Relax Please: FB page daily Posts |
- ஆபிஸ்ல ஒரு பையனுக்கு மெட்ராஸ ஐ வந்துச்சு, யாருக்கும் பரவவில்லை. ஒரு பொண்ணுக்கு...
- மொபைல் போன் உபயோக அறிவுரை...! 1..முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவல...
- ''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் த...
- மூளைக்கொரு வேலை
- :)
- இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... தோசை கல்ல...
- ஒரு தனியான அழகிய சிறு தீவில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் விட்டால் என்ன நடக்கும...
- செல்போன் அதிகமானவர்கள் உபயோகிப்பதால் விலை குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க... அப்பற...
- அழகாய் சிரிப்பது ஒரு கலை சிரிப்பை அழகாக்குவது ஒரு கலை இரண்டாம் கலையின் தேவதைகளி...
- வெங்காயம் வெட்டினால் ஏன் #கண்ணீர் வருகிறது தெரியுமா..."?? இதோ விளக்க கதை உங்களு...
- அதிர்ச்சியான...ஆச்சர்யமான ஒரு நிகழ்வு! லண்டனில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பெண்...
- ரஜினி சார் நீங்க சி.எம் ஆகணும் - #அமீர் #என்னையும் மதிச்ச்சு... :P :P - Kali...
- :)
- ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!! “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பா...
- இந்த பேஸ்புக் பல விசித்திரமான விஷயங்களை துவைத்து காய போட்டுள்ளது.. அந்த வகையில்...
- டீனேஜில்....... எங்க பாட்டி என்அம்மாவிடம் சொன்னது...'ஆம்பள பசங்க கிட்ட பேசற வேல...
- :)
- கடவுளை மனிதன் கேட்டான்..! பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க... ஆனா பெண்டாட்டி...
- "FRIENDS PLEASE SHARE" வெளிநாட்டு சாவு:- சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிண...
- முதியோர் இல்லத்தையும் அனாத இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.பாட்டி தாத்தாவு...
- :)
- யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா...? 1. ஒருவரது வயது, 2. பணம் க...
- பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி...
- யோகா குரு "பாபா ராம்தேவ்" க்கு இசட் பிரிவு பாதுகாப்பு - அரசு அறிவிப்பு ;-) - நி...
- நம் குழந்தைகளுக்கு #உலக அறிவையும் #தமிழ்நாட்டு பண்பையும் #தமிழ் மண்ணின் கலாச்சார...
- :)
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P "என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்...
- எது நிர்வாணம் ஆண்டவன் மனித இனத்தைப் படைத்தபோது ஆடையோடா படைத்தான் அவனுக்கு நிர்வ...
Posted: 18 Nov 2014 09:10 AM PST |
Posted: 18 Nov 2014 09:00 AM PST மொபைல் போன் உபயோக அறிவுரை...! 1..முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசி கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும் 2.நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. 3.குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். 4.பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும். 5.போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 08:50 AM PST ''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் தப்பிச்சிட்டேன்.'"!! . . . . ''ஆச்சரியமா இருக்கே,எப்படி?'' . . . . . . . . .. .. . . . . . .. . . ''நான் விழுந்தது ஏணியின் இரண்டாவது படியிலிருந்து தானே!'' :P :P Relaxplzz |
மூளைக்கொரு வேலை Posted: 18 Nov 2014 08:40 AM PST |
Posted: 18 Nov 2014 08:30 AM PST |
Posted: 18 Nov 2014 08:15 AM PST இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்.. வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது.. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது.. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி.. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்.. ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்.. இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி. பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ... # டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம Relaxplzz |
Posted: 18 Nov 2014 08:03 AM PST ஒரு தனியான அழகிய சிறு தீவில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் விட்டால் என்ன நடக்கும் என்பதை அறியும் முயற்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக பல தீவுகள் தெரிந்தெடுக்கப்பட்டு அங்கு வேறு வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணையும் இரு பெண்களையும் தனியாக வாழும் படி சொல்லி விட்டு ஒரு மாதம் கழித்து அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் கண்டவை: 1. இத்தாலியர்கள் இருந்த தீவில் ஒரு ஆண் மற்ற ஆணைக் கொன்று விட்டு பெண்ணுடன் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தான். 2. பிரெஞ்சு நாட்டவர்கள் இருந்த தீவில் Ménage à trois மூவர் குடித்தன உடன்பாட்டின் படி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். 3. பிரித்தானியர்கள் இருந்த தீவில் யாரை யாருக்கு யார் அறிமுகம் செய்வது என்ற தயக்கத்தில் மூவரும் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். 4. கிரேக்கர்கள் இருந்த தீவில் இரு ஆண்களும் ஒன்றாக "குடித்தனம்" நடத்தினார்கள். பெண் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள். 5. ஜேர்மனியர்கள் தங்களுக்குள் ஒரு கால அட்டவணையைத் தயாரித்து அதன்படி பெண்ணுடன் மாறி மாறி "வாழ்ந்து" கொண்டிருந்தனர். 6. அரபு நாட்டு ஆண்களில் ஒருவன்மற்றவனுக்குப் பெரும் பணம் கொடுத்து பெண்ணைத் தனதாக்கி "வாழ்ந்து" கொண்டிருந்தான். 7. அமெரிக்கர்கள் மூவரும் அந்தத் தீவில் என்ன என்ன கனிம வளங்கள் இருக்கின்றன அதை எங்கு எப்படி ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வப்போது யாரு "மூட்" வருகிறதோ அவர்கள் "அனுபவித்தனர்". 8. இலங்கைத் தமிழன் தனது தங்கையின் திருமணத்திற்கு எப்படி காசு சேர்ப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். 9. இந்தியர்கள் தமது பெற்றோர்கள் வந்து வரதட்சணை மற்றும் சாதி பற்றி பேசி முடிவு செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர். # படித்ததில் உரைத்தது # Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 18 Nov 2014 07:50 AM PST செல்போன் அதிகமானவர்கள் உபயோகிப்பதால் விலை குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க... அப்பறம் ஏண்டா அரிசி பருப்பு விலையெல்லாம் குறையமாட்டேங்குது??? இதை சொன்னா என்னைய பைத்தியக்காரன்னு சொல்றானுங்க சில்லி பீப்பிள்ஸ் ;-) ;-) |
Posted: 18 Nov 2014 07:48 AM PST அழகாய் சிரிப்பது ஒரு கலை சிரிப்பை அழகாக்குவது ஒரு கலை இரண்டாம் கலையின் தேவதைகளின் தேவதை அவள்.!!" # மகளெனும் தேவதை # ![]() # மகளெனும் தேவதை # |
Posted: 18 Nov 2014 07:30 AM PST |
Posted: 18 Nov 2014 07:15 AM PST வெங்காயம் வெட்டினால் ஏன் #கண்ணீர் வருகிறது தெரியுமா..."?? இதோ விளக்க கதை உங்களுக்காக :- ஒரு ஊர்ல வெங்காயம், தக்காளி, கேரட், மூனும் நண்பர்களா இருந்துச்சாம்...? ஒரு நாள் மூவரும் கடற்கரைக்கு குளிக்க போச்சாம்..."! போனஇடத்துல சொல்ல சொல்ல கேட்காம தக்காளி" தண்ணியில சொருகள் போட்டுச்சாம்...! அங்க இருந்த சங்கு'ல மோதி தக்காளி இரண்டா பிழந்து செத்துப்போச்சாம்..."!! இத பாத்த கேரட்டும்,வெங்காயமும், அங்க பெரண்டு பெரண்டு அழுதுச்சிங்களாம்...! அப்பரம் வீட்டுக்கு போகற வழியில லாரியில அடிபட்டு" கேரட்" டும் நசுங்கி செத்துப்போச்சாம்..."!! உடனே " வெங்காயம்"அழுதுகிட்டே கடவுள் கிட்ட போய் " தக்காளி செத்தப்ப நானும் கேரட்டும், சேர்ந்து அழுதோம்...? இப்ப கேரட் செத்தப்ப நான் அழுதேன்..."? ஆனா நான் நாளைக்கு செத்தன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு அழுதுச்சாம்..."! உடனே கடவுள்..." சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் உன் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்..."!! அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருது...!! (ஆமா வெங்காயம் அருக்காமையே உங்க கண்ணுல இருந்து ஏன் இப்ப தண்ணிவருது...?) #அழாதீங்க_ப்ளீஸ்...(( :P :P Relaxplzz |
Posted: 18 Nov 2014 07:00 AM PST அதிர்ச்சியான...ஆச்சர்யமான ஒரு நிகழ்வு! லண்டனில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் தன் குழந்தைக்கு மார்பை மறைக்காமல் பால் கொடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அங்குள்ள ஹோட்டல் டேபில் துடைக்கும் வேலை செய்யும் பணியாளர் ஒருவர்,தான் துடைத்த அந்த துணியை பால் கொடுக்கும் அந்த பெண்ணிடம் கொடுத்து,'இந்த துணியால் மறைத்து பால் கொடுங்கள் என்று சொன்னாராம். தன் குழந்தைக்கு பால் கொடுத்த அந்தப் பெண்,துணி கொடுத்த அந்தப் பணியாளரிடம் கோபத்தோடு பார்த்து,'குழந்தைக்கு பால் கொடுப்பதை நீ எங்குமே பார்த்ததில்லையா? என்று கேட்டிருக்கிறார். அடுத்த சில நாட்களில் பெண்கள் பலர் அதே உணவக விடுதியில் குழந்தைகளுடன் கூடி தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுத்தார்கள்.அதற்கு மற்ற பெண்கள்களும் ஆதரவு கொடுத்தார்கள். பெண்கள் உடல் தெரிய ஆடை தெரிந்தாலே முறைத்துப் பார்க்கும் பழக்கம் அந்த நாடுகளில் இல்லை. இந்தியாவில் மட்டுமே ஒரு பெண், தன் உடல் முழுவதும் மறைத்து உடை அணிந்தாலும்,இங்குள்ள ஆண்கள் அதையும் மீறி ஏதேனும் தெரிகிறதா என்று பார்க்கும் குரூர புத்தி உடைய ஆண்கள் இங்கு மட்டுமே! - வழக்கறிஞர் தோழர் அ.அருள்மொழி அவர்கள், காலை (17.11.2014) புதியதலைமுறை தொலைக்காட்சி 'புதுப்புது அர்த்தங்கள்' நிகழ்ச்சியில்.. Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 06:40 AM PST |
Posted: 18 Nov 2014 06:30 AM PST |
Posted: 18 Nov 2014 06:15 AM PST ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!! "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத் தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்தளவு போய்விட்டது நம் மொழி. ஆனால் தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள் முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள் . தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டு விட்டு தமிழ் மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கி றது. "உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்க ம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று. வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்' .தமிழ்நாட்டில் பிறந்து வெறும் 500 வருடங்களுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தை பேசுவதில் பெருமையாக நினைப்பதற்கு முன் சற்று ஒரு நிமிடம் யோசியுங்கள்... 10000 வருடங்களுக்கு முன் தோன்றி இன்றும் அழியாமல் கம்பிரமாய் இருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி என்று! இந்த உலகில் எந்த இனத்தவருக்கும் கிடைக்காத இந்த அரும்பெரும் வாய்ப்பு நம் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு... ஆகவே தமிழை தமிழரோடு பேசுவதில் பெருமைக் கொள்வோம். நம் தமிழ் மொழி நமக்கு அவமானம் அல்ல, நமது 10000 வருட அடையாளம்!!! Relaxplzz |
Posted: 18 Nov 2014 06:00 AM PST இந்த பேஸ்புக் பல விசித்திரமான விஷயங்களை துவைத்து காய போட்டுள்ளது.. அந்த வகையில் தற்போது முத்த போராட்டம்.. இது பேஸ்புக்கிற்கு புதியதும் இல்லை நாங்களும் புதியவர்களும்..அல்ல.. . பொது இடங்களில் முத்தம் குடுக்க கூடாது என்றோம்.. . கலாசாரம் சீர் கெட்டுவிடும் என்பதற்காக அல்ல.. . எங்களை ஏன் சேர்த்துகொள்ளவில்லை என்பதற்காக... . முத்த போராட்டத்தை எதிர்த்தோம்... . முத்தம் குடுக்க கூடாது என்பதற்காக அல்ல . முத்த போராட்டம் என்ற பெயரில் கட்டிபிடி வைத்தியம் மட்டும் செய்ததற்காக... . முத்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கைது செய்ய கோரினோம்... . அவர்கள் மேல் உள்ள கோபத்தில் அல்ல .. . நாங்கள் அங்கே இல்லை என்ற தைரியத்தில்... . உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று நீங்கள் கேட்கலாம்... . நாங்களே பாதிக்க பட்டோம் நேரடியாக பாதிக்க பட்டோம்.. கடந்த வாரம் கொச்சியில் நடந்த முத்த திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் துடியாய் துடித்தோம்.. ஏக்கத்தால் தவித்தோம்...எங்கள் துடிப்பை போக்கியிருக்க வேண்டும் எங்கள் ஏக்கத்தை தீர்த்திருக்க வேண்டும்..செய்ததா இந்த சமுகம்.... :P :P Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 05:45 AM PST டீனேஜில்....... எங்க பாட்டி என்அம்மாவிடம் சொன்னது...'ஆம்பள பசங்க கிட்ட பேசற வேலை வெச்சுக்காதே'.... என் அம்மா என்னிடம் சொன்னது 'ஆம்பள பசங்க கிட்ட தனியா நின்னு பேசாதே'.... இப்ப என் பொண்ணு என்னிடம் சொல்வது.... Dont worry ma ....'i can manage my crushes."... நான் வழக்கம்போல ஙே....... - Unna Malai @ Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 05:32 AM PST |
