வாழ்த்துகிறேன் கண்மணி அமினாஹ்!
எண்ணிக் கடக்கும் வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை. அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும் பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான். தன்னை உணர்ந்தவனுக்கே இத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது. பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது. நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்டும். பணம் படைத்தவனுக்கோ பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும், தவிர, தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .
ஆகவே எந்நிலையிலும் அன்பு, பாசம், மனிதாபிமானம் போன்ற இனிய நற்குணங்களை தானும் செயல்படுத்தி பிறர்க்கும் முன்னுதாரணமாய் திகழ வேண்டியது நம் அனைவர் மீதும் கடமை!
அவ்வினிய பணி எம் "பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்" மூலம் அதன் பெருமதிமிகு நிர்வாகக்குழு மூலம் சிறப்பாக முன்னெடுத்து செல்வதில் பெருமகிழ்ச்சி!
குறிப்பாக எமது பக்கத்தின் நிர்வாகி அமினாஹ் தான் செயல்படுத்தியதை பிறர்க்கும் அறிவுரைக்கும் ஒரு நல்ல பெண்மணி! இவர் சிறுவயது முதலே ஒவ்வொரு வாரமும் முதியோர், அனாதை இல்லங்களுக்கு சென்று அவர்களின் தேவைகளை எவ்வித பாரபட்சமுமின்றி செய்துகொடுப்பவரும், முகநூலில் ஏதேனும் சிரமத்தில் உதவிகோரும் வறியோர்க்கு தானே முதல் நபராக உதவிவிடுவதும் உங்களில் பெரும்பாலானோர் அறியாத உண்மை! அவர் தான் செய்யும் உதவிகளையும் ரகசியமாகவே செய்வது நாம் கற்க வேண்டிய பாடங்களில் ஒன்று!
இன்று இப்பதிவை நான் இங்கு இடுவதற்குக் காரணம், தற்சமயம் அவர் தனது கல்லூரியில் சிறந்த மாணவிக்கான விருதை இவ்வருடமும் பெற்றுக்கொண்டிருக்கிறார் (கடந்த 5 வருடங்களாக இவரே கல்லூரியின் சிறந்த மாணவியாக மலேசியாவில் தெரிவாகி வருகிறார்). எமது பக்கத்தின் சார்பில் அவரை நான் இங்கு வாழ்த்துவதில் சந்தோஷமும் பெருமிதமும் கொள்கிறேன்! இன்று அவர் அவ்விருதை பெறுகையில் அவரின் பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ யாரும் அவர் அருகில் அம்மண்டபத்தில் இல்லை. எனக்கு மட்டுமே அறிவித்துவிட்டு என் வாழ்த்துக்களுடன் விருதை பெற்றுவர சென்றுள்ளார். நானும் அயல்நாட்டில் இருப்பதால் அந்நிகழ்வை காணும் அரிய பாக்கியத்தை இழந்துவிட்டேன். இது அவரின் மருத்துவ பயிற்சிநெறியின் இறுதி வருடம். நீங்களும் அவரை வாழ்த்தலாமே! இத் தரணி எங்கும் உன் சேவை மலர வாழ்த்துக்கள் அமினு!
Admin
#அனஸ்

0 comments:
Post a Comment