ஊர்த் திருவிழாக்கள்
எங்கு பார்த்தாலும் ஒரே இளைஞர்கள் கூட்டம்...
வெளியூரிலிருந்து வந்திருந்து கடைசி நாளில் தென்படும் தலைகள் பலர்....
சண்டையில் இருந்து சமாதானமாக மாறும் சில குடும்பங்கள்.....
சமாதானத்திலிருந்து சண்டை போடும் சில குடும்பங்கள்...
நினைத்ததை முடித்த கடவுளுக்கு கைமாறு செய்யும் வகையில் நேத்திக்கடன்கள்........
பத்து நாட்களில் ஊரையே புரட்டி போடும் இரவு நேர கலைநிகழ்ச்சிகள்....
சொந்தங்களின் வருகையால் குதுகலிக்கும் குழந்தைகள்....
வீடு முழுவதும் நிறைந்திருக்கும் ஆட்கள்....
படித்தவர்கள், படிக்காதவர்கள், சொந்தங்கள், என யார் பார்க்கிறார்கள் என்ற கவலையில்லாமல் நடுத்தெருவில் போடும் ஆட்டம்.......
ஒவ்வொரு முறை அவளின் வீட்டை கடந்து செல்லும் போதும் வெளியே வருவாளா என்ற ஏக்கம்.......
கடைசி நாள் விரதம் முடிக்கும் ஆட்டுக்கறி.......
அனைத்தும் இன்றுடன் முடியும் என எண்ணும் போது வருகின்ற வருத்தம்.....
இவையனைத்தும் கிராமத்து வாசிகளுக்கே கிடைக்கும் மகிழ்ச்சி.....
கிராமத்துவாசி : பா விவேக்

0 comments:
Post a Comment