Posted: 18 Nov 2014 05:15 AM PST கடவுளை மனிதன் கேட்டான்..! பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க... ஆனா பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க அப்புடின்னு..... கடவுள் சொன்னார்.., நான் பொண்ணுங்களை மட்டும் படைத்தேன். அவங்களைக் கட்டிக்கிட்டுப் பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது நீங்க தான் அப்புடின்னு. ( கரெக்ட்தானே...? ) :P :P Relaxplzz |
Posted: 18 Nov 2014 05:00 AM PST "FRIENDS PLEASE SHARE" வெளிநாட்டு சாவு:- சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்! உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள். பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள். அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்" செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள். எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்! ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது. அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே. நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள். தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள் இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே... Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 04:45 AM PST முதியோர் இல்லத்தையும் அனாத இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.பாட்டி தாத்தாவும் பேரக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும். Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 04:30 AM PST |
Posted: 18 Nov 2014 04:15 AM PST யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா...? 1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம். Relaxplzz |
Posted: 18 Nov 2014 04:00 AM PST பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி இந்த நல்ல உள்ளங்களுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.. (y) மதுரையில் பஸ்சில் தவற விட்ட ரூ.9 லட்சம் நகை, பணம் அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன் முயற்சியால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஜெயராமன், 62. இவரது மனைவி ஜீவா, 52. சர்க்கரை நோயாளியான ஜெயராமன், மனைவியுடன் அக்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை முடிந்து, திண்டுக்கல் செல்ல ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பி.எம்.டி., பஸ்சில் ஏறினர். இருக்கைகளில் இடம் கிடைக்காததால், 2 பேரும் இறங்கி, மற்றொரு பஸ்சில் அமர்ந்தபோது தான், ஜீவா தன் கைப்பையை தவற விட்டது தெரிந்தது. அதில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள், கிரடிட் கார்டு, ரூ.25 ஆயிரம், மொபைல் போன் இருந்தன. அதிர்ச்சியில், இறங்கி தேட துவங்கினர். அவர்களிடம் அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் கனகராஜ் விசாரித்தார்.பி.எம்.டி., பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கருதிய கனகராஜ், அதன் மேலாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கண்டக்டர் இளங்கோவனின் மொபைல் போன் எண்ணை பெற்றார். பின், திண்டுக்கல் சென்று கொண்டிருந்த இளங்கோவனிடம் தகவல் தெரிவிக்க, அவரும் பஸ்சில் தேடி, அனாதையாக கிடந்த பையை எடுத்து வைத்துக்கொண்டார்.அந்த பஸ் மதுரை திரும்பியதும், ஜெயராமனிடம் பை ஒப்படைக்கப்பட்டது. நெகிழ்ச்சி அடைந்த ஜெயராமன், ""என் பணிக்காலத்தில் நேர்மையாக உழைத்தேன். அதன் பயன்தான் டைம்கீப்பர், நடத்துனர் ரூபத்தில் பணம், நகைகள் திரும்ப கிடைத்தது'' என்றார். டைம் கீப்பர் கனகராஜ்,""முதியவர் பதறியதை பார்த்து விசாரித்தேன். முதலில் ஏறிய பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கணித்து, விசாரணையில் இறங்கினேன்.அதன்படி, அந்த பஸ்சில் பையிருந்தது. கண்டக்டர் இளங்கோவனும், அதை எடுத்து விட்டார்,'' என்றார். # இந்த நல்ல உள்ளங்களுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.. (y) Thanks dhinamalar Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 03:50 AM PST |
