Relax Please: FB page daily Posts |
- வாழ்க்கை தத்துவம்: ------------------------------- குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில...
- நம்மால் மறக்கமுடியாத அலைபேசி ! ஒரு மாசத்துக்கு ஒருக்கா சார்ஜ் போட்டா போதும்.. எ...
- :P :P
- அழகு
- (y)
- #படித்ததில்_ரசித்தது 1.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய...
- 56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய...
- ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதி மன்றம். ஸப்பாடா,இனி சிரிக்கலாம் ,சேவ்...
- மார்டின் ரொத்ப்ளாட் என்ற 59 வயது பெண்தான் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் பெண...
- :)
- எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? ஆசிரியை : ஆமாம். எல்கேஜி பையன...
- இவருடைய கண்டுபிடிப்பிற்கு அற்புதமானது !! Costa coffee, cafe coffee day, Barista...
- :P :P
- அருமை
- :)
- சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்: (சுய அறிமுகத்துக்குப் பின்,...
- வெற்றியை நோக்கிப் பற! பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவு...
- தடைகள் மலை அளவு இருந்தாலும் அதை தாண்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும் ஜ...
- :)
- பெண்கள் தற்காப்பு கலையான கராத்தேவை கற்க தேவையில்லை அவர்களுக்கு என்றே கண்டுபிடி...
- உங்கள் கணிணி வேகமாக செயல்பட..... மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பே...
- :(
- தமிழன் தடம்! இது தாய்லாந்தில் உள்ள 1300 வருடம் பழைமையான நாராயணன் சிலை. இது பல்ல...
- :)
- இரு வரி வாழ்க்கை தத்துவங்கள் ---------------------------------------------------...
- இந்த புடவைய பில் போடுங்க ?"" "1500 ரூபாய் மேம்"" "30 % discount போட்டிருக்கே?"...
- பால் பாயாசம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- அழகிய படைப்பு..
- (y)
- நம்மாளு வீட்டு கதவை ஒருவர் தட்ட ... கதவை பாதி திறக்குமுன்பே பொசுக்கென்று ஒரு டை...
Posted: 18 Oct 2014 09:15 AM PDT வாழ்க்கை தத்துவம்: ------------------------------- குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில், "அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே' என்றான். வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை. "தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா" இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள். தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்' என்றார் தந்தை # படித்ததில் பிடித்தது # Relaxplzz |
Posted: 18 Oct 2014 09:00 AM PDT நம்மால் மறக்கமுடியாத அலைபேசி ! ஒரு மாசத்துக்கு ஒருக்கா சார்ஜ் போட்டா போதும்.. எத்தன முறை கீழ போட்டாலும் உடையாது. இதுல ரெண்டு விளையாட்டுகள் தான் இருக்கும். திரும்ப திரும்ப விளையாடினாலும் அலுத்துப்போகாது... பேட்டரியும் அடியானதில்ல, பேணலும் ஒடஞ்சது இல்ல... whatsapp, wechat ன்னு எதும் இல்லாட்டியும் நமக்கு பொழுது நல்லாவே போச்சு.. என்னதான் பிளாக் பெர்ரி, இ போன், கேலக்ஸி வந்தாலும் நம்மால் மறக்க முடியாது ஒரு அலைபேசி இதுவாதான் இருக்கும். #நந்தமீனாள் Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 08:50 AM PDT |
Posted: 18 Oct 2014 08:40 AM PDT |
Posted: 18 Oct 2014 08:30 AM PDT |
Posted: 18 Oct 2014 08:15 AM PDT #படித்ததில்_ரசித்தது 1.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா. 2. இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் .. 3.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்... 4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ... 5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்... 6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்.... 7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே 8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய். 9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்... 10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை .. Relaxplzz |
Posted: 18 Oct 2014 08:00 AM PDT 56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உண்மையா ....என தெரியவில்லை.... காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள் எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப்படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.... Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது... நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது. எனவும்... செய்திகள் பரவலாக வருகிறது. எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்... இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை .. இதை பகிர்ந்து கொளவதன் மூலம் நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம். Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 07:50 AM PDT ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதி மன்றம். ஸப்பாடா,இனி சிரிக்கலாம் ,சேவ் பண்ணலாம், தீபாவளிக்கு புதுதுணி போடலாம் #அமைச்சர்கள் மைண்ட் வாய்ஸ்... :P :P - Kali Muthu |
Posted: 18 Oct 2014 07:40 AM PDT மார்டின் ரொத்ப்ளாட் என்ற 59 வயது பெண்தான் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் பெண் C.E.O. இவர் யுனைடைட் தெரபாட்டிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் C.E.O ஆக சென்ற வருடம் $38 மில்லியன் டாலர்கள் ( ரூ.235 கோடி ) ஊதியம் பெற்றார். இவர் தன் மனைவியோடு 30 வருடங்களாக 4 குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். என்னடா மனைவியோடு வாழ்கிறார் என்று குழம்புகிறீர்களா ? இவர் ஒரு திருநங்கை. 39 வயது வரை ஆணாக வாழ்ந்த இவர் திருமணம் ஆகி 4 குழந்தைகள் பெற்ற பின் 1994 யில் சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். - சாத்தப்பன் நா Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 07:30 AM PDT |
Posted: 18 Oct 2014 07:15 AM PDT எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? ஆசிரியை : ஆமாம். எல்கேஜி பையன் : அப்படியானால், என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா? ஆசிரியை : டேய் முட்டாள்...உன மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க? எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன். கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா! :P :P எல்கேஜி அரியர் குரூப்ஸ்... . Relaxplzz |
Posted: 18 Oct 2014 07:00 AM PDT இவருடைய கண்டுபிடிப்பிற்கு அற்புதமானது !! Costa coffee, cafe coffee day, Barista, coffee bean, etc. இது போன்றவற்றை தயாரிப்பதற்கு நாகரீகத்திற்கு ஏற்றவாறு பலவிதமான பல விதங்களில் வந்திருக்கின்றது ஆனால் இவர் ஒரு பிரசர் குக்கரை கொண்டு சற்று அதை இதற்கு ஏற்றவாறு திருத்தங்களை மேற்கொண்டு இதை கண்டு பிடித்திருக்கிறார்... இவரை இன்னும் எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்பது தான் கவலை... இவருக்கு pressure cooker மொடிபை பண்ண இந்திய ரூபா. 200 மட்டுமே முடிந்ததாம்... நம்ப முடிகிறதா ...? Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 06:50 AM PDT |
அருமை Posted: 18 Oct 2014 06:40 AM PDT |
Posted: 18 Oct 2014 06:30 AM PDT |
Posted: 18 Oct 2014 06:15 AM PDT சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்: (சுய அறிமுகத்துக்குப் பின், பேச ஆரம்பித்த கொஞ்ச நாள்ல..) 1. உன்ன நா எப்டி கூப்பிட்றது?? அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?"னு அர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். "உங்க இஷ்டம்"னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி"னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான் கூப்டுவேன்.. சோ க்யூட்.."னு உளறுவாங்க) 2. டி"போட்டு பேச ஆரம்பிப்பாங்க.. ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி "போடி"னு சொல்வாங்க. உடனே "ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும். 3. உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு "ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?"ங்குற மாதிரி போட்டு வாங்குவானுக. 4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன் போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, "உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்"னு சொல்வாங்க. 5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம். 6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க. ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க "ப்ளீஸ் சாப்பிட்டு வா, உடம்ப கெடுத்துக்காத"னு அக்கறையா பேசுவாங்க. 7. நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு.. படிக்குற காலத்துல எந்நூறு அரியர்ஸ் வச்சிருப்பான், ஊர் சுத்திகிட்டு வெட்டியா இருப்பான். ஆனா ச்சாட்டிங்னு வந்துட்டா போதும்... அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். "நல்லா படி, அப்பா அம்மாவுக்கு மரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்ற மாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க" .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க. அப்பதான் இவங்கள பொறுப்பானவன்"னு அந்தப் பொண்ணு மெச்சிக்குமாம். 8. நா பெரிய அப்பாடக்கராக்கும்.. இவுனுகளுக்கு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்"னு ஓவரா அளந்து விடுவானுங்க. 9. கொசுவத்தி சுத்துவானுக.. நா ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஆனா அவ என்ன வேணாம்னு உதறிட்டுப் போய்ட்டா"னு ஒப்பாறி வைக்காத குறையா கொசுவத்தி சுத்துவானுக. How unlucky she is?'னு ஃபீல் பண்ணி ஆறுதல் சொல்லணுமாம்... சென்டிமென்டா டச் பண்றாய்ங்கப்பா.. 10. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பொண்ணுகிட்ட ச்சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பொண்ணுகூட ச்சாட் பண்ணுவான்.. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவான். தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பொண்ணு நெனைக்கணுமாம். 11. அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லிட்டு "அப்புறம்.. சொல்லு"னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில"னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க. 12. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும். சாதாரண விஷயத்தப் பத்தி பேசினாகூட, பொண்ணுங்கள புகழ்ந்து தள்ளிடுவாங்க. உதாரணத்துக்கு, பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்"னு அந்தப் பொண்ணு சொன்னாகூட, "ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள பொண்ண நா பாத்த்தேயில்ல.. இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற புருஷன் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவன்"னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க. 13. கல்யாணப் பேச்சு.. என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிக்கிறாங்க"னு பேச்ச ஆரம்பிப்பாங்க. பொண்ணு எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க"னு கேட்டுட்டா போதும். "உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்"னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க. அந்தப் பொண்ணுக்கு கோவம் வந்துடுச்சுனா உடனே "ஐயோ.. நா உன்ன மாதிரினு தான் சொன்னேன். உன்னைனு சொல்லல"னு சமாளிப்பானுக. 14. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது?? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல"னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு "நா இருக்கேன்ல"னு அந்தப் பொண்ணு சொல்லும்.. 15. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்.. பேச்சுவாக்குல அந்தப் பொண்ணு எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே "இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல"னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்"னு சும்மா போட்டு வாங்குவானுக. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?"னு அவ கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூட பேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க. 16. நா ரொம்ப நல்லவனாக்கும்.. உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பொண்ணையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன்"னு சொல்வாங்க. 17. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.. இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. "உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா.."னு ரீல் விடுவாங்க. அதே மாதிரி தங்களோட போட்டேவ அனுப்பும்போது, உடற்கட்டு, கை, மார்பு தெரியுற மாதிரியான போட்டோவ பெரும்பாலும் அனுப்புவாங்க. ஆண்மையா இருக்கேன்னு காட்றாங்களாம். 18. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம்.. எட்டு முறை லூஸ் மோசன் போனதைக் கூட சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்களேனு பொண்ணுங்க ஆச்சர்யப்படணுமாம். 19. பொசசிவ்வை கிளறுவாங்க.. கஸ்டமர்கேர்"ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சு.. வாய்ஸ் நல்லாயிருந்துச்சுப்பா..னு சொல்லி பொண்ணுங்களோட அடிப்படை பொசசிவ் குணத்தை கிளறுவாங்க. திட்டு வாங்கினதுக்கப்புறம், "ஏய் சும்மா சொன்னேன்பா.. உன்குரலுக்கு ஈடு எதுவுமில்ல"னு வழிவானுக. 20. என் மேல நம்பிக்கை இல்லேனா.... "எனக்கு நெட் ப்ராப்ளம், நா ஊருக்கு போறேன்.. அதுனால ச்சாட்டிங் வர முடியாது, உன் நம்பர்ல இருந்து SMS பண்றியா??? என் மேல நம்பிக்கை இல்லேனா காய்ன் போன்ல இருந்து கூட பேசுப்பா.." இது அவர்களின் உச்சகட்ட ஆயுதம். நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்... வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான். நா இங்க சொல்லிருக்குற யுத்திகள் பாதிதான். சொல்லிகிட்டேபோனா ஒரு பதிவு பத்தாது. இது மாதிரியான ச்சாட்டிங் மன்மதர்கள், பொண்ணுங்ககிட்ட எப்படி பேசினா, என்ன பதில் வரும்னு தெளிவா தெரிஞ்சு வச்சுக்குறாங்க. அதுக்கேத்தாப்புல தான் வலை விரிக்குறாங்க. உஷாரா இருக்குற பொண்ணுங்க சாமர்த்தியமா தப்பிச்சுக்குவாங்க. பக்குவமில்லாதவர்கள் சிக்கிக்குறாங்க. இதையெல்லாம் படிச்சுட்டு ஆண்கள் மட்டும் தான் இப்படி ச்சாட் பண்றாங்களா?? பொண்ணுங்க மேல தப்பே இல்லையா"னு சண்டை போடலாம். நா இல்லேனு சொல்லல. அதப்பத்தின சர்வே இன்னும் முடியல.. அதுனால இன்னொரு பதிவுல அவங்களப் பத்தி பாக்கலாம். Relaxplzz |
Posted: 18 Oct 2014 06:00 AM PDT வெற்றியை நோக்கிப் பற! பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல். ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு... (y) (y) Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 05:45 AM PDT |
Posted: 18 Oct 2014 05:30 AM PDT |
Posted: 18 Oct 2014 05:15 AM PDT பெண்கள் தற்காப்பு கலையான கராத்தேவை கற்க தேவையில்லை அவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்ட தற்காப்பு ஆயுதம் ஒன்று உள்ளது தமிழில்.... அதுதான்.... * * * * * * * * * * "அண்ணா...???" ;- ) Relaxplzz |
Posted: 18 Oct 2014 05:00 AM PDT உங்கள் கணிணி வேகமாக செயல்பட..... மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும். அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள். ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம். இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும். ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும். உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது. 2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது. 3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும். 4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம். 5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம். 6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் De - fragmentation செய்வது மிகவும் அவசியம். 7. C Cleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது. 8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள். 9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள் 10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' என தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும். 11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள். 12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன. 13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது. www.puradsifm.com 14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது. 15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'Ad Blocker' பொருத்துங்கள். 16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி…… ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள். Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 04:50 AM PDT |
Posted: 18 Oct 2014 04:40 AM PDT |
Posted: 18 Oct 2014 04:30 AM PDT |
Posted: 18 Oct 2014 04:15 AM PDT இரு வரி வாழ்க்கை தத்துவங்கள் --------------------------------------------------- வருவதும் போவதும் - இன்பம்,துன்பம் வந்தால் போகாதது - புகழ்,பழி போனால் வராதது - மானம்,உயிர் தானாக வருவது - இளமை,மூப்பு நம்முடன் வருவது - பாவம்,புண்ணியம் அடக்க முடியாதது - துக்கம்,ஆசை தவிர்க்க முடியாதது - பசி ,தாகம் நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம்,பாசம் அழிவைத் தருவது- பொறாமை,கோபம் எல்லோருக்கும் சமனானது- பிறப்பு , இறப்பு (திரு.கிருபாணந்த வாரியாரின் பொன்மொழிகளிருந்து) Relaxplzz |
Posted: 18 Oct 2014 04:00 AM PDT இந்த புடவைய பில் போடுங்க ?"" "1500 ரூபாய் மேம்"" "30 % discount போட்டிருக்கே?" "ஆமாம் ..sorry 1050 ரூபா.. "HDFC credit card ல இன்னொரு 10 % extra போடுவீங்க இல்ல?" "ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்" "இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 gift voucher ...இரண்டு கூப்பன் இருக்கு.இப்ப சொல்லுங்க."". "இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..." "Regular Customer purchase points ல இன்னும் எவ்ளோ குறையும்?" "ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டு சொல்றேன்..இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-" "ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..போ..ய்..யா" # யாருகிட்ட? ;-) Relaxplzz ![]() |
Posted: 18 Oct 2014 03:50 AM PDT |
அழகிய படைப்பு.. Posted: 18 Oct 2014 03:40 AM PDT |
Posted: 18 Oct 2014 03:30 AM PDT |
Posted: 18 Oct 2014 03:15 AM PDT நம்மாளு வீட்டு கதவை ஒருவர் தட்ட ... கதவை பாதி திறக்குமுன்பே பொசுக்கென்று ஒரு டை கட்டிய வாலிபர் உள்ளே நுழைந்தார். "யாருப்பா நீ துறந்த வீட்டுல....." என்பதற்குள் இடைமறித்து, "சார்.. எங்க கம்பனி புதுசா ஒரு 'வேக்கம் க்ளீனர்' அறிமுக படுத்தியிருக்கு சார். எந்த கறை, அழுக்கு, தூசி, தண்ணீர் எல்லாமே உறிஞ்சிரும் சார்... என்று பேசி கொண்டிருக்கும் போதே, கிச்சனில் நுழைந்து டஸ்ட்பின்னில் இருந்த வேஸ்ட்களை ஹாலில் கொட்டினார். கொஞ்சம் தண்ணீரை கொட்டினார். பின் தன் பையிலிருந்த டோமாட்டோ கெச்சப்யையும் கொட்டிவிட்டு... சார்... இப்போ எங்களோட 'வேக்கம் க்ளீனர்' எப்படி இதையெல்லாம் க்ளீன் செய்யுதுன்னு செய்து காட்றேன் சார்... இது சுத்தமா க்ளீன் பண்ணலைன்னா... நீங்க இத சாப்பிட சொன்னாக்கூட சாப்பிடுவேன். "சரி.. கொஞ்சம் மிளகும், உப்பும் தரவா..?" "எதுக்கு சார் உப்பு..?" * * * * * * * * * " ருசியா சாப்பிடத்தான்.. யோவ்... என் வீட்டுல கரண்ட் கட்டாகி மூணு நாளாச்சைய்யா..!" :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment