Relax Please: FB page daily Posts |
- காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு டெல்லியில் ஆசி...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அம்மா முறுக்கு சுடும் போது மட்டும் சாமி பக்தி பயங்கரமா வந்துர...
- பகிரவும்
- :P :P
- ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறே...
- படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் த...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெடிக்காத வெடிமருந்தை எல்லாம் ஒன்னுசேர்த்து வெடிகுண்டு ஆராய்ச...
- தன்னம்பிக்கையின் சிகரம்.. (y)
- :)
- உங்களுடையது உண்மையான காதலா? கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்... * உண்மையாக காதலின் ம...
- இவர் யார் என்று தெரியுமா.??? இவர்தான் முனைவர் டெஸ்ஸி தாமஸ் ஐதராபாத்தில் உள்ள பா...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் புதுப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காம காலையில இருந்து நைட்டு வர...
- ஷூ-வில் செய்த நாய்கள்
- :)
- -டேய் எங்கடா போற ? -முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன் -அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒ...
- !!..நான்கு சுவர்களுக்குள் எங்கள் வாழ்க்கை..!! நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நீர் விழும்போது 'ஸ்ஸ்ஸ்' என்று வலி தாங்காமல் கதறும் கல் தான்...
- முட்டையில் அழகிய முகம்... <3
- :)
- எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தா...
- என் பிள்ளைகளை கல்வியில் சிறந்து விளங்க செய்வேன் , கலைகளில் சிறந்து விளங்க செய்வே...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸல் வெலை...
- அண்ணன் ரெடி, யாரு வர்ரா சண்டைக்கு...??? ;-)
- :)
- ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெ...
- நிலக்கடலை நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் ச...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் எந்த அம்மாவும் என் அம்மா போல் இருக்க முடியாது என எல்லோரையும்...
- உங்கள் குழந்தை பருவத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருந்தால் ஒரு லைக் ப...
- :)
- ரசித்தது! ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்க...
Posted: 24 Oct 2014 09:00 AM PDT காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24. 9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார். இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை. பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது. 15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது. இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது. எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது. லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார். உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி. இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன..... Relaxplzz ![]() |
Posted: 24 Oct 2014 08:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அம்மா முறுக்கு சுடும் போது மட்டும் சாமி பக்தி பயங்கரமா வந்துரும் நமக்கு... முதல் முறுக்கை கிண்ணத்தில் போட்டு சாமிக்கு முன்னாடி வச்சுருவேன்... அப்பத்தான் அடுத்த முறுக்கு நமக்கு கிடைக்கும்... #தீபாவளி_நினைவலைகள் - சதீஷ் குமார் தேவகோட்டை |
பகிரவும் Posted: 24 Oct 2014 08:40 AM PDT |
Posted: 24 Oct 2014 08:30 AM PDT |
Posted: 24 Oct 2014 08:15 AM PDT ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும மாணவன்: 5 இருக்கும் சார்! ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்? மாணவன்: 5 தான் சார். ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா . சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்? மாணவன்: 4 சார். ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்? மாணவன்: 5 சார். ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5 கோழி வரும்? மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார். ஆசிரியர்: ? ? ? :O :O Relaxplzz |
Posted: 24 Oct 2014 08:00 AM PDT படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் தொடங்குங்கப்பா. மல்டி நேசனல் கம்பெனிகள் நம் நாட்டுக்குச் செய்யும் துரோகத்தைப் பத்தி அந்த மல்டி நேசனல் கம்பெனியின் பணத்தைக் கொண்டே படம் எடுத்து மக்களுக்கு சொன்னார் என்றால்... ஒரு மல்டி நேசனல் குளிர்பானத்தின் பிராண்ட் அம்பாசடரைக் கொண்டே, அந்த குளிர்பானத்தால் நாட்டுக்கு விளையும் அபாயத்தை மக்களுக்கு விளக்கிச் சொன்னார் என்றால்... சமகால அரசியல்வாதிகளின் ஊழல்களை எல்லாம் அவங்க ஒத்துழைப்போடவே விவரமாய் படம் எடுத்துச் சொன்னார் என்றால்... விவசாய நிலம் அழிவது பற்றி, விவசாயி தற்கொலை பற்றி, மீடியா இதை எல்லாம் கண்டுக்காதது பற்றி இதுபோல் வழக்கமாய் குறும்படத்தில் மட்டுமே வரும் சங்கதிகள் பற்றி சர்வதேச அளவிலான வியாபாரப்படத்தில் வரவைத்திருக்கிறார் என்றால்.... தம்பி முருகதாசு நமக்குப் பண்ணுரது நல்ல காரியந்தானே கண்ணுகளா? படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் தொடங்குங்கப்பா. தானும் பண்ணமாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம்னா எப்பிடி கண்ணுகளா.... :) - குண சேகரன் Relaxplzz ![]() |
Posted: 24 Oct 2014 07:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெடிக்காத வெடிமருந்தை எல்லாம் ஒன்னுசேர்த்து வெடிகுண்டு ஆராய்ச்சியில இறங்கி கையைச் சுட்டுக்கொண்டது #அதுஒரு_தீபாவளிக்_காலம் - விவிகா சுரேஷ் |
Posted: 24 Oct 2014 07:40 AM PDT |
Posted: 24 Oct 2014 07:30 AM PDT |
Posted: 24 Oct 2014 07:15 AM PDT உங்களுடையது உண்மையான காதலா? கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்... * உண்மையாக காதலின் முதல் அறிகுறியே தியாகம் தான், காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது. * உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலாக உணரச் செய்வது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். * உண்மையான காதலாக இருப்பின், நீங்கள் கஷ்டப்படுவதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது, நீங்களே எதிர்பாராதவிதமாக கஷ்டப்படுத்தினால் கூட அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்தவே செய்வர். * உங்கள் காதலன்/காதலி சத்தியம் செய்து கொடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் அதனை மீறாமல் இருந்தால் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம். * கஷ்ட காலத்திலும் உங்களை விட்டு விலகிவிடாமல், ஆறுதலாக இருப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள். * உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணிடாதீங்க! Relaxplzz |
Posted: 24 Oct 2014 07:00 AM PDT இவர் யார் என்று தெரியுமா.??? இவர்தான் முனைவர் டெஸ்ஸி தாமஸ் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி-5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்டவர். டெசி கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் புணேயில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு கழகம் வழிப்படுத்திய ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் பெற்றார். 3000 கிமீ வீச்சுள்ள அக்னி-3 ஏவுகணைத் திட்டப்பணியில் டெசி இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து 2011இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணையின் திட்டப்பணியில் இயக்குநராகப் பணியாற்றினார். 5000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்கு திட்ட இயக்குநராக 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திலிருந்து செயலாற்றினார். ஏப்ரல் 2012இல் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. கடற்படையில் ஓர் உயர் இயக்குநரான சரோஜ் பட்டேலை மணந்துள்ள இவருக்கு தேஜஸ் என்ற மகன் உள்ளார்.. வாழ்த்துக்கள் மேடம்...! She is the first woman scientist to head a missile project in India. she is the Project Director for many missile project in Indian Defence Research and Development Organisation. She was the Master mind and was responsible for success of 3,000 km range Agni-III missile project, Mission Agni IV project, 5,000 km range Agni-V in 2009.The missiles were successfully tested on 19 April 2012. "We are all proud of our country. Agni-C is one of our greatest achievements" Agni-V missile is most powerful and Dangerous weapon that will make the world fear India. Once fired It cannot be stopped,It travels faster than a Bullet and can carry 1000 kg of nuclear weapon and It has 5000 km Range. It can be configured to launch small satellite and can be used later to shoot down the enemy satellites in orbits. It can be launched only on direct order of the Prime minister. Because of her India now features among the super powers We salute her outstanding contribution for making India self-reliant in the field of missile technology. She is the real hero. She isn't celebrity, she is ordinarily human with extraordinary compassion But Indian media forget her. God bless her with strength. Relaxplzz ![]() |
Posted: 24 Oct 2014 06:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் புதுப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காம காலையில இருந்து நைட்டு வரைக்கும் கொலப்பசியோட தியேட்டரை காவல் காத்தது #அதுஒரு_தீபாவளிக்_காலம் - விவிகா சுரேஷ் |
Posted: 24 Oct 2014 06:40 AM PDT |
Posted: 24 Oct 2014 06:30 AM PDT |
Posted: 24 Oct 2014 06:15 AM PDT -டேய் எங்கடா போற ? -முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன் -அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போற ? . . . . . . . . . . . .. . . .. . -அம்மா தான் நைசா அரச்சுட்டு வரச்சொன்னாங்க :D :D Relaxplzz |
Posted: 24 Oct 2014 06:00 AM PDT !!..நான்கு சுவர்களுக்குள் எங்கள் வாழ்க்கை..!! நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு புறம்..! பஞ்சாய் பற்றி எரியும் தனிமையின் பாரம் மறு புறம்..!! சகோதிரிகளின் வாழ்க்கயைப் பற்றிய கவலை, வீட்டிலோ தலைக்கி மேலாகக் கடன்..!! சகோதரர்களின் படிப்பைப் பற்றிய கவலை, புறப்பட்டோம் வெளிநாட்டிற்கு உடன்..!! நிழலே இல்லாத பாலைவனம்.. இருப்பினும், அதுவே எங்களுக்கு உணவளிக்கும் பூங்காவனம்..!! எங்களை வாட்டி எடுக்கும் இன்ஜிநியர் ஒரு பக்கம்.. அவரயும் வாட்டி எடுக்கும் manager மறு பக்கம்.. அனைவரயும் வரட்டி போல் வாட்டி எடுக்கும் வெயில் இருக்கின்றதே.., அந்தோ...எங்கள் துக்கம்..!! வேலை முடிந்து , வீட்டிற்குச் செய்யும் தொலைபேசி அழைப்பில் வருமே ஒரு வகைப் புன்னகை..!! அதற்கு இந்த உலகத்தில் இல்லை; ஈடு இணை..!! கணவன் தன் மனைவியோடு.., மகன் தன் தாயோடு, தகப்பன் தன் மகனோடு, சகோதரன் தன் சகோதரிகளோடு.. காதலன் தன்னை மனப்பதற்கான நேரம் வந்தும், தனக்காக காத்திருக்கும் அவனின் காதலியோடு., பேரன் தன் பாட்டியோடு..!! அந்த தொலைபேசி அழைப்பு ஒன்று போதும்.., எங்களின் உழைப்பின் களைப்பே இல்லாது போன்று ஆகிவிடும்.. எங்களுக்கு மாத உணவின் செலவிற்காக எடுப்பதைத் தவிர்த்த்து, மீதத்த்தை இம்மி அளவில் கூட எங்களுக்கென சேர்த்து வைக்காமல் வீட்டிற்கு அனுப்பும் என் போன்ற இன்ஜிநியர்கள் எத்தனயோ பேர்-இருக்க, பாவம்..!! கூலி தொழில் செய்யும் தொழிலார்களின் நிலமயைப் பற்றி என்ன சொல்வது..! விடிந்ததும் காலெந்தரை (calender) பார்க்கும் பழக்கம்.. விடுமுறை நாள் வரும் வரைக்கும் இதுவே எங்களின் அன்றாட வழக்கம்..!! பண்டிகைத் திருநாளோ, இல்லை; ஈதுப் பெருநாளோ.. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெட்ஷீட்டிற்குள் உறக்கம்.. அந்தோ... உறக்கம் கூட வராமல் கண்ணீர் எங்கள் கண்களில் ஒரு ஓரமாய் வடிந்திருக்கும்..!! தலைப் பிள்ளையாய் பிறந்தது. எங்கள் தலை எழுத்து தானோ..!! சிந்தும் வேர்வை எங்களுக்கு பாரம் அல்ல..!! இறைவன் எங்களுக்காக கொடுத்த வரம்..!! (Dedicated to all the youths who r in abroad and also to all the elderly born kid in the family..) - Faiz Relaxplzz ![]() |
Posted: 24 Oct 2014 05:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நீர் விழும்போது 'ஸ்ஸ்ஸ்' என்று வலி தாங்காமல் கதறும் கல் தான் தோசையை உருவாக்குகிறது #பார்த்ததில்_பிடித்தது |
Posted: 24 Oct 2014 05:40 AM PDT |
Posted: 24 Oct 2014 05:30 AM PDT |
Posted: 24 Oct 2014 05:15 AM PDT எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். "இது எவ்வளவு வெயிட் இருக்கும்?" 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். "இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல" வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?" "ஒண்ணுமே ஆகாது சார்" "வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?" "உங்க கை வலிக்கும் சார்" "ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…" "உங்க கை அப்படியே மரத்துடும் சார்" "வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?" "இல்லை சார். அது வந்து…" "எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?" "கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்" "எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?" # இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு. :) Relaxplzz |
Posted: 24 Oct 2014 05:00 AM PDT |
Posted: 24 Oct 2014 04:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸல் வெலை ஏற்றத காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களோட வெலைய எத்துன அத்தினி பேரும் இப்ப கொறைங்கடா பார்க்கலாம் # டீஸல் விலை குறைப்பு - களவாணி பய |
Posted: 24 Oct 2014 04:40 AM PDT |
Posted: 24 Oct 2014 04:30 AM PDT |
Posted: 24 Oct 2014 04:15 AM PDT ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் கேட்டார்... ஐன்ஸ்டீன் டிக்கெட்டை தேடி கொண்டிருந்தார்.... அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்ட பரிசோதகர்.... "பரவாயில்லை ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார். அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். "ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை." என்று மீண்டும் சமாதானபடுத்தினார். ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, "உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!" என்றார். உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர். அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், "டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?" என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார். Relaxplzz |
Posted: 24 Oct 2014 04:00 AM PDT நிலக்கடலை நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மன அழுத்தம் போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. கொழுப்பை குறைக்கும்: தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. நிறைந்துள்ள சத்துக்கள்: 100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட்- 21 மி.கி. நார்சத்து- 9 மி.கி. கரையும் கொழுப்பு – 40 மி.கி. புரதம்- 25 மி.கி. ட்ரிப்டோபான்- 0.24 கி. திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி. லூசின் – 1.625 மி.கி. லைசின் – 0.901 கி குலுட்டாமிக் ஆசிட்- 5 கி கிளைசின்- 1.512 கி விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. காப்பர் – 11.44 மி.கி. இரும்புச்சத்து – 4.58 மி.கி. மெக்னீசியம் – 168.00 மி.கி. மேங்கனீஸ் – 1.934 மி.கி. பாஸ்பரஸ் – 376.00 மி.கி. பொட்டாசியம் – 705.00 மி.கி. சோடியம் – 18.00 மி.கி. துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது. பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது: நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. Relaxplzz ![]() |
Posted: 24 Oct 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் எந்த அம்மாவும் என் அம்மா போல் இருக்க முடியாது என எல்லோரையும் நினைக்க வைப்பதே அம்மாக்களின் அதிசயம்..! ♥ - Sheila Chowdry |
Posted: 24 Oct 2014 03:40 AM PDT |
Posted: 24 Oct 2014 03:30 AM PDT |
Posted: 24 Oct 2014 03:15 AM PDT ரசித்தது! ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அதிகாரி தனது பணியாளரை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார். பணியாளர் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது. அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பணியாளரிடம் விசாரித்தார். பணியாளர் சொன்னார். அந்தப் பெண்களிடம் "உங்களில் மூத்தவர் யார்?" என்றேன் அவ்வளவுதான். சத்தமே இல்லை..கப் ப் சிப்... :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment