Saturday, 25 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்க...

Posted: 25 Oct 2014 07:30 AM PDT

தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்


பெண்கள் கவனமாக படியுங்கள்: பெண்களுக்கு பலமுறை எச்சரித்துள்ளேன உங்கள் புகைப்பட...

Posted: 25 Oct 2014 05:54 AM PDT

பெண்கள் கவனமாக படியுங்கள்:

பெண்களுக்கு பலமுறை எச்சரித்துள்ளேன உங்கள் புகைப்படத்தை பதிவிறக்காதீர் இந்த பெண் மாலா பத்தாம் வகுப்பில் 493 12ம் வகுப்பில் 1189 தன் ஆசைப்படி மருத்துவம் சேர்ந்தார் ஒரு முறை பேஸ்புக்கில் தன் புகைப்படத்தை பதிவிறக்கினார் காம வெறி கொண்ட எவனோ ஒரு மிருகம் இவளின் போட்டாவை download செஞ்சு பிரபல வலைத்தளத்தில் இவளின் புகைப்படத்தைப் போட்டு இந்த பெண்ணை மாது (அழைப்புப் பெண் ) எனக் குறிப்பிட்டுள்ளான் அதனை வலைத்தளத்தில் பார்த்த பெண் தவறான முடிவை எடுத்துவிட்டார்...

மண்ணோடு மண்ணாகி போனது இவரது கனவுகள் எத்துனைக கஷ்டபட்டு படித்திருப்பார் 493 & 1189 மார்க் எடுக்க யோசித்துப் பாருங்கள். பெண்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: இனியாச்சும் திருந்துங்க நா உங்கள் சகோதரனாக உங்கள் மகன் போல நினைத்துக் கூறுகிறேன் pls dont upload your original photo 1 like = ஆத்மா சாந்தியடைய 1 share = இனி எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வர வேண்டாம். நா சொன்னத ஒரு பெண் கேட்டால என் உழைப்பு வீண்போகலன்னு தான் அர்த்தம்.

இந்த பதிவு நமது பக்கத்தின் சுவரில் நண்பர் ராஜேஷ் குமாரால் பதிவிடப்பட்டது. அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.

கத்தி படம்... தீபாவளி அன்று திரைக்கு வந்த படம் பற்றி முகநூலில் அனைவரும் அருமையா...

Posted: 25 Oct 2014 02:42 AM PDT

கத்தி படம்...

தீபாவளி அன்று திரைக்கு வந்த படம் பற்றி முகநூலில் அனைவரும் அருமையான படம், விவசாயம் பற்றியும் தண்ணீர் பிரச்சனையை பற்றியும் கருத்துகளை எடுத்துரைக்கும் படம் என்ற பதிவுகளை பார்கிறேன்...

ஒவ்வொரு ஊடகங்களும் இதே புராணம் தான்...

தமிழர்களையும் மற்றும் மிக முக்கியமான மானம் கெட்ட தமிழ் ஊடகங்களை பார்த்து கேக்குறேன் இந்த படத்தில் குறிப்பிட பட்டுள்ள பிரச்சனையை பற்றி பேசி தமிழ் நாட்டின் உள்ளே இருக்கும் அந்த குளிர்பானத்தை பற்றிய செய்திகளை எடுத்து உரைத்து இருந்தால் நீங்கள் உண்மையில் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் நீங்களோ கத்தி படம் வெளி வருமா??? சமந்தாவுக்கும் விஜய்க்கும் chemistry எப்படி?? கத்தி படத்தின் மதிப்பு என்ன??? நடிகர் விஜயின் கத்தி கூர்மை... இது போன்ற விமர்சனத்தை தான் கூறினீர்களே தவிர வேற ஒரு ஆணியும் புடுங்கியதாக தெரியவில்லை...

உண்மையில் பார்க்க போனால் இந்த படத்தில் கூறப்பட்டு உள்ள செய்தியை ஊடகங்கள் நினைத்தால் எப்பொழுதோ சொல்லி இருக்கலாம்...

என் நண்பர்களும் இந்த படத்தை பார், விவசாயம் பற்றி தளபதி பேசுகிறார், ஒவ்வொரு வசனமும் அருமை என்று என்னை அனைவரும் கத்தி படம் பார் பார் என்றனர் ஆனால் யாரும் இனி நான் விவசாயம் பண்ண போறேன்னு சொல்லல...

ஒரு படத்தை பற்றிய கருத்து கூறும் போது அவர்கள் வெறும் அந்த படத்தில் அவர்க்கு பிடித்தமான நடிகர் கூறுகிற வசனம் மட்டும் தான் தெரிகிறது ஆனால் அதனுடைய உண்மையான வலி விவசாயம் செய்கிறவனுகே தெரியும்...

- ஒரு விவசாயி


மழை ## பலருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கலாம், ஆனால் யாருக்கும் நஷ்டத்தை கொடுக்கா...

Posted: 25 Oct 2014 01:58 AM PDT

மழை ##

பலருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கலாம்,
ஆனால் யாருக்கும் நஷ்டத்தை கொடுக்காது..
ஆரம்பித்தது நாற்று நடுதல்..

#அழகியல்


0 comments:

Post a Comment