Thursday, 23 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


முன்னால் இருக்கும் அழிந்துபோன வீடுகளில் மக்கள் வாழ்ந்தபோது உதகை எழில் கொஞ்சும் ச...

Posted: 23 Oct 2014 08:40 AM PDT

முன்னால் இருக்கும் அழிந்துபோன வீடுகளில் மக்கள் வாழ்ந்தபோது உதகை எழில் கொஞ்சும் சோலையாக இருந்தது!

பின்னால் இருக்கும் (அ) நாகரிகம் நுழைந்த பின்னால் அங்கு இயற்கை நடனம் புரிய இடம் இல்லை

நான் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவன். வண்ணாரப்பேட்டை தொடக்க பள்ளியிலும், புனித சேவியர் உயர்நிலப்பள்ளியிலும் பயின்றேன். 1966 - 1980.ராஜ்பவனிலும், ஜெயில் மேட்டிலும் குடியிருந்தோம். அப்போது ஜெர்மன் ஸ்கீம் என்று ஒரு விவசாய முனைவை அரசாங்கம் கொண்டு வந்தது. புல்டோசர்கள் வந்தன. விவசாய நிலத்தில் விஷம் தெளிக்க கற்று கொடுத்தார்கள். இரவும் பகலும் அவை விசை தெளிப்பானால் தெளிக்கப்பட்டன. அந்த ஒலி நாராசமாக பள்ளத்தாக்கில் ஒலித்துகொண்டே இருந்தது. நீல நிற காலி ட்ரம்கள் தண்ணிர் நிரப்புவதற்கு வாங்கி வந்தோம். அவற்றில் மண்டை ஓடும் எலும்பு குறியீடுகளும் இருந்தன. விஷம் என்று எழுதியிருந்தது. படகர்கள் தங்கள் வயலில் வணிக பயிர்களை வளர்க்க ஊக்குவிக் கப்பட்டார்கள். முட்டை கொசும், காலி பிளவர்களும், கேரட்டும் தோட்டத்திலிருந்து நேரடியாக ஏற்றுமதி ஆயின. சென்னையிலிருந்து வந்தவர்கள் சொகுசு தேடினார்கள். குப்பை போட்டார்கள். குளிர்பானம் கொண்டுவந்தார்கள். தோடர்களும் பாடகர்களும், குறும்பர்களும், இருளர்களும் உழப்பை கை விட்டார்கள். முனீஸ்வரன் கோவிலும், மாரியம்மன் கோயிலும் சிமெண்டால் பூசப்பட்டன. எல்க் ஹில் முருகன் கோயில் களை கட்டியது. கான்கிரிட் படிக்கட்டு கட்டப்பட்டது. ரோடு போட்டார்கள். ஆவின் பாலில் தண்ணீர் கலந்தனர். வெளிநாட்டிலிருந்து ஜெர்சி பசுக்கள் வந்தன.

பெரிய தொந்தியுடன் பெரிய கம்மல் அணிந்து கலைஞர்கள் வந்து பாடினார்கள். "மலையரசி மார்பின் மீது பச்சை பட்டாடை, அந்த மகிழ மரத்தின் நிறத்தில் ஆஹா அழகு மேலாடை" என்று அசந்து பாடினார்கள் எரிச்சல் ஊட்டும் அளவு ஒலி பெருக்கி இருந்தது. சோலைகள் மொட்டையடிக்கப்பட்டன. மரங்கள் கொள்ளை போயின. புயல் அடித்தது. வெள்ளம் சூழ்ந்தது. மண் அரித்தது. மண் அரிப்பை தடுக்க ஆப்பரிக்க புல் வரவழைக்கப்பட்டது. புதிய துறைகள் தோன்றின. படக பாஷையில் "கால தப்பித்த பயிலு " என்ற படம் எடுக்கப்பட்டது. பங்களாக்கள் ஹோட்டல்களாயின. கிறித்துவ பாதிரிகள் கட்டிடங்கள் கட்டினர். அதிக காணிக்கை வசூல் செய்தனர். ராம கிருஷ்ணா மிஷினில் வருடம் தோறும் நடக்கும் சம பந்தி போஜனம் நின்றது. படகு இல்லம் பெரிதானது. பிளாஸ்டிக் படகுகள் வந்தன. தைலம் கலப்படமானது. தேயிலை காணாமல் போனது. ஊட்டி இரயில் வலுவிழந்தது. சேரன் போக்குவரத்து கழகம் விரிந்தது. மலையை குடைந்து பாதைகள் அமைந்தன. மக்கள் மலை ஏறி நடக்க மறந்தனர். புலம் பெயர்ந்தனர். புகைப்பட சுருள் தயாரிப்பு நின்றது. கண்ணில்லாத மக்களுக்கு வாழ்வு மறுக்கப்பட்டது.

எங்கும் மக்கள் வெள்ளம் சூழ்ந்தது. சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. அடுக்கு மாடி வீடுகள் வந்தன. விலை கூடியது. தண்ணிர் தட்டுப்பாடு வந்தது. காய்கறிகளும் பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. பிளம்ஸ், பேரிக் காய் கோட்டை இழந்தன. ஊசிபழம், விக்கிப்பழம், தவிட்டுப்பழம் காணாமல் போனது. மெள்ளார் செடிகள் காணாமல் போயின. உல்லன் சட்டைகள் தயாரிப்பு நின்றது. விசைத்தறி வந்தது. மொத்தத்தில் ஊட்டி அழிந்தது.

@ஆழ்வார் நாராயணன்


வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விள...

Posted: 23 Oct 2014 03:55 AM PDT

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


காயத்திரி (காயத்ரீ) ================= புணர்த்திய வடிவில்: ஓம் பூர்புவஸ்ஸுவ ஓம்...

Posted: 23 Oct 2014 01:40 AM PDT

காயத்திரி (காயத்ரீ)
=================
புணர்த்திய வடிவில்:

ஓம் பூர்புவஸ்ஸுவ
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

பிரித்த வடிவில்:

ஓம் பூர் புவ(ஸ்) ஸுவ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க தேவஸ்ய தீமஹி
திய யா ந: ப்ரசோதயாத்
ஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக!

oபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அல்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது.

oபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். 'க'கர ஒலி வருக்கம் 'வ'கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க.

oஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். 'மேலிடம்'என்று பொருள்படும் 'சுவல்-சுவர்' எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும்.

இம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள்.

oய: = யார்

[ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே 'ய' என்றாயிற்று.]

oந: = நம்முடைய
['நம்' என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே 'ந' எனத் திரிபடைந்துள்ளது.]

oதிய: அறிவைத்

[அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக 'அறிவு' என்ற பொருளையும் அதற்கும் மேலாக 'ஞானம்' என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ]

o ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ;

o தத் = அந்தச்

['அது' எனப் பொருள்படும் 'தான்' என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் 'தன்-தத்' என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ]

o தேவஸ்ய = சுடருடைய

[தீய்(எரி) என்னும் பொருள்தரும் 'தேய்' என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ' என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே 'தேவ + அஸ்ய' என்பதாகும். ]

o ஸவிது = கடவுளின்

o வரேண்யம் = மேலான

[ 'பரம்' எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் 'வரம் > வரன்' என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் 'ன்' என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.]

o பர்க = ஒளியைத்

[ 'புல்' என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து 'பர்க்' என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ]

o தீமஹி = தியானிப்போமாக!

[ 'துய்' எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், 'திய் + ஆனம் . தியானம்' என்னும் சொல் பிறந்துள்ளது. 'தீமஹி' எனும் சொல்லின் முதனிலையான 'தீ' என்பது துய் > திய் >
தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ]
இச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே.

இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே!

ஆக்கம் இர. திருச்செல்வம்
Photo: காயத்திரி (காயத்ரீ) ================= புணர்த்திய வடிவில்: ஓம் பூர்புவஸ்ஸுவ ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் பிரித்த வடிவில்: ஓம் பூர் புவ(ஸ்) ஸுவ ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்க தேவஸ்ய தீமஹி திய யா ந: ப்ரசோதயாத் ஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக! oபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அல்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது. oபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். 'க'கர ஒலி வருக்கம் 'வ'கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க. oஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். 'மேலிடம்'என்று பொருள்படும் 'சுவல்-சுவர்' எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும். இம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள். oய: = யார் [ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே 'ய' என்றாயிற்று.] oந: = நம்முடைய ['நம்' என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே 'ந' எனத் திரிபடைந்துள்ளது.] oதிய: அறிவைத் [அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக 'அறிவு' என்ற பொருளையும் அதற்கும் மேலாக 'ஞானம்' என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ] o ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ; o தத் = அந்தச் ['அது' எனப் பொருள்படும் 'தான்' என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் 'தன்-தத்' என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ] o தேவஸ்ய = சுடருடைய [தீய்(எரி) என்னும் பொருள்தரும் 'தேய்' என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ' என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே 'தேவ + அஸ்ய' என்பதாகும். ] o ஸவிது = கடவுளின் o வரேண்யம் = மேலான [ 'பரம்' எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் 'வரம் > வரன்' என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் 'ன்' என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.] o பர்க = ஒளியைத் [ 'புல்' என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து 'பர்க்' என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ] o தீமஹி = தியானிப்போமாக! [ 'துய்' எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், 'திய் + ஆனம் . தியானம்' என்னும் சொல் பிறந்துள்ளது. 'தீமஹி' எனும் சொல்லின் முதனிலையான 'தீ' என்பது துய் > திய் > தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ] இச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே. இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே!

ஆக்கம் இர. திருச்செல்வம்


0 comments:

Post a Comment