Wednesday, 19 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகிய தேவதை <3

Posted: 19 Nov 2014 09:40 AM PST

அழகிய தேவதை ♥


(y) Relaxplzz

Posted: 19 Nov 2014 09:30 AM PST

அழகு

Posted: 19 Nov 2014 09:20 AM PST

அழகு


:P :P

Posted: 19 Nov 2014 09:10 AM PST

:P :P


ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வல...

Posted: 19 Nov 2014 09:00 AM PST

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக்
கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர்.

அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில்எப்படி வந்தது என்பதை, பல
கேள்விகள் கேட்டு, டாக்டர்ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்"கப்'களில், டீ,காபி குடிப்பது வழக்கம்!அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில்மெழுகு அதிகமாகி,
வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்
டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில்
பெரும்பான்மையான அலுவலகக்
கேன்டீன்களில், "பேப்பர்
கப்'களை பயன்படுத்தி வருகின்றனர்.
மலிவான, தரம் குறைந்த
காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ,திரவத்தாலோ கரைந்து விடக்கூடாது என்பதற்காக, அதன்
உட்புறங்களில்,மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில்,
மிக சூடான, டீயோ,காபியோ நிரப்பப்படும் போது, அந்த
வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும்
மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன்
கலந்து, நம் வயிற்றுக்குள்
சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல
உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு,
கண்ணாடி அல்லது செராமிக்
"கப்'களே சிறந்தவையாகக்
கருதப்படுகின்றன.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர்
களையும் உபயோகிக்கலாம்.
ஆனால், எந்த நிலையிலும்
பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான,
"கப்'களை உபயோகிக்க கூடாது.
இல்லையேல்,ஆரோக்கியத்தை பலிகொடுக்கவேண்டி வரும்...'
என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள்,
விலை மதிப்பில்லாதது;
அனைவரும் அதை பின்பற்ற
வேண்டும்.
தயவு செய்து இதை அதிகம் ஷேர்
செய்யுங்கள்......
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட
காப்பாற்றலாம்...

Relaxplzz


குழந்தை பிறந்து மெல்ல தவழ்ந்து முட்டி போட்டு மெதுவா நடக்க ஆரம்பிக்கும் போது வரதை...

Posted: 19 Nov 2014 08:50 AM PST

குழந்தை பிறந்து மெல்ல தவழ்ந்து முட்டி போட்டு மெதுவா நடக்க ஆரம்பிக்கும் போது வரதை விட அது கொஞ்சம் கொஞ்சமா மழலை பேசிகிட்டே நம்மகிட்ட கேள்வி மேல கேள்வியா கேட்க ஆரம்பிக்கும் பாருங்க......

அப்ப ஒவ்வொரு தந்தைக்கும் வருமே ஒரு பீலிங்..................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இனி ரெண்டு பேரைச் சமாளிக்கணுமே.........

:P :P

Relaxplzz

மூளைக்கொரு வேலை

Posted: 19 Nov 2014 08:40 AM PST

மூளைக்கொரு வேலை


:) Relaxplzz

Posted: 19 Nov 2014 08:30 AM PST

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு #மனிதன் இறந்து விட்டான் !.அவன் அதை உணரும் போது...

Posted: 19 Nov 2014 08:15 AM PST

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு #மனிதன் இறந்து விட்டான் !.அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் #கடவுள் அவன் அருகில் வந்தார்.

#கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.........
"
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

Relaxplzz

விவசாயியாக நடிக்கலாம்- உன்னால் விவசாயம் தழைக்காது - நீ கடவுளாக நடிக்கலாம்...அதனா...

Posted: 19 Nov 2014 07:56 AM PST

விவசாயியாக நடிக்கலாம்- உன்னால்
விவசாயம் தழைக்காது - நீ
கடவுளாக நடிக்கலாம்...அதனால்
காவிரி இணை(நனை)யாது

பற்றற்றவனாக நடிக்கும்பொழுதுகூட -நீ
பணமில்லாமல் நடித்ததில்லை.
ஏழையாக நடித்தபோதுகூட
ஏழ்மையை நீ உணர்ந்ததில்லை.

பத்துபேரை அடிப்பதாக நடிக்கிறாய்...
ஆள்படையோடுதான வீதியைக்கடக்கிறாய்
கொடைவள்ளலாக நீ நடிக்கலாம்
மக்கள் கையேந்தியாக நடிக்கமுடியுமா?

உன் கனவை நீ காண்பதற்கே
அடுத்தவன் சொல்லவேண்டும் உனக்கு
Start....Action...
போகட்டும்
தமிழ்நாட்டுக்கும் உனக்கும் என்னப்பா
connection....

#மக்களுக்கு_புரியும்_நீ_யார்_என்று

Maesa Kadhambari @ Relaxplzz


"என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம...

Posted: 19 Nov 2014 07:50 AM PST

"என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது"
---------2004--ம் வருடம் ஆனந்த விகடனிற்கு அளித்த பேட்டியில் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.இப்போ 2014.....

10 வருடங்கள் கடந்த பின்பும் ரஜினிக்கு "தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று எந்த எண்ணமும் ஏனோ வரவில்லை.....?

இந்த ஒரு தகுதியே போதும் ரஜினி அரசியலுக்கு வர...... ;-)

நல்ல சிவம் @ Relaxplzz

:P :P Relaxplzz

Posted: 19 Nov 2014 07:40 AM PST

:P :P Relaxplzz


(y) (y) Relaxplzz

Posted: 19 Nov 2014 07:30 AM PST

(y) (y) Relaxplzz


தனிமனித வாய்மையை வளர்க்கும் பத்துப் பண்புகள் : தமிழ்மொழியே தாய்மொழியாக கொண்ட பத...

Posted: 19 Nov 2014 07:15 AM PST

தனிமனித வாய்மையை வளர்க்கும் பத்துப் பண்புகள் :

தமிழ்மொழியே தாய்மொழியாக கொண்ட பதினெண் சித்தர்கள், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய பேச்சில்

அன்பும்,
எளிமையும்,
கனிவும்,
நேர்மையும்,
உண்மையும்,
திண்மையும்,
அடக்கமும்,
பொறுமையும்,
பணிவும்,
நன்நாடலும் நிறைந்திருக்குமாறு செயல்படல் வேண்டும்.

இப்பத்துப் பண்புகளே தனிமனித வாய்மையை வளர்ப்பன தெரிந்துக்கொள்வோம்.
விந்தையான சிந்தனைகள்...

1) "நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே"

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

8) "ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!"

9) வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும..

Relaxplzz

கம்ப்பூட்டர் பயன்படுத்தும் மின்சாரம் மிச்சப்படுத்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக்...

Posted: 19 Nov 2014 07:00 AM PST

கம்ப்பூட்டர் பயன்படுத்தும் மின்சாரம் மிச்சப்படுத்த

கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், சில வேளைகளில், அப்படியே விட்டுவிட்டு வேறு வேலை களுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கம்ப்யூட்டர் அதிக நேரம் பயன்படுத்தப்படப் போவதில்லை என்று எண்ணினால், அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து, மின்சக்தி வீணா வதனைத் தடுக்கலாம்.

For Windows Xp

நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி , எனில், ஸ்லீப் மோட் (Sleep mode/Standby) என்ற வகையில் அதனை அமைக்கலாம். இன்னும் கூடுதலாக மின்சக்தியை மிச்சப்படுத்த, ஹைபர்னேஷன் (hibernation) என்னும் நிலைக்கு மாற்றலாம்.

இந்த இரண்டு நிலையிலும் மின்சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும், திரும்ப பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து இயக்க முற்படுகையில், எங்கு எந்த புரோகிராம்களைத் திறந்திருந் தோமோ அந்த நிலையிலும், எந்த பைலில் எங்கு பணியாற்றிக் கொண்டிருந்தோமோ அந்த இடத்திலும் நமக்குக் கம்ப்யூட்டர் இயக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.

Sleep mode நிலையில் மின்சக்தி மிச்சப் படுத்தப்பட்டாலும், உங்கள் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் உள்ளது. விண்டோஸ் சிஸ்டம், அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ராம் மெமரியில் இருக்கும் அப்போது திறந்து வைக்கப்பட்டுப் பணியில் இருக்கும் பைல்கள் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் வைத்திட, மின்சக்தி தேவைப்படுகிறது. ஆனால், ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் hibernation நிலையில் வைக்கப்படுகையில், சிஸ்டமானது ராம் நினைவகத்தில் உள்ள அனைத்தையும் ஒரு பைலில் காப்பி செய்து, ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. பின்னர், கம்ப்யூட்டரை முழுவதுமாக ஷட் டவுண் செய்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலை, கூடுதலாக மின்சக்தியை சேமிக்கிறது. ஆனால் சற்று மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது. இன்றைய காலத்திய பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்லீப் நிலைக்குச் செல்வதும், மீண்டும் இயக்கத்திற்கு வருவதும், சொடக்குப் போடும் நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹைபர்னேட் ஆவதற்கு ஏறத்தாழ அரை நிமிட நேரமும், மீண்டும் செயல்பாட்டிற்கு அதிலிருந்து வருவதற்கு அரை நிமிட நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மிக அதிக நேரம் நிறுத்திவைத்திடப் போவதாக இருந்தால், ஹைபர்னேஷன் நிலையிலும், குறைவான நேரமே இயக்காமல் இருக்கப் போவதாக இருந்தால், ஸ்லீப் நிலையிலும் கம்ப்யூட்டரை வைப்பது நல்லது.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், டெஸ்க்டாப் திரையில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Hibernate டேப்பில் கிளிக் செய்து Enable Hibernation. என்பதில் டிக் அடையாளத் தை ஏற்படுத்தவும். அடுத்து Apply பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்ததாக Power Schemes டேப்பில் கிளிக் செய்து standby மற்றும் hibernate ஆப்ஷன்களையும் காணலாம்.

For Windows 7 and Vista.

நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால், ஸ்டார்ட் கிளிக் செய்து Power என டைப் செய்திடவும். அடுத்து Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இடதுபுறப் பிரிவில், Choose when to turn off the display என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep ஆப்ஷன் இருப்பதனைப் பார்க்கலாம். ஹைபர்னேஷன் பற்றி எதுவும் இருக்காது. எனவே Change advanced power settings என்பதில் கிளிக் செய்திடவும். "Sleep after" மற்றும் "Hibernate after" ஆகிய ஆப்ஷன்களைப் பெற Sleep பிரிவை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம்.

Relaxplzz


தகவல் தொழிநுட்பம்

அப்பாவாக அண்ணனாக தம்பியாக தோழனாக ஆசானாக கணவனாக மகனாக என ஒவ்வொரு கோணத்திலும் பெண...

Posted: 19 Nov 2014 06:50 AM PST

அப்பாவாக
அண்ணனாக
தம்பியாக
தோழனாக
ஆசானாக
கணவனாக
மகனாக
என ஒவ்வொரு கோணத்திலும்
பெண் வாழ்வில் பயணம் செய்யும்!
ஆண்கள் தின வாழ்த்துக்கள்..!!!

Kali Muthu @ Relaxplzz


ஹா ஹா :P :P

Posted: 19 Nov 2014 06:40 AM PST

ஹா ஹா :P :P


அழகிய கத்தாளை செடி

Posted: 19 Nov 2014 06:36 AM PST

அழகிய கத்தாளை செடி


சும்மா... சும்மா... 1

Relaxplzz

Posted: 19 Nov 2014 06:30 AM PST

நம்மாளு ஒருத்தரு குடும்பத்தோட கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு கிளம்பினார். ஆனால...

Posted: 19 Nov 2014 06:15 AM PST

நம்மாளு ஒருத்தரு குடும்பத்தோட கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு கிளம்பினார்.

ஆனால், அதுல‌ ஒரு பிரச்னை.. அவர்களின் பசு மாட்டை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக சிலரை அணுகி, மாட்டை பார்த்துக்கச் சொல்லி கேட்டார்.

ஒருவர், "10 நாளைக்கு 300 ரூபாய் பணம் கொடு.. அதோட, சாணியையும் வறட்டிக்காக நான் எடுத்துப்பேன்.. சம்மதம்ன்னா விட்டுட்டு போ..!" என்றார்.

