Wednesday, 26 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


வாராது வந்த மாமணி போல் இந்தியாவில் அரசியல் உலகில் தோன்றி சில காலமே ஆட்சிப் பொறுப...

Posted: 26 Nov 2014 09:32 PM PST

வாராது வந்த
மாமணி போல்
இந்தியாவில் அரசியல்
உலகில் தோன்றி சில
காலமே ஆட்சிப்
பொறுப்பில் இருந்த
போதும்
ஆண்டாண்டு காலமாய்
அடிமைகளாய் கிடந்த
சூத்திர
மக்களை நிமிரச்செய்த
தந்தை பெரியார்
அவர்களின் சமூக நீதித்
தத்துவத்தை வாகை சூடவைத்த,
வரலாற்றின் பக்கங்களில்
யாராலும் அழிக்க
முடியாத பதிவை செய்த
பெருமகனார் சமூக
நீதிக்காவலர் முன்னாள்
இந்தியப்பிரதமர் மானமிகு.
வி.பி.சிங் அவர்கள் மறைந்த
தினம் இன்று.


இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த எம் புலிப்படை மாவீரர்களுக்கு வீர வணக்கம்!!...

Posted: 26 Nov 2014 09:13 PM PST

இனத்தின்
விடுதலைக்காக
இன்னுயிர் ஈந்த எம்
புலிப்படை மாவீரர்களுக்கு வீர
வணக்கம்!!

கழுத்தில்
குப்பியோடு நெஞ்சில்
உறுதியோடு சமரசமின்றி சமரிட்டு சரித்திரமாகிய
எம் குல
சாமிகளுக்கு வீர
வணக்கம்!!

வீரத்தின் விதைளாக
விடுதலை கீதங்களாக
வாழும் எம் இனத்தின்
தளபதிகளுக்கு வீர
வணக்கம்!!

#மாவீரர்_தினம்


சுதந்திர நாட்டிலே பெண்களுக்கு 33% க்கு இந்த முக்கு முக்க வேண்டியிருக்கம் காலத்தி...

Posted: 26 Nov 2014 09:09 PM PST

சுதந்திர
நாட்டிலே பெண்களுக்கு 33%
க்கு இந்த முக்கு முக்க
வேண்டியிருக்கம்
காலத்தில். ஈழத்தில் 50%
நிகழ்த்திகாட்டியவர்கள்
புலிகள்.
"புலிகளின்
காவற்துறை,
புலிகளின்
நீதிமன்றங்களில்
பணியாற்றிய
சட்டவாளர்கள், நீதிபதிகள்
போன்றவர்களில்
கிட்டத்தட்ட 50
சதவீதமானவர்கள் பெண்
புலிகளாவார்"

வோடபோன் நிறுவனத்தின் 3200 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக மும்பை உயர்நிதிமன்றம் வழங்கி...

Posted: 26 Nov 2014 09:06 PM PST

வோடபோன்
நிறுவனத்தின் 3200
கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக
மும்பை உயர்நிதிமன்றம்
வழங்கிய
தீர்ப்புக்கு எதிராக
வழக்கு தொடர
வேண்டாமென
இந்தியாவின்
அட்டார்னி ஜெனரல்
உத்தரவு பிறப்பித்துள்ளார்....

#அப்கி பார் கார்ப்ரேட்
சர்க்கார்.

@நிமலன் குமார்

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடப்போவதாக முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள...

Posted: 26 Nov 2014 08:49 PM PST

மீத்தேன் திட்டத்திற்கு
எதிராக
போராடப்போவதாக
முன்னாள்
நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில்
பேராபத்தை விளைவிக்க
கூடிய மீத்தேன் எடுக்கும்
திட்டத்தை தடுத்து நிறுத்தும்
முயற்சியில் ஈடுபட
போவதாகவும், மக்களுக்கு ஆபத்தை விளைக்கும்
திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள்
தாங்களாக
முன்வந்து வழக்கு தொடுக்கவேண்டும்
என்றும் கூறியுள்ளார்.


மதில்கள் மட்டும் பாதுகாப்பை தந்துவிடாது காவலாளி இல்லாமல், காவலாளியே மட்டும் பாது...

Posted: 26 Nov 2014 08:32 PM PST

மதில்கள் மட்டும்
பாதுகாப்பை தந்துவிடாது காவலாளி இல்லாமல்,
காவலாளியே மட்டும்
பாதுகாப்பை தந்துவிட
முடியாது ஆயுதம்
இல்லாமல்!

@பிரபின் ராஜ்

Posted: 26 Nov 2014 06:01 PM PST


Posted: 26 Nov 2014 05:54 PM PST


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல். அதிகாரம்: #காலமறிதல்...

Posted: 26 Nov 2014 05:44 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல். அதிகாரம்: #காலமறிதல்.

#உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

#Translation:
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

#Explanation:
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

#TRADUIT DU #TAMOUL:
Faire chaque chose en temps opportun est la corde qui retient chez soi, l'inconstante fortune.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


கோலம் போட்ட கைகளில் துப்பாக்கி ஏந்த வைத்தவன்! சமையல் குறிப்புகள் மட்டுமே படித்த...

Posted: 26 Nov 2014 09:20 AM PST

கோலம்
போட்ட கைகளில்
துப்பாக்கி
ஏந்த வைத்தவன்!

சமையல் குறிப்புகள்
மட்டுமே படித்த
எம்
பெண்களை,
யுத்த தந்திரங்கள்
படிக்க வைத்தவன்!

வெட்டிப்பேச்சு
வீணர்கள் போல்
இல்லாமல்,
பெண் விடுதலை
அரசியலை,
தன் கண் முன்னே
செயலில் காட்டியவன்!
எம் தலைவன்
பிரபாகரன்...


அழகு தில்லை!

Posted: 26 Nov 2014 08:21 AM PST

அழகு தில்லை!


Posted: 26 Nov 2014 06:51 AM PST


"தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இன்னுயிர் தந்த தமிழீழ...

Posted: 26 Nov 2014 06:41 AM PST

"தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இன்னுயிர் தந்த தமிழீழ இராணுவ வீரர்களுக்காக "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்" அவர்களால் உருவாக்கப்பட்டது தான் "மாவீரர் துயிலும்" (உறங்கும்) இல்லங்கள்.

இறந்த வீரர்களின் உடல்கள் இராணுவ மரியாதை செய்து புதைகக்ப்பட்டிருக்கும்.அதில் வீரரின் இயக்க பெயர்,ஊர், படம்,எந்த சமரில் உயிர்நீத்தார் போன்ற விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

உடல் கிடைக்காத வீரர்களின் பெயர்களிலும் கல்லறை அமைத்து மேற்சொன்ன விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.இதனால் எந்த தமிழ் இராணுவ வீரரின் தியாகமும் மறக்கப்படாமல் மதிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் திருநாளாக ஒவ்வொரு வருடமும் "நவம்பர் 27"--ஆம் நாளை "மாவீரர் தினம்" என்று ஈழத் தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

அன்றைய தினம் "மாவீரர்களை போற்றியும்", "எதிர்கால திட்டத்தையும் தேசியத் தலைவர் மக்கள் முன் தோன்றி அறிவிப்பார்.அவரின் உரையை கேட்பதற்காக தமிழ் மக்கள் ஆர்வத்தோடு காத்திருப்பர்.

நாட்டிற்காக உயிர்நீத்த தங்கள் வீரர்களின் கல்லறையில் மக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்துவர்.

அன்று நாட்டுக்காக உயிர்நீத்த தங்களின் மகன்/மகளை நினைத்து அழ ஒரு கல்லறை இருந்தது.இன்று....?

"காசி ஆனந்தன்" வரிகள் மட்டுமே நம்பிக்கை தருகிறது....

"மாண்ட வீரர் கனவு பலிக்கும்....
மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்.."


"கரிகால் சோழனைப் பற்றி வியந்திருக்கிறோம், ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிற...

Posted: 26 Nov 2014 06:40 AM PST

"கரிகால் சோழனைப் பற்றி வியந்திருக்கிறோம்,
ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிறோம்,
ராஜேந்திர சோழனைப் பற்றி படித்திருக்கிறோம்,
பூலித்தேவன் வீரத்தை கேள்விப்பட்டிருகிறோம்,
மருதுபாண்டியர்கள் பற்றி வாசித்திருக்கிறோம்,
இமயத்தில் கொடிநட்ட சேரனை யோசித்திருக்கிறோம்,

தலைவா உன்னை மட்டும் தான் சமகாலத்தில் பார்த்திருக்கிறோம்...!"

@பூபதி


விந்தை மனிதா.... முப்படை கண்டு எப்படையையும் எதிர் கொண்ட எம் தலைவா வித்தகங்கள் ச...

Posted: 26 Nov 2014 06:22 AM PST

விந்தை மனிதா....

முப்படை கண்டு எப்படையையும்
எதிர் கொண்ட எம் தலைவா
வித்தகங்கள் செய்த விந்தை மனிதா !

வீழ்த்தி விட்டதாய் எக்காலம் செய்வார்கள்
வீழ்ந்து போனதாய் பரிகாசம் கொள்வார்கள்
புலிகள் காட்டில் நரிகள் நர்த்தனமாடும் நேரம் இது !

எச்சில் சோறு தின்று
பிச்சை கொண்டு வாழ்வதை விட
மரணிக்கும் மகத்துவத்தை உணர்த்திய மானிடா
எம்மினம் உள்ளவரை நீ இருப்பாய் ...

எம்மை போல சாமானியனுக்கும்
சத்தம் இல்லாமல் பித்தம் போக்கிவன் நீ !
உனை கண்டே கண் விழித்தேன்
உனை கண்டே புத்துயிர் கொண்டேன்
உன்னாலேயே புத்துணர்வு கண்டேன்.

நீ இல்லாமல் போயிருந்தால்
இன உணர்வு மட்டுமல்ல...
சுய உணர்வும் மீளாமல் சென்றிருக்கும்...

எம் உணர்ச்சிக்கு உணவு ஊட்டிய
பச்சை தமிழனே !!
இன்றில்லாவிடிலும் என்றாவது
உன் இலக்கு கிழக்கில் விடியும்
அச்சமயம்
சமுத்திரத்தில் சரித்திரம் நிகழும்....


இன்றும் எங்கள் ஊர் அய்யனார் கோவில்களில் இன்றும் கால் சட்டை போன்ற நவீன உடைகளை அணி...

Posted: 26 Nov 2014 06:18 AM PST

இன்றும் எங்கள் ஊர் அய்யனார் கோவில்களில் இன்றும் கால் சட்டை போன்ற நவீன உடைகளை அணிந்து துப்பாக்கி வச்சிக்கிட்டு ஆண் உருவ சிலைகள் இருக்கும், அப்ப பெரும் சந்தேகம் வரும் எல்லா சாமிகளும் பார்க்க பழைய முறையில் ஆயுதங்கள் இருக்க இங்கு நவீனமாக துப்பாக்கி வைத்து நிற்பது எப்படி என்று...

இன்று அந்த சந்தேகம் முற்றிலும் தீர்ந்து போனது, எம் குலம் காக்க வந்த தலைவன் பிரபாகரனை கண்டவுடன்.....


ஆலகாலத்தை கண்டத்தில் சுமந்தான்; இவனே ஈசன் எம் பேரினத்தின் நேசன், இனம் காக்கும் ப...

Posted: 26 Nov 2014 06:15 AM PST

ஆலகாலத்தை கண்டத்தில்
சுமந்தான்; இவனே ஈசன்
எம் பேரினத்தின் நேசன்,
இனம் காக்கும் பொருட்டே
ஆனான் சிவம்; அன்பிலும் சிவம்
பகை முடிக்க ஆடினான்
ருத்திரம் இவனில் எழுந்ததே
ரௌத்திரம்...

பிட்டுக்கு மண் சுமந்தான்
ஈசன்; இவனோ மண்ணுக்கு
இனத்தை சுமந்தான்;
துவக்கெடுத்து துவக்கினான்
திருவிளையாடலை...

புலிகள் புடைசூழ தர்மத்தின்
தலைமகன் தலையெடுத்தான்
எதிரிகளின் தலை எடுத்தான்
இனத்தில் களையெடுத்தான்..
தமிழின யுத்தம் தொடங்கினான்
சற்றே அதர்மம் தலை தூக்கியதே
தவிர தர்மம் வீழாது..

மீண்டும்
எம்மினத்தின் ஈசன் வருவான்
பலியெடுக்க புலிகள் வரும்
'பிரபா' தாண்டவம் தொடரும்....


மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்...

Posted: 26 Nov 2014 06:09 AM PST

மாவீரர் நாள்.

வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே.
புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு. ஒரு டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்துக்காக ஒரு மாணவனை கொலை செய்தவர்தான் கருணாநிதி. தன்னை எதிர்த்த ஒரே காரணத்துக்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட்டை வீசி, இரு வழக்கறிஞர்களை கொலை செய்ய ரவுடிகளை ஏவியவர்தான் ஜெயலலிதா. பிரதமராக வேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை நடத்தியவர்தான் மோடி. இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை படுகொலை செய்தவர்தான் ராஜீவ் காந்தி.

பிரபாகரன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைவருக்கும் பொருந்தும். ஒரே வேறுபாடு. பிரபாகரன் இன விடுதலைக்காக இதை செய்தார். மற்றவர்கள் சுயநலத்துக்காக இதை செய்தனர். தன் குடும்பத்துக்காக, இனத்தை அடகு வைத்த தலைவர்கள் வாழும் நாடு இது. தனக்கு நெருக்கமான குடும்பத்துக்காக ஊரார் சொத்தை அடித்து உலையில் போடும் தலைவி வாழும் நாடு இது.

இவர்கள் மத்தியில் தன் குடும்பத்தையே இனத்துக்காக பலிகொடுத்த பிரபாகரன் கொண்டாடப்பட வேண்டியவரே.

அவர் பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதை பெருமையாக மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரின் கடமையாகவே கருதுகிறேன்.

@சங்கர்


உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத்...

Posted: 26 Nov 2014 06:07 AM PST

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்து வந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.

காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.

பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அன்னியரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக இலங்கைத்தீவிலே தமிழினத்தின் மீதான கொடூர இனவழிப்பு பெருகிவந்தது. சொல்லொணாத் துன்பதுயரங்களைச் சுமந்துகொண்டு வாய்மூடி அழுதுகொண்டிருந்தது தமிழினம். வன்முறை வழியற்ற போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டும் இனப்படுகொலைகள் பல்கிப்பெருகிக் கொண்டும் இருந்தன.

கேட்க நாதியற்ற நிலையில் முனகிக்கொண்டிருந்த தமிழினத்திலிருந்து இளையதலைமுறையொன்று வீறோடு போராடப் புறப்பட்டது. கோபாவேசத்தோடு திருப்பித் தாக்கத் தொடங்கிய இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்து உதித்த நாள் இன்று!


Posted: 26 Nov 2014 06:04 AM PST


ராணுவத்தின் எதிர்ப்பை மீறி யாழ்ப்பாணம் பல்கலையில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Posted: 26 Nov 2014 03:09 AM PST

ராணுவத்தின்
எதிர்ப்பை மீறி யாழ்ப்பாணம்
பல்கலையில்
பிரபாகரன் பிறந்தநாள்
கொண்டாட்டம்!


கார்த்திகைத் திங்களில் ஈழத்தின் வடகிழக்கில் அன்று கதிரவனாக தமிழினத்தின் விடுதலைக...

Posted: 26 Nov 2014 03:01 AM PST

கார்த்திகைத் திங்களில்
ஈழத்தின் வடகிழக்கில்
அன்று கதிரவனாக
தமிழினத்தின்
விடுதலைக்காய் உதித்த
ஈழக் கரிகாலனே.

ஈராறு(2×6) கோடித்
தமிழனின் அடையாளமே.
பார்வதித் தாய்
பெற்றேடுத்த பார்
போற்றிய தமிழ்த்
தலைமகனே.
ஆறு படை கொண்டு பகையை விரட்டிய
பார் கண்டு வியத்த
ஆறுபடையானாக
வல்வை மண்ணிலே அவதரித்த
தமிழ்த் தலைமகனே..

வாழும் தலைவா!!!

வாழி நீங்கள் வாழி!!!


தமிழினத்தை அரணாகக் காத்து தமிழர்களுக்கு அடையாளம் தேடித் தந்த தமிழின மரபினர் இணைய...

Posted: 26 Nov 2014 02:46 AM PST

தமிழினத்தை அரணாகக்
காத்து தமிழர்களுக்கு அடையாளம்
தேடித் தந்த தமிழின
மரபினர்
இணையில்லா மூன்று வேந்தர்கள்!


தமிழர் இசைக் கருவிகள்; --------------------------------------- தமிழர் இசைக் கரு...

Posted: 26 Nov 2014 02:41 AM PST

தமிழர் இசைக் கருவிகள்;
---------------------------------------

தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் இசைக்கருவிகளின்;
" விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,

நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,

மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு,

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தும்பின்,

இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு,

விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,

நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,

நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,[1].

"
என மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

ஆகுளி
இடக்கை
இலயம்
உடுக்கை
ஏழில்
கத்திரிகை
கண்டை
கரதாளம்
கல்லலகு
கல்லவடம்
கவிழ்
கழல்
காளம்
கிணை
கிளை
கின்னரம்
குடமுழா
குழல்
கையலகு
கொக்கரை
கொடுகொட்டி
கொட்டு
கொம்பு
சங்கு
சச்சரி
சலஞ்சலம்
சல்லரி
சிலம்பு
தகுணிச்சம்
தக்கை
தடாரி
தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
தத்தளகம்
தண்டு
தண்ணுமை
தமருகம்
தாரை
தாளம்
துத்திரி
துந்துபி
துடி
தூரியம்
திமிலை
தொண்டகம்
நரல் சுரிசங்கு
படகம்
படுதம்
பணிலம்
பம்பை
பல்லியம்
பறண்டை
பறை
பாணி
பாண்டில்
பிடவம்
பேரிகை
மத்தளம்
மணி
மருவம்
முரசு
முரவம்
முருகியம்
முருடு
முழவு
மொந்தை
யாழ்
வட்டணை
வீணை
வீளை
வெங்குரல் [2]
தோல்கருவிகள்

உறுமி மேளமும் பறையும் இசைக்கப்படுகிறது

எக்காளம்

தவில்,நாதசுரம்
பொரும்பறை
சிறுபறை
பெருமுரசு
சிறுமுரசு
பேரிகை
படகம்
பாடகம்
இடக்கை
உடுக்கை
மத்தளம்
சல்லிகை
காடிகை ? கரடிகை
திமிலை
தக்கை
கணப்பாறை
தமடூகம்
தண்ணுமை
தடாரி
அந்தரி
முழவு
முரசு
சந்திர வளையம்
மொந்தை
பாகம்
உபாங்கம்
துடி
நாளிகைப்பறை
தமுக்கு
உறுமி மேளம்
பறை
முரசு
தம்பட்டம்
தமருகம்
நகரா
மண்மேளம்
தவண்டை
ஐம்முக முழவம்(குடமுழவு)
நிசாரளம் ? நிசாளம்
துடுமை
அடக்கம்
தகுனிச்சம்
தூம்பு
பேரிமத்தளம்
கண்விடு
துடுகை
உடல்
உருட்டி
சன்னை
அரைச்சட்டி
கொடுகொட்டி
அந்தலி
அமுதகுண்டலி
அரிப்பறை
ஆகுளி
ஆமந்தரிகை
ஆவஞ்சி
உடல் உடுக்கை
எல்லரி ஏறங்கோள் கோதை
கண்தூம்பு
கணப்பறை கண்டிகை
கல்லல் கிரிகட்டி
குண்டலம் சடடை
செண்டா
சிறுபறை
தகுனித்தம்
தட்டை
தடாரி
பதவை
குளிர்
கிணை
துடி
பம்பை
காற்றுக் கருவிகள்[தொகு]
புல்லாங்குழல்
முகவீணை
மகுடி
சங்கு
தாரை
நாதசுவரம்
கொம்பு
ஒத்து
எக்காளம்
கொக்கறை
நமரி
திருச்சின்னம்
தூம்பு
வயிர்

நரம்புக் கருவிகள;
யாழ்
வீணை
தம்பூரா
கோட்டுவாத்தியம்
சாரங்கி
பிடில்
வில் (இசைக்கருவி)
கஞ்சக் கருவிகள், தட்டுக் கருவிகள்
கைமணி
தாளம் அல்லது பாண்டில்
நட்டுவாங்க தாளம்
கஞ்ச தாளம்
கொண்டி
கடம்
சேமக்கலம்
தட்டுக்கழி
மிடறு

உடல் (இசைக்கருவி)
உடல் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழர் இசைக்கருவி ஆகும். இது தவிலைவிட பெரிய சீரான உருளை வடிவுடையது. பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன
ஊதல் (சங்ககாலம்)
சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.
முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள்.
கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர்மக்களுக்கு இசையோடு பாடி ஆடிக் காட்டுவதும் வழக்கம்.

குழல்

குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.
உயிர்த்தூம்பு
தூம்பு
ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.
குறும்பரந்தூம்பு
தூம்பு
இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.

எக்காளம்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது

கடம்
கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.

கஞ்சிரா
கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.

கொக்கறை
கொக்கறை என அறியப்படும் நெருக்கமான இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும், இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது.
கொடுகொட்டி (இசைக்கருவி)
கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.

கொம்பு
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.

சங்கு
சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

சிறுமுரசு
சிறுமுரசு அல்லது சாயரட்சை மேளம் என்பது தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது "சிறிய அரைச்சட்டியில் புள்ளிமான் தோல் கொண்டு வார்க்கப்பட்டது." இதனை கோயில்களில் மாலை வழிபாடுகள் முடிந்ததும் இசைக்கப் பயன்படுத்தினர்.

பெருமுரசு
பெருமுரசு தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது அரைக் கோள வடிவுடையது. இது "பெரிய இருப்புச் சட்டியில் மாட்டுத் தோலை வார்த்து உருவாக்கப்படும்."[1] பண்டைக் காலத்தில் அறவிப்பு அல்லது தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.

சேமக்கலம்
சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகை சார்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

தமுக்கு
தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும்.

தம்பட்டம்
தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும். டண்டண் என்று கேட்கும் படியாக கிராம தேவதைகளின் திருவிழாக்களில் ஓர் இனத்தார் தம்பட்டங்களை வாசிப்பதை காணலாம்.
தவண்டை
தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவி வாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது.
தாரை
தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.
தாளம்
தாளம்
தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன. இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான உலோகத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள் சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்.

திமிலை
திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

திருச்சின்னம்
திருச்சின்னம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இந்த இசைக் கருவி தாஸரிகளால் ஆலய வழிபாட்டின் போது வாசிக்கப் படுகின்றது.

நகரா
நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.

நமரி
நமரி என்பது ஒரு தமிழர் இசைக்கருவி. மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர்.

நாதசுவரம்
நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

ஐம்முக முழவம்
பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

பம்பை
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பேரிகை
பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர்.

பேரிமத்தளம்
பேரிமத்தளம் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த தமிழர் இசைக் கருவி ஆகும். இது மிருதங்கத்தை விட நீண்டது. பலாக்கட்டையால் செய்யப்பட்டு ஆட்டுத் தோல் போர்த்தப்படுவது. அரளிக்குச்சியால் ஒரு முகத்தில் மட்டும் வாசிக்கப்படுவது. தற்காலத்தில் சில பெரிய கோயில்களில் மட்டும் உலாவின் போது பயன்பாட்டில் இருக்கிறது.

மகுடி
மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மண்மேளம்
மண்மேளம் என்பது தோல் கருவி வகை தமிழர் இசைக்கருவி. இது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட ஒரு கருவி. பொதுவாக ஒரு பக்கம் கையாலும் மறுபக்கம் குச்சியாலும் வாசிப்பர்.

முகவீணை
முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி. நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது .
பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.
கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.
கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.

முரசு
முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு.

வீர முரசு
இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சப்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்

தியாக முரசு
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இது.

நியாய முரசு
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

முழவு
முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும்.[1] முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் 'தண்ணுமை' தலைமைக் கருவியாய் விளங்கியது.

யாழ்
யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.

வீணை
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

நன்றி - நான்காம் தமிழ்ச் சங்கம்


#பிரபாகரன்60 சூப்பர் மேன் ஹீ மேன் பேட் மேன் சக்திமான்...etc இப்படி நூறு ஹீரோக்க...

Posted: 26 Nov 2014 02:39 AM PST

#பிரபாகரன்60

சூப்பர் மேன்
ஹீ மேன்
பேட் மேன்
சக்திமான்...etc
இப்படி நூறு ஹீரோக்கள்
திரையில்
வந்திருந்தாலும்
சிறு வயதில்
இருந்தே நாங்கள் மனதில்
வைத்து இருக்கும் ரியல்
ஹீரோஸ் அய்யா நேதாஜி
அடுத்து அய்யா பிரபாகரன்
அவர்கள் தான்
இதயெல்லாம் மாற்ற
யாராலும் முடியாது
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தலைவா...!!

@சபரி


உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்!! #செத்தாலும் வாழ வைப்பான...

Posted: 26 Nov 2014 02:12 AM PST

உடல் உறுப்பு தானத்தில்
இந்தியாவிலேயே தமிழகம்
முதலிடம்!!

#செத்தாலும் வாழ
வைப்பான் தமிழன்.

Posted: 26 Nov 2014 01:43 AM PST


Ancient Gold Bars with Brahmi inscriptions and Rudraksha Beads that were excavat...

Posted: 26 Nov 2014 12:36 AM PST

Ancient Gold Bars with Brahmi inscriptions and Rudraksha Beads that were excavated in Thenur

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/gold-treasure-found-near-madurai/article271428.ece

Officials have recovered a few gold ornaments unearthed by villagers at Thenur near here on Saturday. Madurai North Tahsildar A. Ilamathi said a woman found an earthen pot with lid inside the roots of an uprooted tree . Later, she found four golden ingots with some inscriptions on it, 21 beads and 32 bindi-like objects inside the pot. On information, the Revenue Inspector, T. Sivagaminathan, took over the valuables.

"We are yet to assess their value. Only the officials from Archaeological Department could establish the age of the ornaments," Mr. Ilamathi said.

Meanwhile, the officials are enquiring into the allegation that a part of the treasure was taken away by some local people.

Ancient gold bars handed to district administration

http://www.thehindu.com/todays-paper/tp-national/ancient-gold-bars-handed-to-district-administration/article5216275.ece

The Madurai Government Museum handed over 2300-year-old gold bars with Brahmi inscriptions, a coin and rudraksha beads, excavated from Thenur village near here around three years ago, to the district administration's treasury on Tuesday.

According to A. Periyasamy, curator of the government museum, the excavated gold bars, coin and beads belonged to the third or the fourth century BC.

There were seven gold bars measuring between 6.1 cm and 8 cm and 21 rudraksha beads, he said.

The gold items were found in a sealed clay pot excavated from underneath a fallen tree in Thenur by the locals and were handed over to the district administration.

The clay pot also had connecting beads that might have been used in the chain that held the rudraksha beads, Mr. Periysamy noted.

The excavated gold items were handed to the museum authorities for ascertaining their significance.

"All the gold bars had a 10-letter Brahmi inscription which read 'Pogul Kundrakothai', which could be read as they belonged to a woman called Kothai from a place called Pogul Kundram," he said.

The gold bars and ornaments were made of 99.9 per cent pure gold, he added.

The word "Kothai" was also used to refer the rulers of the Chera dynasty, but these articles were discovered at Thenur, which was ruled by the Pandya dynasty, which left little validity to the meaning that they belonged to the Chera rulers, Mr. Periyasamy said.

On Tuesday, the Government Museum also exhibited a 17{+t}{+h}century metal idol of Panchamuga Vinayagar, which was excavated from Pechiamman Padithurai in Vaigai river in January this year.

The idol, mounted on a platform, is 54 cm tall and 34 cm wide.

"போகுல் குன்றக் கோதை"
சங்க காலத் தங்கத் தமிழ் தங்கக்கட்டிகளில் !
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட "தமிழி " எழுத்துகள்!

மதுரை மாவட்டம் தேனூரில் கிடைத்த புதையலில் 661 கிராம் எடையுள்ள 7 தங்கக் கட்டிகள் !

http://www.dinamalar.com/news_detail.asp?id=822775

மதுரை: தேனூரில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளில், தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது, கண்டறியப்பட்டது.

மதுரை மாவட்டம், தேனூரில், 2009ல், செல்வம் என்பவரின் வீடு அருகில் இருந்த மரம், காற்றில் முறிந்து விழுந்தது. அதை அகற்றுகையில், மண் கலயத்திற்குள் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. கலயத்திற்குள், 661 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள், 21 உத்தி ராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கலெக்டர் அறிவுறுத்த லின் படி, தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த, அரசு மியூசிய காப்பாட்சியர் கூறுகையில், 'ஏழு தங்கக் கட்டிகளிலும், தமிழ் பிராமி எழுத்து வடிவில், 'போகுல் குன்றக் கோதை' என, எழுதப்பட்டிருந்தது. இவை, 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து. தற்போது, போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது, மலையைக் குறிக்கும்' என்றார்.


கரூர் மாநாட்டிற்கு பிச்சைக்காரர்களை அழைத்து வந்த காங்கிரசார் : செய்தி. விவரம் த...

Posted: 26 Nov 2014 12:12 AM PST

கரூர்
மாநாட்டிற்கு பிச்சைக்காரர்களை அழைத்து வந்த
காங்கிரசார் : செய்தி.

விவரம் தெரியாம
செய்தி போடாதிங்கயா, அவங்கெல்லாம் கடந்த
முறை காங்கிரஸ்
சார்பில் டெபாசிட்
கட்டி தேர்தலில் நின்ன
வேட்பாளர்கள்...

@பூபதி

0 comments:

Post a Comment