Thursday, 23 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான்பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்.........

Posted: 23 Oct 2014 09:15 AM PDT

அவள் ஒரு கிராமத்து அம்மா......

நான்பேருந்துக்காக
நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத
எப்படி பேசுவது? சொல்லித் தறியா?கையில்
புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன்
அமுக்கினால் பேசணும்.....சிகப்பு பட்டன்
அமுக்கினால் கட்
பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன்
வாங்கி கொடுத்தது....."

எவ்வளவு பெருமிதம்...... .
அந்த அம்மா முகத்தில்......
என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......

மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு?
பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன்
எப்பையாவது போன்
பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...
நான் பார்த்தேன்..... ..அந்த பையன் call
பண்ணவே இல்லை...... நான் சொன்னேன்
ஒரு தடவை call பண்ணி இருக்காங்க..... .. நீங்க
தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப
அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய்
சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....
எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ?

எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....
நான் சொன்னேன்........
நீங்க
நல்லா சாப்டா தானே உங்க பையன்
வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க
தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்.....

அப்டியா ஆத்தா சொல்ற
இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும்
சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........

:) :)

Relaxplzz

நல்ல மனைவி அமைவது மட்டுமே இறைவன் கொடுத்த வரம் இல்லை நல்ல முதலாளி அமைவதும் இறைவன்...

Posted: 23 Oct 2014 09:00 AM PDT

நல்ல மனைவி அமைவது மட்டுமே இறைவன் கொடுத்த வரம் இல்லை நல்ல முதலாளி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் ..

1200 ஊழியர்களுக்கு இந்த வரம் கிடைத்து இருக்கு

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் சமயம், தன்னிடம் பணியாற்றும் சுமார் 1,200 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

ஊழியர்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். சுமார் 500 ஊழியர் களுக்கு புதிய பியட் புன்டோ ரக கார்களையும், 207 பேருக்கு புதிய வீடுகளையும் மற்றும் 570 பேருக்கு நகைகளையும் சவ்ஜி வழங்கியுள்ளார்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நல்லவேளையாப் போச்சு.. மங்கள்யானுக்கு அருகே விர்ரென்று பறந்து...

Posted: 23 Oct 2014 08:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நல்லவேளையாப் போச்சு.. மங்கள்யானுக்கு அருகே விர்ரென்று பறந்து போன வால் நட்சத்திரம்!

#நல்லா பாருங்கயா... நம்ம சூப்பர்ஸ்டார் விட்ட தீபாவளி ராக்கெட்டா தான் இருக்கும்.. :P

- விவிகா சுரேஷ்

இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்... அவிங்களே சொட்டையா தான் திரியி...

Posted: 23 Oct 2014 08:40 AM PDT

இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்...

அவிங்களே சொட்டையா தான் திரியிறாய்ங்க...நாம தான் எர்வா மார்டினை நம்பிட்டு இருக்கோம்...

- Boopathy Murugesh


:)

Posted: 23 Oct 2014 08:30 AM PDT

:)


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க ... ஓரு தந்தை தனது இளம்வயது மகளின்...

Posted: 23 Oct 2014 08:15 AM PDT

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க ...

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் "அப்பாவுக்கு" என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,
மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே "பின் பக்கம் பார்க்க" என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது . இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

Relaxplzz

தெரிந்துக்கொள்வோம். // பிறருடன் பகிருங்கள் Share plzz // இரத்தத்தில் சர்க்கரையி...

Posted: 23 Oct 2014 08:00 AM PDT

தெரிந்துக்கொள்வோம். // பிறருடன் பகிருங்கள் Share plzz //

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் :-

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதேபோன்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை 'ஹைப்பர் கிளைசீமியா' என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை 'ஹைப்போ கிளைசீமியா' என்றும் சொல்வார்கள்.

பொதுவாக உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும்.

தாகம் அதிகம் எடுக்கும்

ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்று தான் தாகம்.

உங்களுக்கு வாயானது எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

சோர்வு, தலைவலி போன்றவை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும்.

பசி அதிகரிக்கும்

உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும்.

உடல் வறட்சி

போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

எடை குறைவு

திடீரென்று உடல் எடை குறைவது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அதில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று.

சிறுநீரில் குளுக்கோஸ்

சிறுநீரில் குளுக்கோஸ் இரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளுக்கோஸை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும்.

ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருந்தால், குளுக்கோஸானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும்.

அப்படி டாய்லெட்டில் சிறுநீரை வெளியேற்றிய பின், டாய்லெட்டில் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தால், சிறுநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் எளிதாய் கிடைக்கும் வெற்றி தலைக்கனத்தை கொடுக்கும் என்கிறார் பு...

Posted: 23 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

எளிதாய் கிடைக்கும் வெற்றி தலைக்கனத்தை கொடுக்கும் என்கிறார் புத்தர்

- விவிகா சுரேஷ்

நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 23 Oct 2014 07:40 AM PDT

நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 23 Oct 2014 07:30 AM PDT

:)


ஒரு பெண்ணின் கனவில் தேவதை தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்று சொன்...

Posted: 23 Oct 2014 07:15 AM PDT

ஒரு பெண்ணின் கனவில் தேவதை தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்று சொன்னது.

பெண்: என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும்போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்..."

பூதம்: அப்புறம்...??
அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது..."

அப்புறம்...??
அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமத் தூங்கவே கூடாது..."

அப்புறம்....??
அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துல தான் முழிக்கணும்..."

அப்புறம்...??
அவர் அதுக்கப்புறம் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது..."

அப்புறம்....??
எம்மேல ஒரு "கீறல்" பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல ஒரஞ்சி போயிரனும்..."

அப்புறம்...??
பெண்: அவ்வளவுதான்..."

பூதம் அந்தப் பெண்ணை... ஐ ஃபோன் 6" ஆக மாற்றி விட்டதாம்.

:P :P

Relaxplzz

அமைச்சருக்கும் அவர் சூழ் இளைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.... (y) (y)...

Posted: 23 Oct 2014 07:00 AM PDT

அமைச்சருக்கும் அவர் சூழ் இளைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.... (y) (y)

பண்டிகைக் காலங்களில், கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட நெரிசலில் அல்லாடுவது இயல்பே... மக்களும் கடைசி நாள் தான் ஓடோடிச் செல்வதை இயல்பாக வைத்திருக்கிறார்கள்...

அரசு அதிகாரிகள் பேருந்து விடுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று இருந்து விடுகிறார்கள்... கூட்ட நெரிசலில் உடைமைகள் முதல் குழந்தைகள் வரை தொலைப்பவர்கள் தான் இந்த நேரத்தில் அதிகம்....

இந்த நள்ளிரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சில இளைஞர்கள், மக்களுக்குத் தேவையான வழிநடத்துதலில் ஈடுபட்டுள்ளார்கள்...

மிகவும் சிறப்பான முறையில், பொதுமக்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கான பேருந்துகளை அடையாளம் கண்டு கொள்ள உதவுவதில் இருந்து, மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் உறுதுணையாக இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது இந்நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து நண்பன் சத்யாவிடம் இருந்து வரும் செய்தி...

அதிமுகவினர் சந்தோஷப்படலாம்... அமைச்சரின் இந்தப் பணி மிகவும் பாராட்டிற்குரியது.... பொதுமக்களுக்கான சேவையில் இதுவும் ஒன்றே... அமைச்சருக்கும் அவர் சூழ் இளைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.... (y) (y)

-கவிஞர். நாஞ்சில் அரவிந்தன்

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் "மாசகடைசில தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுக்க சொல்லி பொண்டாட்டி...

Posted: 23 Oct 2014 06:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

"மாசகடைசில தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுக்க சொல்லி பொண்டாட்டி படுத்துறா" என்பது போன்ற பதிவுகளை படிக்கும்போது கட்டுனா சமந்தா மாறி ஒரு பொண்ண தான் கட்டனும்ன்னு உள்மனசு சொல்லுது...

ஒரு ஜீன்ஸ் ட்ரௌசர்,என்னோட பட்டன் போன பழைய சட்டை...அவ்வளவு தான் தீபாவளி பர்சேஸ் ஓவர்... :P :P

- Boopathy Murugesh

அளவுக்கு அதிகமாக ஒருவர் மேல் பாசம் வைக்கும் முன் தெரிந்துகொள்,..... உனக்கு அந்...

Posted: 23 Oct 2014 06:40 AM PDT

அளவுக்கு அதிகமாக ஒருவர் மேல்
பாசம் வைக்கும் முன் தெரிந்துகொள்,.....

உனக்கு அந்த உறவு நிரந்தரமானது அல்ல.
உன்னை விட்டு ஒருநாள் பிரியுமென்று......

Relaxplzz


:)

Posted: 23 Oct 2014 06:30 AM PDT

:)


காய்கறிகளும் அதன் பயன்களும் !!! உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தான...

Posted: 23 Oct 2014 06:15 AM PDT

காய்கறிகளும் அதன் பயன்களும் !!!

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

Relaxplzz

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... ;-) என் காதலிக்கு :- 1. முருகன் கோவிலுக்கு ப...

Posted: 23 Oct 2014 06:02 AM PDT

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... ;-)

என் காதலிக்கு :-

1. முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்...

2. லிப்டு கிடைக்குமா என்றேன்...எங்கிருந்து எங்குடா என்றாள் அவள்...லிப் டூ லிப் என்றேன் ...

3. கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்யும்போது, 'அவள் நட்சத்திரம் என்ன?என்று கேட்டார்கள். 'அவளே நட்சத்திரம்' என்றேன்..

4. நண்பர்களுக்கு Lol சொல்லுகையில் அது "lots of laugh" என்றும் உனக்கானால் அது "lots of love" என்றும் அர்த்தப்படுகிறது..

5. நீ என்னை மறந்து விட்டாய் என்பது எனக்கு தெரியும் , பாவம் என் இதயத்துக்கு தெரியாது அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது...

6. நீ பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு காரணமே போதுமானது, நான் பிறந்ததற்காய் பெருமை கொள்வதற்கு....

7.இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொன்னார்,பாவம் அவருக்கு எப்படி தெரியும் அது நீ நுழைந்த வாசல் என்று...

8.நீ நெருப்பை போன்றவள் அதனால் தான் உன்னை எங்கு பார்த்தாலும் ஓடி சென்று அணைக்க துடிக்கிறேன்....

9.நீ இல்லாத இடமெல்லாம் இருட்டாகவே இருக்கிறது " .கரண்டுக்கு சொன்னது அல்ல. காதலிக்கு சொன்னது...!!

10.பொறுக்கி' என்பதற்கும் 'ச்சீ.பொறுக்கி' என்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள் பொண்ணுக சொல்லும்போது..

Relaxplzz


அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தவறென்பதையும், சரியென்பதையும் தாண்டி உறவென்பது முக்கியமானதாய்...

Posted: 23 Oct 2014 05:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தவறென்பதையும், சரியென்பதையும் தாண்டி
உறவென்பது முக்கியமானதாய்
இருக்கின்றது..!

RT@sivaniah

அடப்பாவமே இந்த வேலைய யாருப்பா பண்ணது.. ஜூப்பரு :P :P

Posted: 23 Oct 2014 05:40 AM PDT

அடப்பாவமே இந்த வேலைய யாருப்பா பண்ணது.. ஜூப்பரு :P :P


(y) (y)

Posted: 23 Oct 2014 05:30 AM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு...

Posted: 23 Oct 2014 05:15 AM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர்
மாடிப் படியில்
இறங்கும்போது கீழே விழுந்து
எலும்பு முறிவு ஏற்பட்டது.

மருத்துவர்
மாவுக்கட்டு போட்டுவிட்டு
" பாட்டி, இன்னும் 1
மாசத்துக்கு மாடிப்
படி ஏறக்கூடாது.."
என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின்,
மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும்
போது பாட்டி கேட்டாள்..

டாக்டர்.. இனி படியில்
ஏறலாமில்லையா..?

ஓ.எஸ்.. தாராளமா..

நன்றி டாக்டர்..
தண்ணி பைப்பை புடிச்சி மாடி
ஏறுவது ரொம்பக்
கஷ்டமா இருந்திச்சு..!!!

:O :O

Relaxplzz

வெற்றிக்கு வழி (y) (y) 1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. 2. மவுனமாக திய...

Posted: 23 Oct 2014 04:58 AM PDT

வெற்றிக்கு வழி (y) (y)

1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

Relaxplzz


"சிந்தனைகள்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கவியரசர்மட்டும் இன்று இருந்திருந்தால், "நான் நிரந்தரமானவன் அழ...

Posted: 23 Oct 2014 04:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கவியரசர்மட்டும்
இன்று இருந்திருந்தால்,
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை "
என்ற அவரதுவரியை
ப்ளாஸ்டிக்குகளுக்கு
டெடிகேட்செய்திருப்பார்.
:(

- பாலா ஃபீனிக்ஸ்

தெரிந்து கொள்வோம்

Posted: 23 Oct 2014 04:41 AM PDT

தெரிந்து கொள்வோம்


தெரிந்து கொள்வோம் - 2

:)

Posted: 23 Oct 2014 04:30 AM PDT

சின்ன வயசுல வீட்டு பக்கதுல ஒரு பணக்கார பையன் காஸ்ட்லி வெடியா போடுவான்.எனக்கும் ஆ...

Posted: 23 Oct 2014 04:15 AM PDT

சின்ன வயசுல வீட்டு பக்கதுல ஒரு பணக்கார பையன் காஸ்ட்லி வெடியா போடுவான்.எனக்கும் ஆசையா இருக்கும்.

ஒருமுறை கடைல போய் விலை கேட்டேன். என்கிட்ட இருக்க காசுக்கு அந்த வெடி வச்சுருக்க பொட்டி கூட வராதுன்னு சொல்லிட்டார்.மனசு விரக்தி ஆய்டுச்சு.

எப்படியும் வெடிய வாங்கிட்டு போய் வெடிக்க தான போறோம்,பேசாம எட்டணாவுக்கு தீப்பெட்டி வாங்கி கொளுத்தி போட்டா கடையோட வெடிக்குமேன்னு யோசிச்சேன்.

நக்சல்பாரி இயக்கங்கள் உட்பட உலகின் 90% தீவிரவாததுக்கு காரணம் வறுமை தான்.

அன்னைக்கு அதை நான் செஞ்சுருந்தா சீர்திருத்த பள்ளி போயிருப்பேன்.

விரக்தியான நிலையில் எந்த முடிவும் எடுக்க கூடாது. இன்னைக்கு என்னால அந்த வெடியை வாங்க முடியும்.

என் பையனுக்கெல்லாம் தீபாவளிக்கு 4 ஜிஎஸ்எல்வி ராக்கெட் வாங்கி தாரஅளவு சம்பாரிச்சுறனும். :)

நம்பிக்கையே வாழ்க்கை (y) (y)

- Boopathy Murugesh

Relaxplzz

மழைக்காலத்தில் ஒருநாள்.. காலையில எந்திரிக்கும்போதே மழை ச்சோ..னு பெய்யும்.. இப்...

Posted: 23 Oct 2014 04:02 AM PDT

மழைக்காலத்தில் ஒருநாள்..

காலையில எந்திரிக்கும்போதே
மழை ச்சோ..னு பெய்யும்..

இப்போ லேசா மழை பெய்யுறதுக்கெல்லாம்
விடுமுறை விடுறமாதிரி
அப்போ விடமாட்டாங்க..

என்ன மழை பெஞ்சாலும்
பள்ளிக்கூடம் நடக்கும்..

அப்படி ச்சோ..னு மழை பெய்யும்போது
பள்ளிக்கூடம் போகணுமே..னு
கடுப்பு ஒருபக்கம் வந்தாலும்,
வகுப்புகள் அதிகமா நடக்காதுனு ஒரு மகிழ்ச்சியும்
'ஓரத்துல ஓடும்'...

என்னதான் மழைக்காலம்னாலும்
காலை சாப்பாடு
எங்க வீட்டுல பழையதுதான்..
அதற்கு தொட்டுக்கையாக
முதல்நாளது வத்தக்குழம்புதான்..
அதற்கிணை வேறெதுமில்ல..

சாப்பிட்டு முடிச்சிட்டு
புத்தகப்பைக்கு ஒரு ஜவுத்தாள் (plastic bag) கவர் போட்டு
சட்டைக்கு உள்பக்கமா வச்சிகிட்டு,
மறக்காம சாப்பாடு தட்டும் பைக்குள்ள எடுத்து வச்சிப்போம்..

தலைக்கு யூரியா சாக்கு (ஏழைகளின் Rain coat) இல்லைனா,
மஞ்சள் நிறத்துல இருக்கிற
பாமாயில் பாக்கெட்டை தலையில கூம்பு வடிவத்துல மாட்டிக்கிட்டு வீட்டுலேருந்து ஓட்டம் பிடிப்போம்...

போற வழியில ரோடு முழுசுக்கும் தண்ணி ஆறா ஓடும்..

அதுல கண்ணுமண்ணு தெரியாம தடதடன்னு ஓடுறப்போ
கால்ல நறுக்குனு கருவமுள் ஏறிடும்..

அதை புடுங்கிபோட்டுட்டு
ஒருமாதிரி காலை நொண்டிகிட்டே
ஓடி ஒருவழியா
பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்தா,,,

அப்பாடா..!
இன்னும் ரெண்டாம் பெல்லு அடிக்கலைனு சந்தோஷம் 'மனசுல மணியடிக்கும்'..

எல்லா பயலுகளும் வெளில நின்னுகிட்டு மழைல அதம் பண்ணிட்டு இருப்பானுங்க..

வகுப்புக்குள்ள நுழைஞ்சு மேல போட்டிருந்த யூரியா சாக்கை நல்லா உதறிட்டு மூங்கில் பிளாச்சுகளால் அமைந்த வகுப்பு சுவருல தொங்கவிடணும்..

கான்கிரீட் கட்டிடமெல்லாம் ஒன்பதாம் வகுப்புக்கும்
பத்தாம் வகுப்புக்கும்தான்..

எல்லா பொண்ணுகளுக்கும் நம்மளை பிடிக்கும்ன்றதால அதுங்களை பார்த்து சிரிச்சிகிட்டே,
நம்ம பசங்கிட்ட போகலாம்னு பார்த்தா
அதுக்குள்ள ரெண்டாம் பெல் அடிக்கும்..

எல்லா பயலுகளும் உள்ளவந்து அவனவன் இடத்துல உட்காருவோம்..

முதல் வகுப்பே கணக்குபாடம்..!

கணக்கு சார் வரலைனா முக்காவாசி பேருக்கு கொண்டாட்டந்தான்..

மீதி கால்வாசிப்பேருல நானும் ஒருத்தன்..

ஏன்னா கணக்கு சார் எம்மேல பிரியமா இருப்பாரு..

கணக்கு சார் வரமா போய்ட்டா,
வகுப்பு முழுக்க ஒரே சத்தம்தான்..

வீட்டுலதான் ஒழுகுதுனு பார்த்தா வகுப்புலயும் அங்கங்க ஒழுகும்..

வகுப்புலேருந்து பார்த்தா
பள்ளிக்கூடத்து சமையல்கட்டு தெரியும்..

அந்த கூரையிலேருந்து புகை வந்துச்சின்னா
மதிய சாப்பாடு செய்ய
ஆரம்பிச்சிட்டாங்கனு அர்த்தம்..

வயிறு அப்பவே லேசா
'வாயை பிளக்கும்'..

ஒரு வழியா ரெண்டு வகுப்பு முடிஞ்சதும்
விளையாட்டு மணியடிக்கும்..

பள்ளிக்கூடத்துக்கு வெளியில 'அந்த ஆத்தா'
கடை வச்சிருக்கோ என்னவோ தெரியலையேனு பார்த்தா,
அந்த ஆத்தாவும் ஒரு சாக்கை மேல போட்டுகிட்டு உட்கார்ந்திருக்கும்..

பசங்களோட கூட்டமா போயி
குனிஞ்சி நின்னு என்ன மிட்டாய் வாங்கலாம்னு யோசிச்சிகிட்டே..
'கால்சட்டைல கைவிட்டா',
ஒரு கால்ரூவா இருக்கும்..

அதுக்கு என்ன வாங்கலாம்..?

ஹார்லிக்ஸ் மிட்டாயா..?

கமர்கட்டா..?

சூட மிட்டாயா..?

எலந்த ஜூஸா..?

இல்ல பால்பன்னா..?
சரி..
ஹார்லிக்ஸ் மிட்டாயே வாங்குவோம்னு வாங்கிகிட்டு
திரும்பவும் வகுப்புக்கு போனா,
வகுப்பு வாசல்ல நம்ம பொண்ணுங்க எல்லாம் சில்லிக்கோடு விளையாடுங்க...

அதை வேடிக்கை பார்த்துகிட்டே,
'நமக்கு பிடிச்ச பொண்ணு'
அவுட்டானதும்
அந்த கடுப்புல உள்ள வந்து உட்கார்ந்தா...
அப்பதான் 'அது' வரும்..

ஓடிபோயி 'அடிச்சிட்டு' திரும்பவந்தா
அதுக்குள்ள மூனாம் பீரியடுக்கு பெல் அடிப்பாங்க..

டொய்ங்.. டொய்ங்.. டொய்ங்..

மழை அப்போ செமையா வலுக்க ஆரம்பிச்சி
வகுப்புல எங்க பார்த்தாலும் ஒழுக ஆரம்பிச்சிடும்..

அப்பதான் அறிவியல்சார் வருவாரு..
வகுப்பு ஒழுகுறதைப் பார்த்துட்டு
எல்லாரும் பக்கத்துல இருக்குற B-கிளாஸ்ல உட்கார சொல்லுவாரு..

அங்கபோனா,
மண்தரையெல்லாம் ஈரமா நசநசன்னு இருக்கும்..

அதைவிட அந்த கிளாஸ் பசங்க நம்மளை பார்ப்பானுங்க ஒரு பார்வை..!

அவ்வளவு கேவலமா பார்ப்பானுங்க..!

உட்காருவதற்கு ஒரு பயகூட இடந்தரமாட்டான்..

அந்தக்கடுப்புல கீழ உட்காருவோம்..

அப்ப நம்ம பொண்ணுங்க உட்கார்ந்துருக்கிற இடத்தில ஒரே கத்தல்..

என்னான்னு பார்த்தா..!
மரவட்டை..

அதுக்கா இந்த கத்தல்..?

இந்த பொண்ணுங்களுக்கு
எப்படித்தான் இப்படி
அல்ட்டிக்க முடியுதோ
தெரியலைனு,
அதுங்களை கிண்டல் பண்ணிக்கிட்டே
பேசிட்டு இருந்தா ரெண்டு பீரியட் முடிஞ்சிடும்...

அப்போ, இன்னைக்கு என்ன கிழமைனு யோசிச்சா,
அட.. வியாழக்கிழமை..!

இன்னைக்கு முட்டை போடுவாங்களே..

விறுவிறுனு போயி
தட்டை கழுவலாம்னு பார்த்தா,
அங்க எவனோட தட்டை
எவனோ தட்டிவிட்டுட்டான்னு
சண்டை நடக்கும்..

ஒருவழியா சண்டை முடிஞ்சி
தட்டை கழுவிட்டு சாப்பாடு வாங்க
வரிசைல நின்னா
அப்போதான் ஒருத்தவன் இடையில் புகப்பார்ப்பான்..

அவனை அடிக்காதகுறையா
வெளில தள்ளிவிட்டுட்டு
கஷ்டப்பட்டு சாப்பாடும் முட்டையும் வாங்குனா,

நம்ம முட்டை மட்டும் ஓரத்துல கொஞ்சம் காணாம போயிருக்கும்..

அந்த கடுப்புல அடுத்தவன்
முட்டைய பார்த்தா முழுசா,
பெருசாவேற இருக்கும்..

ஒருவழியா மனசை தேத்திக்கிட்டு
சாப்பிடுறதுக்கு உட்கார்ந்தா
நம்மளை சேர்த்து வட்டமா
நம்ம பசங்களாம் உட்கார்ந்து சாப்பிடுவோம்..

இதுதாங்க நெசமாவே சொர்க்கம்..!

சாப்பிட்டு முடிச்சிட்டு
அது சாம்பாரா, ரசமானு தெரியாம
எதுவாயிருந்தாலும் பரவாயில்லைனு
தட்டைத் தூக்கி அதை உறிஞ்சி குடிச்சிட்டு
திரும்ப தட்டு கழுவ போனா
மழை புடிச்சிக்கும்..

அதுகெடக்கு போ..ன்னு
அந்த மழையிலேயே கையும் தட்டும் கழுவிட்டு,
தட்டை மழையில நீட்டுனா...
கொஞ்சநேரத்துல தட்டு நிரம்பிடும்..

அந்த மழைத்தண்ணி உண்மையிலேயே அமிர்தம்ங்க...

அப்புறமா,
எல்லா வகுப்பும்
முடிஞ்சி சாயுங்காலமா வீட்டுக்கு கிளம்புவோம்..
திரும்பவும் யூரியா சாக்கு.. அதே தடதட..
வீட்டுக்குள்ள போனா தரையெல்லாம் தண்ணி நிக்கும்..
பையை ஒரு ஆணில மாட்டுனா, உள்ளேயிருந்து அம்மா..
டேய்..
அந்த கடைசி வீட்டுல முருங்க மரம் விழுந்துட்டாம்..
போயி கொஞ்சம் கீரை பறிச்சிட்டுவாடானு சொல்லுவாங்க..
ம்க்கும்..னு மெதுவா அலுத்துக்கிட்டே அங்கபோனா,
ஊரே அங்க நிக்கும்..
ஒருவழியா இடுக்குல புகுந்து போயி கைகொள்ளாத
அளவுக்கு
கீரைய பறிச்சிகிட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா நமக்காக
பட்டாணி வாங்கிட்டு வந்துருப்பாங்க..
அதை கொறிச்சிகிட்டே உட்கார்ந்திருப்போம்..
ஒருவழியா சாப்பாடு செஞ்சி முடிச்சதும்
சாப்பிட்டுட்டு
தரையில சாக்கை விரிச்சிட்டு அதுமேல
பாயை போட்டு தூங்கிப்போவோம்..
ச்சே..
அப்படியே இருந்திருக்கலாம்..

- பாலா ஃபீனிக்ஸ்


"நினைவுகள்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் இங்கே தலைவனாக இருக்க நல்லவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.....

Posted: 23 Oct 2014 03:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

இங்கே தலைவனாக இருக்க நல்லவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

நல்லவனாக நாலு படம் நடித்து இருந்தால் போதும்" ;-)

- திவ்ய தர்ஷினி

நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசைப்படுவதால் தான் நாம் ஏமாற்றத்தை சந்திக்கின்றோம...

Posted: 23 Oct 2014 03:41 AM PDT

நிறைவேறாது என்று தெரிந்தும்
ஆசைப்படுவதால் தான்
நாம் ஏமாற்றத்தை
சந்திக்கின்றோம்.....

Relaxplzz


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2

:)

Posted: 23 Oct 2014 03:30 AM PDT

0 comments:

Post a Comment