இது அதிகமாகப் பட, இன்னொருவரை அணுகினார் நம்ம ஆள்.
"எனக்கு 200 ரூபாய் கொடு.. சாணியும் வேணும்.. நான் பாத்துக்கறேன்..!" என்றார் அவர்.

இதற்கும் நம்ம ஆளு சம்மதிக்கவில்லை.
வெகுநேரம் வெவ்வேறு ஆட்களை வேண்டிப் பார்த்தார்.

இறுதியாக, ஓமகுச்சி நரசிம்மன் போல ஒரு ஆள் சிக்கினான்..
"50 ரூவா கொடுங்க சாமி.. நான் கவனிச்சுக்கறேன்..!"ன்னான் அவன்.

"வெரி குட்.. இந்தா 50 ரூவா.. இன்னொன்னு.. சாணியைக் கூட நீயே எடுத்துக்கலாம்" என்றார் நம்ம ஆள்.

அதுக்கு அவன் சொன்னான்,
"அதுக்கு அவசியமே வராது சாமி.. 50 ரூவாதானே கொடுத்திருக்கீங்க...! மாடு சாணியெல்லாம் போடாது..!!"

புரிஞ்சவங்க ஷேர் பண்ணுங்க... ;-) ;-)

Relaxplzz

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம் …இன்று ATM பயன்படுத்துபவ...

Posted: 19 Nov 2014 06:00 AM PST

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்

…இன்று ATM பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் பணத்தை கத்தை கத்தையாக வைக்காமல், பாதுகாப்பாக வங்கியில் சேமித்துவைத்து, வேண்டும்போது அதை எடுத்துக்கொள்ளும் எளிமையான வசதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ATM மெஷின்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ATM மெஷின்களிலும், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, திருட்டுதனமாக போலியான ATM CARD களைப் பயன்படுத்தி பிறர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுத்துவிடும் சாமர்த்திய சாலிகள், தொழில்நுட்ப திருடர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இந்த படத்தில் கைரேகையைக் கொண்டு எப்படி ATM கண்டுணர்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ..

இனி அதுபோல் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை போலியாக ATM CARD பயன்படுத்தி எடுக்க முடியாது.

ஜப்பானில் இதைத் தவிர்க்கும்பொருட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வசதிக்கு பெயர் Palm Scanning ATM.
இயற்கையில் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பது கைரேகைகள்தான்..

எனவேதான் பிரபல குற்றவாளிகளின் கைரேகை அடங்கிய ரெக்கார்ட்களை காவல்துறை சேகரித்து வைத்திருக்கிறது. ஏதேனும் குற்றம் நடந்தால், உடனே கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரிப்பது இதற்காகத்தான். இயற்கையின் இந்த அற்புத படைப்பை இனி ATM க்கும் பயன்படுத்த முடியும்.

இதனால் உரியவர் தவிர மற்றவர்கள் யாரும் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது. ATM சென்று உங்கள் கைரேகையை பதியும்போது Scanning நடைபெற்று, உரியவர் நீங்கள்தான் என்று உறுதிப்படுப்பட்ட பின்னரே உங்களுக்கு பணம் கிடைக்கும். பயோமெட்ரிகல் தொழில்நுட்பத்தில் (Bio-metric technology) இது செயல்படுகிறது.

இனிமேல் ATM CARD எடுத்துவரவில்லையே, ATM கார்டு தொலைந்துவிட்டதே என்ற கவலையே உங்களுக்கு இல்லை…

இந்த வசதியை ஜப்பானில் உள்ள Regional Bank ஆரம்பித்திருக்கிறது. இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக போகிறது.

பார்வையற்றோருக்கான ATM வசதி
ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி இந்த வசதியை அந்நாட்டில் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பார்வையற்றோருக்கான குரல் உணரி மூலம் இந்த வசதியை உருவாக்கியுள்ளது.

ATM சென்று அங்குள்ள பெரிய ப்ரெய்லி கீபோர்ட், பெரிய, நல்ல ரீசொல்யூசன் கொண்ட திரை, பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வித்ததில் அமைந்த தடிமனான எழுத்துகள், மற்றும் HEAD PHONE, SPEAKER ஆகியவற்றைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

ஷார்ஜாவில் பார்வையற்றவர்களுக்கான Emirates Association தலைமையகத்தில்தான் இத்தகைய அரிய ATM அமைக்கப்பட்டுள்ளது.

Relaxplzz


ஒத்துவராது என விலகியதைக் காட்டிலும் சண்டைப் போட்டுக்கொண்டேனும் சேர்ந்தே இருந்திர...

Posted: 19 Nov 2014 05:47 AM PST

ஒத்துவராது என
விலகியதைக் காட்டிலும்
சண்டைப்
போட்டுக்கொண்டேனும்
சேர்ந்தே இருந்திருக்கலாம்...

- Jessie James


அன்பியல் - 1

Relaxplzz

Posted: 19 Nov 2014 05:30 AM PST

காமராசருக்கு பிறகு ரஜினையைப் பார்க்கிறேன் -சேரன் #இதுல இருந்து, காமராசரை நீ பா...

Posted: 19 Nov 2014 05:22 AM PST

காமராசருக்கு பிறகு ரஜினையைப் பார்க்கிறேன் -சேரன்

#இதுல இருந்து, காமராசரை நீ பார்த்தது இல்லைங்கிறது மட்டும் தெளிவா தெரியுது டோய்..

- Jeba Pon Selvasingh

90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடு...

Posted: 19 Nov 2014 05:15 AM PST

90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர்
இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது.....

திடீர்னு... சொன்னா ஒருவேளை ...அதிக சந்தோஷத்துல ..." பொசுக்குன்னு போய்ட்டார்னா " யோசனை செஞ்சு பாத்துட்டு...ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

விசயத்தை கேட்ட டாக்டர் " ஒ...அவ்வளவுதானே.. ...நீங்க ஒண்ணும்... கவலைப் படாதீங்க நா.... பாத்துக்கிறேன் " எப்புடி...அவர பக்குவமா...பேசி...நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க....பேசி மடக்குரதுலே...நான் ..பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...

ஊர்க்கதை எல்லாம்..பேசிட்டு மெல்லமா "ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்....உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன ...பண்ணுவீங்க.... "

அதுக்கு அந்த வயசானவர், என்ன...டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க...
நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா ...உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை...தூக்கி குடுப்பேன்..."

படார்னு ஒரு...சத்தம்...இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.

:P :P

Relaxplzz

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்... ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை...

Posted: 19 Nov 2014 05:00 AM PST

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Relaxplzz


இறைவனால் ஏமாற்றப்பட்டவர்கள்...

Posted: 19 Nov 2014 04:45 AM PST

இறைவனால் ஏமாற்றப்பட்டவர்கள்...


(y) Relaxplzz

Posted: 19 Nov 2014 04:30 AM PST

புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க...

Posted: 19 Nov 2014 04:15 AM PST

புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க" என்பார்கள்.

"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?

இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

1.உடலில் நோயின்மை,

2.நல்ல கல்வி,

3.தீதற்ற செல்வம்,

4.நிறைந்த தானியம்,

5.ஒப்பற்ற அழகு,

6.அழியாப் புகழ்
,
7.சிறந்த பெருமை,

8.சீரான இளமை,

9.நுண்ணிய அறிவு,

10.குழந்தைச் செல்வம்,

11.நல்ல வலிமை,

12.மனத்தில் துணிவு,

13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),

14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,

15.நல்ல ஊழ்(விதி),

16.இன்ப நுகர்ச்சி.

இதுவே பதினாறு செல்வங்களாகும்.

Relaxplzz

தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம். “தமிழன் பேசிப் பேசி...

Posted: 19 Nov 2014 04:00 AM PST

தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.

"தமிழன் பேசிப் பேசியே கெட்டான்"
"பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்"
"தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்"
"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்"
இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.
இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா?
இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். "பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்" என்பது வடிகட்டிய பொய். "பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.

Relaxplzz


0 comments:

Post a Comment