Posted: 18 Nov 2014 03:40 AM PST நம் குழந்தைகளுக்கு #உலக அறிவையும் #தமிழ்நாட்டு பண்பையும் #தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் சொல்லிகொடுத்து தமிழ் கலாச்சாரத்தை காப்போம். _/\_ Relaxplzz ![]() |
Posted: 18 Nov 2014 03:33 AM PST |
Posted: 18 Nov 2014 03:16 AM PST கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P "என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க"!!.. "உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா"? "இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்"!!... :O :O ##### செல்போன் அதிகமானவர்கள் உபயோகிப்பதால் விலை குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க... அப்பறம் ஏண்டா அரிசி பருப்பு விலையெல்லாம் குறையமாட்டேங்குது??? இதை சொன்னா என்னைய பைத்தியக்காரன்னு சொல்றானுங்க சில்லி பீப்பிள்ஸ் ;-) ;) ##### ஆபிஸ்ல ஒரு பையனுக்கு மெட்ராஸ ஐ வந்துச்சு, யாருக்கும் பரவவில்லை. ஒரு பொண்ணுக்கு மெட்ராஸ் ஐ வந்துச்சு, ஒட்டுமொத்த ஆபிஸ்க்கே பரவிடுச்சு.. :P :P ##### "என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா"...!!! "அதோட அவாங்களுக்கு கோபம் குறைஞ்சிடுமா"...?? "இல்ல நான் தோப்புக்கரணம் போட்டு முடிஞ்சிடும்"... :D :D ##### ஒருவர் ; தலைவர் செடி நடும் போது கூடவே ஒருத்தர் இருக்காரே அவரு யாரு ? மற்றவர் ; அவர் கூடவே இருந்து குழி பறிப்பவர் . .. :O :O ##### உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்… அப்படி என்ன பேசினான்: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும்ன்னு சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?) :P :P #### கணவன்: "என்னைய பார்த்த உடனே ஏண்டி கண்ணாடி எடுத்து போட்டுக்கிற"?.. மனைவி: "டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன்". ... :O :O ##### டாக்டர் : நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் . நாராயணசாமி : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் #### "சொந்த ஊர் எது"? .... "அந்த அளவுக்கு வசதி இல்லீங்க. சொந்த வீடுதான் இருக்கு"!!... :O :O ##### நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தர்றீங்களே… என்னை என்ன கேனப் பயன்னு நினைச்சிங்களா…. "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கிறீங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்! :O :O #### டேய் என்னடா உங்க வீட்டு சாம்பார்ல பிஸ்கட் வாசனை அடிக்குது சாம்பார்க்கு உப்பு இல்லனு எங்கம்மா சால்ட் பிஸ்கட்ட போட்டுட்டாங்கடா :O :O ##### கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..? மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது :P :P Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 18 Nov 2014 03:00 AM PST எது நிர்வாணம் ஆண்டவன் மனித இனத்தைப் படைத்தபோது ஆடையோடா படைத்தான் அவனுக்கு நிர்வாணம் தெரியவில்லையா.. கலவியை சிலையாய் சித்திரமாய் கோயில்களில் செதுக்கினானே சிற்பி அவனுக்கு நிர்வாணம் தெரியவில்லையா.. தினம் ஒளி கொடுத்து உலகுக்கு உயிர்கொடுக்கிறானே சூரியன் அவன் எந்த ஆடையுடுத்தியிருக்கிறான் அது நிர்வாணமில்லையா.. மாதத்தின் பாதி நாட்கள் பூமியை இரவை பகலாக்கும் சந்திரன் ஆடையின்றி திரிவது தெரியவில்லையா.. நான்கு வயது பச்சிளங்குழந்தை என்ன பாவம் செய்தாள் கதற கதற வன்மத்திற்கு ஆளாகும்போது பதறுகிறதே உடலெங்கும்.. நூற்றாண்டைத் தாண்டிய மூதாட்டிக் கூட காமத்தின் வெறிக்கு பலியாகும் கொடுமை கண்டு துடிக்காதோர் உண்டா.. சத்தமின்றி நாகரீகம் எனும் பெயரில் அநாகரிகம் நுழைந்து இளையோரை பாடாய் படுத்தும் அவலம் கண்ணெதிரே அரங்கேறும் காட்சிகள் ஏராளம்... ஏதோ யுத்தமொன்று துவக்கியதுபோல் முத்தப் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்களின் கூத்தை கலாச்சாரச் சீரழிவை என்னவென்று சொல்வது... கலாச்சாரத்தை நம் பண்பாடுகளை மதிக்காத தறுதலைகளின் காமவெறிப் பிடித்து அலையும் நாயைப் பின் தள்ளிய மனிதப் பேய்களின் நடவடிக்கைகளும் செய்கைகளுமே நிர்வாணமாக தெரிகிறது.. முத்துப்பேட்டை மாறன் @ Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment