Saturday, 1 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஒரு பொண்ணு இப்ப கால் பண்ணாங்க... "சார், நான் ஹைதராபாத்ல இருந்து கால் பண்றேன். உ...

Posted: 01 Nov 2014 09:17 PM PDT

ஒரு பொண்ணு இப்ப கால் பண்ணாங்க...

"சார், நான் ஹைதராபாத்ல இருந்து கால் பண்றேன். உங்க மொபைல் நம்பருக்கு இங்க லக்கி ட்ரா மூலம் 3000 ரூபாய் மதிப்புள்ள முத்து மாலை பரிசா விழுந்திருக்கு சார்"

"ஓக்கே"

"இந்த முத்து மாலைக்கு நீங்க பணம் கொடுக்க வேண்டியது இல்லை. டெலிவரி சார்ஜ் மட்டும் 520 ரூபாய் கொடுத்தா போதும். பே பண்றீங்களா சார்?"

"மேடம்...நீங்க ஹைதராபாத்னு சொன்னீங்க. அங்க தான் என் அண்ணா இருக்காரு. அட்ரஸ் கொடுத்தீங்கன்னா, அவரே நேர்ல வந்து கலெக்ட் பண்ணிடுவார். அப்ப டெலிவரி சார்ஜ் தேவை படாதே. அட்ரஸ் தறீங்களா மேடம்...?"

"அது வந்து...அது வந்து சார்.....டொய்ங்"னு போன் வெச்சிட்டாங்க.

# யாருக்கிட்ட :P

@Prãkãšãm Pãzhãñí

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து.... ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன்....

Posted: 01 Nov 2014 08:46 PM PDT

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து....

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார்.

"வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

"அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.

"உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.
"ஆமா!'ன்னார்.

"முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.

======ராதா கேட்பதில் நியாயம் இருக்கா?


ஸார் என்ன சாப்பிடறிங்க..? ரெண்டு இட்லி கொடுப்பா.. வேறென்ன வேணும் சார்? ரெண்டு...

Posted: 01 Nov 2014 08:06 PM PDT

ஸார் என்ன
சாப்பிடறிங்க..?

ரெண்டு இட்லி கொடுப்பா..

வேறென்ன வேணும்
சார்?

ரெண்டு இட்லியே போதும்பா..

ஸார் நீங்க
கம்யூனிஸ்ட்டா?

#பளார்_பளார்_பளார்

@வெங்கடேஷ்
ஆறுமுகம்.

பேரரசர் ராச ராச சோழருக்கு 1029வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

Posted: 01 Nov 2014 07:25 PM PDT

பேரரசர் ராச ராச சோழருக்கு 1029வது பிறந்த
நாள்
வாழ்த்துகள்.


இராஜ இராஜ சோழன் அல்ல. இராஜ இராஜ சோழர். பேரரசன் அல்ல. பேரரசர். மாமன்னன் அல்ல. மாம...

Posted: 01 Nov 2014 12:49 PM PDT

இராஜ இராஜ சோழன் அல்ல.
இராஜ இராஜ சோழர்.
பேரரசன் அல்ல. பேரரசர்.
மாமன்னன் அல்ல. மாமன்னர்.
அவன் அல்ல. அவர்
என்றழைப்போம். பின், சதய
விழாவிற்கு வாழ்த்துச்
சொல்வோம்.

பன்னிரு திருமுறைகள்
நமக்கு கிடைக்கப் பெற
காரணமாய் இருந்த தமிழ்
வேந்தருக்கு 1029வது பிறந்த நாள்
வாழ்த்துகள்.


பேசத் தெரியுமுன்பே நம் தேவையைப் புரிந்து நிறைவேற்றிய அம்மாவிடம் நிறைய பேசக் கற்ற...

Posted: 01 Nov 2014 12:06 PM PDT

பேசத் தெரியுமுன்பே நம்
தேவையைப்
புரிந்து நிறைவேற்றிய
அம்மாவிடம் நிறைய
பேசக் கற்றுக் கொண்ட பின்
நாம்
சொல்வது சொன்னா புரியாதும்மா உனக்கு....

- திவ்யா ராஜன்

கள்ளச்சாரயம் காய்ச்சுவதை தடுக்க அரசே மதுபானங்களை விற்கிறது. கள்ளக்காதல் கற்பழிப...

Posted: 01 Nov 2014 12:00 PM PDT

கள்ளச்சாரயம்
காய்ச்சுவதை தடுக்க
அரசே மதுபானங்களை விற்கிறது.

கள்ளக்காதல்
கற்பழிப்பு நடப்பதால்
அரசே விபச்சார
விடுதிகளை நடத்தினால்
குற்றங்கள்
குறையும்.

#அது_சரின்னா
#இதுவும்_சரிதானே

தன் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த செல்ல மகளை திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்க்கு அ...

Posted: 01 Nov 2014 11:50 AM PDT

தன்
கனவுகளுக்கு வடிவம்
கொடுத்த செல்ல
மகளை திருமணம்
முடிந்து கணவர்
வீட்டிற்க்கு அனுப்பும்
அந்த நிமிடம் ,
பெண்களின்
பிரசவவலியை விட
வேதனை மிகுந்த
நிமிடங்கள் என்பது பெண்
குழந்தைகளை பெற்ற
அப்பாக்களுக்கு தான்
புரியும்!

#ரசித்தது

"டாய்லெட்"க்கு தமிழ்ல என்னன்னு தெரியாதா இந்த பத்திரிகை நடத்துற பன்னாடைகளுக்கு?

Posted: 01 Nov 2014 11:34 AM PDT

"டாய்லெட்"க்கு தமிழ்ல
என்னன்னு தெரியாதா இந்த
பத்திரிகை நடத்துற
பன்னாடைகளுக்கு?


ராஜராஜ சோழன் காலத்தில் சோழநாடு!

Posted: 01 Nov 2014 10:32 AM PDT

ராஜராஜ சோழன் காலத்தில் சோழநாடு!


Posted: 01 Nov 2014 10:14 AM PDT


தமிழர் யாரென உலகுக்கு முதலில் விளங்கவைத்து, தில்லை நடராசர் ஆலயத்தில் சிறை வைக்கப...

Posted: 01 Nov 2014 09:47 AM PDT

தமிழர் யாரென
உலகுக்கு முதலில்
விளங்கவைத்து,
தில்லை நடராசர்
ஆலயத்தில் சிறை வைக்கப்பட்டிருந
்த மூவர் பாடிய தமிழ்
மறையான
தேவாரத்தை மீட்டு தமிழில்
தமிழர்கள் வழிபடும்
முறையை நெறிப்படுத்திய
தமிழ்ப் பேரரசன் ராஜ ராஜ
சோழனின் பிறந்த நாள்
சதயத்திருவிழா நாளை (2.11.2014)
தஞ்சையில் மிக சிறப்பாக
கொண்டாடப்படும்.


தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்! இன்று அவர் நினைவு நாள்.. தமிழ் திரைப்பட உலகி...

Posted: 01 Nov 2014 08:19 AM PDT

தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்! இன்று அவர் நினைவு நாள்..

தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.

தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.

திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர். காலம் அவரது நினைவை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.

தங்கத்தட்டில் உணவருந்திய அந்த ஏந்தல், இறுதிக்காலத்தில் அன்றாட உணவிற்கே அவதிப்பட்டதாக சொல்வார்கள். அந்த வகையில் அவரது வாழ்வு பலருக்கு பாடம். இன்று அவருக்கு 55வது நினைவு நாள். நினைவுதினமான இன்று தமிழ்த்திரையுலகின் முன்னோடி என்ற வகையில் கூட திரையுலகம் அவருக்கு இன்று மரியாதை செலுத்தவில்லை.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு ரயில் ஏற வந்த பாகவதரை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள, அவரை தரிசிக்க வந்த கூட்டத்தால் பாகவதர் 4 மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்வார்கள். தனது காருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவரது கையை தொட்டு முத்தமிட சாரிசாரியாக மக்கள் திரண்டுவந்ததை ஆச்சர்யம் பொங்க சொல்வார்கள் அக்காலத்தில்.

ஆனால் திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓரிரு உறவினர்களைத்தவிர அவரை வணங்கிச் செல்ல இன்று எவரும் வரவில்லை.திருச்சி மாவட்ட விஸ்வகர்மா சங்கத்தினரும், அவரது உறவினர்களும் இன்று காலை வந்து தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.

"இதுதான் ஒரு முன்னோடிக் கலைஞனுக்கு திரையுலகம் காட்டும் மரியாதையா?" என அவரது உறவினர்கள் புலம்பியபடியே நகர்ந்தனர் அங்கிருந்து.

-சி.ஆனந்தகுமார்,
படம்: தே.தீக்‌ஷித்


இன்று புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்ட நாள்... 1/11/1954,

Posted: 01 Nov 2014 08:15 AM PDT

இன்று புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்ட நாள்... 1/11/1954,


நவம்பர் 1 ஆம் தேதி மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளம்...

Posted: 01 Nov 2014 08:04 AM PDT

நவம்பர் 1 ஆம் தேதி மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளம் போன்ற தேசங்கள் உருவான நாள். தேசிய இனங்களுக்கு தனி மாநிலங்கள் கிடைத்தாலும் இந்தியாவில் தேசிய இனங்கள் தொடர்ந்து இந்தி மக்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வடவர்கள் மட்டுமே இந்த நாட்டை ஆட்சி செய்யும் நிலையில் இந்தி அல்லாத பிற தேசிய இன மக்கள் தங்கள் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நில உரிமைகளை இழந்து தவித்து நிற்கின்றனர். இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட்டு எல்லா மொழிகளும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தியையும் சமஸ்கிருத மொழியையும் மட்டுமே இந்திய அரசு ஊக்குவிக்கிறது . மற்ற மொழிகளை எல்லாம் துச்சமாக எண்ணுகிறது. நடுவண் அரசு பணிகளில் இந்தியரை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் விதமாக இந்தியை அலுவல் மொழியாக்கி மற்ற மொழிகளையும், மொழி இனத்தவர்களையும் புறக்கணித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில மொழிகளும் சம உரிமை பெற வேண்டும். ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும் என்று நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் . ஆனால் இந்த கோரிக்கையை காலில் போட்டு மிதித்து வருகிறது இந்தி அரசு. மாநிலங்கள் தன்னாட்சி உரிமைகள் பெற்று தங்களுக்கு தேவையான சட்டங்களை தாங்களே அமைத்துக் கொள்ளும் உரிமைகள் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய அரசு நிராகரித்து வருகிறது.

தமிழகம் பிறந்த நாளான இன்று தமிழர்கள் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.

௧. பாடுபட்டு பெற்ற மாநில அரசின் உரிமைகளை நாம் எந்த நிலையிலும் இந்தி அரசுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது.

௨. தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் .

௩. இந்தி சமஸ்கிருத திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் .

௪. தமிழ் மாநிலத்திற்கு தன்னாட்சி உரிமை கோர வேண்டும் .

௫. இந்தியாவின் பிரதமராக ஒரு தமிழர் வர வேண்டும். தமிழர் ஆட்சியின் மூலமாக எல்லா தேசிய இனங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமைகள் கிடைத்திட வழி வகை செய்திடல் வேண்டும். தேசிய இனங்களின் விடுதலைக்கு நாமே வித்திட வேண்டும்.

௬. தமிழர் என்பதே நம் முடிவான அடையாளம். சாதிகளால், மதங்களால் , திராவிட, இந்திய அடையாளங்களால் நாம் பிரிவது அவமானம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.


ஒரு இந்தியனை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்தாலோ அல்லது தாக்கினாலோ ஓயாது ஒப்பாரி வை...

Posted: 01 Nov 2014 08:03 AM PDT

ஒரு இந்தியனை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்தாலோ அல்லது தாக்கினாலோ ஓயாது ஒப்பாரி வைக்கும் வடநாட்டு ஊடகங்கள் தமிழர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டாலோ கொலை செய்யப்பட்டாலோ கள்ள மௌனம் சாதிக்கின்றன. இப்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்து உள்ளது . நியாயமாக இந்திய ஊடகங்கள் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இலங்கையின் மீது போர் தொடுக்க வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாது தமிழர்கள் தண்டிக்கப்படுவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது இந்திய தேசிய ஊடகங்கள்.

வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் மட்டுமே இந்திய ஊடகங்களுக்கு நாட்டுப் பற்று மேலோங்கும் . தமிழர்கள் தாக்கப்பட்டால் நாட்டுப் பற்று வேலை செய்யாது.

தமிழர்கள் இந்தியராக இந்தி ஊடகங்கள், இந்தி அரசு கருதவில்லை என்றால் தமிழ் நாட்டை தனி நாடாக இந்தி அரசு அறிவிக்கட்டுமே!


நாம ஒன்னு நெனைக்கிறோம்.. ஆனா அவன் வேற ஒன்னு அனுப்பி வைக்கிறான்

Posted: 01 Nov 2014 08:03 AM PDT

நாம ஒன்னு நெனைக்கிறோம்..

ஆனா அவன் வேற ஒன்னு அனுப்பி வைக்கிறான்


இது கர்நாடக மாநில கொடி... இப்படி தமிழ்நாட்டிற்குள் நமக்கான ஒரு மாநில கொடி பறந்தா...

Posted: 01 Nov 2014 08:01 AM PDT

இது கர்நாடக மாநில கொடி... இப்படி தமிழ்நாட்டிற்குள் நமக்கான ஒரு மாநில கொடி பறந்தால் நம்மை தேச விரோதிகள் என்று சொல்லுவார்கள்..

#தேவை தமிழர் சார்ந்த ஒரு தமிழக அரசு


கன்னட தேசிய இனத்தின் கர்நாடக நாள் திருவிழா. இனமாக ஒன்றிணைந்து கொண்டாட்டம் ! தமிழ...

Posted: 01 Nov 2014 07:57 AM PDT

கன்னட தேசிய இனத்தின் கர்நாடக நாள் திருவிழா. இனமாக ஒன்றிணைந்து கொண்டாட்டம் ! தமிழர்களின் கவனத்திற்கு !

மொழி வழி மாநிலங்கள் பிரிந்து தேசிய இனங்கள் தங்களுக்கான அரசுகளை உருவாகிக் கொண்டது. மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரம் பிரிந்தது. பிற மொழியினர் பிரிந்த பின்னர் எஞ்சியுள்ள பகுதிகள் தமிழகமாக உருவாகியது. கர்நாடகம் உருவான இந்த நாளை கன்னடர்கள், கன்னட கட்சிகள், கன்னட அரசு அதிகாரிகள், கன்னட அமைச்சர்கள், கன்னட இளம் தலைமுறையினர் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் இந்த நாள் கன்னட எழுச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது. கன்னட கொடியை ஏந்தி கன்னடர்கள் தங்கள் இனத்தின் பெருமையை , பண்பாட்டை , மொழியை பறைசாற்றுகின்றனர் . இந்த நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கன்னடர்களுக்கு வாழ்த்துகளை பகிர்கிறார் .

ஆனால் தமிழகத்தை இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் , தமிழகத்திற்கு , தமிழ்த் தேசிய இனத்திற்கு என்று ஒரு நாளை உருவாக்கவில்லை, அனுசரிக்கவில்லை . திராவிடத்தால் வீழ்ந்த தமிழினம் தங்கள் பெருமையை பறைசாற்ற, பெருமையை நினைவுபடுத்த ஒரு நாளை கொண்டாடத் தவறிவிட்டது. அதன் விளைவாக தமிழர் தமிழகம் என்று பேசினாலே தமிழக காவல்துறை தமிழர்களை அச்சுறுத்துகிறது . ஆனால் கர்நாடகாவிலோ காவல்துறை அதிகாரியே கன்னட தேசிய கொடியை தங்கள் தோளின் மீது அணிந்துள்ளனர். கன்னட தாய்க்கு வணக்கம் செலுத்துகின்றனர். என்றாவது ஒரு நாள் தமிழக காவல்துறை தமிழ்த் தாய்க்கு வணக்கம் செலுத்தியுள்ளனரா ? தமிழ்த் தேசிய கொடியை ஏந்தியுள்ளனரா என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களை தமிழர்களாக உணரச் செய்யாத பொறுப்பு தமிழகத்தை ஆட்சி செய்த திராவிடர்களையே சேரும் . திராவிட அமைப்புகள் தமிழர்களை ஒன்றிணைய விடாமல் செய்து விட்டனர். அதனால் தமிழினம் தன்னுடைய அடையாளத்தை இழந்து நிற்கிறது. இனியாவது திராவிட கருத்தியலை புறம்தள்ளி தமிழர்கள் நாம் நமக்கான நாளை கொண்டாடுவோம், நமக்கான கொடியை உருவாக்குவோம், நமக்கான இன அடையாளத்தை பேணுவோம். நமக்கான அரசியலை உருவாக்குவோம். தமிழர் ஒற்றுமை ஒன்றே தமிழினத்தை பாதுகாக்கும். வாழ்க தமிழ் !


நேற்றைய தினம் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை மத்திய பாஜக அரசும்,...

Posted: 01 Nov 2014 07:52 AM PDT

நேற்றைய தினம் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை மத்திய பாஜக அரசும், இந்தியா முழுவதும் உள்ள பாஜகவினரும் ஒற்றுமை தினம் என கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். பட்டேல் ஒன்றும் மகாத்மா காந்தி, ஜவகர்களால் நேரு, சட்ட மாமேதை அம்பேத்கர் இவர்களை விட சிறந்த தலைவர் இல்லை. பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட அவர் ஆர்.எஸ்.எஸ் காரர். எனவே இதன் அடிப்படையில் பாஜகவினர் பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

நாட்டின் மிகப்பெரிய தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாட மறந்து வருகிற இந்நாளில், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தன்னிச்சையாக இயங்கிய அரசுகளை இந்தியாவுடன் சர்வாதிகாரமாக இணைத்ததோடு மட்டுமின்றி மகாத்மா அவர்களை சுட்டுக் கொள்வதற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கு அன்றைய பிரதமர் நேருவிடம் கடுமையான மோதலில் ஈடுபட்ட பட்டேல் என்கிற சர்வாதிகாரியின் பிறந்தநாளை மத்திய பாஜக அரசு ஒற்றுமை தினமாக கொண்டாடி இருப்பது மிகவும் ஆபத்தானது.

@Walter Williams

எனக்கென்னமோ, இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த மரணத...

Posted: 01 Nov 2014 07:52 AM PDT

எனக்கென்னமோ, இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த மரணதண்டனை தீர்ப்பிற்கு பின்னால், சுப்ரமணிய சுவாமிதான் இருப்பாரென தோணுது. "பாத்தீங்களா, டமில் டமின்னு பேசினவா யாராலயும் இந்த தூக்குதண்டனையை தடுக்க முடியல. நான் தான் அந்த டெத் பெனாலிட்டிய ஸ்டாப் பண்னேன். நான் ராஜபக்சா கிட்ட சொல்லலைன்னா, இந்நேரம் இவா அஞ்சு பேரும் செத்து போயிருப்பா... " நாளடைவில் இப்படி ஒரு கெத்தான பேட்டியை கொடுக்கவே சு.சுவாமி இதை செய்திருக்க கூடும். ராஜபக்சேவுக்கு 'பாரதரத்னா' விருது கொடுக்க சொன்னதும் கூட, இது மாதிரியான ஓர் அரசியலுக்காகத்தான் இருக்கும்.

இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்

குமரி மண்ணின் வரலாற்று சுவடுகளை இனியும் மறக்கலாமா ...? சுமார் 100 ஆண்டுகளுக்கு...

Posted: 01 Nov 2014 07:51 AM PDT

குமரி மண்ணின் வரலாற்று சுவடுகளை இனியும்
மறக்கலாமா ...?

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மண்ணில் நடந்த கொடுமைகளை எண்ணி பாருங்கள் ......
முந்தைய கால கட்டத்தில்,நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணிய கூடாது...!! பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை....!!உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது..!! தலையில் தான் சுமக்க வேண்டும்..!! உயர்சாதி இந்துக்களின் தெருவில் நடக்க கூடாது !! நாடார் ஆண்கள் ஒருவர், நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும்...!! நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது....!!

நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர்....!!

அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை . நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.

தங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும்? சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது...!!

இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாளில் கலவரம் மூண்டது. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதி "தோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாதது" என்று நாடார்களுக்கு ஆதராவக ஒரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.....
இதன் தொடர்ச்சியாக பல முன்னோர்கள் போராடியதன் விளைவாக நாம் குமரி மண்ணை மீட்டிருக்கிறோம் ....நம் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பூமி இனியும் மீட்பதற்கு உள்ளன.....

சாதி, மதம் கடந்து இந்த இணைப்புக்காக உயிர்சிந்திய நமது முன்னோர்களை நன்றியோடு இந்நாளில் நினைவுக் கூர்வோம்...!! எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த மண்ணையும், மொழியையும் அதன் பண்பாட்டையும் அந்நியனுக்கு தாரை வார்க்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்....!!

@குமரி மாவட்டத் தமிழ் - Kanyakumari District Tamil


முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு – பென்னிகுயிக் சிலைக்கு மதுரை மக்...

Posted: 01 Nov 2014 07:46 AM PDT

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு – பென்னிகுயிக் சிலைக்கு மதுரை மக்கள் மரியாதை!

மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரையில் அவ்வணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 136 அடியை எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது அணையில் நீர் மட்டம் 136.30 அடி உள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் குடிநீர் தேவை மற்றும் விவசாயப் பணிகளுக்கு நீர் தட்டுப்பாடு நிலவாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரை, தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பென்னிகுயிக் சிலை முன்பு பொங்கல் வைத்து பொது மக்கள் நன்றி செலுத்தினர். மேலும் சாலைக்கு வெளியே நின்ற, சென்ற மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரிட்டிஷ் இந்தியாவில் தென் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர்த் தேவையைக் கருதி, தனி மனிதராக நின்று இந்த அணையைக் கட்டி முடித்தவர் பென்னி குயிக். இந்த அணையைக் கட்டும் பணியை அரசு கைவிட்டபோது, பிரிட்டனிலிருந்த தனது சொத்துகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்று பணம் திரட்டி இந்த அணையைக் கட்டி முடித்தார் பென்னி குயிக். இதனால் அவரை தெய்வமாகவே வழிபடும் தென் மாவட்ட மக்கள், பொங்கல் போன்ற தமிழரின் விசேஷ நாட்களிலும் பென்னி குயிக்குக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

@ மணிகண்டன் அழகர்


பெற்ற பிள்ளைகளிடம் தங்கப் பதக்கம் சிவாஜி கணக்காக விறைப்பாக நடந்து கொள்பவர்களை கா...

Posted: 01 Nov 2014 04:47 AM PDT

பெற்ற பிள்ளைகளிடம்
தங்கப் பதக்கம்
சிவாஜி கணக்காக
விறைப்பாக
நடந்து கொள்பவர்களை காமெடி பீஸாக்குவதற்கென்றே பிறப்பெடுக்கின்றன
பேரப் பிள்ளைகள்!!.

@காளிமுத்து


குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்...

Posted: 01 Nov 2014 04:45 AM PDT

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில்,"அப்பா உங்கள் வாழ்க்கையில்
சொத்துசுகம்,சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே' என்றான்.வண்டி ஒரு கல்யாணப்
பந்தலருகே போகும்போது நிறுத்தச்சொன்னார் தந்தை.

"தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா" இதன்
சரித்திரம், என்ன, தெரியுமா?
இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ,
காய், கனி, பட்டை ஆகிய
எல்லாவற்றையும் தானமாக
கொடுத்து விடுகிறது.
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான்
இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய
வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய
முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம்
கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக்
கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும்
தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்'என்றார் தந்தை..

சிதம்பரம் -ஜெயங்கொண்டம் சாலையில் மீன்சுருட்டிக்கும் காட்டுமன்னார்குடி( உடையார்கு...

Posted: 01 Nov 2014 04:10 AM PDT

சிதம்பரம் -ஜெயங்கொண்டம் சாலையில் மீன்சுருட்டிக்கும் காட்டுமன்னார்குடி( உடையார்குடி) க்கு நடுவே உள்ள ஊர் வீரானந்தபுரம்.
இது முன்பு "வீரராசேந்திரசோழபுரம்" என அழைக்கப்பட்டதை கங்கைகொண்டசோழபுரத்து கல்வெட்டு மூலம் அறிய வருகிறது.

இதன் தடயம் தேடிய போது சவுக்கு காட்டின் நடுவே கிடக்கும் லிங்கத்தை கண்டேன்.இதைப்பற்றிய எவ்வித விழிப்புணர்வு அங்குள்ளவர்கட்கு இல்லை.ஏனெனில் இப்படி ஒரு தகவல் இருப்பதே அவர்களை சேரவில்லை. இது அவர்களின் குற்றமில்லை.

இந்த செய்தியை 1000 ஆண்டுவிழாவில் பேராசிரியர்.இல.தியாகராசன் தெரிவித்ததை கேட்டு அவ்வூர் இளைஞர்கள் கேட்டதிற்கிணங்க தேடுதல் தொடங்கியது.

இன்னும் நிறைய வெளிச்சத்திற்கு வரும்.

@Rajaram Komagan


ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.. இங்கு எத்தனை பேர் தியேட்டர்களுக்கு சென்று சில்மிஷங்க...

Posted: 01 Nov 2014 03:58 AM PDT

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..

இங்கு எத்தனை பேர் தியேட்டர்களுக்கு சென்று சில்மிஷங்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள்??

குறைந்தபட்சம் 80% பேர் சினிமா தியேட்டர்களையும், கடற்கரையையும் ஒரு வித வாயிலாக பயன்படுத்தி இருப்பீர்கள். உங்களுக்காகவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு சினிமா தொடர்பான பேட்டி எடுக்க சென்றிருந்தேன். தியேட்டரின் செக்யூரிட்டி என்னை அலுவலகத்தில் உட்கார வைத்துவிட்டு ஓனர் இப்போ வந்துடுவார்னு சொல்லிட்டு போனார்.

அங்க இருந்த பெரிய டிவியில சிசிடிவி footage மாத்தி மாத்தி ஓடிட்டு இருந்துச்சி. டிக்கெட் கவுண்ட்டர், main entrance, எல்லா இடத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. ஏன் எங்க ரூம்ல கூட ஒன்னு இருந்துச்சு. நான் உக்காந்து இருந்தது எல்லாம் அந்த டிவியில் பக்காவா தெரிஞ்சுது.

ஒரு கட்டத்துல டிவியில ஒரு கும்பல் உக்காந்து படம் பாக்குற மாதிரி விஷுவல் வந்துச்சி. என் கேமரா மேன் பயந்து போய் ஆனந்தே, அங்க பாரு என்றார். ஆம். நிஜமாவே தியேட்டருக்குள் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தெள்ளத் தெளிவாக படத்தில் இருந்தார்கள்.

அதற்குள் தியேட்டர் ஓனர் ரூமுக்குள் வந்துவிட்டார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "என்ன சார். தியேட்டருக்குள்ள கேமரா வெச்சிருக்கீங்க?"

ஆமா தம்பி. அப்பப்போ screen, சீட் எல்லாத்தையும் கிழிச்சுடறானுக. அதான் ஒரு safetyக்கு என்றார் அவர்.

"சார். தியேட்டருக்குள்ள பல கசாமுசா நடக்குமே சார்".

"ஆமா தம்பி. பாக்குறீங்களா?"
zoom செய்து காட்டுகிறார். இருவர் உட்கார்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் நக்கலாக சிரித்தார்.

"இதெல்லாம் நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம் தம்பி. கேமரா safetyக்குத்தான்."

இருந்தாலும் நான் அந்த அதிர்ச்சியிலிந்து மீள சில மணி நேரங்கள் ஆனது. பள்ளிக் காலத்திலிருந்து சில sceneகளை மறு ஒளிபரப்பு செய்து பார்த்தேன்.

"சார் இந்த கேமரா எல்லா தியேட்டர்லயும் உண்டா?"

"இல்லை பா. சென்னைல பெரும்பாலும் இருக்கு. மத்த ஊருல இருக்க வாய்ப்பில்லை. நீ ஏன்பா பயப்படுற?"

"ஒன்னும் இல்லை சார். கொஞ்சம் தண்ணி குடுங்க.".....

என்னைவிட என் கேமரா மேன் ரொம்பவே பயந்து போயிருந்தார். பாவம். ரொம்ப வேலை செஞ்சிருப்பார் போல என நினைத்துக் கொண்டேன்.

@ஆதிரா ஆனந்த்


மத்திய அரசில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவனுக்கு இதை செய்ய யார் அதிகாரம் கொடுத்தத...

Posted: 01 Nov 2014 03:26 AM PDT

மத்திய அரசில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவனுக்கு இதை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது.

#International_Broker


:O

Posted: 01 Nov 2014 02:12 AM PDT

:O


0 comments:

Post a Comment