நண்பனே !!!
இனிய வானிலையே இரக்கத்தின் மறுவுருவே சூரியப் பிரகாசமே நெஞ்சத்து நினைவே மாலை வெயிலே மனதின் இதமே !!
என் நம்பிக்கையின் உருவம் நீ !!
கடவுள் எனக்களித்த
கறைப்படாத வரம் நீ !!
என் கரங்களின்
விரல்கள் நீ !!
என் தோளின்
வலிமை நீ !!
என் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு நீ !!
என் சோகத்தின்
கண்ணீர் நீ !!
நான் கண்டெடுத்த
புதயல் நீ !!
என் அந்தரங்க விஷ்யங்களை அணுவணுவாய்
அறிந்தவன் நீ !!
நமக்குள் ரகசியங்கள் எதுவுமில்லை ..
முடிக்காமல் படிக்க
வேண்டிய புத்தகம் நீ !!
சிநேகிதனே உற்சாக
பானம் நீ !!
நான் ஒடிய தூரம் பாதி ;
நீ ஓடவைத்த தூரம் மீதி .
கடினமான காலங்களில் கரங்களைப் பிடித்து தோள்களைப் பற்றி ஆறுதல் தந்தவனும் தேறுதல் தந்தவனும் நீ தான் ..
மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பக்கத்தில் இருந்தவன் பகிர்ந்து கொண்டவன் நீயே தான் !!.
உன்குரல் சோர்வகற்றும் தேவகானம் ..
ஒப்பனை இல்லா ஒப்பற்ற அழகு நம் நட்பு !.
ஒற்றைத் தலையணை பகிர்ந்து கொண்டோம் !
ஒற்றைத் தட்டில் பகிர்ந்து உண்டோம் !
ஒற்றை ஆடையை இருவரும் உடுத்தினோம் !!
உண்மை சொல்லட்டுமா ?.
உன் அழுக்கு ஆடைக்கு நிகரான அழகான ஆடையை இதுவரை உடுத்தியதில்லை என் தேகம் !!!
திகட்டாத அன்பு உன் அன்பு ;
தித்திக்கும் நட்பு
உன் நட்பு ..
வார்த்தைகள் சோர்ந்து போயின நம் உரையாடலின் நீளத்தில் ..
நேரங்கள் தீர்ந்து போயின நம் நேசிப்பின் ஆழத்தில் ..
துன்பத்தில் அழுவதற்கு தோள் தந்தவனே !!
என் கண்கள் உப்புகாய்ச்சிய போதெல்லாம் தடைபோட்டன உன் கைகள் ...
நீயில்லாத நாட்கள் நிஜத்தில் முட்கள் ;
நிழலல்ல நீ நிஜம் ..
நம் தூரங்களை தொலைபேசி தூக்கி தூரப்போட்டு விடுகிறது ..
நலவிசாரிப்புகள் இன்றி நம் நாட்கள் நகருவதேயில்லை ;
சில நாட்கள் நலவிசாரிப்புகளுக்காகவே
நகர்ந்து விடுகின்றன ..
என் கனவுகளை உன் இதயத்தில்தான் சேமிக்கிறேன் ..
சுயநலமில்லா அரவணைப்பு சொல்லப்படாத அன்பு நொடி நேரப் பார்வை மென்மையான புன்னகை கனநேர கைகோர்ப்பு இவைதான் நீ நிதமும் நல்கும் அன்பளிப்புகள் ;
நட்பின் அடையாளங்கள் ..
பாசக்காரா பட்டாம்பூச்சியின் சிறகுகள் கடன்வாங்கி பாருலகம் பவனிவருவோம் வா !!..
சூரிய வெயிலோடு சுற்றித் திரிகிறோம் ;
கனமழையில் கைகோர்த்து காலாற நடக்கிறோம் ...
என் பெற்றோரின் பாசத்தை நீயும் !!
உன் பெற்றோரின் பாசத்தை
நானும் !..
பரஸ்பரம் பங்கிட்டுக்
கொள்கிறோம் ....
உன் சட்டைப் பை சில்லரையையும் என் சட்டைப் பை சில்லரையையும்
சேர்த்து கேண்டீனில் சமோசா தேநீர் பருகுகிறோம் ...
தினமும் சேர்த்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம் ..
தேர்வறையிலும் " பேனா " மாற்றுமுறை செய்கிறோம் !..
நமக்கான நட்பின் நினைவுகளை இப்படித்தான் சேமிக்கிறோம் !!
உனக்கான என் பாசம் இதழோரம் அல்ல இதயமோரம் இருக்கிறது !!
உன் கடந்தகாலக் காயங்களின் மருந்தாக !
நிகழ்கால பாதைக்கு ஒளியாக !!
எதிர்காலப் பயணத்திற்கு வழியாக !!
நான் நிச்சயம் இருப்பேன் !!..
ஒன்று சொல்லட்டுமா ?..
நீயில்லாத என் நாட்கள் நாட்குறிப்பில் கூட முற்று பெறுவதில்லை ......
இனிய இரவு வணக்கம்
நண்பர்களே!
இவண்
- கமல்

0 comments:
Post a Comment