Friday, 17 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட முடியாது-பிஜேபி

Posted: 17 Oct 2014 09:11 AM PDT

கருப்பு பணம்
வைத்திருப்போர்
பட்டியலை வெளியிட
முடியாது-பிஜேபி


பெரிய மனசு என்பது வேறொன்றுமில்லை. நம்மிடம் எவ்வித ஆதாயமோ, உதவியோ எதிர்பார்க்காமல...

Posted: 17 Oct 2014 07:40 AM PDT

பெரிய மனசு என்பது வேறொன்றுமில்லை. நம்மிடம் எவ்வித ஆதாயமோ, உதவியோ எதிர்பார்க்காமல், எந்த வித ஈகோவும் இல்லாமல் நம்மள ஒருத்தர் பாராட்டுராரே அவரிடம் இருப்பதே பெரிய மனசு!

- கனா காண்கிறேன்

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்க...

Posted: 17 Oct 2014 06:05 AM PDT

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்கில் தான் நடக்கும்.

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறது வரலாற்று ஆய்வுகள்.

- பா விவேக்


தீபாவளி போனஸ் உண்டுங்களா முதலாளி???

Posted: 17 Oct 2014 05:25 AM PDT

தீபாவளி போனஸ் உண்டுங்களா முதலாளி???


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண...

Posted: 17 Oct 2014 03:45 AM PDT

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்ன கோபர்நிக்கசை கொடுமைப்படுத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர்.

கோபர்நிக்கசின் ஆய்வைப் பின்பற்றி, பைபிள் கோட்பாட்டுக்கு எதிராக, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்றும் பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் கருத்தைப் பதிவு செய்த புருனேவை 9 ஆண்டுகள் இருட்டுச்சிறையிலடைத்து உயிருடன் எரித்துக் கொன்றது மதவெறிக் கும்பல்.

அதே கருத்தை தக்க ஆய்வுகளுடன் வெளியிட்ட கலீலியோ வாழ்நாள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1992-அக்டோபரில் ரோமன் கத்தோலிக்க மதபீடம் கலீலியோ போன்ற அறிஞர்கள் சொன்ன கருத்துதான் சரி என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது.

பூமி உருண்டையானது என்று உரைத்த ரோஜா பேக்கன் நாடுகடத்தப்பட்டு 25 ஆண்டுகள் கடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உடல் கூறின் வரலாறு பற்றி எழுதிய வெசாலியஸ் என்ற அறிஞர் கிறித்தவ மத கட்டுக்கதைக்கு எதிரான செய்தியை எழுதியதால் பாதிரியார்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அரிஸ்ட்டார்க்கஸ், பித்தகோரஸ் முதலாக மதத்தின் கோரப் பசிக்கு ஆளான அறிஞர்கள் பலர் உளர்.

மதங்களின் ஆக்டோபஸ் கரங்களையும் மீறி, இன்று அறிவியல் வளர்ச்சி இந்தளவு பரவலாக்கப்பட்டிருப்பதற்கு, உயிரைப் பயைம் வைத்து உண்மைக்காய் உறுதியாய் நின்ற அறிவியல் அறிஞர்கள் மனத்துணிவும்-ஆய்வுப் புலமையும் தான் காரணம்.

நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் சாதனங்களிலும் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் இரத்தம் தேய்த்த வரலாறு புதைந்துகிடக்கிறுது.

--குரங்கின் தூதுவன்

தமிழ் திரைப்பட நடிகர்களின் இரட்டை நிலை !... - Puducherry * புதுச்சேரி * Pondichéry

Posted: 17 Oct 2014 03:18 AM PDT

தமிழ் திரைப்பட நடிகர்களின் இரட்டை நிலை !...

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


வெளிநாடுகளில் கறுப்புப்பணத்தை வைத்திருப்போரின் பெயர்களை வெளிப்படுத்த முடியாது. -...

Posted: 17 Oct 2014 02:08 AM PDT

வெளிநாடுகளில்
கறுப்புப்பணத்தை வைத்திருப்போரின்
பெயர்களை வெளிப்படுத்த
முடியாது. -
உச்சநீதிமன்றத்தில்
மோடி அரசு

இதையே தான் அந்த காங்கிரஸ்காரனும் சொன்னான்.

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்..... ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்ட...

Posted: 17 Oct 2014 01:40 AM PDT

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்.....

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும்
ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில்
வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய
நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
சோழர்களை போரில் வென்றதன் விளைவாக
நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில்
இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும்
திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர்
கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர்
கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார
தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக
கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடா வர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக்கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தான்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.

@வசந்தகுமார்


ஜெயலலிதாவுக்கு ஜாமீன்! ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனைய...

Posted: 17 Oct 2014 12:12 AM PDT

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்!

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
வழங்கியது உச்ச
நீதிமன்றம்:
தண்டனையையும்
நிறுத்தி வைத்தும்
உத்தரவு!

மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தா...

Posted: 16 Oct 2014 10:55 PM PDT

மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.

அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.

மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர். அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.

ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

பின்னர் வார்டனிடம்,

"அந்த ஆள் என்ன சொன்னார்" என்று வினவ,

வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,

''என்ன கொடுமையடா சாமி, இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன்' என்கிறான் அய்யா"

@Jayant Prabhakar

0 comments:

Post a Comment