Relax Please: FB page daily Posts |
- ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, "குருவே! நான் பெரு...
- Facebook என்ன இளிச்சவாயா.?! ------------------------------------------- கொஞ்ச ந...
- :P :P
- டோட்டல் இந்தியாவும் பெரியாராக மாறினாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா
- :)
- எந்த வேலை செய்வது? ====================== "பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது ச...
- சகோதர சகோதிரிகளே எச்சரிக்கை! ! ! ! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்...
- :P :P
- நீதிபதி : தினமும் காலையும்,மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும்...
- :)
- தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! தமிழன்.... டா... Doctor -- வைத்த...
- சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை ! அண்மையில் சென்...
- கோவத்தில் சமைத்தாலும் அம்மாவின் சாப்பாட்டில் ருசி குறைவதில்லை. ஆனால் மனைவிக்கு க...
- சூர்யா மற்றும் கார்த்தி இளம் வயதில்...
- :)
- அற்புதமான 5 தத்துவம்....! 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால...
- அப்பா !! கருவாய் கனிந்த காலத்திலே கால்களால் உதைத்தபோதும் அன்னையை கட்டியணைத்து...
- ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்...
- இருக்கும் வரையிலுங்கிடைப்பது முகஸ்துதி மட்டுமே! இறந்தபின்பு கிடைப்பது மட்டுமே ப...
- :)
- அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத...
- நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவர...
- தெளிவில்லாமல் செய்யும் செயல் என்றும் அழிவை நோக்கியே அழைத்துச் செல்லும்! - Dharu...
- அழகியல்!
- :)
- திரிஷாஆஆஆஆஆஆ..!!! ------------------------------------------- காலேஜ் படிச்சிட்டு...
- நோய்களை தீர்க்கும் கீரைகள்..... காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்: ஒரு...
- "பிட்சா "...என்பார் ; "பர்கர் "....என்பார் ; காய்ச்சல் வந்தால் இட்லி தின்பார்....
- இவரைபத்தி எதுவும் தெரியாது சில நாட்கள் முன்புவரை.......இவ்ளோ ரிச்சா இருந்தவரு!!!...
- :)
Posted: 19 Oct 2014 09:15 AM PDT ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல வசதியுடன் வாழ ஒரு வழி சொல்லுங்கள்" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம், "நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார். அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான். "சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார். அதற்கும் அவன் முடியாது என்றான். உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார். அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான். அதைக் கேட்ட அந்த குரு அவனிடம், "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார். # விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க (y) (y) Relaxplzz |
Posted: 19 Oct 2014 09:00 AM PDT Facebook என்ன இளிச்சவாயா.?! ------------------------------------------- கொஞ்ச நாள் முன்னாடி ஒரு Blogல ஒரு தத்துவம் படிச்சேன்.. " நன்றி - முகநூல் "-னு போட்டு இருந்தது.. நானும் சரி முகநூல்னா. அது ஏதோ அகநானூறு., புறநானூறு மாதிரி சங்க இலக்கிய நூல் போலன்னு கம்முன்னு விட்டுட்டேன்.. நேத்து தான் என் Friend ஜனா சொன்னான்.. முகநூல் = Facebook-னு அடப்பாவிகளா.. " Facebook is a Social Network..! " அதாவது அது ஒரு சமூக தளம்.. Facebook-ங்கறது அதோட பெயர்.. பெயரை கூடவா மொழி பேப்பீங்க..? ( தமிழ் வளர்க்குறாங்களாமாம்....! புல்லரிக்குதுப்பா..! ) இப்ப இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் பேரு " Mr. Cook " . அப்ப அவரை இங்கிலாந்து அணி தலைவர் " திரு. சமையல்காரர்னு " தான் சொல்லுவீங்களா...?! நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..! என்னா நியாயம் சார் இது..? இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி.. அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.. அப்புறமா " நாங்க தமிழன் "னு..! சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம். ( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? ) இதுவரைக்கும் நிறைய பேர் இது பத்தி தெரியாம " முகநூல்" னு சொல்லியிருப்பீங்க.. பரவாயில்ல..!! இனிமே திருத்திக்கோங்க..! ஆனா அதை விட்டுட்டு... " நான் Facebook-ஐ முகநூல்னு தான் சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க.. அவ்ளோதான்... பின்ன அதென்ன சார்.. Facebook மட்டும்தான் இளிச்சவாயா..? அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA., TWITTER., YAHOO., APPLE., iPhone., Sim Card இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு சொல்லிட்டு போங்க. ஆங்... மறந்துட்டேனே.. அப்படியே KARATE, Kung-Fu-க்கும் என்னன்னு சொல்லிடுங்க.. ( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும் விதிவிலக்கா என்ன..?!! ) - Venkat Gokulathil Suriyan Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 08:50 AM PDT |
Posted: 19 Oct 2014 08:40 AM PDT |
Posted: 19 Oct 2014 08:30 AM PDT |
Posted: 19 Oct 2014 08:15 AM PDT எந்த வேலை செய்வது? ====================== "பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது. இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம். இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்! சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள். 1. வாழ்வின் முக்கியதுவம் : நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை. 2. வாழ்க்கை ஒரு பாடம் : எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். 3. உறுதியான சிந்தனை : தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது. 4. நம் நோக்கத்தில் உறுதி : உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது. 5. உண்மை நிலை : "உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும். 6. தகவல்களை திரட்டுவது : நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது. 7. கனவை நனவாக்குவது : நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும். 8. மற்றவர்களுடைய ஆதரவு : உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும். 9. வேலையை தொடங்குவது : "ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது. 10. நன்றி உணர்வு : நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது. Relaxplzz |
Posted: 19 Oct 2014 08:00 AM PDT சகோதர சகோதிரிகளே எச்சரிக்கை! ! ! ! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக் கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சிஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும்மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒரு நொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்தாள். அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில் . இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORT EIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடிய சாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம். அவைகளை பயன்படுத்தும்போ து அருகில் எதுவும் எரியும் நிலையில் இருக்க வேண்டாம். பிறருக்கும் இச்செய்தியினை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 07:50 AM PDT |
Posted: 19 Oct 2014 07:40 AM PDT நீதிபதி : தினமும் காலையும்,மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா? திருடன் : சரிங்கய்யா, வெளிய விட்டுடீங்க ..அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா? .. :O #இது அரசியல்பதிவு அல்ல.... :P :P - Kali Muthu |
Posted: 19 Oct 2014 07:30 AM PDT |
Posted: 19 Oct 2014 07:15 AM PDT தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! தமிழன்.... டா... Doctor -- வைத்தியநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Pediatrist -- குழந்தைசாமி Psychiatrist -- மனோ Sex Therapist -- காமதேவன் Marriage Counselor -- கல்யாண சுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Diabetologist -- சக்கரபாணி Nutritionist -- ஆரோக்கியசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சித்திரகுப்தன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -- பச்சைப்பன் Horticulturist -- புஷ்பவனம் Landscaper -- பூமிநாதன் Barber -- சவுரிராஜன் Beggar -- பிச்சை Alcoholic -- மதுசூதனன் Exhibitionist -- அம்பலவானன் Fiction writer -- நாவலன் Makeup Man -- சிங்காரம் Milk Man -- பால் ராஜ் Dairy Farmer -- பசுபதி Dog Groomer -- நாயகன் Snake Charmer -- நாகராஜன் Mountain Climber -- ஏழுமலை Javelin Thrower -- வேலாயுதம் Polevaulter -- தாண்டவராயன் Weight Lifter -- பலராமன் Sumo Wrestler -- குண்டு ராவ் Karate Expert -- கைலாசம் Kick Boxer -- எத்திராஜ் :) :) Relaxplzz |
Posted: 19 Oct 2014 07:00 AM PDT சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை ! அண்மையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு சென்றிருந்தேன். நுழைவாயிலில் இரு பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் பயணிகளின் ஆவணங்களை பரிசோதித்து பயணிகளை உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களிடம் நான் சென்று தமிழில் பேசினேன். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாமல் 'நை நை ' என்றனர் . பின்பு அவர்களிடம் தமிழ் தெரியுமா என்று கேட்க அந்த பாதுகாவலர் இல்லை என்று தலை ஆட்டி 'டெல்லி போலீஸ்' என்றார் . பின்பு அவரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன். அங்குள்ள உதவி மையத்தில் தமிழில் பெயர் பலகை இல்லை, தமிழில் பேசக்கூடிய அதிகாரியும் இல்லை. இருப்பினும் அந்த அதிகாரியிடம் தமிழில் பேசத் தொடங்கினேன். அவருக்கு சரியாக புரியவில்லை. சற்று நேரத்தில் வேறு ஒரு தமிழ் தெரிந்த ஊழியர் அங்கு வந்து நம்மிடம் விசாரித்தார். அவரிடம் தமிழ் தெரியாத பாதுகாவலரை நியமித்து உள்ளீர் , 90 % பயணிகள் தமிழ்நாட்டு பயணிகள் உள்நாட்டு முனையத்தை பயன்படுத்துகின்றனர் . ஆனால் இந்த பாதுகாவர்களுக்கு தமிழ் பெயரளவுக்கு கூட தெரியவில்லை என்று புகார் அளித்தேன். இதை புரிந்து கொண்ட தமிழ் பேசாத அதிகாரி, இப்போது தமிழ்நாட்டு பயணிகள் யாரும் தமிழ் பேசுவதில்லை அதனால் தான் நாங்கள் தமிழ் தெரியாத பாதுகாவலர்களை நியமித்துள்ளோம் என்று திமிராக ஆங்கிலத்தில் கூறினார் . பின்பு நானும் ஆங்கிலத்தில் , இப்படித் தான் டெல்லியில் இந்தி தெரியாத ஒரு பாதுகாவலரை நியமிப்பீர்களா என்று கேட்டதற்கு மௌனம் சாதித்தார். இங்குள்ள பல ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு புரியும் மொழியில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதை பற்றி அந்த அதிகாரி சட்டை செய்யவில்லை . நானும் புகார் கொடுக்க வேண்டிய இடத்தில் புகார் அளிக்க்றேன் என்று புறப்பட்டு வந்து விட்டேன் . வெளியே வந்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார் . அவரிடம் இது பற்றி கூறினேன் . அவரும், இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையே , நடுவண் அரசின் கட்டுக்குள் தானே வருகிறது நாம் என்ன செய்ய முடியும் என்றார் . நான் கூறினேன் , இருப்பினும் தமிழ்நாட்டில் தானே விமான நிலையம் உள்ளது , அதனால் பணியாளர்கள் அனைவர்க்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றேன் . அவரும் சரிங்க , நீங்கள் விமான நிலைய இயக்குனருக்கு ஒரு புகார் கொடுங்கள் பார்ப்போம் என்று நகர்ந்தார். இன்று விமான நிலைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளேன் . அவர்களும் இந்த குறை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் இயக்குனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்றதால், அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து நம்மை அழைப்பதாக கூறியுள்ளனர். மேலும் விமான நிலையத்தின் வெளியே உள்ள எந்த உணவகங்கள், கடைகளுக்கும் தமிழில் பெயர்பலகை இல்லை. அதையும் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி உள்ளேன் . அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர் . விரைவில் இதை மாற்றி விடலாம் . ஆனால் பணியாளர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது . இரண்டு கோரிக்கைகள் 1 . விமான நிலைய பாதுகாவலர்கள் தமிழ் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் . 2 விமான நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருத்தல் வேண்டும். நீங்களும் புகார் அளிக்கலாம். விமான நிலையத்தை தமிழ் படுத்தலாம். தொடர்பு எண் . 044 22560551 - இராச்குமார் பழனிசாமி Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 06:50 AM PDT கோவத்தில் சமைத்தாலும் அம்மாவின் சாப்பாட்டில் ருசி குறைவதில்லை. ஆனால் மனைவிக்கு கோவமென்றால் சாப்பாட்டில் அது தெரிகிறது.. இது என்ன மாயமோ . :) - Ashok kumar |
Posted: 19 Oct 2014 06:40 AM PDT |
Posted: 19 Oct 2014 06:30 AM PDT |
Posted: 19 Oct 2014 06:15 AM PDT அற்புதமான 5 தத்துவம்....! 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது. 4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை. 5.என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும் .... இதுதான் வாழ்க்கை. Relaxplzz |
Posted: 19 Oct 2014 06:00 AM PDT அப்பா !! கருவாய் கனிந்த காலத்திலே கால்களால் உதைத்தபோதும் அன்னையை கட்டியணைத்து அழகாக துள்ளுவதாய் ஆனந்தப்பட்ட அப்பா உனை அன்றே பார்க்க ஆசை தான் !!! தவழும் வயதில் பூமியிலே பூக்கள் விரித்து தரையிடம் பகை தீர்த்த பாசக்கார அப்பா நீ !!!! நடை பயின்ற போது கூச்சலிடும் ஷூவை விட உனது கைதட்டல் உரக்க கேட்குமப்பா ,ஊரையே கூட்டுமப்பா!!! பள்ளியிலே விட்டுவிட்டு பாதியிலே திரும்பிவந்து படபடக்கும் உனை உன் அன்னை பார்த்தால் பாவிப்பாள் அரை வயது குழந்தையாய் உனை !!! அடி அடியாய் நான் வளர அணு அணுவாய் ரசித்து, தோள் தொட்ட போதும் தோழனாய் பாவித்த உனை, தகப்பனாய் பிரமன் அவன் தாரைவார்க்க என்ன நான் தவம் செய்தேனோ ??? உன்னிடம் கற்றது ஒன்றா இரண்டா ??? உயிருள்ளவரை உணர்வுகளை கட்டுபடுத்த !!! உறவுகளை அரவணைக்க !!! தவறுகளை திருத்திக்கொள்ள !!! ஆசைகளை நிறைவேற்ற !!! நெஞ்சங்களை நேசிக்க !!! அடுக்குவேன் அளவில்லாமல் !!!! மற்றோர் பிறவியில் எனது பிள்ளையாய் நீ இருக்க, இறைவனை பிரார்த்திக்கும் உன் அன்பு ... மகன். - யாரோ. Photo Madhan's Photography. Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 05:50 AM PDT ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ''நீங்கள் போயஸ் கார்டன் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் உடல் நலமுடனும், மனஅமைதியுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்'' எனக் கூறியுள்ளார். இத்துடன் ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் ரஜினி தெரிவித்துள்ளார். http://cinema.vikatan.com/articles/news/28/6856 ![]() |
Posted: 19 Oct 2014 05:35 AM PDT இருக்கும் வரையிலுங்கிடைப்பது முகஸ்துதி மட்டுமே! இறந்தபின்பு கிடைப்பது மட்டுமே புகழ்! -வெ.இறையன்பு I.A.S. ![]() "இவர்கள் சொன்னவை" |
Posted: 19 Oct 2014 05:30 AM PDT |
Posted: 19 Oct 2014 05:15 AM PDT அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும். 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவத ு காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான். 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும். 6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும். 7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படு கிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். 8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களி ன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. 9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள். 10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. 11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூ டானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.( 12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும். 13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான். 14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது. 16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும். 17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது. 18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான். 19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர். 20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது. 21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது. Relaxplzz |
Posted: 19 Oct 2014 05:00 AM PDT நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/ 07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி http://www.hcmadras.tn.nic.in/ 08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp 09. இந்திய தூதரம் – இணையதள முகவரி http://www.indianembassy.org/ 10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி http://www.tnreginet.net/ 11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி http://www.mca.gov.in/ 12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி http://www.chennaicorporation.gov.in/ 13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp 14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி http://www.indiapost.gov.in/nsdefault.htm 15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி http://www.incredibleindia.org/index.html 16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி http://www.tamilnadutourism.org/ 17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி http://www.tneb.in/ Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 04:45 AM PDT |
அழகியல்! Posted: 19 Oct 2014 04:40 AM PDT |
Posted: 19 Oct 2014 04:30 AM PDT |
Posted: 19 Oct 2014 04:15 AM PDT திரிஷாஆஆஆஆஆஆ..!!! ------------------------------------------- காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப... அன்னிக்கு எங்க ஜூனியர் பொண்ணு மீனாவுக்கு Birthday போல... எல்லோருக்கும் சாக்லெட் குடுத்துட்டு இருந்தாங்க.. அப்ப என் ப்ரெண்ட் பிரகாஷ் என்கிட்ட.. " மச்சி.. இன்னிக்கு பாரேன்.. மீனாகிட்ட எப்படி Score பண்றேன்னு..!! " " என்னடா பண்ண போற...?! " " உஷ்.. நடக்கறதை பாரு...!! " மீனா.. பிரகாஷ்க்கு சாக்லெட் குடுக்கும் போது அவன் சொன்னான்.. " மீனா... இன்னிக்கு உன்னை பாத்தா... அசப்புல நடிகை திரிஷா மாதிரியே இருக்கே..!! " ( அடப்பாவி...!!! ) மீனாவுக்கு உடனே வெட்கம் வந்துடுச்சு.. சிரிச்சிக்கிட்டே... " ஹேய்.. பொய் சொல்றீங்க..! " -னு சொல்லிச்சு.. உடனே நானு.. " ஆமா பிரகாஷு... எதுக்கு இப்ப பொய் சொல்றே.. திரிஷா என்ன நம்ம மீனா அளவுக்கு அம்புட்டு அழகாவா இருக்குனு " கேட்டேனா... இப்ப மீனாவுக்கு டபுள் வெட்கம்.. எனக்கு டபுள் சாக்லெட்.. நான் அப்படியே திரும்பி பிரகாஷை பார்த்து... " ஹி., ஹி., நானும் ரெண்டு ரன் எடுக்கலாம்னு... " பையன் கண்ணுல கொலவெறில தெரிஞ்சது.. # நீ ஆணியே புடுங்க வேணாம் மொமண்ட்..!! :P :P - Venkat Gokulathil Suriyan Relaxplzz |
Posted: 19 Oct 2014 04:00 AM PDT நோய்களை தீர்க்கும் கீரைகள்..... காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்: ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாச்சிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது. இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகணிக்கீரை, கரிசலாங்கணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன. முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லைரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும். இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்... Relaxplzz ![]() |
Posted: 19 Oct 2014 03:50 AM PDT "பிட்சா "...என்பார் ; "பர்கர் "....என்பார் ; காய்ச்சல் வந்தால் இட்லி தின்பார்..... ;-) ;-) |
Posted: 19 Oct 2014 03:40 AM PDT |
Posted: 19 Oct 2014 03:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment