். *காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும். *சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது. *சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். *முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும். *தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும். Relaxplzz ![]() |
Posted: 02 Nov 2014 02:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கேள்வி கேட்கிறது ரொம்ப சிம்பிள்... பதில் சொல்றது ரொம்பக் கஷ்டம்... இதை ஊட்டம்மாக்கள் புரிஞ்சுக்கிட்டா இந்நாள் மட்டும் இல்லை எந்நாளும் கணவர்களுக்கு நந்நாள் ஆகும்... - சதீஷ் குமார் தேவகோட்டை |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment