Tuesday, 28 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...

Posted: 28 Oct 2014 09:15 AM PDT

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தாய்

15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #சகோதரி

30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தோழி

3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது #காதலி

உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது #மனைவி

Relaxplzz

# படித்ததில் பிடித்தது # நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்...

Posted: 28 Oct 2014 09:02 AM PDT

# படித்ததில் பிடித்தது #

நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுவது வயது இருக்கும். கையில் ஒரு கொம்புடம் நடந்து வந்தார்.

ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்..
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருகிங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.

அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வளரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.

முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா??? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்...

இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்... என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை!

- நந்த மீனாள் © ®

Relaxplzz


இளைஞர்கள் எங்கப்பா... யாரும் சிரிக்கக் கூடாது ! :P :P

Posted: 28 Oct 2014 08:42 AM PDT

இளைஞர்கள் எங்கப்பா... யாரும் சிரிக்கக் கூடாது ! :P :P


:)

Posted: 28 Oct 2014 08:30 AM PDT

:)


சுஜாதாவின் பத்து கட்டளைகள்… (கண்டிப்பாகப் படிக்கவும் !!!) 1. ஒன்றின் மேல் நம்பி...

Posted: 28 Oct 2014 08:00 AM PDT

சுஜாதாவின் பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப் படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல.
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால்
செய்யக் கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர்
(அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
இந்த உபத்திரவத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம்.

இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல்
மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள்,
மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.
சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும்
ஆக்கிரமிக்கும் தீ அது.
பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு:
பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும்.
ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ
தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள்..
எதையாவது வீசி எறியுங்கள்..
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு
ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை.
ராத்திரி சரியாக தூக்கம் வரும்.
கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும்.
ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும்.
மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

Relaxplzz


எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வாங்கும் வரை அது பழரசம் வைக்கும் இடம் என்று எண்ணியிருந...

Posted: 28 Oct 2014 07:45 AM PDT

எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வாங்கும் வரை
அது பழரசம் வைக்கும் இடம்
என்று எண்ணியிருந்தேன்.
பின்னர்தான் தெரிந்தது
அது பழைய ரசம் வைக்கும் இடம் என்று.

- Victor Raj


டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் அது. அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரத...

Posted: 28 Oct 2014 07:15 AM PDT

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் அது.

அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் .

தற்பொழுது, பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்றுகாசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்.

காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார்.

நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப் படுத்தியும் காமராஜர் மறுத்தார்.

சுற்றி நின்றிருந்தவர்களுக்கு திகைப்பு. பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று.

அதனைப் பார்த்த நேரு சொன்னார்,

"காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட, இப்பொழுது இவரிடம் இருக்காது"

இப்படியும் சில நல்ல தலைவர்கள் இருந்தனர் என்பதை உலகுக்கு சொல்வோம்.. :)

Relaxplzz

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே...

Posted: 28 Oct 2014 07:00 AM PDT

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. 'நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்' தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

Relaxplzz


(y)

Posted: 28 Oct 2014 06:30 AM PDT

(y)


ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வள...

Posted: 28 Oct 2014 06:15 AM PDT

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

"மாமியாரின் அன்புப்பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்,

"போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..

"மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

Relaxplzz

வயிறு நெறஞ்சா மனசு நெறயும்! கூகுள் கம்பெனியின் தலைமைச் செயலகம் மௌன்ட்டன் வியூ ந...

Posted: 28 Oct 2014 06:00 AM PDT

வயிறு நெறஞ்சா மனசு நெறயும்!

கூகுள் கம்பெனியின் தலைமைச் செயலகம் மௌன்ட்டன் வியூ நகரத்தில் இருக்கிறது. இங்கே 19 உணவகங்கள் உள்ளன. இந்திய, ஜப்பானிய, மெக்ஸிகன் என்று வகை வகையாக மெனு. ஊழியர்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அவ்வளவும் ஃப்ரீ.

மற்ற கம்பெனிகள் எல்லாம் ஊழியர்களிடம் சாப்பாட்டுக்குப் பணம் வசூலிக்கும்போது, கூகுள் இலவசமாக ஏன் கொடுக்கிறது? கம்பெனி நிறுவனரும், தலைவருமான லாரி பேஜ்-யிடம் இந்த கேள்வியை கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்:

'உணவை ஃப்ரீயாகப் பெறும்போது, தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் பாச உணர்வு ஊழியர்களுக்கு வருகிறது.'

கூகுளின் மகத்தான வளர்ச்சியின் மந்திரச் சாவி இந்தக் குடும்ப உணர்வுதான்! உங்கள் ஊழியர்களின் மனசை நெறப்புங்க; அவங்க மனசு நெறஞ்சா, உங்க கல்லாவை நெறப்புவாங்க!

Relaxplzz


:)

Posted: 28 Oct 2014 05:30 AM PDT

:)


முல்லா தனது மனைவியிடம் சொன்னார், ''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித...

Posted: 28 Oct 2014 05:15 AM PDT

முல்லா தனது மனைவியிடம் சொன்னார்,

''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்"

மனைவி கேட்டார்,

"அப்படியானால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள்?''

முல்லா சொன்னார்,

''நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும்.என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம்"

முல்லாவின் மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி.

"லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?'' என்று ஒரு சந்தேகத்தினைக் கேட்டாள்.

முல்லா சொன்னார்,

''அப்படி ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து மூலதனம் என்னிடம் இருக்கும். அனுபவம் நண்பனிடம் இருக்கும்.''

Relaxplzz

:)

Posted: 28 Oct 2014 04:30 AM PDT

:)


திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்....

Posted: 28 Oct 2014 04:15 AM PDT

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!! ♥ ♥

Relaxplzz

ஒரு பார்வை: நமது பெண் கடவுளும், பண்டைய எகிப்தியர்களின் ஆண் கடவுளும்..! சில ஒற்ற...

Posted: 28 Oct 2014 04:00 AM PDT

ஒரு பார்வை: நமது பெண் கடவுளும், பண்டைய எகிப்தியர்களின் ஆண் கடவுளும்..!

சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:
அளவு =180,000 m2

இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்தக் கோவில் கி.மு 500 க்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தும் தெளிவாக குறிப்பிடபடவில்லை. எனினும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் புதுபிக்கபட்டது. பலர் அதையே கட்டப்பட்ட வருடமாக தவறாக எண்ணியுள்ளனர். ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் தூண்கள்களின் எண்ணிக்கை 985.

எகிப்து கார்னக் அம்மான் கோவில்:
அளவு = 5,000 m2

கி.மு 500 ஆம் ஆண்டு ஆண் கடவுள் "அம்மான்"க்காக கட்டப்பட்ட இந்தக் கோவில், சரியாக முடிக்கக்கப்படாமல் விடப்பட்டது. இதில் உள்ள மொத்தத் தூண்கள்களின் எண்ணிக்கை 134.

எகிப்தியர்கள் வணங்கிய அம்மான் என்ற கடவுள். தமிழர்கள் வணங்கிய அம்மன் ஆகக்கூட இருக்கலாம். பெயரிலும், உருவத்திலும் தலையில் கொண்டை அமைப்பு அதில் உள்ள சுங்கு, கையில் பூ, கழுத்தில் சரடு மாலை சற்றே ஒரே போல் இருக்கும் இந்த இரு தெய்வங்களும் ஒரே தெய்வங்களாக இருக்க வாய்ப்புண்டு.

Relaxplzz


பூ, குழந்தை ரெண்டுமே வாடக்கூடாது!!!

Posted: 28 Oct 2014 03:40 AM PDT

பூ, குழந்தை ரெண்டுமே வாடக்கூடாது!!!


:)

Posted: 28 Oct 2014 03:30 AM PDT

:)


:)

Posted: 28 Oct 2014 03:30 AM PDT

:)


டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க.... "நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நில...

Posted: 28 Oct 2014 03:15 AM PDT

டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....

"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"

பையன் சொன்னான்,

"மக்கள் தொகை பெருக்கம்"

"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,

பையன் சொன்னான்,

"வேலை இல்லா திண்டாட்டம்"

:P :P

Relaxplzz

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் இந்தியா, 450 கோடி செலவு செய்து செவ்வாயில் மீத்தேன் வாய்வு உள்...

Posted: 28 Oct 2014 02:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

இந்தியா,
450 கோடி செலவு செய்து செவ்வாயில் மீத்தேன் வாய்வு உள்ளதா என சோதனை செய்கிறது.

இலங்கை,
தினமும் சில படகுகளை அணுப்பி இந்தியாவுக்கு சூடு சொரணை உள்ளதா என சோதனை செய்கிறது.

#அணுவகழ்

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!! :P :P

Posted: 28 Oct 2014 02:40 AM PDT

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!! :P :P


:)

Posted: 28 Oct 2014 02:30 AM PDT

:)


ஊனத்தால் சோர்ந்துபோயிருந்தவொரு நண்பனிடம் நான் சொன்னேன். "உயிரெழுத்துகளில் 'ஊ'ம...

Posted: 28 Oct 2014 02:09 AM PDT

ஊனத்தால் சோர்ந்துபோயிருந்தவொரு நண்பனிடம் நான் சொன்னேன்.

"உயிரெழுத்துகளில்

'ஊ'மட்டுமே

'உ'வுடன் 'ள'வை

தூக்கிக்கொண்டுநிற்கிறது.

அவ்வளவு சக்தி அதற்கு.

அதானாலேதான்

அந்தச்சொல்லை

ஊனத்தின்

முதலெழுத்தாகவைத்துள்ளனர்.

சும்மா புகுந்துவிளையாடு"

அவன் உற்சாகமாகிவிட்டான்.

:)

- பாலா ஃபீனிக்ஸ்

@relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கல்யாணத்திற்க்கு போகும் போது , அடுத்தவங்க புடவை பார்த்து , இந...

Posted: 28 Oct 2014 01:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கல்யாணத்திற்க்கு போகும் போது , அடுத்தவங்க புடவை பார்த்து , இந்த மாதிரி கிடைக்க வில்லை என்று ஏங்குபவள்
#மனைவி

அடுத்தவங்க பொண்டாட்டியை பார்த்து , இந்த மாதிரி பொண்டாட்டி நமக்கு கிடைக்க வில்லை என்று ஏங்குபவன்.
#கணவன்

- ஹாஜா பகுருதீன்

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம். # பேஸ்புக் என்றாலே ஒரு தவறான எண்ணத்தை தோற்று...

Posted: 28 Oct 2014 01:40 AM PDT

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்.

# பேஸ்புக் என்றாலே ஒரு தவறான எண்ணத்தை தோற்றுவித்த சில அசிங்கங்களிடையே .... நம்ம மானத்த காப்பாத்திட்டாஙக் ... வாழ்த்துக்கள்!!


:)

Posted: 28 Oct 2014 01:30 AM PDT

:)


காலையிலே என் மனைவியைப் பார்த்து, "நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி ... ஐ லவ் ய...

Posted: 28 Oct 2014 01:15 AM PDT

காலையிலே என் மனைவியைப் பார்த்து,

"நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி ... ஐ லவ் யூ செல்லம்"ன்னு கொஞ்சினேன்.

அதுக்கு அவள்,

.
.
.
.
.
.
.
.
.
.
.

..
.

"இதோபாருங்க, கைல பத்துபைசா கெடயாது எங்கிட்ட".!ன்னு சொல்றா.

# எப்படித்தான் எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறான்னே தெரியலைப்பா!!...ஸ்ஸ்ஸ்

- Jayant Prabakhar

Relaxplzz

கணினி, கைபேசியில் புதிய சாதனை ******************************** இந்தியாவிலேயே மு...

Posted: 28 Oct 2014 01:00 AM PDT

கணினி, கைபேசியில் புதிய சாதனை
********************************

இந்தியாவிலேயே முதன் முறையாக கணினி மற்றும் கைபேசியில் எண்களை மட்டுமே கொண்டு, தமிழில் டைப் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் தமிழர் ஒருவர். அவரது சாதனை பற்றி...

எண்கள் மூலம் டைப் செய்யும் முறை

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார். இதையடுத்து, வெறும் எண்களாலேயே கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும் மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.

16 மொழிகளில் பயன்படுத்தலாம்

தற்போது இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன், www.easytype.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி செய்ய கோரிக்கை

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில் உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.

இந்த தமிழரின் சாதனையை உலகறிய செய்ய ஒரு SHARE செய்யுங்கள்.

#ரசிகன் இயற்கை ரசிகன்

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தன் கொள்கைக்காக தன்னை பலி இடுபவன்- தீவிரவாதி... தன் கொள்கைக்...

Posted: 28 Oct 2014 12:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தன் கொள்கைக்காக தன்னை பலி இடுபவன்- தீவிரவாதி...
தன் கொள்கைக்காக பிறரை பலி இடுபவன்- அரசியல்வாதி....

- திவ்யா ராஜன்

0 comments:

Post a Comment